என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Iraq"
- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நீடிப்பு.
- சிரியா, ஈராக், ஈரான் ஆகிய மூன்று நாடுகள் உடனடியாக விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
ஈரான் மண்ணில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலுக்கு சரியான பாடம் புகட்டுவோம் என ஈரான் தெரிவித்திருந்தது. ஆனால் உடனடியாக தாக்குதல் ஏதும் நடத்தவில்லை. கடந்த 1-ந்தேதி திடீரென சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் அனைத்து ஏவுகணைகளையும் வான்பாதுகாப்பு சிஸ்டத்தால் தடுத்து முறியடித்தது.
அதில் இருந்து ஈரான் மீது இஸ்ரேல் எப்போது வேண்டுமென்றாலும் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. சுமார் 25 நாட்கள் கழித்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே ஈரானின் ராணுவ தளங்களை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதனால் ஈரான் எப்போது வேண்டுமென்றாலும் பதிலடி தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் சூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரான், ஈரான் மற்றும் சிரியா ஆகிய மூன்று நாடுகள் உடனடியாக தங்களது வான் எல்லைகளை மூடியுள்ளது. விமான சேவையை ரத்து செய்துள்ளது.
ஆனால் ஈரான் விரைவில் விமான சேவையை தொடங்குவோம் எனத் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளதை ஈரான் ஒத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் ஈரான் வான் எல்லையில் சுதந்திரமாக பறக்கும் வகையில் வான் எல்லைகள் திறக்கப்படடுள்ளன இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட குளோபன் ஹைட்ஸ் பகுதியில் இருந்தும், லெபனானில் இருந்து தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது வான் பாதுகாப்பை ஏற்படுத்தும் தேவையை அதிரிக்க வைத்துள்ளது என சிரியா தெரிவித்துள்ளது.
சிரியாவில் உள்ள ஷியா மற்றும் அரசியல் குழுக்கள் ஈரான் ஆதரவுடன் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
- துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
- 5 பேர் பலியானார்கள். 14 பேர் காயம் அடைந்தனர்.
அங்காரா:
துருக்கி தலைநகர் அங்காராவில் அரசுக்கு சொந்தமான ராணுவ மற்றும் வான்வெளி தொழில்நுட்ப தொழிற்சாலையில் நேற்று துப்பாக்கியுடன் புகுந்த ஒரு ஆண், ஒரு பெண் தாக்குதல் நடத்தினர்.
துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் 5 பேர் பலியானார்கள். 14 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய 2 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்படும் குர்திஷ் படைகள் நடத்தியதாக துருக்கி தெரிவித்தது.
இந்த நிலையில் ஈராக், சிரியாவில் குர்திஷ் போராளிகள் படைகள் மீது துருக்கி பதிலடி தாக்குதலை நடத்தியது. வடக்கு ஈராக் மற்றும் வடக்கு சிரியாவில் உள்ள குர்திஷ் படைகள் முகாம்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
துருக்கி போர் விமானங்கள் குண்டுகளை வீசியது. இதில் குர்திஷ் படையினரின் 32 முகாம்கள் அழிக்கப்பட்டு உள்ளதாகவும், குர்திஷ் படையை சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தாக்குதல் குறித்த விவரங்களை துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவில்லை. ஆனால் குர்திஷ் இலக்குகள் எதிர் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரிவித்தது.
- 1948 உருவான இஸ்ரேலை நாடாக அங்கீகரித்த 2 வது இஸ்லாமிய தேசமும் ஈரான்தான்.
- 1980 இல் ஈராக்குக்கு எதிரான போரின்போது அமெரிக்கா சார்பில் இஸ்ரேல் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கிவந்தது.
இரு துருவங்கள்
பாலஸ்தீனம் மற்றும் லெபனான் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகள் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. இதனால் மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இன்று எதிரெதிர் துருவங்களாக உள்ள ஈரானும் இஸ்ரேலும் கடந்த காலங்களில் கைகோர்த்து செயல்பட்டிருக்கின்றன. தங்கள் இருவருக்கும் பொதுவான எதிரியாக இருக்கும் ஈராக் நாட்டை எதிர்கொள்ள 1960 களில் இஸ்ரேல் மற்றும் ஈரான் நட்புறவுடன் ஒன்றிணைத்துச் செயல்பட்ட வரலாறும் உண்டு.
