search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "scientists"

  • நல்ல நட்பு மலரக் காரணம், இந்த மரபணு ஒற்றுமைதான்.
  • நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் கூடுதலாக ஒரே மாதிரி இருக்கின்றனவாம்.

  `நல்ல நண்பர்களாக இருப்பவர்களின் மரபணுக்கள், அவர்களுக்கு அறிமுகம் இல்லாத ஆட்களின் மரபணுக்களைவிட, அதிக அளவில் ஒரே தோற்றம் தருகின்றன. நல்ல நட்பு மலரக் காரணம், இந்த மரபணு ஒற்றுமைதான்' எனச் சொல்லி யோசிக்க வைத்திருக்கிறார்கள் இரண்டு விஞ்ஞானிகள். அமெரிக்காவைச் சேர்ந்த இவர்கள் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவு மரபணுத்துறையில் இன்று பெரிய விவாதத்திற்கு வித்திட்டிருக்கிறது.

  அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பவுலர் மற்றும் யேல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் நிக்கோலஸ் கிறிஸ்டாகிஸ் ஆகிய இருவரும் சேர்ந்து செய்த ஆய்வின் முடிவே அது.

  அமெரிக்காவின் சிறு நகரம் ஒன்றில், இதயம் தொடர்பான ஆய்வுக்காகத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 2 ஆயிரம் பேரிடம், இவர்கள் மரபணு தொடர்பான இந்த குறிப்பிட்ட ஆய்வையும் மேற்கொண்டனர். அதன்படி நண்பர்கள் மத்தியில் மரபணுக்கள் எந்த அளவு ஒத்துப்போகின்றன என்று இவர்கள் ஆராய்ந்தனர். அதன் முடிவில் நல்ல நண்பர்களாக இருப்பவர்களுக்கு இடையில், மற்றவர்களைவிடக் குறைந்தபட்சம் 0.1 சதவீத மரபணுக்கள் கூடுதலாக ஒரே மாதிரி இருப்பதை அறிந்தனர்.

  அதாவது, முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை விட, நல்ல நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் கூடுதலாக ஒரே மாதிரி இருக்கின்றனவாம். இப்படியான மரபணு ஒற்றுமை என்பது ஒன்றுவிட்ட சகோதரன், சகோதரிகள் மத்தியில் மட்டுமே காணப்படும்.

  எந்த ஒரு குறிப்பிட்ட மரபணு அல்லது மரபணுவின் மூலக்கூறையும் தாங்கள் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று கூறும் இவர்கள், `நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் ஒத்துப்போகும் போக்கு, அளவு என்பது எண்ணிக்கை அடிப்படையில் அதிகமாகவும், ஒரே மாதிரி தொடர்ந்தும் இருக்கிறது என்பது மட்டுமே எங்களின் கண்டுபிடிப்பு'' என்கிறார்கள்.

  ஆனால் இவர்களின் இந்த கண்டுபிடிப்பை சக விஞ்ஞானிகள் சிலர் ஏற்க மறுக்கிறார்கள். `இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் எல்லோரும் ஒரே இனக்குழுவைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம். ஒரே ஊரில் இருப்பதால், உறவினர்களாகவும் இருக்கலாம். அதனால் மரபணு ஒத்துப்போகலாம்'' என்கிறார் டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் இவான் சார்னி.

  இவரது விமர்சனத்தை மறுக்கும் இந்த இரட்டை ஆய்வாளர்கள், தாங்கள் சுமார் 907 ஜோடி நண்பர்களைத் தனியாகப் பிரித்து, அவர்களுக்கு இடையில் எந்த விதமான ரத்த உறவும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு அவர்களின் மரபணுக்களை ஒப்பிட்டு பார்த்ததாக சொல்கிறார்கள். எனவே, இனி நட்புக்கு மனசு ஒத்துப் போகிறதோ, இல்லையோ... மரபணு ஒத்துப்போகவேண்டும்!

  அதாவது, முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை விட, நல்ல நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் கூடுதலாக ஒரே மாதிரி இருக்கின்றனவாம். இப்படியான மரபணு ஒற்றுமை என்பது ஒன்றுவிட்ட சகோதரன், சகோதரிகள் மத்தியில் மட்டுமே காணப்படும்.

