search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "satellite"

    • டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி 2016 -ம் ஆண்டு முதல் சோதனையை நடத்தி வந்தது.
    • ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்களில் பேச முடியும்.

    பிஜிங்:

    செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கை கோள் மூலமாக ஸ்மார்ட் போன்களில் பேசும் வசதியை கொண்டு வர சீனா ஆய்வு மேற்கொண்டது.

    இதற்காக டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி 2016 -ம் ஆண்டு முதல் சோதனனையை நடத்தி வந்தது. இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தரையில் செல்போன் கோபுரங்கள் இல்லாமல் செல்போன்களில் பேசலாம் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட் போன் தகவல் தொடர்பு அமைப்பில், செயற்கைக் கோள் இணைப்பை அடைவதில், சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தனர். இதன்மூலம் ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்களில் பேச முடியும்.

    தரையில் உள்கட்டமைப்பு இன்றி நேரடியாக செயற்கை கோள் மூலமாகவே பேச முடியும் என்பதால், நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது கூட எந்த இடையூறும் இன்றி தொலை தொடர்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதனால் இத்திட்டம் உலகம் முழுவதும் பிரபலம் ஆகும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • இஸ்ரோ இன்சாட்-3டிஎஸ் என்ற செயற்கைக்கோளை வடிவமைத்தது.
    • எப்-14 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவியது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, இன்சாட்-3டிஎஸ் என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் 17.2 24 அன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்தது. இதற்கான ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயார் நிலையில் உள்ளது. ராக்கெட் செலுத்துவதற்கான 27.5 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று மதியம் தொடங்கியது.

    எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இஸ்ரோ அனுப்பிய ஜி.எஸ்.எல்.வி.எப்-14 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது.
    • எப்-14 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.35 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது.

    இதனை, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.35 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

     


    இதற்கான ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மற்றும் செயற்கைகோள் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப் பணியாக 27.5 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று மதியம் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்கியது.

    எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • கடந்த 27-ந்தேதி விண்வெளி தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்ள செயற்கைக்கோள்களை லாங் மார்ச்-11 மூலம் ஏவியது.
    • ராக்கெட்டின் பூஸ்டர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறியது.

    விண்வெளி தொழில்நுட்பத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாக சீனாவும் கடும் போட்டியிட்டு வருகிறது. அடிக்கடி செயற்கைக்கோள்களை ஏவி சோதனை நடத்தி வருகிறது.

    அந்த வகையில் இன்று செயற்கைக்கோள் இணைய தொழில்நுட்பம் தொடர்பாக சோதனை செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. இது வெற்றிகரமான நிர்ணயிக்க சுற்றுவட்ட பாதையை அடைந்ததாக சீனா தெரிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் லாங் மார்ச்-2சி கேரியர் ராக்கெட் மூலம் இன்று காலை உள்ளூர் நேரப்படி செலுத்தப்பட்டுள்ளது.

    செயற்கைக்கோள் இணைய தொழில்நுட்பம் சோதனை வெற்றி பெற்றால், செயற்கைக்கொள் மூலம் தகவல் தொடர்புக்கான இணையதள வசதியை வழங்க முடியும். தற்போது எலான் மஸ்க் நிறுவனம செயற்கைக்கோள் மூலம் இணையதளம் வழங்கும் வசதியை கொண்டுள்ளது.

    கடந்த 27-ந்தேதி விண்வெளி தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்ள செயற்கைக்கோள்களை லாங் மார்ச்-11 மூலம் ஏவியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் திசைமாறி விண்ணில் இருந்து பூமியை நோக்கி வந்தது. ராக்கெட்டின் பூஸ்டர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறியது.

    • தென்கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.
    • ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள விண்வெளி படைத்தளத்தில் இருந்து செயற்கைக்கோளை ஏவியது.

    சியோல்:

    வடகொரியா சமீபத்தில் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவி நிலை நிறுத்தியது. இதற்கு தென்கொரியா, அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதற்கிடையே உளவு செயற்கைக்கோள் மூலம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, ராணுவ தலைமையகமான பென்டகன், கடற்படை தளம் ஆகியவற்றை படம் பிடித்ததாக வடகொரியா தெரிவித்தது.

