என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "WhatsApp"
- வாட்ஸ்அப் செயலி உலகளவில் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது.
- பயனர் தேவையை பூர்த்தி செய்ய வாட்ஸ்அப் அடிக்கடி புது அம்சங்களை வழங்குகிறது.
உலகின் முன்னணி குறுந்தகவல் செயலி வாட்ஸ்அப். உலகளவில் பல கோடி பேர் பயன்படுத்தி வரும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த செயலியில் பயனர்களுக்கு பயன்தரும் வகையில், அடிக்கடி புது அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வாடிக்கையாளர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த அம்சம் விரைவில் வழங்க வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது. இதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் புதிய அப்டேட் வெளியிட உள்ளது.
இந்த அப்டேட், ஆங்கிலம் மொழியில் குரல் பதிவாக அனுப்பப்படும் குறுந்தகவல்களை அதே மொழியில் எழுத்து வடிவமாக மாற்றும் வசதியை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் இனி மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி குரல் பதிவுகளை எழுத்து வடிவில் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது.
முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இந்த அம்சத்திற்கான அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. இந்தியாவில் இந்த அம்சம் ஆங்கிலம் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மார்க்ஜுக்கர்பெர்க் பேஸ்புக் தளத்தில் முதலில் வந்தவர்.
- 4-வது பழமையான கணக்காக ஜுக்கர்பெர்க்கின் கணக்கு உள்ளது.
பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க்ஜுக்கர்பெர்க் அவ்வப்போது சமூக வலைதளத்தில் பயனர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.
அப்போது ஒரு பயனர் மார்க்ஜூக்கர்பெர்க்கிடம் நீங்கள் முதல் பேஸ்புக் கணக்கை உருவாக்க பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரி எது என்று கேட்டார். அதற்கு மார்க்ஜூக்கர்பெர்க் அளித்த பதிலில், 2004-ம் ஆண்டில் பேஸ்புக்கில் முதல் கணக்கை பதிவு செய்ய 'mzuckerb@fas.harvard.edu' என்ற மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தியதாக கூறினார்.
மார்க்ஜுக்கர்பெர்க் பேஸ்புக் தளத்தில் முதலில் வந்தவர். ஆனால் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கிய முதல் நபர் அல்ல. அவருக்கு முன்பே 3 ஐ.டி.கள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்தும் சோதனைக்காக ஒதுக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டன.
இதன்படி பேஸ்புக்கில் 4-வது பழமையான கணக்காக ஜுக்கர்பெர்க்கின் கணக்கு உள்ளது. 5-வது மற்றும் 6-வது கணக்குகள் ஜுக்கர்பெர்க்குடன் இணைந்து பேஸ்புக்கை தொடங்கிய இணை நிறுவனர்களுடையது ஆகும்.
- வார்டு பாய் அறுவை சிகிச்சை செய்து அதை வீடியோ எடுத்து தனது வாட்ஸப் ஸ்டேட்டஸாக வைத்துளான்
- மருத்துவமனையின் இயக்குனர் சஞ்சய் குமாரின் வழிகாட்டுதலின்படியே தான் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டதாக வார்டு பாய் தெரிவித்துள்ளான்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பெண்ணுக்கு வார்டு பாய் [மருத்துவமனை ஊழியர்] அறுவை சிகிச்சை செய்யும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தின் ஹர்தயா பகுதியில் இயங்கி வரும் பஸ்தி மல்டி ஸ்பெஷாலிட்டி தனியார் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆபரேஷன் தேட்டரில் நிர்வாணமாக மயக்க நிலையில் நிலையில் இருந்த பெண்ணுக்கு மருத்துவர்களுடன் சேர்ந்து வார்டு பாய் அறுவை சிகிச்சை செய்து அதை வீடியோ எடுத்து தனது வாட்ஸப் ஸ்டேட்டஸாக வைத்துளான். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மருத்துவமனையின் இயக்குனர் சஞ்சய் குமாரின் வழிகாட்டுதலின்படியே தான் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டதாக அந்த வார்டு பாய் தெரிவித்துள்ளான். ஆனால் இதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தை உரிய முறையில் விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாகப் போலீசும் விசாரணை நடத்தி வருகிறது. பாஜக அரசின் கீழ் மருத்துவ மற்றும் சுகாதார சூழலின் கொடுமையான நிலையை இது காட்டுவதாக அம்மாநில எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.
