என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராக்கெட்"

    • கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜிஸால் இந்த எரிஸ் ராக்கெட் ஏவப்பட்டது.
    • ராக்கெட் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை

    ஆஸ்திரேலியா முதன்முறையாக விண்ணில் செலுத்த முயன்ற ராக்கெட் முயற்சி தோல்வியில் முடிந்தது. வானில் பறந்த ராக்கெட் 14 விநாடிகளிலேயே தரையில் விழுந்த விபத்துக்குள்ளானது.

    கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜிஸால் ஏவப்பட்ட இந்த எரிஸ் ராக்கெட் தான் ஆஸ்திரேலியாவில் இருந்து தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்த முயன்ற முதல் ராக்கெட் ஆகும். இது சிறிய செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்டது.

    ராக்கெட் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

    • ஸ்டார்ஷிப் என்பது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ஒரு ராக்கெட் ஆகும்.
    • ஸ்பேஸ்எக்ஸ் அமெரிக்கப் பணக்காரர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமானது.

    அமெரிக்காவின் டெக்சாஸில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் சோதனையின்போது வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதியில் பெரும் தீப்பிழம்பு உருவானது

    ஸ்டார்ஷிப் என்பது விண்வெளிப் பயணம் முதல் செயற்கைக்கோள் ஏவுதல் வரை பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ஒரு ராக்கெட் ஆகும்.

    அமெரிக்கப் பணக்காரர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை தோல்வியடைவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு பலமுறை ராக்கெட் ஏவுதல் சோதனைகள் தோல்வியடைந்துள்ளன. 

    • 30 நிமிடங்களுக்குள் ராக்கெட்டுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
    • எரிபொருள் கசிவு காரணமாக ராக்கெட் ஏவுதல் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

    அமெரிக்கப் பணக்காரர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் ஒன்பதாவது ஏவுதல் தோல்வியடைந்தது.

    டெக்சாஸிலிருந்து ஏவப்பட்ட 30 நிமிடங்களுக்குள் ராக்கெட்டுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த ராக்கெட் இறுதியில் இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

    எரிபொருள் கசிவு காரணமாக ராக்கெட் ஏவுதல் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டான் ஹவுட் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

    ஸ்டார்ஷிப் என்பது விண்வெளிப் பயணம் முதல் செயற்கைக்கோள் ஏவுதல் வரை பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ஒரு ராக்கெட் ஆகும்.

    முன்னதாக கடந்த ஜனவரியில் நடைபெற்ற முந்தைய ஏழாவது ஸ்டார்ஷிப் ஏவுதல் சோதனையும், மார்ச் 6 அன்று நடைபெற்ற எட்டாவது சோதனையும் தோல்வியடைந்தன.

    மார்ச் 6 அன்று எட்டாவது சோதனையின் போது ஸ்டார்ஷிப் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து அருகிலுள்ள நான்கு விமான நிலையங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 240 விமானங்கள் பாதிக்கப்பட்டன. 

    • பல தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்துள்ளன.
    • ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட முதல் ராக்கெட் இதுவாகும்.

    ஓஸ்லோ:

    விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவதில் உலக நாடுகள் பலவும் போட்டிப்போடுகின்றன. இந்த போட்டியில் தற்போது பல தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்துள்ளன.

    அந்தவகையில் ஜெர்மனியைச் சேர்ந்த இசார் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனமானது நார்வேயில் இருந்து சோதனை அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் என்ற ராக்கெட்டை ஏவியது. ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட முதல் ராக்கெட் இதுவாகும்.

    திட்டமிட்டபடி அந்த ராக்கெட் விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தது. 30 நொடிகள் வானில் பறந்த அந்த ராக்கெட் பின்னர் சுழன்றடித்துக் கொண்டு கடற்பகுதியில் விழுந்தது. எனினும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ராக்கெட் எட்டியதாக இசார் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்துவர உள்ளது.
    • ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் க்ரூ 10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட இருந்த ஃபால்கன் 9 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் ஏவப்படாமல், கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. இந்த ராக்கெட் தான் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்துவர உள்ளது.

    ராக்கெட் ஏவுதளத்தில் இருந்த ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இன்றைய திட்டம் தாமதமாகி உள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் க்ரூ 10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டால் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.56 மணிக்கு ராக்கெட்டை விண்ணில் செலுத்த வாய்ப்பு உள்ளதாக நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. நாசா விண்வெளி வீரர்களான ஆனி மெக்லைன், நிகோல் ஏயர்ஸ், ஜப்பான் விண்வெளி துறையை சேர்ந்த தகுயா ஒனிஷி மற்றும் ரோஸ்கோமோஸ் விண்வெளி வீரர் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் டிராகன் விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக வெளியேறி விட்டனர். மேலும், இந்த ராக்கெட்டும் பத்திரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இன்றைய திட்டப்படி ஸ்பேக்ஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்வெளிக்கு புறப்பட்டு இருந்தால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் மார்ச் 19-ம் தேதி பூமிக்கு திரும்பியிருப்பர். தற்போது இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இருவரும் பூமிக்கு திரும்புவது மேலும் தாமதமாகி உள்ளது.

    • ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்கனவே 2 ஏவுதளங்கள் உள்ளன.
    • குலசேகரப்பட்டினத்தில் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கான ஏவுதளமும் கட்டப்பட்டு வருகிறது.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஒரே நேரத்தில் 2 புதிய ஏவுதளங்களை உருவாக்கி திறன்களை விரிவுபடுத்த உள்ளது. குறிப்பாக, ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்கனவே 2 ஏவுதளங்கள் உள்ளன.

    தற்போது 30 டன் எடையை தூக்கி செல்லும் ராக்கெட்டுகளை ஏவும் திறன் கொண்ட 3-வது ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கான ஏவுதளமும் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த 2 ஏவுதளங்களும் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இஸ்ரோவின் வளர்ந்து வரும் ஏவுதளத்தின் சக்தியை அதிகரிப்பதுடன், திறன்களையும் மேம்படுத்த உதவும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.

    • இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும்.
    • இந்த ராக்கெட்டை கடந்த 15-ந்தேதி விண்ணில் ஏவுவதாக இருந்தது.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுவதுமாக தனியாரால் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணி அளவில் விண்ணில் ஏவுகிறது.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் 'விக்ரம்-எஸ்' என்ற ராக்கெட் ஏவும் பணிக்கு 'மிஷன் பிரரம்ப்' என பெயரிடப்பட்டு உள்ளது. இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும். இந்த ராக்கெட்டை கடந்த 15-ந்தேதி விண்ணில் ஏவுவதாக இருந்தது.

    ஆனால் அன்றைய தினம் மோசமான வானிலை காரணமாக ஏவப்படவில்லை. வருகிற 18-ந்தேதி வானிலை நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட், வெளிநாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோள் உள்பட 3 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது.

    3 நிலைகளை கொண்ட ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள 480 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படும். பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு அவை பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

    • ராக்கெட் விண்ணில் செல்வதை பார்க்க ஏராளமானோர் கடற்கரை மற்றும் சாலைகளில் திரண்டிருந்தனர்.
    • விண்ணில் உள்ள கதிர் வீச்சுகளை மனித உடல்கள் எந்த அளவுக்கு தாங்குகின்றன என்பது இந்த மாதிரி பொம்மைகள் மூலம் அறியப்படும்.

    நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசா முடிவு செய்தது. 2025ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை வடிவமைத்தது.

    முதற்கட்டமாக மனிதர்கள் இல்லாமல் ஆர்டெமிஸ்-1 என்ற ராக்கெட்டை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்தன. இப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து ராக்கெட்டை விண்ணில் ஏவ கடந்த ஆகஸ்டு மாதம் முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் என்ஜின் கோளாறு காரணமாக இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு நேற்று முன்தினம் (14ம் தேதி) ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா அறிவித்திருந்த நிலையில் சூறாவளி புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து 16ம் தேதி (இன்று) ஆர்டெமிஸ் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா தெரிவித்தது.

    அதன்படி நேற்று நள்ளிரவில் புளோரிடாவில் உள்ள கேப் கானவரல் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்த தயாரான நிலையில் திடீரென்று ஹைட்ரஜன் வாயு கசிவு கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். ராக்கெட்டை ஏவுவதற்காக கவுன்ட்- டவுன் நடந்தபோதும் மறுபுறம் வாயு கசிவை சரி செய்யும் பணி நடந்தது. இதனால் ஆர்டெமிஸ் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதில் தாமதம் ஏற்பட்டது. கோளாறை சரிசெய்தபின் இந்திய நேரப்படி இன்று மதியம் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. வாயு கசிவு காரணமாக ராக்கெட் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது.

    ராக்கெட் விண்ணில் செல்வதை பார்க்க ஏராளமானோர் கடற்கரை மற்றும் சாலைகளில் திரண்டிருந்தனர்.

    நிலவுக்கு மனிதர்கள் செல்வதற்கான சூழல் இருப்பதை அறிய சோதனைக்காக மனித திசுக்களை பிரதிபலிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களை போன்ற பொம்மைகள் ராக்கெட் மூலம் அனுப்பப்படுகிறது.

    விண்ணில் உள்ள கதிர் வீச்சுகளை மனித உடல்கள் எந்த அளவுக்கு தாங்குகின்றன என்பது இந்த மாதிரி பொம்மைகள் மூலம் அறியப்படும்.

    • இந்த ராக்கெட் 545 கிலோ எடை கொண்டது.
    • 7 டன் உந்து சக்தியை கொண்டது.

