search icon
என் மலர்tooltip icon

    ஈராக்

    • ஜோர்டானில் நடந்த தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • அதற்கு பதிலடியாக அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ஆதரவு பெற்ற கதாய்ப் ஹிஸ்புல்லா அமைப்பின் மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.

    அதில் ஒருவர் அந்த அமைப்பின் மூத்த தளபதி (விஸ்ஸாம் முகமது அபு பக்கர் அல்-சாதி) ஆவார். கொல்லப்பட்டவர்கள் கிழக்கு பாக்தாத் மஷ்தல் என்ற இடத்தில் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தபோது, அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

    ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழு ஜோர்டான் நாட்டில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் மூன்று அமெரிக்கா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 40 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற கதாய்ப் ஹிஸ்புல்லா அமைப்புதான் முக்கிய காரணம் என அமெரிக்கா சந்தேகிக்கிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா ஈரான், சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வாரம் ஈரான் மற்றும் சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்களை குறிவைத்து 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. அதன்தொடர்ச்சியாக நேற்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

    பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா நிலைகளை அமைத்து வீரர்களை அமர்த்தியுள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் தொடங்கியதில் இருந்த அமெரிக்கா நிலைகளை குறிவைத்து ஆயுதமேந்திய குழுக்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    ஜோர்டான் தாக்குதலுக்குப் பிறகு, ஈராக் அரசுக்கு ஏற்படும் அசௌகரியத்தை தடுக்க, அமெரிக்க நிலைகள் மீதான தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்படும். ஆனால், மற்ற இடங்களில் தாக்குதல் தொடரும் என கதாய்ப் ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மேற்கு ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளின் தளத்தின் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன.
    • பெரும்பாலான ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

    மேற்கு ஈராக்கில் அல் அசாத் விமான தளம் உள்ளது. இங்கு அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியிருந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    அல்-அசாத் விமான தளம் மீது ஏவுகணைகள் வீசப்பட்டு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் சிலர் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து அமெரிக்க ராணுவம் கூறும்போது, மேற்கு ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளின் தளத்தின் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. பெரும்பாலான ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

    ஆனால் சில ஏவுகணைகள் ராணுவ தளம் மீது விழுந்தது. ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்புகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

    • கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது தளங்களில் தீ கொளுந்து விட்டு எரிந்தது.
    • மாணவர்கள், விடுதி ஊழியர்கள் வெளியே ஓடினர். ஆனால் பலர் கட்டிடத்துக்குள் சிக்கி கொண்டனர்.

    ஈராக்கின் வடக்கு பகுதியான எர்பில் உள்ள சோரன் பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்குள்ள விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி உள்ளனர். இந்த நிலையில் பல்கலைக்கழக விடுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஒரு அறையில் தீப்பிடித்து மற்ற அறைகளுகுகு வேகமாக பரவியது.

    கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது தளங்களில் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் மாணவர்கள், விடுதி ஊழியர்கள் வெளியே ஓடினர். ஆனால் பலர் கட்டிடத்துக்குள் சிக்கி கொண்டனர்.

    தீயணைப்பு வீரர்கள் வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயம் அடைந்தனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தீ விபத்து வேகமாக பரவி வெளிப்பட்ட புகையால் மூச்சு திணறலில் பலர் உயிரிழந்தனர்
    • நினெவே மற்றும் குர்திஸ்தான் மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    மத்திய கிழக்கு அரபு நாடுகளில் ஒன்றான ஈராக்கின் வடக்கே உள்ளது நினெவே (Nineveh) பிராந்தியம். இங்குள்ள ஹம்தனியா (Hamdaniyah) மாவட்டத்தில், அல்-ஹைதம் கூடம் (al-Haitham Hall) எனும் பெரிய திருமண மண்டபத்தில் நேற்று மாலை ஒரு திருமண விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று முன்னிரவு சுமார் 10:45 மணியளவில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் விருந்தில் கலந்து கொள்ள வந்த பெரியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் அலறியடித்து கொண்டு ஓடினர். தீ விபத்தினால் ஏற்பட்ட புகையில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

    தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வருவதற்குள் தீ மளமளவென பரவியதால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

    மூச்சு திணறல், பலமான தீக்காயங்கள் உட்பட்ட காரணங்களால் தற்போது வரை 113 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு அவர்கள் அனைவரும் நினெவே மற்றும் குர்திஸ்தான் பகுதி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னமும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என நினெவே பிராந்திய கவர்னர் நஜிம் அல்-ஜுபோரி தெரிவித்துள்ளார்.

    முதற்கட்ட விசாரணையில் விருந்து நிகழ்ச்சியின் போது நடைபெற்ற கொண்டாட்டத்தில் சிலர் பட்டாசுகளை கொளுத்தியதாகவும், அதனால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது. இருந்தாலும், இது தற்போது வரை உறுதிபடுத்தபடவில்லை. தீயணைப்புக்கான உபகரணங்கள் அந்த அரங்கில் முறையானபடி இல்லாததால், தீ பரவுதலை தடுக்க முடியாமல் போனதாக தெரிகிறது.

    இதையடுத்து, அந்த திருமண அரங்கத்தின் உரிமையாளரை கைது செய்து விசாரிக்கும் நடவடிக்கையில் காவல் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மகிழ்ச்சியான திருமண கொண்டாட்டம் விபத்தில் முடிந்தது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டும், கற்கள் மற்றும் கண்ணாடிகளை எறிந்தும் மோதிக் கொண்டனர்.
    • இன மோதல் காரணமாக அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    ஈராக்கின் கிர்குக் நகரில் பல இன மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் குர்திஷ் இன மக்களுக்கும், துர்க்மென் மற்றும் அரேபியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டும், கற்கள் மற்றும் கண்ணாடிகளை எறிந்தும் மோதிக் கொண்டனர். இது பயங்கர கலவரமாக வெடித்தது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

    பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று வன்முறையை அடக்கினர். இந்த மோதலில் குர்தீஷ் இனத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயம் அடைந்தனர். 2 பேர் மார்பிலும், ஒருவர் தலையிலும் சுட்டு கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதார ஆணைய இயக்குனர் ஜியாத் கலப் தெரிவித்தார். இந்த இன மோதல் காரணமாக அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    • இந்த மின்னணு பலகைகளில் வீட்டு உபயோக பொருட்களின் விளம்பரங்கள் வெளியிடப்படும்
    • நிறுவன ஊழியருக்கும் நிறுவனத்திற்குமிடையே பணத்தகராறு இருந்து வந்தது

    மேற்காசிய அரபு நாடுகளில் ஒன்று ஈராக். இதன் தலைநகரம் பாக்தாத். அந்நாட்டின் பல இடங்களில் பிரமாண்ட மின்னணு விளம்பர பலகைகள் உள்ளன. இவற்றை நிறுவி, செயல்படுத்துதை தனியார் நிறுவனங்கள் அங்கு கையாள்கின்றன.

    இந்த விளம்பர பலகைகளில் வழக்கமாக வீட்டு உபயோக பொருட்களுக்கான விளம்பரங்களும், தேர்தல் நெருங்கும் நேரங்களில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் குறித்த செய்திகளும் மட்டுமே வெளியிடப்படும். பாக்தாத் நகரின் மைய பகுதிகளில் ஒன்று உக்பா இப்ன் நஃபியா சதுக்கம்.

    இங்கும் ஒரு பிரமாண்ட மின்னணு விளம்பர பலகை உள்ளது. இதன் செயல்பாட்டை நிர்வகிக்கும் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கும் இந்த நிறுவனத்திற்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு இருந்து வந்தது.