  • பெங்களூரு, பி.இ.எல். நிறுவனத்தில் தொழில் பயிற்சி முடித்து டி.ஆர்.டி.ஓ. மேல் பட்டயபடிப்பில் தேர்ச்சி பெற்று இஸ்ரோவில் சேர்ந்தார்.
  • காமேஸ்குருவுக்கு அவரது கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  ஒட்டன்சத்திரம்:

  சந்திரயான்-3 வெற்றித் திட்டத்தில் பங்காற்றிய ஒட்டன்சத்திரம் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் அதே ஊரில் அரசு தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு வரை படித்து பின்னர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை பயின்றார்.

  பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் பட்டயபடிப்பு படித்தார். அதன் பின் பெங்களூரு, பி.இ.எல். நிறுவனத்தில் தொழில் பயிற்சி முடித்து டி.ஆர்.டி.ஓ. மேல் பட்டயபடிப்பில் தேர்ச்சி பெற்று இஸ்ரோவில் சேர்ந்தார்.

  பணியில் இருந்தபடியே பி.இ. மற்றும் எம்.இ. பட்டம் முடித்தார். இஸ்ரோவில் 35 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி தற்போது பெங்களூருவில் ஜியோ கமாண்டட் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் துறை தலைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது ஆராய்ச்சி கட்டுரைகளை இந்தியா, வெளிநாடு, பல்கலைக்கழகங்கள் பரிந்துரை செய்துள்ளன.

  சிறிய கிராமத்தில் பிறந்து இஸ்ரோ விஞ்ஞானியாக பணிபுரிந்து சந்திரயான்-3 திட்டத்தில் பங்கேற்றிய ரவிச்சந்திரனுக்கு உள்ளூர் கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

  இதே போல் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் காமேஸ்குரு. இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தவர். பின்னர் எம்.எஸ்.பி. பள்ளியில் பிளஸ்-2 வரை படித்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி அரியமங்கலம் தொழில்நுட்ப நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்து டிப்ளமோ பட்டதாரியானார். என்.ஐ.டி.டி.யில் இருந்து எம்.எஸ். (நான்டிஸ்ட்ரக்டிவ் டெஸ்டிங்) முடித்தவர். அதன் பின் இஸ்ரோ விஞ்ஞானியாக 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார். சந்திரயான்-3 பணியில் ஏவுகணை வாகனம், செயற்கைகோள் உந்து விசை அமைப்புகளில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். செயற்கை கோள் திரவ என்ஜின் தரக்கட்டுப்பட்டில் என்ஜினீயராக உள்ளார்.

  சந்திரயான்-3 வெற்றியில் மட்டுமின்றி சந்திரயான்-2 மற்றும் ஆதித்யா செயற்கைகோள் திட்டங்களிலும் பணிபுரிந்து பெரும் பங்கு வகித்துள்ளார். காமேஸ்குருவுக்கு அவரது கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • 25½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று பகல் 1 மணிக்கு தொடங்குகிறது.
  • நாளை பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

  சென்னை :

  'சந்திரயான்-3' விண்கலத்தை சுமந்து செல்லும் 'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டமும் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

  'சந்திரயான் 3' விண்கலத்தில் உள்ள 'இன்டர்பிளானட்டரி' என்ற எந்திரம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. ராக்கெட்டில் உள்ள 'புரபுல்சன்' பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்து பொருத்தப்பட்டு உள்ளது.

  பின்னர் லேண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் பகுதியாகும். ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப்பணியான 25½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. முழுமையாக கவுண்ட்டவுனை முடித்து கொண்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து,

  நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 3-வது விண்கலமான 'சந்திரயான்-3', விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

  • சந்திரயான்-3 திட்டத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்து அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
  • பணிகள் நிறைவு பெற்று சந்திரயான்-3 விண்கலம் வருகிற 14-ந்தேதி பிற்பகல் 2.35 மணிக்கு நிலவுக்கு ஏவப்படுகிறது.

  புதுடெல்லி:

  இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, நிலவு குறித்து ஆய்வு செய்ய தீவிரம் காட்டி வருகிறது.

  இதில் சந்திரயான்-1 என்ற விண்கலம் 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம், நிலவில் செய்த ஆய்வில் அங்கு தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

  நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய திட்டமிட்ட இஸ்ரோ, கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தை ஏவியது. இதில் விக்ரம் லேண்டர், நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதியது. இதனால் சந்திரயான்-2 திட்டம் வெற்றி பெறவில்லை.

