search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Software"

    • வெளிநாட்டு தொழில் நுட்பத்தை சார்ந்திருப்பதை குறைக்க சீனா இந்த நடவடிக்கைகளை எடுத்து உள்ளது
    • சீனாவின் உள்நாட்டு சிப் உபகரண உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் மேலும் கணிசமாக அதிகரிக்கும் .

    அமெரிக்காவிற்கும் ,சீனாவிற்கும் இடையே தொழில்நுட்ப போர் நடந்து வருகிறது. இந்நிலையில் சீன அரசுத்துறை அலுவலகங்களில் கம்ப்யூட்டர் மற்றும் சர்வர்களில் 'இன்டெல்' மற்றும் 'ஏஎம்டி' சிப்கள், மென்பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக புதிய வழிகாட்டுதல்களை சீனா தற்போது செயல்படுத்தி உள்ளது.

    இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, சீனா அரசு கணினிகளில் Intel அல்லது AMD செயலிகள் இருக்காது.  மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் வெளிநாட்டு தரவுத்தள மென்பொருளுக்குப் பதிலாக உள்நாட்டு தயாரிப்பு செயலி, சிப்களை பயன்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்து உள்ளது.

    சீனாவின் முக்கிய மென்பொருள் உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த அமெரிக்கா ஏற்கனவே ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.

    இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா தனது நாட்டில் சொந்த தயாரிப்பு மென்பொருள்களை பயன்படுத்தினால் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தரவுத்தள மென்பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்படும்.




    இதன் மூலம் சீனாவின் உள்நாட்டு மென்பொருட்கள் உபயோகம் சொந்த நாட்டில் வளர்ச்சி அடையும் என கருதுகிறது.

    மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான பிராஸசர்கள், ஆபரேடிங் சிஸ்டம்களையே சீன அரசு துறை நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்களில் பயன்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது.

    இதன் மூலம் வெளிநாட்டு தொழில் நுட்பத்தை சார்ந்திருப்பதை குறைக்க சீனா இந்த நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.இதன் விளைவாக, சீனாவின் உள்நாட்டு சிப் உபகரண உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் மேலும் கணிசமாக அதிகரிக்கும் என  நம்பி உள்ளது.

    • கடந்த 23 ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் செயற்கைகோள் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.
    • அவரது புகைப்படத்துடன் தேசிய கொடி ஏற்றி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    பழனி:

    நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த முதல்நாடு என்ற பெருமையும், நிலவில் கால் பதித்த 4-வது நாடு என்ற பெருமையும் சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதன்மூலம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

    இந்த திட்டத்தில் செற்கைகோள் மையத்தின் இயக்குனராக சங்கரன், திட்ட இயக்குனர் வீரமுத்து வேல் தமிழகத்தை சேர்ந்தவர். மேலும் சந்திரயான்-3 திட்டத்தில் பூமியில் இருந்து ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்ட செயற்கைகோள் நிலவின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படுவதற்கான ஆர்பிட்டர் நிலவில் கால் பதிப்பதற்கான லேண்டர் மற்றும் நிலவினை ஆய்வு செய்யும் ரோவர் ஆகியவை மிக முக்கியமானவையாகும். இவை மூன்றையும் பெங்களூரில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இயக்குவதற்கான ஆணைகளை பிறப்பிக்கும் டெலிகாமாண்ட் சாப்ட்வேர் வடிவமைப்பாளராக திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள கணக்கன்பட்டியை சேர்ந்த கவுரிமணி (வயது50) என்பவர் கடந்த 23 ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் செயற்கைகோள் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

    10ம் வகுப்பு வரை பழனியில் உள்ள பள்ளியிலும், 11, 12-ம் வகுப்புகளை திண்டுக்கல் அண்ணாமலையார் மேல்நிலைப்பள்ளியிலும், தொலைதொடர்பு பொறியியலில் பி.இ., எம்.இ. பட்ட படிப்புகளை மதுரை தியாகராஜர் கல்லூரியிலும் முடித்துள்ளார். இவரது கணவர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார்.

    சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதன் மூலம் இக்குழுவில் பணியாற்றிய பழனி பெண் விஞ்ஞானி கவுரிமணிக்கு அப்பகுதி மக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது புகைப்படத்துடன் தேசிய கொடி ஏற்றி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    • ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்வதால் குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
    • ஜேப்படி ஆசாமிகள் மக்களோடு மக்களாக கூட்டத்தில் கலந்து கொண்டு கைவரிசை காட்டுகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் மத்திய பஸ் நிலையம், கோவில் வழி, புதிய பஸ் நிலையம் இயங்கி வருகின்றன. கோவில்வழி பஸ் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. புது பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. மத்திய பஸ் நிலையத்திலருந்து டவுன்பஸ்கள் மற்றும் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் செல்கின்றன. தினந்தோறும பல ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்வதால் குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனை கட்டுப்படுத்தவும் பழைய குற்றவாளிகளை எளிதில் கண்டறியவும் எப்.ஆர்.எஸ் என்னும் சாப்ட்வேர் மூலம் போலீசார் ரகசிய சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில்:-

    திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள பனியன் கம்பெனிகளில் லட்சக்க ணக்கான தொழிலா ளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு வாரத்தில் சனி ஞாயிறுகளில் சம்பளம் அளித்து விடுமுறையும் அளிக்கப்படுகிறது. இதனால் சிலர் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். சிலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பஸ் மூலம் திருப்பூர் நகரத்துக்கு வருகிறார்கள். இது போன்ற நேரத்தில் ஜேப்படி ஆசாமிகள், செல்போன்கள் திருட்டு, நகைப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மக்களோடு மக்களாக கூட்டத்தில் கலந்து கொண்டு கைவரிசை காட்டுகின்றனர். மேலும் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம்நகை பறிக்கப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் மத்திய பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனைகளில் ஈடுபடுகிறோம். குற்றங்களை தடுக்கும் வகையில் சோதனையில் சிக்கக்கூடிய சந்தேக நபர்கள் ஏதாவது வேறு வழக்கில் தொடர்புடையவர்களாக உள்ள பழைய குற்றவாளி களை உடனே கண்டறியும் வகையில் எப்.ஆர்.எஸ். என்னும் முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் துணையுடன் சோதனை செய்யப்படுகிறது. இந்த செயலி மூலம் போட்டோ எடுத்தால் அவர்கள் பழைய குற்றவாளியாக இருந்தால் முழுமையான விவரமும் வந்துவிடும் . இதனால் எளிதாக குற்றவாளிகளை கைது செய்ய முடிகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

    • செயற்கைகோள் மென்பொருள் தயாரித்த மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • 10 பேர் மென்பொருள் தயாரித்தனர்.

    திருமங்கலம்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டுடன் ஆசாதி-2 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோளுக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10 பேர் மென்பொருள் தயாரித்தனர். அவர்கள் செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சிக்கு இஸ்ரோ சென்று வந்தனர். செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து மாணவிகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

    இந்த நிலையில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்து செயற்கைக்கோள் மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி சால்வை அணிவித்து கவுரவித்தார்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் மென்பொருள் வடிவமைப்பு பயிற்சி முகாம் நடந்தது.
    • எந்திரவியல் துறையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் ''ஆட்டோடெஸ்க் யூசன் 360'' என்ற மென்பொருள் வடிவமைப்பு தொடர்பாக பயிற்சி முகாமை கல்லூரியின் ஐ.சி.டி. அகாடமி நடத்தியது.

    பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் தொடங்கி வைத்தார். முதல்வர் விஷ்ணுராம் வாழ்த்துரை வழங்கினார். டீன் மாரிச்சாமி சிறப்புரை ஆற்றினார்.

    இந்த பயிற்சி முகாமை சென்னை ஐ.சி.டி.அகாடமி நிர்வாக அதிகாரி திவ்யபிரசாத் நடத்தினார்.

    அவர் பேசுகையில், இந்த மென்பொருள் ஆட்டோ மெஷனில் உற்பத்திதுறை மற்றும் வடிவமைப்பு துறையின் பயன்பாடு பற்றியும், இதன் மூலமாக உள்ள வேலைவாய்ப்பு பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.இதில் எந்திரவியல் துறையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், எந்திரவியல் துறை பேராசிரியர்கள் முத்தையா, குமாரசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

    எந்திரவியல் துறைத்தலைவர் கனகசபாபதி நன்றி கூறினார்.

    செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உருவாக்கிய போர்டிரெயிட் ஓவியம் ரூ.3.17 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. #ArtificialIntelligence



    கம்ப்யூட்டர் குறியீடுகளால் (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்) உருவான போர்டிரெயிட் ஓவியம் 4,32,500 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3.17 கோடி) விலைக்கு ஏலம் போனதாக பிரபல ஏல நிறுவனமான கிரிஸ்டி அறிவித்துள்ளது.

    ஏலத்தில் ரூ.3.17 கோடி விலையில் ஏலம் போகியிருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வரைந்த முதல் போர்டிரெயிட் ஓவியம் எட்மான்ட் டி பெலாமி (Edmond De Belamy) என அழைக்கப்படுகிறது. இது 18 அல்லது 19ம் நூற்றாண்டை சேர்ந்தவரின் போர்டிரெயிட் ஆகும். இந்த போர்டிரெயிட்டில் இருக்கும் நபர் கருப்பு வெள்ளை நிற சூட் அணிந்திருக்கும் படி, தங்க நிற ஃபிரேம் கொண்டுள்ளது.

    போர்டிரெயிட்டில் உள்ள முகம் தெளிவாக காட்சியளிக்காத நிலையில், இந்த படம் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. வழக்கமான ஓவியங்களில் ஓவியரின் கையெழுத்து இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வரைந்த ஓவியத்தில் கணித கோட்பாடு அச்சிடப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: Obvious

    ஆப்வியஸ் எனும் ஃபிரென்ச் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் வரைந்த ஓவியத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த ஓவியத்திற்கென பியரி ஃபாட்ரெல் மொத்தம் 15,000 போர்டிரெயிட்களை கம்ப்யூட்டர் மென்பொருளில் பயன்படுத்தி இருக்கிறார். 

    போர்டிரெயிட் வரைவதற்கான வழிமுறைகளை மென்பொருள் புரிந்து கொண்டால், அதுவாகவே போர்டிரெயிட் வரைய துவங்கிடும். இதற்கென கூகுள் ஆய்வாளரான குட்ஃபெல்லோ உருவாக்கிய புதிய அல்காரிதம் பயன்படுத்தப்பட்டது. இதனை பிரென்ச் குழுமம் பெலாமி ஃபேமிலி என அழைக்கிறது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கிய ஓவியம் ஏலத்தில் 7000 முதல் 10,000 டாலர்கள் வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெலாமி ஃபேமிலி உருவாக்கிய முதல் போர்டிரெயிட் ஓவியம் 4,32,500 டாலர்களுக்கு ஏலம் போயிருக்கிறது.
    சாப்ட்வேர் நிறுவன உரிமையாளரை காருடன் கடத்திச் சென்றபோது அந்த கார் விபத்தில் சிக்கியதால் கடத்தல்காரர்கள் பிடிபட்டனர்.
    பூந்தமல்லி:

    சென்னை கொளத்தூர், 8-வது தெருவை சேர்ந்தவர் பிரமோத் (வயது 38). அண்ணா நகரில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சாப்ட்வேர் நிறுவனத்தை மூடி விட்டு வெளியே வந்த பிரமோத், வீட்டுக்கு செல்வதற்காக அவருடைய காரில் ஏற முயன்றார்.

    அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரமோத்தை சரமாரியாக தாக்கியது. பின்னர் அவர்கள் பிரமோத்தின் கை, கால்களை கட்டி வாயில் துணியை வைத்து காரின் பின் சீட்டில் தூக்கி போட்டுக்கொண்டு காரோடு அவரை கடத்திச் சென்றனர்.

    இந்த கார் அம்பத்தூர் எஸ்டேட் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் சமாளித்து அதனை நிறுத்திவிட்டார்.

    பின்னர் அவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளை காருக்கு குறுக்கே நிறுத்தி விட்டு, காரை ஓட்டி வந்தவரிடம் மோட்டார் சைக்கிளில் ஏன் இடித்தாய்? என்று கேட்டார். இதில் அவருக்கும், காரில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பொதுமக்கள் கூடினர்.

    இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிரமோத் தனது காலால் காரின் கண்ணாடி மற்றும் கதவை பலமாக உதைத்தார். இதில் கார் குலுங்கியது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் காருக்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் காருக்குள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பிரமோத்தை கடத்தி வந்ததை பொதுமக்கள் பார்த்துவிட்டதால் பதறிப்போன கடத்தல்காரர்கள் காரை விட்டு, விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்ற பொதுமக்கள் ஒருவரை மடக்கிப்பிடித்தனர். மற்ற 3 பேரும் அவர்களிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டனர்.

    காரில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த பிரமோத்தை பொதுமக்கள் மீட்டனர். மடக்கிப்பிடித்த கடத்தல்காரரை அம்பத்தூர் எஸ்டேட் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    பிரமோத் கடத்தப்பட்டது அண்ணா நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால், பொதுமக்களால் பிடித்துக்கொடுக்கப்பட்ட கடத்தல் கும்பலை சேர்ந்த நபர் அண்ணா நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

    அண்ணா நகர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அயனாவரத்தை சேர்ந்த ஜானகிராமன் (30) என்பதும், தப்பி ஓடியவர்கள் ஓட்டேரியை சேர்ந்த பிரான்சிஸ் (30), இம்ரான்செரீப் (32) மற்றும் பட்டாளத்தை சேர்ந்த பிரபாகரன் என்ற அப்பு (28) என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து தப்பி ஓடிய மற்ற 3 பேரையும் பிடிக்க அண்ணா நகர் போலீஸ் உதவி கமிஷனர் குணசேகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு அவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பிரமோத், சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருவதால் அவரிடம் அதிகம் பணம் இருக்கும் என்று எண்ணிய கடத்தல்காரர்கள் 4 பேரும் அவரிடம் பணம் பறிக்கும் நோக்கில் அவரை கடத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. கைது செய்யப்பட்ட 4 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர்களில் பிரான்சிஸ், பிரபாகரன் ஆகியோர் ஏற்கனவே குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    சினிமாபாணியில் நடந்த சம்பவம் அண்ணாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    சர்வதேச எமோஜி தினத்தை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனம் 70-க்கும் அதிகமான புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. #WorldEmojiDay



    சர்வதேச எமோஜி தினத்தை கொண்டாடும் வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக் சாதனங்களில் 70 புதிய எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.

    இந்த ஆண்டிற்குள் 70 புதிய எமோஜிக்களுக்கான மென்பொருள் அப்டேட் வெளியிடப்படும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. புதிய எமோஜிக்கள் யுனிகோட் 11.0 சார்ந்த உருவங்களை சப்போர்ட் செய்கிறது. புதிய எமோஜிக்களில் தலைமுடி சார்ந்த அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.



    அந்த வகையில் மக்களுக்கு சிவப்பு நிறம், சாம்பல் நிறம் மற்றும் சுறுள் வகை தலைமுடி, சொட்டை தலை சார்ந்த புதிய எமோஜி, சிரிக்கும் முகம் கொண்ட கோல்டு, பார்டி, ப்ளீடிங் முகம் கொண்ட எமோஜி வழங்கப்பட இருக்கிறது. இதுதவிர பலவகையான விலங்கு எமோஜிக்கள், புதிய வகை உணவு எமோஜிக்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இத்துடன் விளையாட்டு, சின்னங்கள் மற்றும் பல்வேறு வகையான புதிய எமோஜிக்கள், சூப்பர் ஹீரோ எமோஜி, சாஃப்ட்பால், நசார் அமுலெட் மற்றும் இன்ஃபினிட்டி சின்னம் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது. புதிய எமோஜிக்கள் பல்வேறு ஆப்பிள் சாதனங்களுக்கு ஐ.ஓ.எஸ். 12 மென்பொருளில் வழங்கப்படுகிறது. #WorldEmojiDay #Apple
    ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வில் வாட்ச் ஓஎஸ் 5, டிவி ஓஎஸ் 12 இயங்குதளங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் சுவாரஸ்ய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #WWDC2018 #watchos5
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவன டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் வாட்ச் சாதனத்துக்கு புதிய வாட்ச் ஓஎஸ் மற்றும் ஆப்பிள் டிவி 4K சாதனத்துக்கான டிவி ஓஎஸ் இயங்குதளங்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளத்தில் உடல்நலம் சார்ந்த புதிய வசதிகளும், வாக்கி டாக்கி அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 

    டிவி ஓஎஸ் 12 இயங்குதளத்தில் டால்பி அட்மோஸ் ஆடியோ, பொழுதுபோக்கு தரவுகள் மற்றும் திரைப்படங்களை பார்த்து ரசிக்க மிக எளிமையான புதிய வசதிகளை ஆப்பிள் சேர்த்து இருக்கிறது. 