    மேலும் இவ்விவகாரம் தொடர்பாக பேச்சு வார்த்தைக்கு அழைத்த அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது.

    இந்த நிலையில் தென்கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.

    ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள விண்வெளி படைத்தளத்தில் இருந்து செயற்கைக்கோளை ஏவியது.

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் தென்கொரியா செய்துள்ள ஒப்பந்தத்தில் 2025-ம் ஆண்டுக்குள் 5 உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. அதில் முதல் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.

    வடகொரியாவுக்கு போட்டியாக தென்கொரியாவும் உளவு செயற்கைக்கோளை ஏவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 25 முதல் 30 மாடி உயரம் கொண்ட இந்த விண்கலம், 120 டன் எடை கொண்டது.
    • ஸ்பேக் எக்ஸ் ராக்கெட் ஏவுதளத்தில் விண்கலம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் விண்கலம் தயாராக உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்துள்ளது.

    பிரபல கோடீஸ்வரர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் விண்கலத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஸ்டார் சிப் விண்கலம், மனிதர்களை நிலவு, செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்ல உருவாக்கப்பட்டதாகும்.

    25 முதல் 30 மாடி உயரம் கொண்ட இந்த விண்கலம், 120 டன் எடை கொண்டது.

    உலகின் மிக சக்தி வாய்ந்த டிராகன் பூஸ்டர்ஸ் ராக்கெட் மூலம், இந்த விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது.

    இந்த விண்கலம், புவிஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு, தானாக பயணித்து, தரையிறங்கும் வல்லமை கொண்டது.

    விண்கலத்தின் அனைத்து சோதனைகளும் நிறைவு செய்துள்ளது. ஸ்பேக் எக்ஸ் ராக்கெட் ஏவுதளத்தில் விண்கலம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மனிதர்களை ஏற்றி செல்வதற்காக, அமெரிக்க விண்வெளி துறையின் அனுமதிக்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் காத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

    • வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் திட்டம் தோல்வியடைந்தது
    • கடலில் கிடந்த பாகங்களை சேகரித்து தென்கொரியா சோதனை

    அமெரிக்கா மற்றும் தென்கொரியாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை செய்து வருகிறது. அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த போதிலும், அதைப்பற்றி கண்டு கொள்வதில்லை.

    இறுதியாக கடந்த மே மாதம் செயற்கைக்கோள் ஒன்றை ஏவியது. இந்த செயற்கைக்கோள் அமெரிக்கா, தென்கொரியாவின் ராணுவப் பணிகளை உளவு பார்க்க உதவிகரமாக இருக்கும். இந்த செயற்கைக்கோளை நிலைநிறுத்தினால் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என தென்கொரியா கருதியது.

    ஆனால், ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோள், வடகொரிய தீபகற்ப கடலில் விழுந்து நொறுங்கியது. இதை மிகப்பெரிய தோல்வியாக வடகொரியா கருதுகிறது. இருந்தாலும் தவறுகளை கண்டறிந்து, சரிசெய்யப்பட்டு மீண்டும் செயற்கைக்கோளை செலுத்த முயற்சி மேற்கொள்வோம் எனத் தெரிவித்திருந்தது.

    இதற்கிடையே செயற்கைக்கோளின் உடைந்த பாகங்களை தேடும் பணியில் தென்கொரியா ஈடுபட்டது. கப்பற்படை, விமானப்படை, நீரில் மூழ்கி தேடும் வல்லுனர்கள் ஆகியோரை கொண்டு 36 நாட்கள் தேடுதல் வேட்டை நடத்தி செயற்கைக்கொளில் துண்டுகளை சேகரித்தது. அவற்றை ஆராய்ந்த பார்த்தபோது ராணுவ பணிகளை உளவு பார்க்கும் திறனில்லை என தெரியவந்துள்ள என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.