  இதையடுத்து சந்திரயான்-3 திட்டத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்து அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இப்பணிகள் நிறைவு பெற்று சந்திரயான்-3 விண்கலம் வருகிற 14-ந்தேதி பிற்பகல் 2.35 மணிக்கு நிலவுக்கு ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டா வில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.ஏ. ராக்கெட் மூலம் விண்கலம் ஏவப்பட உள்ளது.

  இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்டமைப்பு பணிகள் கடந்த வாரமே நிறைவடைந்த நிலையில் தொழில் நுட்ப ரீதியிலான பரிசோதனைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மின்னூட்ட பரிசோதனைகள் நிறைவடைந்த நிலையில் எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த இரண்டு நாட்களில் கவுண்டவுன் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  இதற்கிடையே சந்திரயான்-2 திட்டத்தின் வெற்றி அடிப்படையிலான வடிவமைப்பிற்கு பதிலாக சந்திரயான்-3 திட்டத்தில் தோல்வி அடிப்படையிலான வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது:-

  சந்திரயான்-3 விண்கலம், அனைத்து வகையிலும் வெற்றிகரமாக திட்ட மிட்டபடி ஏவப்பட்டாலும், நிலவில் தரையிறங்குவதில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டன. அந்த திட்டம் முழுவதும் வெற்றியின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.

  ஆனால் தரையிறங்குவதில் தோல்வியடைந்தது. சந்திரயான்-3 விண்கலத்தை முழுவதும் தோல்வியின் அடிப்படையில் உருவாக்கியுள்ளோம். சென்சார் செயலிழப்பு, இயந்திர செயலிழப்பு, கணக்கீடு தோல்வி என பல தோல்விகளை நாங்கள் பார்த்தோம்.

  எனவே தோல்வி எதுவாக இருந்தாலும், அது தேவையான வேகத்திலும், குறிப்பிட இடத்திலும் தரையிறங்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

  சரியாக தரையிறங்காவிட்டால் என்ன செய்வது, குறிப்பிட்ட இடத்தில் இறங்க முடியாவிட்டால் என்ன செய்வது, எரிபொருள் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என தோல்விகள் எந்தெந்த வகையில் உருவாகும் என்பதை அடிப்படையாக வைத்து அதற்கு தீர்வு காணும் வகையில் வடிவமைத்துள்ளோம். தோல்வியின் அடிப்படையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் திட்டம் வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

  முந்தைய விண்கலத்தை குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்கும் வகையில் வடிவமைத்தோம். தற்போது எந்த இடத்திலும் தரை இறங்கும் வகையில் திட்ட மிட்டுள்ளோம்.

  தரையிறங்கும் பகுதியை 500 மீட்டருக்கு 500 மீட்டரிலிருந்து 4 கிலோ மீட்டருக்கு 2.5 கிலோ மீட்டராக உயர்த்தி உள்ளோம். இதனால் எங்கும் தரையிறங்கலாம். எனவே ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் கட்டுப்படுத்ததாது.

  சந்திரயான்-3 விண்கலம் அதிக எரிபொருளை கொண்டுள்ளது. விக்ரம் லேண்டரில் தற்போது கூடுதல் சோலார் பேனல்கள் உள்ளன.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • 80 சென்டிமீட்டர் அளவுக்கு கிழக்குப் பகுதியில் சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
  • நிலத்தடி நீரை மறு பகிர்வு செய்வதே இந்த பூமியின் சாய்வுக்கான முதன்மை காரணியாக கண்டறிந்துள்ளனர்.

  புதுடெல்லி:

  மனிதர்கள் நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி வெளியேற்றி வருவதன் காரணமாக பூமி 1993 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 80 சென்டிமீட்டர் அளவுக்கு கிழக்குப் பகுதியில் சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

  அமெரிக்க புவியியல் ஒன்றியத்தின் நாளிதழான ஜியோ பிஸிக்கல் ரிசர்ச் லெட்டர்சில் வெளியாகி உள்ள ஆய்வு முடிவுகள் இதனைத் தெரிவித்துள்ளது. மேற்கண்ட கால கட்டத்தில் மக்கள் 2,150 ஜிகாடன் நிலத்தடி நீரை 6 மில்லி மீட்டர் (0.24 அங்குலம்) கடல் மட்டத்திற்கு சமமாக உயர்த்தி உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.