    நிறுவனத்தின் மீது கோபமுற்ற அந்த ஊழியர் அதிரடியாக ஒரு செயலை செய்தார். தனது மென்பொருள் ஹேக்கிங் திறமையால், மென்பொருள் பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும், தடைகளையும் மீறி, அந்த விளம்பர பலகையில் ஒரு ஆபாச படம் ஓடுமாறு செய்தார்.

    சிறிது நேரம் அந்த படம் பிரமாண்ட திரையில் ஓடியது. இதனை அப்பகுதியில் சென்று கொண்டிருந்த மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அந்த மின்னணு பலகைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தை அடுத்து பாக்தாத் நகரின் பெரும்பகுதி விளம்பர பலகைகளில் எந்த காட்சிகளும் ஒளிபரப்பப்படுவதை அதிகாரிகள் தடை செய்தனர். நீதிமன்ற ஒப்புதலை பெற்று, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, அந்த ஊழியரை காவல்துறை கைது செய்தது.

    ஆனாலும், அந்த சதுக்கத்தின் அருகே வாகனங்கள் செல்லும் போது குறுகிய நேரத்திற்கு ஆபாச படம், விளம்பர பலகையில் தோன்றியதை எப்படியோ படமெடுத்த சிலர் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அது பலரால் பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    கட்டுப்பாடுகள் நிறைந்த ஈராக்கில் இப்படியொரு சம்பவமா என பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் வியப்பை தெரிவிக்கின்றனர்.

    • பாக்தாத்தில் நேற்று தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது
    • இஸ்லாமிய நாடுகளில் அமைப்பு ஐ.நா.வில் கண்டன தீர்மானம் கொண்டு வந்துள்ளது

    சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்துள்ளார். இதற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இஸ்லாமியர்கள் அதிக அளவில் வாழும் நாடுகளில் குர்ஆன் எரிப்பு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு ஐ.நா. சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இதை இந்தியா ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, நேற்று ஈராக் பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தை 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதோடு, தீ வைத்து சேதமாக்கினர். இந்த நிலையில் சுவீடன் தூதர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

    • ஈராக்கில் ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
    • இதையடுத்து அவரது ஆதரவாளர்கள், ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையானது.

    பாக்தாத்:

    ஈராக் அரசியலில் ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் அமெரிக்க-எதிர்ப்பு போராளிகளை வழிநடத்தியவர் மற்றும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களைக் கொண்ட செல்வாக்குமிக்க தலைவராக திகழ்கிறார்.

    கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 73 இடங்களை வென்ற நிலையில், யாருக்கும் பெரும்பான்மை இல்லை.

    ஈரான் ஆதரவு ஒருங்கிணைப்புடன் ஈராக்கில் பிரதமர் வேட்பாளர்களுடன் அரசாங்கத்தை அமைக்க அல் சதர் எதிர்ப்பு தெரிவித்தார். அல்-சதர் மற்றும் அவரது போட்டியாளர்களுக்கு இடையிலான முட்டுக்கட்டையால் தேர்தல் முடிந்து பல மாதங்கள் கடந்தும்கூட, ஈராக்கில் ஒரு சாதனையாக இன்னும் அரசாங்கம் இல்லாத நிலை உள்ளது.

    பாராளுமன்றத்தை கலைத்தல், முன்கூட்டியே தேர்தல் நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களை அல்-சதர் வலியுறுத்தினார். இதற்கிடையே, முக்தாதா அல்-சதர், தான் அரசியலில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.

    இதனால் அதிருப்தி அடைந்த அவரது ஆதரவாளர்கள் தலைநகர் பாக்தாத்தில் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். பாக்தாத்தில் உள்ள அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதையடுத்து, அல்-சதர் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.

    இதேபோல் பாக்தாத் முழுவதும் அல்-சதார் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் நடந்த சண்டைகளால் அந்த நகரமே கலவர பூமியானது. இந்த வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. 300-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

    வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக இடைக்கால பிரதமர் முஸ்தபா அல் கதாமி நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார்.

