search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    காதலியா? உளவாளியா?.. டெலிகிராம் சி.இ.ஓ. கைதுக்கு காரணமான இளம்பெண்.. மர்மப் பின்னணி!
    X

    காதலியா? உளவாளியா?.. டெலிகிராம் சி.இ.ஓ. கைதுக்கு காரணமான இளம்பெண்.. மர்மப் பின்னணி!

    • அன்றைய தினம் பாவெலுடன் அந்த பிரைவேட் ஜெட்டில் ஜூலி வவிலோவா என்ற இளம்பெண்ணும் பயணம் செய்துள்ளார்.
    • ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர் ஜூலி வவிலோவா

    பாவெல் துரோவ்

    உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கும் அதன் இணை நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டார். செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து மறைகிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி தனது பிரைவேட் ஜெட்டில் அஜர்பைஜான் நாட்டில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகே உள்ள போர்கெட் விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் போலீசார் அவரை கைது செய்த்துள்ளனர். அன்றைய தினம் பாவெலுடன் அந்த பிரைவேட் ஜெட்டில் ஜூலி வவிலோவா என்ற இளம்பெண்ணும் பயணம் செய்துள்ளார். இவர் பாவெல் துரோவின் காதலி என்று கூறப்படுகிறது. பாவெல் கைது செய்யப்பட்டதை அடுத்து அவருடன் வந்த ஜூலி எங்கு போனார் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஜூலி வவிலோவா மூலமே பாவெல் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    ஜூலி வவிலோவா

    24 வயதாகும் ஜூலி வவிலோவா கிரிப்டோ வணிக பயிற்சியாளராகவும், வீடியோ கேம் ஸ்ட்ரீமராகவும் இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் , அஜர்பைஜான் என பல்வேறு நாடுகளுக்கு பாவெலுடன் பயணம் செய்ததை தொடர்ச்சியாக தனது எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.

    இதுவே பாவெலின் அடுத்தடுத்த நகர்வுகளை கண்காணித்து பிரான்ஸ் எல்லைக்குள் வரும்போது அவரை கைது செய்ய போலீசாருக்கு முக்கிய உதவியாக இருந்தது என்று பலர் கருதுகின்றனர். ஆகஸ்ட் 21 ஆம் தேதி அஜர்பைஜானில் பாவெலுடன் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ஜூலி பகிர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

    காதலியா? உளவாளியா?

    ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய ஜூலி வவிலோவா இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத் அமைப்பை சேர்நதவர் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்டுகின்றன. ஜூலி - பாவெல் உணைமயிலேயே காதலர்களா என்று உறுதி செய்யப்படாத நிலையில் டெலிகிராம் தலைமயகம் உள்ள துபாயிலேயே அவர்கள் இருவரும் வசித்து வந்தனர் என்ற மேம்போக்கான தகவல் மட்டுமே கிடைத்துள்ளது. இந்நிலையில் ஜூலி வவிலோவாவின் சமூக வலைதள பதிவுகள் வைரலாகி வருகின்றன.

    Next Story
    ×