  கடந்த காலங்களில் துருவங்களின் சறுக்கல் கடல் நீரோட்டங்கள் மற்றும் பூமிக்கு அடியில் ஆழமான வெப்பமான பாறைகளின் வெப்ப சலனம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் மட்டுமே மேற்கண்ட மாற்றங்கள் ஏற்பட்டது. ஆனால் புதிய ஆராய்ச்சி முடிவுகள் நிலத்தடி நீரை மறு பகிர்வு செய்வதே இந்த பூமியின் சாய்வுக்கான முதன்மை காரணியாக கண்டறிந்துள்ளனர்.

  மேலும் பூமியின் சுழற்சி துருவம் உண்மையில் நிறைய மாறுதல்களை கண்டுள்ளது என ஆய்வுக்கு தலைமை தாங்கிய சியோல் தேசிய பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியலாளர் கி. வியோன் சியோ தெரிவித்துள்ளார். இதனை ஆய்வில் ஈடுபடாத ஜெட் பிரபல்சன் ஆய்வகத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி சுரேந்தரும் ஒப்புக் கொண்டுள்ளார்.

  இவ்வாறு நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சியதால் ஏற்பட்ட மாற்றங்களால் பருவங்கள் மாறும் அபாயம் இல்லை. அதே வேளையில் புவியியல் நேர அளவீடுகளில் துருவ சறுக்கல் காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  காலநிலை தொடர்பான காரணங்களில் நிலத்தடி நீரின் பகிர்வு உண்மையில் பூமி சுழற்சி சறுக்கலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளதாக விஞ்ஞானி சியோ கூறியுள்ளார். மேலும் மத்திய அட்சரேகையில் இருந்து தண்ணீரை மறு பகிர்வு செய்வது துருவ சறுக்கலை கணிசமாக பாதிக்கிறது.

  பெரும்பாலான மறு பகிர்வு வட அமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்திய பகுதியில் நிகழ்ந்துள்ளது. இந்த இரண்டு பகுதிகளும் மத்திய அட்சரேகைகளில் அமைந்துள்ளன. பூமியின் சுழற்சியை மாற்றுவதில் நீரின் பங்கு இருப்பதாக கடந்த 2016-ல் கண்டுபிடிக்கப்பட்டது.

  ஆனால் இப்போது வரை அதன் சறுக்கல்களுக்கான நிலத்தடி நீரின் பங்களிப்பு குறித்து ஆய்வு செய்யப்படவில்லை. இதுவே முதன் முறை என தெரிவித்துள் ளனர்.

  ஆனால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதை தடுக்க பல நாடுகள் பல்வேறு திட்டங்களை தீட்டுவதன் மூலம் பூமியின் சுழற்சி மாற்றத்தை மீண்டும் மாற்ற இயலும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

  இதன் பிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் இதழில் வெளியிடப்பட்ட 2021 ஆய்வில், 1995-ம் ஆண்டில் துருவ சறுக்கலின் திசை தெற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்தது. அதே போன்று 1995-2020 வரையிலான சராசரி சாய்வின் வேகம் 1981-95 காலகட்டத்தை ஒப்பிடும்போது 17 மடங்கு வேகமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

  கடந்த 50 ஆண்டுகளில் மனிதர்கள் நீர் நிலைகளில் இருந்து 18 ட்ரில்லியன் டன் தண்ணீரை மாற்றாமல் பிரித்தெடுத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

  • ஆயுட்காலம் 3 ஆண்டுகள் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
  • விண்ணில் ஏவப்பட்ட எந்த ஒரு செயற்கைக்கோள்களும் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது இல்லை.

  திருப்பதி:

  பெங்களூரில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் 12-ந் தேதி ஆயிரம் கிலோ எடை கொண்ட மேகா ட்ராபிக்ஸ்-1 எனும் எம்டி.ஐ செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.

  இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் பிரென்ச் ஆராய்ச்சி மையம் இணைந்து அனுப்பிய செயற்கைக்கோள் உலகளாவிய கால நிலை மாற்றங்களை சேகரித்து அனுப்புவதற்காக இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

  இதனுடைய ஆயுட்காலம் 3 ஆண்டுகள் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர் இருப்பினும் தற்போது வரை 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த செயற்கைக்கோள் காலநிலை மாற்றங்களை உடனுக்குடன் அனுப்பி வருகிறது.

