என் மலர்
நீங்கள் தேடியது "Telegram"
- டெலிகிராம் மூலம் அறிமுகமான நபர் ஒருவர் பகுதி நேர வேலை மூலம் தினமும் ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை வருவாய் சம்பாதிக்கலாம்.
- போலீசார் டெலிகிராம் லிங்கை கைப்பற்றி நூதன முறையில் மோசடி செய்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் இரும்பாலை என்.ஜி.ஜி.ஓ. காலனி சாந்தி நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 40).
இவர் சேலத்தில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு டெலிகிராம் மூலம் அறிமுகமான நபர் ஒருவர் பகுதி நேர வேலை மூலம் தினமும் ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை வருவாய் சம்பாதிக்கலாம். எனவே அதில் முதலீடு செய்யுங்கள், உங்களுக்கு பெரும் தொகை கிடைக்கும் என தெரிவித்து அதற்கான இணையதள லிங்கை அனுப்பி உள்ளார்.
அதை பதிவிறக்கம் செய்து முழு விபரங்களை பதிவிட்ட லோகநாதன் முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தார். தொடர்ந்து அவருக்கு 17 ஆயிரம் ரூபாய் கமிஷன் கிடைத்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர் தொடர்ந்து 7 தவணைகளில் ரூ.7.61 லட்சம் அனுப்பி உள்ளார்.
இந்த பணப்பரிவர்த்தனை முடிந்ததும் மர்மநபர் பேசிய டெலிகிராம் லிங்க் செயலிழந்துவிட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த லோகநாதன் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு இருந்த பணத்தை இழந்ததால் சேலம் மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் டெலிகிராம் லிங்கை கைப்பற்றி நூதன முறையில் மோசடி செய்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரீமியம் சந்தாதாரர்கள் விளம்பர இடையூறு இன்றி பார்க்கலாம்.
- பிரீமியம் சந்தாதாரர்கள் 4 ஜிபி அளவிலான பைல்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
நடப்பாண்டில் உலகளவில் அதிக எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்யப்பட்ட டாப் 5 செயலிகளில் டெலிகிராமும் ஒன்று. தற்போது இந்த செயலியை உலகம் முழுவதும் சுமார் 70 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் டெலிகிராம், அதன் பிரீமியம் கட்டண சேவையை அறிமுகம் செய்துள்ளது. டெலிகிராம் அறிமுகப்படுத்தி உள்ள புதிய பீரிமியம் சேவையை பெற, மாதம் ஒன்றிற்கு ரூ.469 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பீரிமியம் சேவையில் இணையும் சந்தாதாரர்கள், பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பிரீமியம் சந்தாதாரர்கள் 4 ஜிபி அளவிலான பைல்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி பிரத்யேகமான ஸ்டிக்கர்கள், வேகமான தரவிறக்க வசதி உள்பட பல வசதிகள் அவர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரீமியம் சந்தாதாரர்கள் விளம்பர இடையூறு இன்றி பார்க்கலாம் என்றும், வாய்ஸை டெக்ஸ்டாக மாற்றும் அம்சமும் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த பிரீமியம் சேவை டெலிகிராமின் 8.8 வெர்ஷனில் தான் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த சேவை iOS பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் இதற்கான அப்டேட் இன்னும் விடப்படவில்லை. விரைவில் அனைவருக்கும் இந்த பிரீமியம் சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