    ஆப்பிள் வாட்ச் ஓஎஸ் 5 முக்கிய அம்சங்கள்:

    - ஆக்டிவிட்டி ஷேரிங்: வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளம் கொண்டு வாடிக்கையாளர்கள் மற்ற ஆப்பிள் வாட்ச் பயனரை ஏழு நாட்கள் போட்டிக்கு அழைப்பு விடுக்க முடியும். இதன் மூலம் இருவரும் உடற்பயிற்சிகளில் போட்டியிட முடியும்.

    - ஆட்டோ-வொர்க் அவுட் டிடெக்ஷன்: இந்த அம்சம் பயனருக்கு சரியான உடற்பயிற்சியை துவங்க அலெர்ட் வழங்குவதோடு, அவர்களுக்கு ரெட்ரோஆக்டிவ் கிரெடிட் வழங்குகிறது. இந்த அம்சம் உடற்பயிற்சியை நிறுத்துவதற்கும் நினைவூட்டுகிறது.

    - யோகா மற்றும் ஹைக்கிங்: ஆப்பிள் வாட்ச் புதிய இயங்குதளம் பயனர் யோகா மற்றும் இதர பயிற்சிகளை மேற்கொள்ளும் போதும் மிக துல்லியமாக டிராக் செய்யும் வசதி கொண்டுள்ளது.

    - வாக்கி டாக்கி: புதிய வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வாக்கி டாக்கி அம்சம், மூலம் சிறிய வாய்ஸ் மெசேஜ்களை அனுப்ப முடியும். ஒரு வாட்ச் சாதனத்தில் இருந்து மற்றொரு வாட்ச் சாதனத்துக்கு ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார் பதிப்பு வாட்ச் 3 மூலம் இயங்குகிறது. 

    - பாட்கேஸ்ட்: சிரியை பயன்படுத்தி பயனர்கள் இனி ஆப்பிள் பாட்கேஸ்ட்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும். 

    - வாட்ச் ஓஎஸ் 5-இல் சிரி: சிரி வாட்ச் ஃபேஸ் இனி மூன்றாம் தரப்பு செயலிகளா நைக்ஃ ரன் கிளப், க்ளோ பேபி மற்றும் மோபைக் உல்ளிட்டவற்றில் இருந்து ஆக்ஷனபிள் தரவுகளை காண்பிக்கும்.

    - ஆக்ஷனபிள் நோட்டிஃபிகேஷன்கள்: மூன்றாம் தரப்பு செயலிகளில் இனி இன்டராக்டிவ் கன்ட்ரோல் வழங்கப்படுகிறது. அந்த வகையில் செயலிகளை திறக்காமலே அவற்றை பயன்படுத்த முடியும். இத்துடன் புதிய பிரைட் பேன்ட் மற்றும் வாட்ச் ஃபேஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    டிவி ஓஎஸ் 12 முக்கிய அம்சங்கள்:

    புதிய டிவி ஓஎஸ் 12 இயங்குதளத்தை பொருத்த வரை ஆப்பிள் நிறுவனம் பல்வேறு சுவாரஸ்ய அம்சங்களை சேர்த்து இருக்கிறது. அந்த வகையில் சீரோ சைன்-இன் அம்சமானது பயனரின் பிராட்பேன்ட் நெட்வொர்க்-ஐ கண்டரிந்து சப்போர்ட் செய்யும் செயலிகளில் டிவி ஓஎஸ் 12 தானாக சைன் இன் செய்யும்.

    மற்ற அம்சங்களை பொருத்த வரை ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் இருந்து ஆப்பிள் டிவிக்கு மிக எளிமையாக சைன் இன் செய்ய ஆட்டோஃபில் பாஸ்வேர்டு வழங்கப்படுகிறது. ஆப்பிள் டிவியை பயன்படுத்துவோருக்கான ஆப்பிள் டிவி ரிமோட் பயனர்களின் ஐபோன், ஐபேட்களின் கன்ட்ரோல் சென்டரில் தானாக சேர்க்கப்பட்டு விடும்.