  இந்த செயற்கைக்கோளில் உள்ள 125 கிலோ எரிபொருளை மக்கள் நடமாட்டம் இல்லாத பசிபிக் பெருங்கடலில் முழுமையாக வெளியேற்ற விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

  இதையடுத்து மீண்டும் தரையிறங்கிய பிறகு அதில் சில நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி மீண்டும் விண்ணில் ஏவ விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

  நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஏவப்படும் எம்டிஐ செயற்கைக்கோள் மீண்டும் 25 ஆண்டுகளுக்கு காலநிலை மாற்றங்கள் குறித்து விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு தகவல்களை அனுப்பும் என கூறப்படுகிறது.

  அதன்படி நாளை மாலை 4-30 மணி முதல் 9-30 மணி வரை செயற்கைக்கோளை ஏவுவதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

  விண்ணில் ஏவப்பட்ட எந்த ஒரு செயற்கைக்கோள்களும் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது இல்லை. முதல்முறையாக எம்.டி.ஐ. செயற்கைக்கோளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் புதிய முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

  மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனித இருதயத்துக்கு பதிலாக பன்றியின் இருதயத்தை பொருத்தும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். #pigheart
  பெர்லின்:

  இருதய நோய்கள் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக மாரடைப்பு மூலம் பலர் மரணம் அடைகின்றனர். மருந்து மாத்திரைகள் மூலம் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இருந்தாலும் இருதய மாற்று அறுவை சிகிச்சையே சிறந்தது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இருதயம் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் காத்து கிடக்கின்றனர்.

  எனவே, மனித இருதயத்துக்கு பதிலாக பன்றியின் இருதயத்தை பொருத்தும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

  ஜெர்மனியின் முனிச்லுத்விக் மேக்சி மில்லியன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இதுகுறித்த ஆய்வில் தீவிரமாக உள்ளனர்.

  அவர்கள் பன்றியின் இருதயத்தை எடுத்து வால் இல்லாத ‘பபூன்’ இனத்தை சேர்ந்த 10 குரங்குகளுக்கு பொருத்தினர். ஆய்வில் 5 குரங்குகள் நீண்டநாட்கள் உயிர் வாழ்ந்தன. ஒரு குரங்கு 51 நாட்களும், 2 குரங்குகள் 3 மாதங்களும் உயிருடன் இருந்தன. மேலும் 2 குரங்குகள் 6 மாதங்களுக்கு மேலாக உயிர் வாழ்ந்தன.  இது ஒரு நல்ல முன்னேற்றம். இதன்மூலம் மனிதர்களுக்கும் பன்றி இருதயத்தை வெற்றிகரமாக பொருத்தலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனவே இந்த ஆய்வை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். அந்த ஆய்வு கட்டுரை ‘நேச்சர்’ என்ற அறிவியல் இதழில் வெளியாகி உள்ளது. #pigheart
  தமிழக அமைச்சர்கள் பலர் இஸ்ரோவை மிஞ்சும் விஞ்ஞானிகளாக உள்ளனர் என திண்டுக்கல் லியோனி பேசியுள்ளார். #dindigulleoni #tnministers
  துறையூர்:

  திருச்சி மாவட்டம் துறையூரில் நகர தி.மு.க. சார்பில், அ.தி.மு.க. அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துறைமயூர் நகர செயளாளர் முரளி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தர்மன் ராசேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  ஒன்றிய செயளாளர் அண்ணாதுரை வரவேற்றார். மாவட்ட செயளாளர் தியாகராஜன், முன்னாள் அமைச்சர் நேரு எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினர். அப்போது பேசிய கே.என். நேரு, தி.மு.க. ஆட்சி காலத்தில் துறையூருக்கு காவிரிகூட்டு குடிநீர் திட்டம், துறையூர் பைபாஸ் சாலை திட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எந்த திட்டமும்  நிறைவேற்றப்பட வில்லை. மீண்டும்  தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் துறையூர் பகுதி விவசாயத்தில் தன் நிறைவு பெறும் வகையில் நீர்பாசன திட்டம் மேற்கொள்ளப்படும் என்றார். 

  பின்னர் பேசிய சிறப்பு பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழகத்தில் தற்போது பபூன்களின் ஆட்சி நடைபெறுகிறது. எந்த அமைச்சர் என்ன பேசுகிறார் என்பது தெரிவில்லை. தமிழக அமைச்சர்கள்கள் பலபேர் இஸ்ரோவை மிஞ்சும் வகையில் விஞ்ஞானிகளாக உள்ளனர். 

