என் மலர்

  நீங்கள் தேடியது "iOS 12"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சர்வதேச எமோஜி தினத்தை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனம் 70-க்கும் அதிகமான புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. #WorldEmojiDay  சர்வதேச எமோஜி தினத்தை கொண்டாடும் வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக் சாதனங்களில் 70 புதிய எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.

  இந்த ஆண்டிற்குள் 70 புதிய எமோஜிக்களுக்கான மென்பொருள் அப்டேட் வெளியிடப்படும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. புதிய எமோஜிக்கள் யுனிகோட் 11.0 சார்ந்த உருவங்களை சப்போர்ட் செய்கிறது. புதிய எமோஜிக்களில் தலைமுடி சார்ந்த அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் மக்களுக்கு சிவப்பு நிறம், சாம்பல் நிறம் மற்றும் சுறுள் வகை தலைமுடி, சொட்டை தலை சார்ந்த புதிய எமோஜி, சிரிக்கும் முகம் கொண்ட கோல்டு, பார்டி, ப்ளீடிங் முகம் கொண்ட எமோஜி வழங்கப்பட இருக்கிறது. இதுதவிர பலவகையான விலங்கு எமோஜிக்கள், புதிய வகை உணவு எமோஜிக்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

  இத்துடன் விளையாட்டு, சின்னங்கள் மற்றும் பல்வேறு வகையான புதிய எமோஜிக்கள், சூப்பர் ஹீரோ எமோஜி, சாஃப்ட்பால், நசார் அமுலெட் மற்றும் இன்ஃபினிட்டி சின்னம் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது. புதிய எமோஜிக்கள் பல்வேறு ஆப்பிள் சாதனங்களுக்கு ஐ.ஓ.எஸ். 12 மென்பொருளில் வழங்கப்படுகிறது. #WorldEmojiDay #Apple
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையை சேர்ந்த ஆப் டெவலப்பர் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆப்பிள் டிசைன் விருது வென்றிருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
  கலிஃபோர்னியா:

  சென்னையை சேர்ந்த ஆப் டெவலப்பர் ஸ்டார்ட்-அப் வேப்பிள்ஸ்டஃப் (WapleStuff) ஆப்பிள் டிசைன் விருது 2018 வென்றுள்ளது. கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் நடைபெற்று வரும் ஆப்பிள் 2018 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் இதற்கான அறிவிப்பு வெளியானது. 

  கேல்ஸி (Calzy) என்ற கால்குலேட்டர் செயலிக்காக வேப்பிள்ஸ்டஃப் இந்த விருதை வென்றுள்ளது. மேக், ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களில் இந்த செயலி கிடைக்கிறது. 2018 ஆப்பிள் டிசைன் விருது மொத்தம் 10 செயலிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

  ரூ.159 விலையில் கிடைக்கும் கால்ஸி ஆப் ஐஓஎஸ் 10.0 மற்றும் அதற்கும் புதிய இயங்குதளங்களில் கிடைக்கிறது. பிளே ஸ்டோரில் 5 புள்ளிகளுக்கு 4.7 புள்ளிகளை பெற்றிருக்கிறது. கால்ஸி செயலியில் வரும் மெமரி ஏரியா அம்சம், அதிகப்படியான எண்களை சேமித்து வைத்து, பல்வேறு கால்குலேட்டிங் செஷன்களில் பயன்படுத்த முடியும்.  ஆப்பிள் 2018 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதியை டெவலப்பர்களுக்கு அறிவித்தது. புதிய ஏஆர் கிட் 2 மல்டிமீடியா இன்டராக்ஷன்களை தனித்துவம் மிக்கதாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இத்துடன் மெஷர் எனும் புதிய செயலி கேமராவில் பொருட்களின் அளவுகளை கண்டறிய வழி செய்கிறது. 

  இத்துடன் அடோப் கிரியேட்டிவ் கிளவுட் மற்றும் ஐஓஎஸ் தளங்களில் டெவலப்பர்களுக்கு ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி எடிட்டிங்-இல் சிறப்பான அனுபவத்தை பெற முடியும். இந்த ஆண்டு டெவலப்பர் நிகழ்வில் ஹார்டுவேர் சார்ந்த எவ்வித அறிவிப்புகள் இன்றி முழுமையான மென்பொருள் விழாவாக அமைந்தது. 