    எண்ணற்ற மற்றும் முக்கிய பகுதிகளை நாங்கள் மீட்டெடுத்துள்ளோம். தென்கொரியா மற்றும் அமெரிக்க வல்லுனர்கள் கொண்டு ஆய்வு செய்தபோது வடகொரியாவின் செயற்கைக்கோளுக்கு ராணுவ பணிகளை உளவு பார்க்கம் திறனில்லை என்பது தெரியவந்தது என தென்கொரியா தெரிவித்துள்ளது.

    தென்கொரியாவின் தகவலுக்கு வடகொரிய இன்னும் பதில் அளிக்கவில்லை.

    • ஜிலின்-1 செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 108ஆக உயர்ந்துள்ளது.
    • 2030ம் ஆண்டுக்குள் சந்திரனில் விண்வெளி வீரர்களை தரையிறக்க சீனா திட்டம்.

    சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று மதியம் 1.30 மணிக்கு ஒரே நேரத்தில் 41 செயற்கைக்கோள்களுடன் நீண்ட 2டி ராக்கெட்டை விண்ணில் செலுத்தி அந்நாடு புதிய சாதனையை படைத்துள்ளது.

    இந்த நீண்ட ராக்கெட் 476வது விமானப் பயணமாகும். ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் முக்கியமாக வணிக ரிமோட் சென்சிங் சேவைகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப சரிபார்ப்பை வழங்கும் எனவும் செயற்கைக்கோள்களில் பெரும்பாலானவை 36 ஜிலின்-1 தொடரைச் சேர்ந்தவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம், ஜிலின்-1 செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 108ஆக உயர்ந்துள்ளது.

    சீனா, 420 கிலோகிராம் எடை கொண்ட ஜிலின்-1 செயற்கைக்கோளை 2015ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில், அதன் எடையை வெறும் 22 கிலோவாகக் குறைத்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, 2030ம் ஆண்டில் நிலவு மற்றும் அதற்கு மேற்பட்ட பயணங்கள் மற்றும் பூமியில் தரை செயல்பாடுகளுக்கு இடையே ஒரு தகவல் தொடர்பு பாலமாக செயல்படும் ரிலே செயற்கைக்கோள்களை உருவாக்கவும் சீனா செயல்பட்டு வருகிறது.

    2030ம் ஆண்டுக்குள் சந்திரனில் விண்வெளி வீரர்களை தரையிறக்க சீனா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு வருடத்தில் வடகொரியா கிட்டத்தட்ட 100 ஏவுகணைகளை சோதனை செய்து இருக்கிறது.
    • செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று ஜப்பான் அரசிடம் வடகொரியா நோட்டீஸ் மூலம் தெரிவித்தது.

    ராணுவ உளவு செயற்கைக்கோள் ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று வடகொரியா அறிவித்து இருக்கிறது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான பொறுப்பற்ற ராணுவ பயிற்சிகளுக்கு இதுபோன்ற வசதிகள் மிகவும் அவசியமான ஒன்று என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

    மே 31-ம் தேதி முதல் ஜூன் 11-ம் தேதிக்குள் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் வடகொரியா தெரிவித்து இருக்கிறது. இது குறித்து ஜப்பான் அரசுக்கு வடகொரியா அனுப்பிய நோட்டீசில், ராணுவ உளவு முயற்சியின் அங்கமாக முதன் முறையாக செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணை தொழில்நுட்பத்தில் அனுப்ப இருப்பதாக தெரிவித்து இருந்தது.

    இது மஞ்சள் கடல், கிழக்கு சீன கடல் மற்றும் பிலிப்பைன்சின் கிழக்கு பகுதியில் உள்ள லூசோன் தீவுகளில் கடல்நீரை பாதிக்கச் செய்யலாம் என்றும் வடகொரியா நோட்டீசில் தெரிவித்து இருந்தது. ஜப்பான் எல்லைக்குள் வடகொரிய ஏவுகணை நுழைந்தால், அதனை உடனடியாக சுட்டு வீழ்த்த ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜப்பான் நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி யசுகாசு ஹமடா உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.