  டெல்லியில் இருந்து பஸ்சில்தான் டெங்கு கொசு வருகிறது என கூறும் அமைச்சர், தெர்மாகூல் போட்டால் அணையின் நீர் வற்றாது என கூறும் அமைச்சர் பிரதமர் யார் என்றே தெரியாமல் பேசும் அமைச்சர் கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என கூறும் முதலமைச்சர் என இங்குதான் உள்ளனர். இவர்களை சகித்துக் கொண்டு வாழ்வது தமிழக மக்களின் பெருந்தன்மையை காட்டுகிறது என்றார். 

  கூட்டத்தில் கஸ்டம்ஸ் மகாலிங்கம், ஜெயக்குமார் சிறுநாவலூர் சுப்ரமணியன் மாவட்ட இளைஞரனி துணை அமைப்பாளர் கண்ணண், உப்புலியபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜசேகர், மதியழகன், முன்னாள் கவுன் சிலர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். #dindigulleoni #tnministers
  இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி ஏற்பட்டதை ஏன் கருவிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது விஞ்ஞானிகளை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. #Indonesiaquake #Indonesiaquaketsunami
  ஐதராபாத்:

  இந்தோனேசியாவில் கடந்த 28-ந்தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுனாமி உருவாகி அங்குள்ள பேலு நகரையும் அதை சுற்றி உள்ள பகுதிகளையும் தாக்கியது.

  இதில் 800 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் பலர் உயிர் இழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கடலில் சுனாமி ஏற்பட்டால் அதை முன்கூட்டியே கண்டுபிடிப்பதற்காக பல நாடுகள் சேர்ந்து கடலில் பல்வேறு கருவிகளை பொருத்தி உள்ளன.

  ஆனால் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு சுனாமி தாக்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. கருவிகளிலும் அது பதிவாகவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு திடீரென சுனாமி ஏற்பட்டு தாக்கியது. இதனால் பெரிய அளவில் உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது.

  சுனாமி ஏற்பட்டதை ஏன் கருவிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது விஞ்ஞானிகளை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.


  சுனாமி ஏற்படுவதை முன் கூட்டியே கண்டுபிடிக்க இந்தியாவும் கருவிகளை பொருத்தி உள்ளது. ஐதராபாத்தில் உள்ள கடல் தகவல் தேசிய மையம் இதை கண்காணித்து வருகிறது. அவர்களுக்கும் சுனாமி வருவது பற்றி கருவிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.

  இது சம்பந்தமாக அந்த மையத்தின் டைரக்டர் ஷெனாய் கூறியதாவது:-

  நிலநடுக்கம் ஏற்பட்டதுமே கருவிகள் மூலம் தெரிந்து கொண்டோம். உடனே இந்தோனேசியா உள்ள சர்வதேச தொடர்புகளுக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் நாம் கடலில் பொருத்தி உள்ள மிதவைகள், கண்காணிப்பு கருவிகளில் சுனாமி வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. 3 மணி நேரம் தொடர்ந்து கண்காணித்தோம். அப்போதும் அறிகுறி தெரியவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் அறிகுறி தெரியாததால் வாபஸ் பெறப்பட்டது.

  இவ்வாறு ஷெனாய் கூறினார்.

  கடல் ஆய்வியல் மையத்தின் தலைவர் பட்டாபி ராமராவ் கூறியதாவது:-

  சுனாமியை கண்டுபிடிக்கும் கருவியில் எந்தவித அறிகுறியும் பதிவாகவில்லை. இது ஒரு ஆச்சரியமான வி‌ஷயமாக இருக்கிறது. 2 காரணங்களால் இது கருவியில் பதிவாகாமல் இருந்து இருக்கலாம். நிலநடுக்கம் ஏற்பட்டதும் கடலுக்கு அடியில் நிலச்சரிவு ஏற்பட்டு அதன் மூலம் சுனாமி கீழ் இருந்து உருவாகி இருக்கலாம். அல்லது நிலநடுக்கம் ஏற்பட்டதும் சிறிய அளவில் சுனாமி உருவாகி பூகோள ரீதியாக அது பெரிதாக மாறி இருக்கலாம். எனவே தான் முன்கூட்டியே கருவிகளில் அளவீடு காட்டவில்லை. இது ஒரு அதிசயமான வி‌ஷயமாகத்தான் தெரிகிறது.

  இவ்வாறு அவர் கூறினார். #Indonesiaquake  #Indonesiaquaketsunami