search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாவெல் துரோவ்"

    • கடந்த 24-ந்தேதி பிரான்சில் கைது செய்தனர்.
    • பாவெல் துரோவிற்கு நிபந்தனை ஜாமின் விதிக்கப்பட்டுள்ளது.

    டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவை கடந்த 24-ந்தேதி பிரான்சில் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.

    செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோதச் செயல்களுக்கு டெலிகிராம் துணை போவதாகவும், பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவளிப்பதாகவும், பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாப்பதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரது கைதுக்கு பல தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாவெல் துரோவ் மீதான குற்றச்சாட்டுகளை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதையடுத்து பாவெல் துரோவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    5 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.46 கோடி) பிணைத்தொகை செலுத்த உத்தரவிட்டனர். மேலும் அவர் கோர்ட்டு கண்காணிப்பின் கீழ் நாட்டில் இருக்க வேண்டும். பிரான்சை விட்டு வெளியேறக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு 2 முறை போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அன்றைய தினம் பாவெலுடன் அந்த பிரைவேட் ஜெட்டில் ஜூலி வவிலோவா என்ற இளம்பெண்ணும் பயணம் செய்துள்ளார்.
    • ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர் ஜூலி வவிலோவா

    பாவெல் துரோவ்  

    உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கும் அதன் இணை நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டார். செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து மறைகிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி தனது பிரைவேட் ஜெட்டில் அஜர்பைஜான் நாட்டில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகே உள்ள போர்கெட் விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் போலீசார் அவரை கைது செய்த்துள்ளனர். அன்றைய தினம் பாவெலுடன் அந்த பிரைவேட் ஜெட்டில் ஜூலி வவிலோவா என்ற இளம்பெண்ணும் பயணம் செய்துள்ளார். இவர் பாவெல் துரோவின் காதலி என்று கூறப்படுகிறது. பாவெல் கைது செய்யப்பட்டதை அடுத்து அவருடன் வந்த ஜூலி எங்கு போனார் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஜூலி வவிலோவா மூலமே பாவெல் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

     

     

    ஜூலி வவிலோவா 

    24 வயதாகும் ஜூலி வவிலோவா கிரிப்டோ வணிக பயிற்சியாளராகவும், வீடியோ கேம் ஸ்ட்ரீமராகவும் இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் , அஜர்பைஜான் என பல்வேறு நாடுகளுக்கு பாவெலுடன் பயணம் செய்ததை தொடர்ச்சியாக தனது எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.

    இதுவே பாவெலின் அடுத்தடுத்த நகர்வுகளை கண்காணித்து பிரான்ஸ் எல்லைக்குள் வரும்போது அவரை கைது செய்ய போலீசாருக்கு முக்கிய உதவியாக இருந்தது என்று பலர் கருதுகின்றனர். ஆகஸ்ட் 21 ஆம் தேதி அஜர்பைஜானில் பாவெலுடன் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ஜூலி பகிர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

    காதலியா? உளவாளியா? 

    ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய ஜூலி வவிலோவா இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத் அமைப்பை சேர்நதவர் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்டுகின்றன. ஜூலி - பாவெல் உணைமயிலேயே காதலர்களா என்று உறுதி செய்யப்படாத நிலையில் டெலிகிராம் தலைமயகம் உள்ள துபாயிலேயே அவர்கள் இருவரும் வசித்து வந்தனர் என்ற மேம்போக்கான தகவல் மட்டுமே கிடைத்துள்ளது. இந்நிலையில் ஜூலி வவிலோவாவின் சமூக வலைதள பதிவுகள் வைரலாகி வருகின்றன. 

    • செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது.
    • இந்தியாவில் 5 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களை கொண்ட டெலிகிராம் செயலி தடையை எதிர்கொள்ளக்கூடும்.

    உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஆக இருக்கும் பாவெல் துரோவ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டார்.

    செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாக்கிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பாவெல் துரோவை தற்போது நீதிமன்ற காவலில் தடுத்து வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் கிடத்தட்ட 20 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

    இந்நிலையில் இந்தியாவில் 5 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களை கொண்ட டெலிகிராம் செயலி தடையை எதிர்கொள்ளக்கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனம் மீது மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சூதாட்ட விசாரணையை மத்திய அரசு தொடங்கிய நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

    சூதாட்டம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச் செயல்களில் டெலிகிராம் ஈடுபடுவதை அமைச்சகங்கள் குறிப்பாக கவனித்து வருவதாக ஒரு அதிகாரி தெரிவித்திருந்தார். இதுவரை, டெலிகிராம் விசாரணை குறித்து மத்திய அரசு சார்பில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

    • அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் கிடத்தட்ட 20 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம்
    • நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், சட்டத்திற்கு உட்பட்டே பேச்சு சுதந்திரம் வழங்கப்படும்.

    உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஆக இருக்கும் பாவெல் துரோவ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டார். செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாக்கிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பாவெல் துரோவை தற்போது நீதிமன்ற காவலில் தடுத்து வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் கிடத்தட்ட 20 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தியும், பாவெல் துரோவின் கைதை கண்டித்தும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

     

    பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் மற்றும் எக்ஸ் உள்ளிட்டவையும் சிலரால் தவறாக பயன்ப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் ஆனால் அதற்காக மார்க் ஸுகேர்பேர்கையோ எலான் மஸ்க்கையோ யாரும் கைது செய்யப் போவதில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் ரஷியர் என்ற காரணத்தால் பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டாரா என்ற கேள்வியையும் பலர் முன்வைக்கின்றனர்.

     

    இந்நிலையில் பாவெல் துரோவின் கைது அரசியல் ரீதியிலானது அல்ல என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'பாவெல் துரோவின் கைது குறித்த தவறான தகவல்கள் இணையத்தில் பரவுவதை நான் கவனித்தேன், கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தை ஊக்குவிப்பதில் பிரான்ஸ் அரசு உறுதியாக உள்ளது. ஆனால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், சட்டத்திற்கு உட்பட்டே பேச்சு சுதந்திரம் வழங்கப்படும். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணி நீதித்துறையின் கையில் தற்போது உள்ளது. இந்த விவகாரத்தில் நீதிபதிகள் தான் முடிவெடுக்க முடியும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

    • டெலிகிராம் நிறுவனம் கண்டன அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
    • கைது செய்யப்பட்ட பாவெல் துரோவை அடுத்த 96 மணி நேரத்துக்கு தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    துபாயை தலைமையிடமாக கொண்டு உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஆக இருக்கும் பாவெல் துரோவ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டார்.

    செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாக்கிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து டெலிகிராம் நிறுவனம் கண்டன அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில், 'ஐரோப்பிய யூனியனின் டிஜிட்டல் சேவைகள் சட்டம் வகுத்த விதிகளின்படியே டெலிகிராம் செயல்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் சிஇஓ பாவெல் துரோவிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. அவர் அடிக்கடி ஐரோப்பா சென்று வருபவர், தளத்தைத் தனி நபர்கள் தவறாக பயனப்டுத்துவற்காக அந்த தளத்தையோ நிறுவனத்தின் தலைவரையோ குற்றம் கூறுவது என்பது அபத்தமானதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட பாவெல் துரோவை அடுத்த 96 மணி நேரத்துக்கு தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாவெல் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கக்கூடும் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே பாவெல் துரோவின் கைதை கண்டித்து உலகம் முழுவதிலும் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிப்போர் போராட்டம் நடத்தி  வருகின்றனர்.

     

    • 100க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரியல் தந்தையாக தான் உள்ளதாக தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
    • அந்த காரணம் தான் தொடர்ந்து விந்தணு தானம் செய்யத் என்னக்கு தூண்டுதலாக இருந்தது' என்று பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.

    பிரபல சமூக வலைதளமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் பாவெல் துரோவ் Pavel Durov] அதன் தலைமை அதிகாரியாகவும் [சிஇஓ] உள்ளார். ரஷிய நாட்டைச் சேர்ந்த 39 வயதாகும் பாவெல் துரோவ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் 12 வெவ்வேறு நாடுகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரியல் தந்தையாக தான் உள்ளதாக தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

     

     

    15 வருடங்கள் முன்பு தனது நண்பர் ஒருவர் குழந்தையின்மையால் வருத்தத்தில் இருந்த நிலையில் அவரின்  வேண்டுகோளுக்கு இணங்க தனது விந்தணுவை முதல் முறையாக தானம் செய்த பாவெல் துரோவ் அன்றுதொட்டு தொடர்ந்து தனது விந்தணுக்களை தானம் செய்யத் தொடங்கியுள்ளார்.

    'முதல்முறையாக விந்தணுக்களை தயக்கத்துடனேயே தானம் செய்தேன். ஆனால் அப்போது மருத்துவர்கள் என்னிடம் தரம் வாய்ந்த விந்தணுக்களுக்கு தட்டுப்பாடு இருப்பதால், குழந்தையின்றி வாடும் தம்பதிகளுக்கு உதவும் வகையில் விந்தணு தானம் செய்வது சமூக கடமையாகும் என்று தெரிவித்தனர். அந்த காரணம் தான் தொடர்ந்து விந்தணு தானம் செய்யத் எனக்கு தூண்டுதலாக இருந்தது' என்று பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.

     

    'இதுவரை 12 நாடுகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதிகள் குழந்தை பெற எனது விந்தணுக்களை தானம் செய்து உதவியுள்ளேன். இன்னும் வருங்காலங்களில் IVF கிளினிக்கில் உறையவைக்கபட்டு பாதுகாப்பட்டுள்ள எனது விந்தணுக்கள் இன்னும் பல குழந்தைகள் பிறப்பதற்கு காரணமாக அமையும்' என்றும் பாவெல் பெருமையுடன் கூறுகிறார். மேலும் இதுபோன்று பலரும் தங்களது விந்தணுக்களை தானம் செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

    ×