  2018 ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வில் ஐஓஎஸ் 12 இயங்குதளத்துடன் வாட்ச் ஓஎஸ் 5, டிவி ஓஎஸ் 5 மற்றும் மேக் ஓஎஸ் மோஜேவ் உள்ளிட்ட இயங்குதளங்களும் அறிவிக்கப்பட்டன. இத்துடன் சிரி வாய்ஸ் அசிஸ்டன்ட் அதிகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் சுமார் 1000 கோடி ரிக்வஸ்ட்களை சிரி பெறுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வில் வாட்ச் ஓஎஸ் 5, டிவி ஓஎஸ் 12 இயங்குதளங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் சுவாரஸ்ய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #WWDC2018 #watchos5
  கலிஃபோர்னியா:

  ஆப்பிள் நிறுவன டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் வாட்ச் சாதனத்துக்கு புதிய வாட்ச் ஓஎஸ் மற்றும் ஆப்பிள் டிவி 4K சாதனத்துக்கான டிவி ஓஎஸ் இயங்குதளங்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளத்தில் உடல்நலம் சார்ந்த புதிய வசதிகளும், வாக்கி டாக்கி அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 

  டிவி ஓஎஸ் 12 இயங்குதளத்தில் டால்பி அட்மோஸ் ஆடியோ, பொழுதுபோக்கு தரவுகள் மற்றும் திரைப்படங்களை பார்த்து ரசிக்க மிக எளிமையான புதிய வசதிகளை ஆப்பிள் சேர்த்து இருக்கிறது.   ஆப்பிள் வாட்ச் ஓஎஸ் 5 முக்கிய அம்சங்கள்:

  - ஆக்டிவிட்டி ஷேரிங்: வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளம் கொண்டு வாடிக்கையாளர்கள் மற்ற ஆப்பிள் வாட்ச் பயனரை ஏழு நாட்கள் போட்டிக்கு அழைப்பு விடுக்க முடியும். இதன் மூலம் இருவரும் உடற்பயிற்சிகளில் போட்டியிட முடியும்.

  - ஆட்டோ-வொர்க் அவுட் டிடெக்ஷன்: இந்த அம்சம் பயனருக்கு சரியான உடற்பயிற்சியை துவங்க அலெர்ட் வழங்குவதோடு, அவர்களுக்கு ரெட்ரோஆக்டிவ் கிரெடிட் வழங்குகிறது. இந்த அம்சம் உடற்பயிற்சியை நிறுத்துவதற்கும் நினைவூட்டுகிறது.

  - யோகா மற்றும் ஹைக்கிங்: ஆப்பிள் வாட்ச் புதிய இயங்குதளம் பயனர் யோகா மற்றும் இதர பயிற்சிகளை மேற்கொள்ளும் போதும் மிக துல்லியமாக டிராக் செய்யும் வசதி கொண்டுள்ளது.

  - வாக்கி டாக்கி: புதிய வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வாக்கி டாக்கி அம்சம், மூலம் சிறிய வாய்ஸ் மெசேஜ்களை அனுப்ப முடியும். ஒரு வாட்ச் சாதனத்தில் இருந்து மற்றொரு வாட்ச் சாதனத்துக்கு ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார் பதிப்பு வாட்ச் 3 மூலம் இயங்குகிறது. 

  - பாட்கேஸ்ட்: சிரியை பயன்படுத்தி பயனர்கள் இனி ஆப்பிள் பாட்கேஸ்ட்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும். 

  - வாட்ச் ஓஎஸ் 5-இல் சிரி: சிரி வாட்ச் ஃபேஸ் இனி மூன்றாம் தரப்பு செயலிகளா நைக்ஃ ரன் கிளப், க்ளோ பேபி மற்றும் மோபைக் உல்ளிட்டவற்றில் இருந்து ஆக்ஷனபிள் தரவுகளை காண்பிக்கும்.

  - ஆக்ஷனபிள் நோட்டிஃபிகேஷன்கள்: மூன்றாம் தரப்பு செயலிகளில் இனி இன்டராக்டிவ் கன்ட்ரோல் வழங்கப்படுகிறது. அந்த வகையில் செயலிகளை திறக்காமலே அவற்றை பயன்படுத்த முடியும். இத்துடன் புதிய பிரைட் பேன்ட் மற்றும் வாட்ச் ஃபேஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  டிவி ஓஎஸ் 12 முக்கிய அம்சங்கள்:

  புதிய டிவி ஓஎஸ் 12 இயங்குதளத்தை பொருத்த வரை ஆப்பிள் நிறுவனம் பல்வேறு சுவாரஸ்ய அம்சங்களை சேர்த்து இருக்கிறது. அந்த வகையில் சீரோ சைன்-இன் அம்சமானது பயனரின் பிராட்பேன்ட் நெட்வொர்க்-ஐ கண்டரிந்து சப்போர்ட் செய்யும் செயலிகளில் டிவி ஓஎஸ் 12 தானாக சைன் இன் செய்யும்.