எதிரி ஈராக்
1948 உருவான இஸ்ரேலை நாடாக அங்கீகரித்த 2 வது இஸ்லாமிய தேசமும் ஈரான்தான். முதலாவதாகத் துருக்கி இஸ்ரேலை அங்கீகரித்திருந்தது. 1950 களில் தெற்காசியாவிலே அதிக யூதர்கள் வசிக்கும் நாடாகவும் ஈரான் இருந்தது. மற்றைய இஸ்லாமிய நாடுகளுடன் கிடைக்காத உறவு ஈரானுடன் கிடைத்ததால் அதன் எண்ணெய் வளங்களை இஸ்ரேல் அதிகம் சார்ந்திருந்தது. ஈராக்கின் இஸ்லாமிய அடிப்படைவாத அரசை அச்சுறுத்தலாக இஸ்ரேல் பார்த்து வந்த நிலையில் ஷா முகமது ரெசா பஃலவி [Shah Mohammad Reza Pahlavi] தலைமையிலான ஈரான் ஈராக்கின் பகுதிகள் மீது கண் வைத்திருந்தது.
எனவே ஈரான், ஈராக், அமெரிக்கா ஆகிய மூன்று நாடு உளவு அமைப்புகளும் இணைந்து ஈராக் நாட்டினுள் அந்நாட்டினால் ஒடுக்கப்பட்ட குர்திய இனத்தை சேர்ந்த கிளர்ச்சியாளர்களை ஊடுருவச் செய்தது. இஸ்ரேலின் மொஸாட் உளவு அமைப்பும், ஈரானின் சவாக் [SAVAK] உளவு அமைப்பும் ரகசிய பரிமாறிக்கொண்டன.
புரட்சி
தொடர்ந்து ராணுவ ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் இஸ்ரேல் ஈரான் உறவு தொடர்ந்த நிலையில் 1979 இல் ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியால் பஃலவியின் ஆட்சி தூக்கியெறியப்பட்டு அயத்துல்லா காமெனி அதிகாரத்துக்கு வந்தார்.
இதன்பின்னர் இஸ்லாமிய கட்டுப்பாடுகளால் ஈரான் தலைகீழாக மாறியது. ஆனாலும் 1980 இல் ஈராக்குக்கு எதிரான போரின்போது அமெரிக்கா சார்பில் இஸ்ரேல் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கிவந்தது.
குட்டிச் சாத்தான்
அனால் 1990 தொடங்கிய கல்ஃப் யுத்தத்தின் பின்னர் பின்னர் ஈராக் பிரச்சனை சற்று சுமூகமான பின்னர் பால்ஸ்தீன விவகாரம் உள்ளிட்டவற்றால் ஈரான் இஸ்ரேலை எதிரியாக பாவிக்கத் தொடங்கியது. இஸ்ரேல் குட்டிச் சாத்தான் என்றும் அமெரிக்கா பெரிய சாத்தான் என்று வர்ணிக்கும் அளவுக்கு மேற்கு நாடுகளுடனான ஈரானின் பகைமை வளர்ந்தது.
- ஐ.எஸ். கமாண்டர் தலைக்கு 5 லட்சம் டாலர் நிர்ணயித்திருந்தது அமெரிக்கா.
- ஆகஸ்ட் மாதம் இறுதியில் இருந்து கூட்டு நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
ஈராக்கில் ஈராக் படைகள் மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற. கடந்த மாதம் இறுதியில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக கூட்டாக அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றன.