    • ஈராக் அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர் ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர்.
    • முக்தாதா அல்-சதர், தான் அரசியலில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.

    பாக்தாத்:

    ஈராக் அரசியலில் ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் அமெரிக்க-எதிர்ப்பு போராளிகளை வழிநடத்தியவர் மற்றும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களைக் கொண்ட செல்வாக்குமிக்க தலைவராக திகழ்கிறார்.

    கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 73 இடங்களை வென்ற நிலையில், யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் இழுபறி நீடிக்கிறது. ஈரான் ஆதரவு ஒருங்கிணைப்புடன் ஈராக்கில் பிரதமர் வேட்பாளர்களுடன் அரசாங்கத்தை அமைக்க அல் சதர் எதிர்ப்பு தெரிவித்தார். அல்-சதர் மற்றும் அவரது போட்டியாளர்களுக்கு இடையிலான முட்டுக்கட்டையால் தேர்தல் முடிந்து பல மாதங்கள் கடந்தும்கூட, ஈராக்கில் ஒரு சாதனையாக இன்னும் அரசாங்கம் இல்லாத நிலை உள்ளது.

    பாராளுமன்றத்தை கலைத்தல், முன்கூட்டியே தேர்தல் நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களை அல்-சதர் வலியுறுத்தினார்.

    இதற்கிடையே, முக்தாதா அல்-சதர், தான் அரசியலில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், அல்-சதர் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 20 பேர் பலியாகினர் என தகவல் வெளியாகியுள்ளது.

    போராட்டக்காரர்களின் வன்முறை மற்றும் ஆயுத பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும் எனக்கூறி அல் சதர் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகிறார்.

    போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத சூழலில் அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    • முகமது அல்-சூடானி புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடைபெறுகிறது.
    • முகமது ஈரானுக்கு மிகவும் நெருக்கமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

    பாக்தாத்:

    ஈராக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் அல்-சதருடைய கட்சி 73 இடங்களைக் கைப்பற்றி அதிக வாக்குகள் பெற்ற கட்சியாக திகழ்ந்தது. எனினும் ஆட்சிப் பொறுப்பு ஏற்பது பற்றி கட்சிகளுக்கு இடையே இருந்த சிக்கல்கள் காரணமாக இழுபறி நீடித்தது.

    இதற்கிடையே, முகமது அல்-சூடானி புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து அல்-சதருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஏனெனில் பிரதமர் வேட்பாளராக உள்ள முகமது ஈரானுக்கு மிகவும் நெருக்கமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

    இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இந்த வாரத்தில் தொடர்ந்து 2-வது முறையாக நூற்றுக்கணக்கானோர் மீண்டும் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். பாராளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, பிரதமர் முஸ்தபா, போராட்டத்தை உடனே கைவிடும்படி கேட்டுக்கொண்டார். சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பாதுகாத்துக் கொள்ளுமாறு வீரர்களுக்கு உத்தரவிட்டார். பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

    • வெடிகுண்டு தாக்குதலை துருக்கி நடத்தியதாக ஈராக் குற்றம் சாட்டியுள்ளது.
    • குர்தீஷ் படைகளை குறிவைத்து நடந்த தாக்குதலில் விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர் என்று தெரிவித்தது.

    ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள டொஸ்ரஹூக் மாகாணத்தில் மலைப் பிரதேசத்தில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தை உள்பட 8 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். 23 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த தாக்குதலை துருக்கி நடத்தியதாக ஈராக் குற்றம் சாட்டியுள்ளது. குர்தீஷ் படைகளை குறிவைத்து நடந்த தாக்குதலில் விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர் என்று தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு ஈராக் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, இந்த தாக்குதல் ஈராக்கின் இறையாண்மையை அப்பட்டமாக மீறுவதாகும் என்றார். ஆனால் ஈராக்கின் குற்றச்சாட்டை துருக்கி மறுத்துள்ளது.

    ×