  மற்ற அம்சங்களை பொருத்த வரை ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் இருந்து ஆப்பிள் டிவிக்கு மிக எளிமையாக சைன் இன் செய்ய ஆட்டோஃபில் பாஸ்வேர்டு வழங்கப்படுகிறது. ஆப்பிள் டிவியை பயன்படுத்துவோருக்கான ஆப்பிள் டிவி ரிமோட் பயனர்களின் ஐபோன், ஐபேட்களின் கன்ட்ரோல் சென்டரில் தானாக சேர்க்கப்பட்டு விடும்.

  ஹோம் கன்ட்ரோல் சிஸ்டம்களான கன்ட்ரோல்14, க்ரெஸ்ட்ரான் மற்றும் சாவன்ட் உள்ளிட்டவற்றை கொண்டு ஆப்பிள் டிவியை இயக்க முடியும். இத்துடன் சிரியை பயன்படுத்தி வாய்ஸ் சர்ச் மற்றும் கன்ட்ரோல் செய்ய முடியும்.

  டிவி ஓஎஸ் தளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டால்பி அட்மோஸ் வசதி டிவி ஓஎஸ் 12 தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆப்பிள் டிவி 4K சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஐடியூன்ஸ் ஆப் அதிகளவு 4K ஹெச்டிஆர் திரைப்படங்களை வழங்குகிறது. அந்த வகையில் அட்மோஸ் வசதி சேர்க்கப்பட்டு இருப்பது ஆப்பிள் டிவி தரவுகளுக்கு சிறப்பான ஆடியோ அனுபவத்தை இதுவரை இல்லாத அளவு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

  ஐடியூன்ஸ் கொண்டிருக்கும் அனைத்து தரவுகளிலும் டால்பி அட்மோஸ் வசதி தானாக அப்டேட் செய்யப்படும் என்றும் ஆப்பிள் அறிவித்துள்ளது. டிவி ஆப் மட்டுமே தற்சமயம் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் வசதியை வழங்குகிறது. டிவி ஆப் தற்சமயம் வரை 100 சேனல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் நேரலை விளையாட்டு மற்றும் செய்திகளும் அடங்கும். #WWDC2018 #watchos5 #tvOS12
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் நிறுவனத்தின் 2018 டெவலப்பர்கள் நிகழ்வில் ஐஓஎஸ் 12 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #WWDC2018 #iOS12
  கலிஃபோர்னியா:

  ஆப்பிள் நிறுவனத்தின் 2018 டெவலப்பர் நிகழ்வு கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் நகரில் துவங்கியது. மென்பொருள் சார்ந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 12 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் இயங்கும் புதிய ஐஓஎஸ் தளத்தில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

  ஆப்பிள் நிறுவன மென்பொருள் பொறியியல் துறைக்கான மூத்த துணை தலைவர் க்ரியாக் ஃபெட்ரிகி ஐஓஎஸ் 12 இயங்குதளத்தை அறிமுகம் செய்த டெவலப்பர் நிகழ்வை துவங்கி வைத்தார். தற்சமயம் ஐஓஎஸ் 11 இயங்குதளம் கொண்ட அனைத்து சாதனங்களிலும் ஐஓஎஸ் 12 அப்டேட் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.  ஐஓஎஸ் 12:

  புதிய இயங்குதளத்தில் ஆப்பிள் நிறுவனம் ஆக்மென்ட்டெட் ரியாலி்டி எஃபெக்ட்களை வழங்க USDZ எனும் புதிய ஃபார்மேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபார்மேட் கொண்டு பல்வேறு வசதிகளை வழங்க ஆப்பிள் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. அந்த வகையில் அடோப் நிறுவனம் மெஷர் எனும் புதிய ஏஆர் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

  ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் அடுத்த தலைமுறை ஏஆர் கிட் 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் சிறப்பான ஃபேஸ் டிராக்கிங், முக அங்கீகார அம்சத்தை மேம்படுத்துகிறது. ஷேர்டு எக்ஸ்பீரியன்சஸ் அம்சம் ஒரே சமயத்தில் பலருடன் ஏஆர் செயலியில் உரையாடவும், விளையாடவும் வழி செய்கிறது.

