என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம் (World)
பிரான்சில் வைத்து டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் துரோவ் அதிரடி கைது.. பகீர் காரணம்!
- ரஷிய நாட்டைச் சேர்ந்த 39 வயதான பாவெல் துரோவ் தனது சகோதரர் நிகோலாய் உடன் இணைந்து கடந்த 2013 ஆம் ஆண்டில் டெலிகிராம் செயலியை நிறுவினார்
- தற்போது துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டெலிகிராம் செயல்பட்டு வருகிறது
பிரபல சமூக செய்தி பரிமாற்ற செயலியாக விளங்கும் டெலிகிராம் நிறுவனத்தின் சி.இ.ஓ. பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷிய நாட்டைச் சேர்ந்த 39 வயதான பாவெல் துரோவ் தனது சகோதரர் நிகோலாய் உடன் இணைந்து கடந்த 2013 ஆம் ஆண்டில் டெலிகிராம் செயலியை நிறுவினார். தற்போது துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டெலிகிராம் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆகவும் பணியாற்றி வரும் பாவெல் துரோவ் துபாய் குடிமகனாக அங்கு வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு தனது பிரைவேட் ஜெட்டில் அஜர்பைஜான் நாட்டில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகே உள்ள போர்கெட் விமான நிலையத்தில் வைத்து வாரண்ட்டோடு பிரான்ஸ் போலீசார் அவரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
தீவிரவாத இயக்கங்களுக்குத் துணைபோவது, போதைப் பொருள் விநியோகம், சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதற்கு டெலிகிராம் செயலி அதிகளவில் பயன்பட்டு வருகிறதென்றும், அதை டெலிகிராம் நிறுவனம் எந்த தடையும் இன்றி அனுமதித்து, பயனர்களின் தகவல்களை அரசுகளிடம் இருந்து பாதுகாக்கவும் செய்கிறது என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரான்ஸ் நாட்டு போலீஸ் அவரை கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.