என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயற்கைகோள்"

    • ராக்கெட் பாதை மாறி சென்றதால் இலக்கை அடைய முடியவில்லை.
    • பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் இருந்து பிரிந்து இயங்கி தரவுகளை அனுப்பியுள்ளது.

    பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டை கடந்த 12-ந்தேதி இஸ்ரோ விண்ணில் ஏவியது. இதில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) உருவாக்கிய இ.ஓ.எஸ்-என்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

    மேலும், அந்த ராக்கெட்டுடன் ஸ்பானிஷ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய சோதனை கருவி மற்றும் 16 சிறிய செயற்கைக் கோள்களும் இணைக்கப்பட்டு ஏவப்பட்டது. ஆனால் ராக்கெட் பாதை மாறி சென்றதால் இலக்கை அடைய முடியவில்லை. இதனால் இத்திட்டம் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் திடீர் திருப்பமாக பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட ஒரு சிறிய செயற்கைக்கோள் செயல்பட தொடங்கியது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆர்பிட்டல் பாராடிகம் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர் என்ற சிறிய செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் விண்ணுக்கு அனுப்பி இருந்தது.

    இதற்கிடையே அந்த சிறிய செயற்கைக்கோள் தரவுகளை அனுப்பியதாக ஆர்பிட்டல் பாராடிகம் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக அந்நிறுவனம் தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் கூறும்போது,"எதிர்பாராத அனைத்து தடைகளையும் மீறி, எங்கள் சிறிய விண்கலம் கேப்சூல் பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் இருந்து பிரிந்து இயங்கி தரவுகளை அனுப்பியுள்ளது.

    நாங்கள் அதன் பயணப் பாதையை மீண்டும் உருவாக்குகிறோம். முழு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்து உள்ளது.

    • ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று விண்ணில் ஏவப்பட்டது.
    • செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

    புதுடெல்லி:

    நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ சார்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. கடந்த 2013-ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது.

    அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்03 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோள் சந்திரயான்3 அனுப்பிய ஜிஎஸ்எல்வி மார்க்-03 (எல்விஎம்-3) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை விண்ணில் ஏவப்பட்டது. செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சி.எம்.எஸ்.-03 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நமது விண்வெளித்துறை தொடர்ந்து நம்மை பெருமைப்படுத்துகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். நமது விண்வெளி விஞ்ஞானிகளால் இயக்கப்படும் விண்வெளித்துறை எவ்வாறு சிறப்பிற்கும் புதுமைக்கும் ஒத்ததாக மாறியுள்ளது என்பது பாராட்டத்தக்கது என பதிவிட்டுள்ளார்.

    • 9 பயங்கரவாத முகாம்களில் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்குதல்களை நடத்தியது.
    • பஹவல்பூரில் உள்ள ஜாமியா மசூதி தாக்குதலுக்கு பின்னர் பெரும் சேதமடைந்துள்ளது.

    'ஆபரேசன் சிந்தூர்' என்ற திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களில் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்குதல்களை நடத்தியது.

    இதன் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் நிலைகள் செயற்கை கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

    மாக்சர் டெக்னாலஜிஸ் வெளியிட்ட ஒப்பீட்டு செயற்கைக்கோள் படங்கள் முக்கியமான இடங்களில் கணிசமான கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள சேதத்தை காட்டுகிறது.

    குறிப்பாக பஹவல்பூரில் உள்ள ஜாமியா மசூதி மற்றும் பாகிஸ்தானின் முரிட்கே நகரத்திற்குள் குறிவைக்கப்பட்டன.

    82 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருந்த இந்த வளாகம், பாகிஸ்தானின் பஞ்சாப், ஷேக்குபுராவின் முரிட்கே, நங்கல் சஹ்தானில் அமைந்துள்ள 'அல்மா மேட்டர்' மற்றும் லஷ்கர் இ-தொய்பாவின் மிக முக்கியமான பயிற்சி மையமாக இருந்தது.

    இதேபோல், பஹவல்பூரில் உள்ள ஜாமியா மசூதியும் தாக்குதலுக்கு பின்னர் பெரும் சேதமடைந்துள்ளது.

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பஹவல்பூர் மாவட்டத்தில் உள்ள கராச்சி மோரில் பஹவல்பூரின் புறநகரில் உள்ள என்.எச்.-5 (கராச்சி-டோர்காம் நெடுஞ்சாலை) இல் சுப்ஹான் அல்லா மர்கஸ் அமைந்துள்ளது. 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இங்கு இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு போதனைகள் செய்யப்பட்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமதுவின் முக்கிய மையமாக இந்த இடம் இருந்தது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 9 பயங்கரவாத தளங்களை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி அழித்தது.