    ஹோம் கன்ட்ரோல் சிஸ்டம்களான கன்ட்ரோல்14, க்ரெஸ்ட்ரான் மற்றும் சாவன்ட் உள்ளிட்டவற்றை கொண்டு ஆப்பிள் டிவியை இயக்க முடியும். இத்துடன் சிரியை பயன்படுத்தி வாய்ஸ் சர்ச் மற்றும் கன்ட்ரோல் செய்ய முடியும்.

    டிவி ஓஎஸ் தளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டால்பி அட்மோஸ் வசதி டிவி ஓஎஸ் 12 தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆப்பிள் டிவி 4K சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஐடியூன்ஸ் ஆப் அதிகளவு 4K ஹெச்டிஆர் திரைப்படங்களை வழங்குகிறது. அந்த வகையில் அட்மோஸ் வசதி சேர்க்கப்பட்டு இருப்பது ஆப்பிள் டிவி தரவுகளுக்கு சிறப்பான ஆடியோ அனுபவத்தை இதுவரை இல்லாத அளவு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

    ஐடியூன்ஸ் கொண்டிருக்கும் அனைத்து தரவுகளிலும் டால்பி அட்மோஸ் வசதி தானாக அப்டேட் செய்யப்படும் என்றும் ஆப்பிள் அறிவித்துள்ளது. டிவி ஆப் மட்டுமே தற்சமயம் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் வசதியை வழங்குகிறது. டிவி ஆப் தற்சமயம் வரை 100 சேனல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் நேரலை விளையாட்டு மற்றும் செய்திகளும் அடங்கும். #WWDC2018 #watchos5 #tvOS12
    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 டெவலப்பர்கள் நிகழ்வில் ஐஓஎஸ் 12 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #WWDC2018 #iOS12
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 டெவலப்பர் நிகழ்வு கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் நகரில் துவங்கியது. மென்பொருள் சார்ந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 12 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் இயங்கும் புதிய ஐஓஎஸ் தளத்தில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவன மென்பொருள் பொறியியல் துறைக்கான மூத்த துணை தலைவர் க்ரியாக் ஃபெட்ரிகி ஐஓஎஸ் 12 இயங்குதளத்தை அறிமுகம் செய்த டெவலப்பர் நிகழ்வை துவங்கி வைத்தார். தற்சமயம் ஐஓஎஸ் 11 இயங்குதளம் கொண்ட அனைத்து சாதனங்களிலும் ஐஓஎஸ் 12 அப்டேட் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.



    ஐஓஎஸ் 12:

    புதிய இயங்குதளத்தில் ஆப்பிள் நிறுவனம் ஆக்மென்ட்டெட் ரியாலி்டி எஃபெக்ட்களை வழங்க USDZ எனும் புதிய ஃபார்மேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபார்மேட் கொண்டு பல்வேறு வசதிகளை வழங்க ஆப்பிள் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. அந்த வகையில் அடோப் நிறுவனம் மெஷர் எனும் புதிய ஏஆர் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

    ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் அடுத்த தலைமுறை ஏஆர் கிட் 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் சிறப்பான ஃபேஸ் டிராக்கிங், முக அங்கீகார அம்சத்தை மேம்படுத்துகிறது. ஷேர்டு எக்ஸ்பீரியன்சஸ் அம்சம் ஒரே சமயத்தில் பலருடன் ஏஆர் செயலியில் உரையாடவும், விளையாடவும் வழி செய்கிறது.

    புதிய இயங்குதளம் இயங்கும் அனைத்து சாதனங்களிலும் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் மேம்படுத்தப்பட்ட போட்டோஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய செயலியில் தேடல் அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டைப் செய்யும் முன்பே உங்களுக்கான பரிந்துரைகளை வழங்குகிறது.



    இத்துடன் ஃபார் யு எனும் புதிய டேப் நீங்கள் எடுத்த புகைப்படங்களை எடுத்துக் காண்பிப்பதோடு அவற்றில் எஃபெக்ட்களை சேர்ப்பது மற்றும் அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள பரிந்துரை செய்யும். ஐஓஎஸ் 12 தானாகவே நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய புகைப்படங்களை தேர்வு செய்து அவற்றை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் பரிந்துரைக்கும்.

    ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் சிரி அதிகம் மேம்படுத்தப்பட்டு பல்வேறு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நீங்கள் பயன்படுத்தும் செயலி குறித்த நோட்டிஃபிகேஷன்களை சரியான நேரத்தில் உங்களுக்கு நினைவூட்டும். அதாவது ஜிம் சார்ந்த செயலிகளை டிராக் செய்ய பயன்படுத்தும் பட்சத்தில், நீங்கள் அங்கு சென்றும் செயலியை இயக்க வேண்டும் என சிரி உங்களுக்கு நினைவூட்டும்.   

    ஐபேட்களுக்கான நியூஸ் செயலி ஐஓஎஸ் 12 தளத்தில் புதிய சைடுபார் கொண்டிருக்கிறது. இதன்மூலம் ஒரு சேவையில் இருந்து மற்றொரு சேவைக்கு மிக எளிமையாக மாற முடியும். இதே போன்று கிடைக்கும் புதிய பிரவுஸ் அம்சம் கொண்டு பல்வேறு புதிய சேனல்கள் மற்றும் தலைப்புகளை கண்டறிய முடியும். கூடுதலாக நியூஸ் ஆப் ஸ்டாக்ஸ் செயலியுடன் இணைக்கப்படுகிறது. இதனால் வணிகம் சார்ந்த செய்திகளை ஸ்டாக்ஸ் செயலியில் வாசிக்கும் போதே வணிகம் சார்ந்த இதர செய்திகளையும் படிக்க முடியும். 



    இத்துடன் ஐஓஎஸ் செயலியில் டு நாட் டிஸ்டர்ப் (DND) சேவையும் சேர்க்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் DND அம்சம் உங்களது நோட்டிஃபிகேஷன்களை மறைத்து, லாக் ஸ்கிரீனை சுத்தமாக காண்பிக்கும். இத்துடன் ஒவ்வொரு செயலியிலும் நீங்கள் பயன்படுத்தும் நேரத்தை மிக நுனுக்கமாக காண்பிக்கும். இதனால் ஒவ்வொரு செயலியில் நீங்கள் செலவழிக்கும் நேரத்தை சரியாக தெரிந்து கொள்ள முடியும். 

    மேலும் நீங்கள் ஒவ்வொரு செயலியை பயன்படுத்த குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து விட்டால், நீங்கள் செட் செய்த நேரத்தில் உங்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் எச்சரிக்கை செய்யப்படும். இதன் மூலம் செயலிகளில் அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்க முடியும்.

    ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் வரும் நோட்டிஃபிகேஷன்கள் ஒன்றிணைக்கப்படுகிறது. அந்த வகையில் ஒரே செயலியில் இருந்து உங்களுக்கு வரும் அனைத்து நோட்டிஃபிகேஷன்களும் பட்டியலிடப்படும், அவற்றை க்ளிக் செய்ததும் பட்டியலை முழுமையாக பார்க்க முடியும். இந்த பட்டியலை வலது புறம் ஸ்வைப் செய்தால் அனைத்தையும் க்ளியர் செய்ய முடியும்.



    டங் டிடெக்ஷன் அம்சம் ஐஓஎஸ் 12 தளத்தின் சுவாரஸ்ய அம்சமாக இருக்கிறது. இந்த அம்சம் அனிமோஜிக்களின் நாக்கை வெளியேற்றும். இத்துடன் அனிமோஜியின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக மீமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் உங்களது முகத்தை அனிமேஷன் வடிவில் உருவாக்கி ஐமெசேஜில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. மெசேஜஸ் கேமராவில் இதுபோன்ற பல்வேறு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

    ஃபேஸ்டைம் அம்சத்தில் இனி க்ரூப் கால்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் இனி ஒரே சமயத்தில் 32 பேருடன் க்ரூப் கால்களை பேச முடியும். இத்துடன் வீடியோவில் ஒருவர் பேசும் போது, அவரின் வீடியோ தானாக பெரியதாகும் படி நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. க்ரூப் ஃபேஸ்டைம் அம்சம் ஐபோன், ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் வாட்ச் கொண்டு ஆடியோ முறையிலும் பதில் அளிக்க முடியும்.
    ×