    கடந்த ஆண்டு துவங்கியதில் இருந்து வடகொரிய கிட்டத்தட்ட 100 ஏவுகணைகளை சோதனை செய்து இருக்கிறது. இந்த சோதனைகள் தென் கொரியா மற்றும் ஜப்பான் கடற்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்து இருக்கிறது. எனினும், தடையை மீறி செயற்கைக்கோளை விண்ணில் ஏவ வடகொரியா முடிவு செய்துள்ளது.

    ஐ.நா. தடையை மீறி ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயல் என்று ஜப்பான் தெரிவித்து இருக்கிறது. வடகொரியாவின் புதிய செயற்கைக்கோள் ஏவும் நடவடிக்கை ஜப்பான், தென் கொரிய கடல் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

    • 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட 'என்.வி.எஸ்.-01' என்ற வழிகாட்டி செயற்கைகோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.
    • ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காலை வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி விண்ணில் பாய்வதற்கு 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. இதற்கான 27½ மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று தொடங்கியது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்டை இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.

    இதில் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட 'என்.வி.எஸ்.-01' என்ற வழிகாட்டி செயற்கைகோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.

    செயற்கைகோளை உத்தேசித்துள்ள சுற்றுப்பாதைக்கு எடுத்துச்செல்ல அடுத்தடுத்த சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. வாகனங்கள் வழிசெலுத்துவதற்கு திட்டமிடப்பட்ட 2-வது தலைமுறை செயற்கைகோள்களில் முதன்மையானது.

    அடுத்த தலைமுறைக்கான என்.வி.எஸ். வரிசை செயற்கைகோள்கள் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தகவல்களை தக்கவைத்து மேம்படுத்தும். இந்த தொடர் சேவைகளை விரிவுபடுத்த கூடுதலாக 'எல்1 பேண்ட் சிக்னல்'களை உள்ளடக்கியது.

    இதற்கான இறுதி கட்டப்பணியான 27.30 மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று காலை 7.12 மணிக்கு தொடங்கியது. 3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • இதற்கான 27½ மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று தொடங்கியது.
    • ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை விண்ணில் பாய்வதற்கு 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. இதற்கான 27½ மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று தொடங்கியது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்டை நாளை (திங்கட்கிழமை) காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.

    இதில் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட 'என்.வி.எஸ்.-01' என்ற வழிகாட்டி செயற்கைகோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.

    செயற்கைகோளை உத்தேசித்துள்ள சுற்றுப்பாதைக்கு எடுத்துச்செல்ல அடுத்தடுத்த சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

    வாகனங்கள் வழிசெலுத்துவதற்கு திட்டமிடப்பட்ட 2-வது தலைமுறை செயற்கைகோள்களில் முதன்மையானது. அடுத்த தலைமுறைக்கான என்.வி.எஸ். வரிசை செயற்கைகோள்கள் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தகவல்களை தக்கவைத்து மேம்படுத்தும். இந்த தொடர் சேவைகளை விரிவுபடுத்த கூடுதலாக 'எல்1 பேண்ட் சிக்னல்'களை உள்ளடக்கியது.

    இதற்கான இறுதி கட்டப்பணியான 27.30 மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.12 மணிக்கு தொடங்கியது.

    3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
    • ஜப்பான் தீவில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் பதுங்கி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

    டோக்கியோ:

    வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏவுகணை சோதனை நடத்துகிறது.

    சமீபத்தில் ஜப்பான் கடலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஜப்பான் தீவில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் பதுங்கி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஏவுகணை ஜப்பான் பகுதிக்குள் விழவில்லை.

    இந்த நிலையில் வடகொரியாவின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தவும், ஏவுகணை இடைமறிப்பு கருவிகளை செயல்படுத்தவும் தயாராக இருக்கும்படி ராணுவத்துக்கு ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஜப்பான் மந்திரி யசுகாசு ஹமாடா, ராணுவத்திடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு எதிராக அழிவுகரமான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

    ×