    சென்னை :

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுமையாக தனியார் தயாரித்த ராக்கெட்டை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும், 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் 'விக்ரம்-எஸ்' என்ற இந்த ராக்கெட்டை தயாரித்து உள்ளது. இந்தப்பணிக்கு 'பிரரம்ப்' என பெயரிடப்பட்டு உள்ளது. இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும்.

    83 கிலோ எடையை தூக்கி செல்லும் இந்த ராக்கெட் 2 இந்திய செயற்கைகோள்கள், ஒரு வெளிநாட்டு செயற்கைகோள்கள் உள்பட 3 செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது.

    ஒரே நிலையை கொண்ட இந்த ராக்கெட் 545 கிலோ எடையும், 6 மீட்டர் உயரமும், 0.375 மீட்டர் விட்டமும் கொண்டது. 7 டன் உந்து சக்தியை கொண்டது.

    இந்த 3 செயற்கைகோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. உயரத்தில் 300 வினாடிகளில் கொண்டு சென்று நிலை நிறுத்தப்படுகிறது. பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் சுற்றுலா செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.
    • ராக்கெட் பயணத்தில் பங்கேற்க உள்ளோரின் விபரங்களை ஜப்பான் கோடீஸ்வரர் யுசாகு மசோவா அறிவித்தார்.

    பூமியில் இருந்து ராக்கெட்டில் சென்று நிலவை சுற்றிவர விரும்புவோர் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் சுற்றுலா செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.

    கடந்த 2018-ம் ஆண்டு இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து பலரும் நிலவை சுற்றி பார்க்க விருப்பம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அடுத்த ஆண்டு நிலவை சுற்றி பார்க்க செல்லும் ராக்கெட் பயணத்தில் பங்கேற்க உள்ளோரின் விபரங்களை ஜப்பான் கோடீஸ்வரர் யுசாகு மசோவா அறிவித்தார்.

    இந்த சுற்றுலாவில் அமெரிக்க சினிமா தயாரிப்பாளர் பிரென்டன் ஹால், செக் கலைஞர் யெமி ஏடி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    இதனை ஜப்பானை சேர்ந்த கோடீஸ்வரர் யுசாகு மசோவா அறிவித்து உள்ளார்.

    • சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது.
    • ஏவப்பட உள்ள இ.ஓ.எஸ்.-7 செயற்கைக்கோள் 334 கிலோ எடை கொண்டது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 1,750 கிலோ எடையும், ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 4 ஆயிரம் கிலோ எடையும் கொண்ட செயற்கை கோளை விண்ணில் செலுத்த முடியும்.

    சர்வதேச விண்வெளி சந்தையில் சிறிய செயற்கைக் கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு எடை குறைந்த செயற்கை கோள்களை (500 கிலோ வரை) புவியின் தாழ்வட்ட சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்ல சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்களை இஸ்ரோ புதிதாக வடி வமைத்து வருகிறது. இதன் எடை 120 டன். இதற்கான செலவும் ரூ.30 கோடிக்குள் அடங்கி விடும்.

    அதன்படி சிறிய ரக 2 செயற்கை கோள்களுடன் எஸ்.எஸ்.எல்.வி.-டி1 ராக்கெட் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

    ஆனால் ராக்கெட்டின் சென்சார் செயலிழந்து, தவறான சுற்றுப்பாதையில் செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தபட்டதால் அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து எஸ்.எஸ்.எல்.வி. வகையில் புதிய ராக்கெட் தயாரித்து விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்து இருந்தது. அந்த வகையில் புதிதாக எஸ்.எஸ்.எல்.வி.-டி2 ராக்கெட் தற்போது வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த ராக்கெட்டை இ.ஓ.எஸ்.-07 உள்ளிட்ட 3 செயற்கைக் கோள்களுடன் இந்த வாரம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்ட மிட்டுள்ளது.

    இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, ராக்கெட் ஏவுதலுக்கான முன்தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. வானிலை சாதகமாக அமைந்தால் வருகிற 10-ந் தேதி ராக்கெட் விண்ணில் ஏவப்படும். இதில் ஏவப்பட உள்ள இ.ஓ.எஸ்.-7 செயற்கைக்கோள் 334 கிலோ எடை கொண்டது. புவி கண்காணிப்பு பணிக்காக அனுப்பப்பட உள்ளது என்றனர்.

    முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததால் இந்த முறை கூடுதல் கவனத்துடன் திட்டத்தை செயல்படுத்த விஞ்ஞானிகள் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. 2 ரக ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது.
    • ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தவில்லை.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி-01 ரக ராக்கெட்டை விண்ணில் ஏவியது.

    இந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தவில்லை. இதனால் இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. 2 ரக ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது.

    இதில் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக தற்போது தயாரிக்கப்பட்ட ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை பூமியில் இருந்து 356.2 கிலோ மீட்டர் உயரத்தில் 450 கிலோமீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது. இதனுடைய இறுதிகட்ட பணியான கவுண்ட்டவுன் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    ×