search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச எமோஜி தினத்தில் புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்
    X

    சர்வதேச எமோஜி தினத்தில் புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்

    சர்வதேச எமோஜி தினத்தை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனம் 70-க்கும் அதிகமான புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. #WorldEmojiDay



    சர்வதேச எமோஜி தினத்தை கொண்டாடும் வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக் சாதனங்களில் 70 புதிய எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.

    இந்த ஆண்டிற்குள் 70 புதிய எமோஜிக்களுக்கான மென்பொருள் அப்டேட் வெளியிடப்படும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. புதிய எமோஜிக்கள் யுனிகோட் 11.0 சார்ந்த உருவங்களை சப்போர்ட் செய்கிறது. புதிய எமோஜிக்களில் தலைமுடி சார்ந்த அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.



    அந்த வகையில் மக்களுக்கு சிவப்பு நிறம், சாம்பல் நிறம் மற்றும் சுறுள் வகை தலைமுடி, சொட்டை தலை சார்ந்த புதிய எமோஜி, சிரிக்கும் முகம் கொண்ட கோல்டு, பார்டி, ப்ளீடிங் முகம் கொண்ட எமோஜி வழங்கப்பட இருக்கிறது. இதுதவிர பலவகையான விலங்கு எமோஜிக்கள், புதிய வகை உணவு எமோஜிக்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இத்துடன் விளையாட்டு, சின்னங்கள் மற்றும் பல்வேறு வகையான புதிய எமோஜிக்கள், சூப்பர் ஹீரோ எமோஜி, சாஃப்ட்பால், நசார் அமுலெட் மற்றும் இன்ஃபினிட்டி சின்னம் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது. புதிய எமோஜிக்கள் பல்வேறு ஆப்பிள் சாதனங்களுக்கு ஐ.ஓ.எஸ். 12 மென்பொருளில் வழங்கப்படுகிறது. #WorldEmojiDay #Apple
    Next Story
    ×