- பீர் குவளையை பிடித்தவாரும் மார்க் கடலில் சர்ஃபிங் செய்து விடுமுறையை கொண்டாடும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
- மார்க்கை கலாய்த்து எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பேஸ்புக், வாட்சப், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட சமூக வலிதளங்களை நிர்வகிக்கும் மெட்டா சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் மற்றும் எக்ஸ் [ட்விட்டர்] உரிமையாளரும் ஸ்பேஸ் எக்ஸ் டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க்கிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தினத்தின்போது, கோட் சூட் அணிந்தவாறு ஒரு கையில் அமெரிக்க கோடியை ஏந்தியவாறும், மறு கையில் பீர் குவளையை பிடித்தவாரும் மார்க் கடலில் யாட்ச்சில் சர்ஃபிங் செய்து விடுமுறையை கொண்டாடும் வீடியோவை இன்ஸ்ட்டாகிராமில் பகிரவே அது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இந்த வீடியோ வைரலாக நிலையில் மார்க்கை கலாய்த்து எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அவர் யாட்ச்களில் பொழுதைப்போக்கி கொண்டாட்டங்களில் ஈடுபடட்டும்.அதைவிட நான் வேலை செய்யவே விரும்புகிறேன். I prefer to work என்று தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க் அறிக்கைபடி பணக்காரர் பட்டியலில் மார்க் ஜூகர்பெர்கைவிட எலான் மஸ்க் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உலகம் முழுவதும் சுமார் 2.4 பில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
- வாய்ஸ் கால், வீடியோ கால் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட நபர்களை இணைக்கிறது.
மக்களை இணைக்கும் முக்கிய செயலியாக வாட்ஸ்அப் திகழ்கிறது. வாய்ஸ் கால், வீடியோ கால் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட நபர்களை இணைக்கிறது. படங்கள், பைல்களை அனுப்புவதற்கு பயன்படுகிறது.
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் சுமார் 2.4 பில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பயனர்களின் எளிமைக்காக அடிக்கடி அப்டேட் செய்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த அப்டேட்டின்போது சுமார் 35 ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலி சப்போர்ட் ஆகாது எனத் தெரிவித்துள்ளது. பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை உள்ளிட்டவைகளுக்காக இதுபோன்ற அப்டேட்களை செய்து வருகிறது.
சாம்சங்
சாம்சங் கேலக்சி ஏஸ் பிளஸ், எக்ஸ்பிரஸ் 2, நோட் 3, கோர், எஸ்4 ஜூம், கிராண்ட், எஸ்4 மினி, எஸ்3 மினி, எஸ்4 ஆக்டிவ்.
மோட்டோ
மோட்டோ ஜி, மோட்டோ எக்ஸ்
ஐபோன்
ஐபோன் எஸ்சி, 5, 6, 6எஸ், 6எஸ் பிளஸ்
ஹூவெய்
ஹூவெய் அஸ்சென்ட் ஜி525, அஸ்சென்ட் பி6 எஸ், ஜிஎக்ஸ்1எஸ், சி199, ஒய்625
லொனோவோ
லொனோவே ஏ858டி, 46600, எஸ்890, பி70
சோனி
சோனி எக்ஸ்பெரியா இ3, என்ஸ்பெரியா இசட்1
எல்ஜி
எல்ஜி ஆப்டிமஸ் ஜி, 4எக்ஸ் ஹெச்டி, எல்7
இந்த மாடல் ஸ்பார்ட்போன்களை வைத்திருப்பவர்கள் வாட்ஸ்அப் டேட்டாக்களை பேக்அப் எடுததுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- நேற்று முதல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
- கடந்த ஆண்டு ‘கனெக்ட்’ நிகழ்ச்சியில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவி சேவைகளில் ஒன்றான 'மெட்டா ஏஐ' தொழில்நுட்பத்தை இப்போது வாட்ஸ்-ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்ஜா், மெட்டா ஏஐ வலைபக்கம் ஆகியவற்றில் நேற்று முதல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன்மூலம், பயனா்கள் தாங்கள் பயன்படுத்தும் சமூக ஊடகச் செயலியை விட்டு வெளியேறாமலேயே, தங்களுக்கு வேண்டிய விஷயங்களை தேடுவதற்கும் உள்ளடக்கத்தை உருவாக்கவும் குறிப்பிட்ட தலைப்புகள் பற்றி ஆழமாக அறிவதற்கும் மெட்டா ஏஐ சேவையைப் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மெட்டா ஏஐ' சேவையானது அந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு 'கனெக்ட்' நிகழ்ச்சியில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் முதல் 'மெட்டா ஏஐ' சேவையின் சமீபத்திய பதிப்பு உலகம் முழுவதும் உள்ள பயனா்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்தியாவில் இப்போது அச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு இடையே பயனா்கள் 'மெட்டா ஏஐ' சேவையை அணுகலாம். உதாரணமாக, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகத்தில் உங்களுக்கு விருப்பமான ஒரு பதிவைப் பாா்க்கிறீா்கள் என்றால், அதே செயலியில் இருந்துகொண்டு அந்த பதிவு குறித்த மேலும் பல தகவல்களை 'மெட்டா ஏஐ' சேவையிடம் கேட்டுப் பெறலாம்.