ஈராக்கின் மேற்கு பிராந்தியமான அன்பர் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஈராக்கின் தேசிய புலனாய்வு சர்வீஸ் மற்றும் ஈராக் விமானப்படை ஆகியவை அமெரிக்க படைகளுடன் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சண்டையில் ஈராக்- அமெரிக்கா கூட்டு ஆபரேசனில் ஐ.எஸ். கமாண்டர் அபு அலி அல-துனிசி கொலை செய்யப்பட்டார் என ஈராக் தெரிவித்துள்ளார். மேலும், ஐ.எஸ். துணை கமாண்டர் அகமது ஹமீத் ஸ்வெயினும் கொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் பலர் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளது.
அபு அலி அல்-துனிசி துனிசியாவில் இருந்து ஈராக்கிற்கு வந்தவர். இவரது தலைக்கு அமெரிக்கா 5 மில்லியன் டாலர் அறிவித்திருந்தது.
ஐ.எஸ். ஸ்லீப்பர் செல் ஈராக் மற்றும் சிரியாவில் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. ஸ்லீப்பர் செல்கள் அடிக்கடி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதால் உயிர்ப்பலி அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படுகிறது.
இரண்டு வாரங்ளுக்கு முன்னதாக அமெரிக்க ராணுவம் மற்றும் ஈராக் படைகள் இணைந்து ஈராக்கின் மேற்கு பாலைவன பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதில் 15 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவைச் சேர்ந்த 7 வீரர்கள் காயம் அடைந்தனர்.
நேற்று நடைபெற்ற ஆபரேசனில் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், கம்ப்யூட்டர்கள், செல்போன்ன்கள், 10 வெடிப்பொருள் பெல்ட்கள் கைப்பற்றப்பட்டதாக ஈராக் தெரிவித்துள்ளது.
- அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- குண்டுவெடிப்பில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே உள்ள அமெரிக்க ராணுவ தள வளாகத்தில் நள்ளிரவில் குண்டுவெடித்தது. அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் இன்று பாக்தாத்துக்கு வர உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. குண்டுவெடிப்பில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
ஈரான் ஆதரவு ஈராக்கிய போராளிகள் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் தளங்களை அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்க முடியும்.
- தற்போதய இந்த வயது தளர்வு, ஈராக்கில் அதிகப்படியான குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா அந்நாட்டின் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆண்குழந்தைகளுக்கு 15 வயதிலும் , பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்க முடியும்.
தற்போதுவரை ஈரானில் பெண்களின் திருமணத்துக்கான சட்டப்பூர்வ வயது 18 ஆக உள்ளது. ஆனால் தற்போது முமொழியப்பட்டுள்ள மசோதவைன்படி, பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்தில், 9 வயதில் பெண்களை திருமணம் செய்து கொடுக்கலாம்.
சட்டப்பூர்வ வயது 18 ஆக இருந்தாலும் ஏற்கனவே ஈராக்கில் 28 சதீவீத பெண்களுக்கு அந்த வயதை எட்டும் முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது என்று ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ள நிலையில், தற்போதய இந்த வயது தளர்வு, ஈராக்கில் அதிகப்படியான குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே இந்த மசோதவனுக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
- அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது
- ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன
பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 90 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனிடையே, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 31ம் தேதி கொல்லப்பட்ட சம்பவம் மத்திய கிழக்கு மற்றும் இஸ்ரேலுக்கிடையில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இதற்கிடையில் லெபனானில் செய்யப்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிய தளங்களின் மீது ஏவுகணைத் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இந்த குழப்பங்களுக்கு மத்தியில் மற்றொரு மத்திய கிழக்கு நாடான ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளம் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைத்தளத்தைக் குறிவைத்து இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை ஈரான் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
- தொல்லியல் ஆய்வின்போது கிடைத்த அந்த மண்டை ஓட்டின் எலும்புகள் மிகவும் மென்மையாக இருந்தன.
- எலும்புத் துண்டுகளை மீண்டும் ஒன்று சேர்த்து இணைப்பதற்கு முன்பு, முதலில் அவற்றை வலுப்படுத்தினர்.