    பாகிஸ்தான் எல்லைக் குள் உள்ள 4 இடங்களில் இந்திய விமானப்படை துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. அதே நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 5 இடங்கள் குறி வைக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

    சிந்தூர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இடங்களின் படங்கள் அனைத்தும் செயற்கைகோள் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    • தற்போது, ​​இந்தியா சுமார் 55 செயற்கைக்கோள்களை இயக்குகிறது.
    • செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் தனியார் நிறுவனங்களின் பங்கேற்பை அனுமதிக்கிறது என்றார்.

    எல்லைப் பாதுகாப்பு மற்றும் கடலோர கண்காணிப்பை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக, அடுத்த மூன்று ஆண்டுகளில் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் இந்தியா மேலும் 100-150 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.

    தற்போது, இந்தியா சுமார் 55 செயற்கைக்கோள்களை இயக்குகிறது.  பரந்த எல்லையையும் 7,500 கி.மீ கடற்கரையையும் கொண்ட ஒரு நாட்டிற்கு, இது போதுமானதாக இல்லை என்று நாராயணன் கூறினார்.

    விண்வெளித் துறையின் செயலாளரான நாராயணன், இந்தக் காரணங்களால்தான் பிரதமர் நரேந்திர மோடி விண்வெளித் துறையில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார், இது ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் தனியார் நிறுவனங்களின் பங்கேற்பை அனுமதிக்கிறது என்றார். 

    • செயற்கைகோள் மென்பொருள் தயாரித்த மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • 10 பேர் மென்பொருள் தயாரித்தனர்.

    திருமங்கலம்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டுடன் ஆசாதி-2 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோளுக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10 பேர் மென்பொருள் தயாரித்தனர். அவர்கள் செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சிக்கு இஸ்ரோ சென்று வந்தனர். செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து மாணவிகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

    இந்த நிலையில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்து செயற்கைக்கோள் மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி சால்வை அணிவித்து கவுரவித்தார்.

    • இதற்கான 27½ மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று தொடங்கியது.
    • ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை விண்ணில் பாய்வதற்கு 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. இதற்கான 27½ மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று தொடங்கியது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்டை நாளை (திங்கட்கிழமை) காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.

    இதில் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட 'என்.வி.எஸ்.-01' என்ற வழிகாட்டி செயற்கைகோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.

    செயற்கைகோளை உத்தேசித்துள்ள சுற்றுப்பாதைக்கு எடுத்துச்செல்ல அடுத்தடுத்த சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

    வாகனங்கள் வழிசெலுத்துவதற்கு திட்டமிடப்பட்ட 2-வது தலைமுறை செயற்கைகோள்களில் முதன்மையானது. அடுத்த தலைமுறைக்கான என்.வி.எஸ். வரிசை செயற்கைகோள்கள் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தகவல்களை தக்கவைத்து மேம்படுத்தும். இந்த தொடர் சேவைகளை விரிவுபடுத்த கூடுதலாக 'எல்1 பேண்ட் சிக்னல்'களை உள்ளடக்கியது.

    இதற்கான இறுதி கட்டப்பணியான 27.30 மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.12 மணிக்கு தொடங்கியது.

    3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட 'என்.வி.எஸ்.-01' என்ற வழிகாட்டி செயற்கைகோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.
    • ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காலை வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி விண்ணில் பாய்வதற்கு 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. இதற்கான 27½ மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று தொடங்கியது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்டை இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.

    இதில் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட 'என்.வி.எஸ்.-01' என்ற வழிகாட்டி செயற்கைகோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.

    செயற்கைகோளை உத்தேசித்துள்ள சுற்றுப்பாதைக்கு எடுத்துச்செல்ல அடுத்தடுத்த சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. வாகனங்கள் வழிசெலுத்துவதற்கு திட்டமிடப்பட்ட 2-வது தலைமுறை செயற்கைகோள்களில் முதன்மையானது.

    அடுத்த தலைமுறைக்கான என்.வி.எஸ். வரிசை செயற்கைகோள்கள் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தகவல்களை தக்கவைத்து மேம்படுத்தும். இந்த தொடர் சேவைகளை விரிவுபடுத்த கூடுதலாக 'எல்1 பேண்ட் சிக்னல்'களை உள்ளடக்கியது.

    இதற்கான இறுதி கட்டப்பணியான 27.30 மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று காலை 7.12 மணிக்கு தொடங்கியது. 3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது.
    • எப்-14 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.35 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது.

    இதனை, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.35 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

     


    இதற்கான ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மற்றும் செயற்கைகோள் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப் பணியாக 27.5 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று மதியம் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்கியது.

    எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி 2016 -ம் ஆண்டு முதல் சோதனையை நடத்தி வந்தது.
    • ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்களில் பேச முடியும்.

    பிஜிங்:

    செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கை கோள் மூலமாக ஸ்மார்ட் போன்களில் பேசும் வசதியை கொண்டு வர சீனா ஆய்வு மேற்கொண்டது.