- பயனர்களின் கருத்துகளை வாட்ஸ்ஆப் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது.
- விதிமுறைகளை மீறுவோர் மீது தொடர்ந்து இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்அப்ஸ் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 71 லட்சம் இந்திய பயனர்களை தடை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கைகள் ஆகியவற்றை மீறியதற்கான தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பயனர்கள் பாதுகாப்பு சூழலை பராமரிக்கும் வகையில் விதிமுறைகளை மீறுவோர் மீது தொடர்ந்து இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.
வாட்ஸ்அப்-பின் தனியுரிமை கொள்கைகளை (privacy policies) மீறும் பயனர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு மாதந்தோறும் லட்சக்கணக்கான இந்திய பயனர்களை தடை செய்து வருகிறது.
அதனடிப்படையில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஏப்ரல் 30-ந்தேதி வரை 71 லட்சம் இந்திய பயனர்களை நீக்கியுள்ளது. இதில் 13 லட்சத்து 2 ஆயிரம் பயனர்களை, அவர்களுடைய எந்தவித ரிப்போர்ட் பெறாமல் தடை செய்துள்ளது.
வாட்ஸ்அப் மூலம் அவதூறு பரப்பும் பயனர்களை நவீன் தொழில்நுட்பம் மூலம் தானாகவே கண்டறியும் வகையில் வாட்அஸ் ஏற்பாடு செய்துள்ளது.
பயனர்களின் கருத்துகளை வாட்ஸ்ஆப் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. இது கணக்குகளை ஸ்கேன் செய்ய முக்கிய பங்கு வகிக்கிறது. பயனர்கள் ரிப்போர்ட் அல்லது கருத்துகனை பிளாக் செய்யும்போது, வாட்அப்பின் சிஸ்டம் அதை எடுத்துக் கொள்கிறது. அதன்மூலம் கூடுதல் விசாரணை செய்யப்பட்டு, கணக்குகள் தடை செய்ய அனுமதிக்கிறது.
- உலகப் பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதற்கு எக்ஸ் என பெயரிட்டதுடன் அதில் பல மாற்றங்களையும் செய்தார்.
- எக்ஸ் பயனர் ஒருவர் தனது பதிவில், வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளையும் 'சாட்'களையும் விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.
உலகப் பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதற்கு எக்ஸ் என பெயரிட்டதுடன் அதில் பல மாற்றங்களையும் செய்தார்.பணக்காரராக மட்டும் இல்லாமல் உலகைப் பின்னியிருக்கும் சமூக வலைதளங்களை சொந்தமாக்கிக் கொள்ளும் அதிகார நகர்வாகவே எலான் மஸ்கின் இந்த முடிவு பார்க்கப்பட்டது.
எக்ஸ் தளத்திற்கு போட்டியாக இருக்கும் பேஸ்புக் வாட்சப் உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க்குடன் அவ்வப்போது உரசல்களில் ஈடுபடுவதை எலான் மஸ்க் வழக்கமாக வைத்துள்ளார். இருவரும் குத்துச்சண்டை போட்டியில் மோத உள்ளதாக அறிவித்தது வரை இந்த உரசல் சென்றது.
இந்நிலையில் வாட்சப் குறித்து எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எக்ஸ் பயனர் ஒருவர் தனது பதிவில், வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளையும் 'சாட்'களையும் விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த கருத்தை தனது எக்ஸ் பதிவில் மேற்கோள் காட்டியுள்ள எலான் மஸ்க் , வாட்ஸ் அப் தனது பயனர்களின் தரவை ஒவ்வொரு இரவும் (விளம்பர நிறுவனங்களுக்கு) ஏற்றுமதி செய்கிறது. சிலர் இன்னும் வாட்ஸ் அப் பாதுகாப்பானது என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் இந்த குற்றச்சாட்டு குறித்து வாட்ஸ் அப் செயலியை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை வாட்ஸ்அப்-பை பயன்படுத்துகின்றனர்.
- பயனாளர்கள் பாதுகாப்பு தொடர்பாக மெட்டா நிறுவனம் புதுபுது வசதிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.