ஈராக்கின் குர்திஸ்தானில் உள்ள ஒரு குகையில் கடந்த 2018-ம் ஆண்டு பழமையான உடைந்த மண்டை ஓட்டை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த மண்டை ஓடு 75 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், நியாண்டர்தால் இனத்தைச் சேர்ந்த பெண் என்றும் தெரிவித்தனர். அந்தப் பெண்ணுக்கு ஷானிதர் இசட் (மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்ட குகையின் பெயர்) என்று பெயரிடப்பட்டது.
இந்த நிலையில் நியாண்டர்தால் இனத்தைச் சேர்ந்த பெண் உயிருடன் இருந்தபோது எப்படி இருந்திருப்பார் என்பதை விஞ்ஞானிகள் உருவகப்படுத்தி உள்ளனர். மண்டை ஓட்டின் தட்டையான, உடைந்த எச்சங்களை அடிப்படையாக வைத்து அப்பெண்ணின் முகம் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வின்போது கிடைத்த அந்த மண்டை ஓட்டின் எலும்புகள் மிகவும் மென்மையாக இருந்தன.
அந்த எலும்புத் துண்டுகளை மீண்டும் ஒன்று சேர்த்து இணைப்பதற்கு முன்பு, முதலில் அவற்றை வலுப்படுத்தினர். பின்னர் வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கையைச் சித்தரிக்கும் பேலியோ-ஆர்ட் நிபுணர்கள்நியாண்டர்தால் பெண்ணின் 3டி மாதிரியை உருவாக்கினர்.
- புதிய சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது.
- சட்டம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் இற்றப்பட்டு விட்டதாக தகவல்.
ஈராக் அரசாங்கம் சார்பில் இயற்றப்பட்டு இருக்கும் புதிய சட்டம், தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அதன்படி ஈராக் அரசு இயற்றியிருக்கும் புதிய சட்டத்தின்படி தன்பாலின ஈர்ப்பு திருமணம் செய்து கொள்வோருக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். புதிய சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று சில அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.
புதிய சட்டம் அந்நாட்டில் வசிக்கும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது தாக்குதலாக அமைந்துள்ளது. தன்பாலின ஈர்ப்பு திருமணங்களை சட்டவிரோதமாக அறிவிக்கும் சட்டம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் இற்றப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த சட்டம் ஈராக் சமூகத்தை ஒழுக்க சீர்கேடுகளில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இயற்றப்பட்டுள்ளது.
தன்பாலின ஈர்ப்பு திருமணங்கள் மற்றும் விபச்சாரத்தை ஒழிக்கும் புதிய சட்டத்தை மீறுவோருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள், அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். தன்பாலின ஈர்ப்பு அல்லது விபச்சாரத்தை ஊக்குவிப்போருக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
- ஜோர்டான் எல்லைப் பகுதியில் நடைபெற்ற டிரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- அமெரிக்க வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.
ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள், கிளர்ச்சி குழுக்கள் ஈராக், சிரியா போன்ற நாடுகளில் உள்ளன. இந்த குழுக்கள் அமெரிக்கப்படைகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது.
சில தினங்களுக்கு முன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 அமெரிக்கா வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. ஒருமுறை மட்டும் தாக்குதல் நடத்தப்படாது. பதிலடியாக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.
இந்த நிலையில ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்கள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களை குறிவைத்து 12-க்கும் மேற்பட்ட இடங்களில் அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. நீண்டதூரம் சென்று தாக்கும் குண்டுகளை பயன்படுத்தி இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் "அமெரிக்க வீரர்களுக்கு தீங்கி விளைவித்தால், அதற்கு சரியான பதில் கொடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் இந்த தாக்குதல் இறையாண்மை மீறல் என ஈராக் கண்டனம் தெரிவித்துள்ளது.
- 'உம்ரா விசா' பெற்று உள்ளே நுழைந்து பிச்சையெடுப்பதில் ஈடுபடுகின்றனர்
- பாகிஸ்தானிலிருந்து அரபு நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பிச்சைக்காரர்கள் நிரம்பி வழிகின்றனர்
பல வருடங்களாக இந்தியாவிற்கெதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தான், தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம் மற்றும் மின்சார தட்டுப்பாடு ஆகியவற்றால் அங்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது.