    இதற்காக டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி 2016 -ம் ஆண்டு முதல் சோதனனையை நடத்தி வந்தது. இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தரையில் செல்போன் கோபுரங்கள் இல்லாமல் செல்போன்களில் பேசலாம் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட் போன் தகவல் தொடர்பு அமைப்பில், செயற்கைக் கோள் இணைப்பை அடைவதில், சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தனர். இதன்மூலம் ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்களில் பேச முடியும்.

    தரையில் உள்கட்டமைப்பு இன்றி நேரடியாக செயற்கை கோள் மூலமாகவே பேச முடியும் என்பதால், நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது கூட எந்த இடையூறும் இன்றி தொலை தொடர்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதனால் இத்திட்டம் உலகம் முழுவதும் பிரபலம் ஆகும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • லிக்னோசாட் செயற்கைக்கோள் மக்னோலியா மரத்தினால் செய்யப்பட்டதாகும்.
    • வெளிபுறத்தில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.

    உலகின் முதல் மர செயற்கைக்கோளை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

    கியோட்டோ பல்கலைக்கழகம் மற்றும் சுமிட்டோமோ பாரெஸ்ட்ரி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர்.

    சோதனை முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் ஒவ்வொரு பக்கமும் 10 சென்டி மீட்டர் (4 அங்குலம்) அளவைக் கொண்டுள்ளது. லிக்னோசாட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் வருகிற செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவப்படுகிறது.

    லிக்னோசாட் செயற்கைக்கோள் மக்னோலியா மரத்தினால் செய்யப்பட்டதாகும்.

    வெளிபுறத்தில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. லிக்னோசாட் திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு விண்வெளியை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தொவித்தனர்.

    • செயற்கைக்கோள்களை அனுப்புவதில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
    • அமெரிக்க நிறுவனங்களுக்கும் சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.

    பீஜிங்:

    விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்தநிலையில் விமானம், விண்வெளி உபகரணங்கள், கட்டமைப்பு பாகங்கள், மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய சீனா கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

    இதுகுறித்து சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத பரவல் தடை போன்றவற்றிற்காக இந்த தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. அதேபோல் தைவானுக்கு ஆயுதங்களை விற்ற சில அமெரிக்க நிறுவனங்களுக்கும் சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.

    புவிவட்டப் பாதையில் இருந்து மற்றொரு புவிவட்டப் பாதைக்கு உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜனவரி 29 ஆம் தேதி தனது 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

    ஜி.எஸ்.எல்.வி.எப்-15 [GSLV-F15] என்று பெயரிடப்பட்ட இந்த 100வது ராக்கெட் அன்றைய தினம் காலை 6.23 மணிக்கு ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ மையத்தில் இருந்து ஏவப்பட்டது.

    என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வெளி போக்குவரத்தைக் கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியமான தகவலைத் தெரிவிக்கும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் ராக்கெட் மூலம் புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள் செலுத்தப்பட்ட நிலையில் அதன் சுற்றுப்பாதையை உயர்த்தும் பணிகளில் சிக்கல் ஏற்பட்டதாக இஸ்ரோ இன்று காலை தெரிவித்தது.

     

    செயற்கைக்கோளின் சுற்றுப்பாதையை உயர்த்துவதற்கான ஆக்சிடரைசரை ஏற்கும் வால்வுகள் திறக்கப்படாததால், செயற்கைக்கோளை ஒரு புவிவட்டப் பாதையில் இருந்து மற்றொரு புவிவட்டப் பாதைக்கு உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இருப்பினும் பூமியைச் சுற்றி உள்ள நீள்வட்ட பாதையான ஜியோசின்க்ரோனஸ் டிரான்ஸ்ஃபர் ஆர்பிட் (GTO) சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் பழுது இல்லாமல் நிலை கொண்டிருந்த நிலையில் அதை நீள்வட்ட சுற்றுப்பாதையிலிருந்து புவிவட்ட சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கான மாற்று உத்திகளை ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்தது. மாற்று வழியை கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் மிஷன் தோல்வி அடையாளம் என்றும் கூறப்பட்டது.  

    இந்நிலையில் இதுகுறித்து மீண்டும் இஸ்ரோ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதில், ராக்கெட்டின் அனைத்து நிலைகளும் சிறப்பாகச் செயல்பட்டன. புவிவட்ட சுற்றுப்பாதையைத் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அடைய முடியாது என நினைத்தோம்.

    ஆனால், மாற்றுவழியில் மிக துல்லியமாக செயற்கைக்கோள் புவிவட்ட சுற்றுப்பாதையை அடைந்துள்ளது. செயற்கைக்கோளில் உள்ள சூரிய பேனல்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

    அதிலிருந்து அதிகப்படியான மின்சாரம் உற்பத்தியாகிறது. இதன் மூலம் செயற்கைக்கோளுக்கும் இஸ்ரோ மையத்துக்குமான தொடர்பு வெற்றிகரமாக நிறுவப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

    ×