  புதிய இயங்குதளம் இயங்கும் அனைத்து சாதனங்களிலும் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் மேம்படுத்தப்பட்ட போட்டோஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய செயலியில் தேடல் அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டைப் செய்யும் முன்பே உங்களுக்கான பரிந்துரைகளை வழங்குகிறது.  இத்துடன் ஃபார் யு எனும் புதிய டேப் நீங்கள் எடுத்த புகைப்படங்களை எடுத்துக் காண்பிப்பதோடு அவற்றில் எஃபெக்ட்களை சேர்ப்பது மற்றும் அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள பரிந்துரை செய்யும். ஐஓஎஸ் 12 தானாகவே நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய புகைப்படங்களை தேர்வு செய்து அவற்றை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் பரிந்துரைக்கும்.

  ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் சிரி அதிகம் மேம்படுத்தப்பட்டு பல்வேறு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நீங்கள் பயன்படுத்தும் செயலி குறித்த நோட்டிஃபிகேஷன்களை சரியான நேரத்தில் உங்களுக்கு நினைவூட்டும். அதாவது ஜிம் சார்ந்த செயலிகளை டிராக் செய்ய பயன்படுத்தும் பட்சத்தில், நீங்கள் அங்கு சென்றும் செயலியை இயக்க வேண்டும் என சிரி உங்களுக்கு நினைவூட்டும்.   

  ஐபேட்களுக்கான நியூஸ் செயலி ஐஓஎஸ் 12 தளத்தில் புதிய சைடுபார் கொண்டிருக்கிறது. இதன்மூலம் ஒரு சேவையில் இருந்து மற்றொரு சேவைக்கு மிக எளிமையாக மாற முடியும். இதே போன்று கிடைக்கும் புதிய பிரவுஸ் அம்சம் கொண்டு பல்வேறு புதிய சேனல்கள் மற்றும் தலைப்புகளை கண்டறிய முடியும். கூடுதலாக நியூஸ் ஆப் ஸ்டாக்ஸ் செயலியுடன் இணைக்கப்படுகிறது. இதனால் வணிகம் சார்ந்த செய்திகளை ஸ்டாக்ஸ் செயலியில் வாசிக்கும் போதே வணிகம் சார்ந்த இதர செய்திகளையும் படிக்க முடியும்.   இத்துடன் ஐஓஎஸ் செயலியில் டு நாட் டிஸ்டர்ப் (DND) சேவையும் சேர்க்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் DND அம்சம் உங்களது நோட்டிஃபிகேஷன்களை மறைத்து, லாக் ஸ்கிரீனை சுத்தமாக காண்பிக்கும். இத்துடன் ஒவ்வொரு செயலியிலும் நீங்கள் பயன்படுத்தும் நேரத்தை மிக நுனுக்கமாக காண்பிக்கும். இதனால் ஒவ்வொரு செயலியில் நீங்கள் செலவழிக்கும் நேரத்தை சரியாக தெரிந்து கொள்ள முடியும். 

  மேலும் நீங்கள் ஒவ்வொரு செயலியை பயன்படுத்த குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து விட்டால், நீங்கள் செட் செய்த நேரத்தில் உங்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் எச்சரிக்கை செய்யப்படும். இதன் மூலம் செயலிகளில் அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்க முடியும்.

  ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் வரும் நோட்டிஃபிகேஷன்கள் ஒன்றிணைக்கப்படுகிறது. அந்த வகையில் ஒரே செயலியில் இருந்து உங்களுக்கு வரும் அனைத்து நோட்டிஃபிகேஷன்களும் பட்டியலிடப்படும், அவற்றை க்ளிக் செய்ததும் பட்டியலை முழுமையாக பார்க்க முடியும். இந்த பட்டியலை வலது புறம் ஸ்வைப் செய்தால் அனைத்தையும் க்ளியர் செய்ய முடியும்.  டங் டிடெக்ஷன் அம்சம் ஐஓஎஸ் 12 தளத்தின் சுவாரஸ்ய அம்சமாக இருக்கிறது. இந்த அம்சம் அனிமோஜிக்களின் நாக்கை வெளியேற்றும். இத்துடன் அனிமோஜியின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக மீமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் உங்களது முகத்தை அனிமேஷன் வடிவில் உருவாக்கி ஐமெசேஜில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. மெசேஜஸ் கேமராவில் இதுபோன்ற பல்வேறு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

  ஃபேஸ்டைம் அம்சத்தில் இனி க்ரூப் கால்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் இனி ஒரே சமயத்தில் 32 பேருடன் க்ரூப் கால்களை பேச முடியும். இத்துடன் வீடியோவில் ஒருவர் பேசும் போது, அவரின் வீடியோ தானாக பெரியதாகும் படி நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. க்ரூப் ஃபேஸ்டைம் அம்சம் ஐபோன், ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் வாட்ச் கொண்டு ஆடியோ முறையிலும் பதில் அளிக்க முடியும்.
  ×