சொந்த நாட்டில் பிழைக்க வழியில்லாததால் பலர் அங்கு பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக அந்த பாகிஸ்தானிய பிச்சைக்காரர்கள் கும்பல் கும்பலாக ஈராக், சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் சட்டவிரோதமாகவும் சட்டரீதியாகவும் உள்ளே நுழைந்து அங்கேயும் பிச்சை எடுப்பதில் ஈடுபடுகின்றனர்.
அரபு நாடுகள் பலவற்றில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்குவது அங்கு வழக்கம். அவ்வாறு சிறையிலடைக்கபட்ட பிச்சைக்காரர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து அந்நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பிச்சைக்காரர்களே அதிகம் பயணம் செய்கின்றனர்.
இவர்கள் வருகையை தடுக்க நடவடிக்கை எடுக்க சவுதி அரேபியாவும், ஈராக்கும் பாகிஸ்தானிடம் கோரிக்கை வைத்துள்ளன. புத்திசாலித்தனமான வழிமுறையை அவர்கள் கையாண்டு உள்ளே வருவதால் தடுப்பதற்கு அந்த நாடுகள் திணறுகின்றன. சட்ட ரீதியாக அங்கு நுழைய முயல்பவர்கள், இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 'உம்ரா விசா' எனும் அனுமதியை பெற்று அங்கு நுழைகிறார்கள். வந்தவுடன் சாலைகளில் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
இது தவிர இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா இருக்கும் சாலைகளில் பிக்பாக்கெட் குற்றத்தில் ஈடுபடும் பெரும்பகுதியினரும் பாகிஸ்தானியர்களே எனவும் அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
உலக அரங்கில் பாகிஸ்தானை இது தலைகுனிய செய்திருக்கிறது.
ஒரு காலத்தில் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்து வந்த பாகிஸ்தான், தற்போது பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்வதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
- தீ விபத்து வேகமாக பரவி வெளிப்பட்ட புகையால் மூச்சு திணறலில் பலர் உயிரிழந்தனர்
- நினெவே மற்றும் குர்திஸ்தான் மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மத்திய கிழக்கு அரபு நாடுகளில் ஒன்றான ஈராக்கின் வடக்கே உள்ளது நினெவே (Nineveh) பிராந்தியம். இங்குள்ள ஹம்தனியா (Hamdaniyah) மாவட்டத்தில், அல்-ஹைதம் கூடம் (al-Haitham Hall) எனும் பெரிய திருமண மண்டபத்தில் நேற்று மாலை ஒரு திருமண விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று முன்னிரவு சுமார் 10:45 மணியளவில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் விருந்தில் கலந்து கொள்ள வந்த பெரியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் அலறியடித்து கொண்டு ஓடினர். தீ விபத்தினால் ஏற்பட்ட புகையில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வருவதற்குள் தீ மளமளவென பரவியதால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
மூச்சு திணறல், பலமான தீக்காயங்கள் உட்பட்ட காரணங்களால் தற்போது வரை 113 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு அவர்கள் அனைவரும் நினெவே மற்றும் குர்திஸ்தான் பகுதி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னமும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என நினெவே பிராந்திய கவர்னர் நஜிம் அல்-ஜுபோரி தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் விருந்து நிகழ்ச்சியின் போது நடைபெற்ற கொண்டாட்டத்தில் சிலர் பட்டாசுகளை கொளுத்தியதாகவும், அதனால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது. இருந்தாலும், இது தற்போது வரை உறுதிபடுத்தபடவில்லை. தீயணைப்புக்கான உபகரணங்கள் அந்த அரங்கில் முறையானபடி இல்லாததால், தீ பரவுதலை தடுக்க முடியாமல் போனதாக தெரிகிறது.
இதையடுத்து, அந்த திருமண அரங்கத்தின் உரிமையாளரை கைது செய்து விசாரிக்கும் நடவடிக்கையில் காவல் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மகிழ்ச்சியான திருமண கொண்டாட்டம் விபத்தில் முடிந்தது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்