வாட்ஸ் அப் உலக முழுவதும் பயன்படுத்தப்படும் பிரபலமான மெசேஜிங் ஆப் ஆகும். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ் அப் கோடிக்கணக்கான பயனாளர்களைக் கொண்டுள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை வாட்ஸ்அப்-பை பயன்படுத்துகின்றனர். பயனாளர்கள் பாதுகாப்பு தொடர்பாக மெட்டா நிறுவனம் புதுபுது வசதிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இப்போது ஒரு மெசேஜை டெலிட் செய்தால் உடனே அதை UNDO செய்து கொள்ளும் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
அதாவது, வாட்ஸ்அப்பில் Delete For Everyone-க்கு பதிலாக Delete For Me கொடுத்துவிட்டால் போதும், உடனே அந்த மெசேஜ் தேவைப்பட்டால் UNDO செய்து கொள்ளலாம்.
இதனால் இனி அவசரப்பட்டு Delete For Me கொடுத்துவிட்டோமே என்ற கவலை இருக்காது என வாட்ஸ்அப் பயனர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
- கடந்த 2017-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது.
- ஜாஸ்மின் போலீசில் புகார் அளித்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் கே.ஆர்.கே. காலனியை சேர்ந்தவர் அப்துல் அதீக் (வயது 32). இவருடைய மனைவி ஜாஸ்மின் கடந்த 2017-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர்.
கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அதீக் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து ஜாஸ்மின் கணவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அதீக் வாட்ஸ் அப்பில் முத்தலாக் ஆடியோ பதிவு செய்து ஜாஸ்மினுக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து ஜாஸ்மின் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் அதீக்கை கைது செய்தனர்.
- அறிக்கையை வாட்ஸ்அப் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.
- இந்தியாவில் சுமார் ஏழு கோடி அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டது.
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 7 கோடி வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை தடை செய்துள்ளதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி மோசடி மற்றும் தேவையற்ற விளம்பர தொந்தரவுகள் குறித்து தங்களுக்கு கிடைக்கும் அனைத்துவிதமான குற்றச்சாட்டுகளையும் தீவிரமாக விசாரணை செய்து வருவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப விதிகள் பிரிவு 4(1) (d)-இன் கீழ் வாட்ஸ்அப் மோசடிகள் தொடர்பான புகார் விசாரிக்கப்பட்டு வருகிறது.
தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-இன் கீழ் வாட்ஸ்அப் தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை விளக்கும் அறிக்கையை வாட்ஸ்அப் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அவ்வாறு வெளியிடப்பட்ட அறிக்கையில் தான் இந்தியாவில் சுமார் ஏழு கோடி அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வாட்ஸ்அப் சுமார் 7.9 மில்லியன் அக்கவுண்ட்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் வாட்ஸ்அப் சுமார் 69 மில்லியன் அக்கவுண்ட்களை தடை செய்துள்ளது.
- ஆபத்தான மெசேஜ்களை கண்டறிந்து அனுப்பியவர் யார் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது
- டெல்லி ஐகோர்ட்டு இந்த வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்தது.
மத்திய அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய ஐடி விதிகளை அமலுக்கு கொண்டு வந்தது. இந்தியாவில் செயல்பட விரும்பும் அனைத்து சமூக வலைத்தள நிறுவனங்களும் இந்த புதிய விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.
எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முறையை உடைக்க கட்டாயப்படுத்தினால் இந்தியாவில் இருந்து வெளியேற நேரிடும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது. மேலும் இந்த புதிய சட்டத்திற்கு எதிராக வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
"வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமையை பாதிக்கும் வகையில் End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை கட்டாயப் படுத்தினால், நாட்டை விட்டே இச்செயலி வெளியேற நேரிடும்" என டெல்லி உயர்நீதி மன்றத்தில் அந்நிறுவனம் வாதம் செய்தது.
எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் என்பது யூசர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதாகவும் அதில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது.
இந்த சட்டத்திற்கு இணங்குவது என்பது என்க்ரிப்ஷன் பிராசஸை அர்த்தம் இல்லாமல் செய்துவிடும் என்றும் அது தனியுரிமையை மீறும் ஒரு செயல் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் வாதம் செய்யப்பட்டது.
ஆபத்தான மெசேஜ்களை கண்டறிந்து ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு மெசேஜ்ஜை அனுப்பியவர் யார் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது என்று மத்திய அரசு சார்பில் வாதம் செய்யப்பட்டது.
தவறான தகவல்களை பரப்புபவர்கள் , வன்முறையை தூண்டுபவர்களை அடையாளம் காண உதவும் பொறுப்பு சமூக வலைத்தளங்களுக்கு இருப்பதாக மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி ஐகோர்ட்டு இந்த வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்