search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்பிள் 2018 டெவலப்பர் நிகழ்வில் ஐஓஎஸ் 12 இயங்குதளம் அறிமுகம்
    X

    ஆப்பிள் 2018 டெவலப்பர் நிகழ்வில் ஐஓஎஸ் 12 இயங்குதளம் அறிமுகம்

    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 டெவலப்பர்கள் நிகழ்வில் ஐஓஎஸ் 12 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #WWDC2018 #iOS12
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 டெவலப்பர் நிகழ்வு கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் நகரில் துவங்கியது. மென்பொருள் சார்ந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 12 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் இயங்கும் புதிய ஐஓஎஸ் தளத்தில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவன மென்பொருள் பொறியியல் துறைக்கான மூத்த துணை தலைவர் க்ரியாக் ஃபெட்ரிகி ஐஓஎஸ் 12 இயங்குதளத்தை அறிமுகம் செய்த டெவலப்பர் நிகழ்வை துவங்கி வைத்தார். தற்சமயம் ஐஓஎஸ் 11 இயங்குதளம் கொண்ட அனைத்து சாதனங்களிலும் ஐஓஎஸ் 12 அப்டேட் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.



    ஐஓஎஸ் 12:

    புதிய இயங்குதளத்தில் ஆப்பிள் நிறுவனம் ஆக்மென்ட்டெட் ரியாலி்டி எஃபெக்ட்களை வழங்க USDZ எனும் புதிய ஃபார்மேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபார்மேட் கொண்டு பல்வேறு வசதிகளை வழங்க ஆப்பிள் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. அந்த வகையில் அடோப் நிறுவனம் மெஷர் எனும் புதிய ஏஆர் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

    ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் அடுத்த தலைமுறை ஏஆர் கிட் 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் சிறப்பான ஃபேஸ் டிராக்கிங், முக அங்கீகார அம்சத்தை மேம்படுத்துகிறது. ஷேர்டு எக்ஸ்பீரியன்சஸ் அம்சம் ஒரே சமயத்தில் பலருடன் ஏஆர் செயலியில் உரையாடவும், விளையாடவும் வழி செய்கிறது.

    புதிய இயங்குதளம் இயங்கும் அனைத்து சாதனங்களிலும் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் மேம்படுத்தப்பட்ட போட்டோஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய செயலியில் தேடல் அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டைப் செய்யும் முன்பே உங்களுக்கான பரிந்துரைகளை வழங்குகிறது.



    இத்துடன் ஃபார் யு எனும் புதிய டேப் நீங்கள் எடுத்த புகைப்படங்களை எடுத்துக் காண்பிப்பதோடு அவற்றில் எஃபெக்ட்களை சேர்ப்பது மற்றும் அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள பரிந்துரை செய்யும். ஐஓஎஸ் 12 தானாகவே நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய புகைப்படங்களை தேர்வு செய்து அவற்றை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் பரிந்துரைக்கும்.

    ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் சிரி அதிகம் மேம்படுத்தப்பட்டு பல்வேறு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நீங்கள் பயன்படுத்தும் செயலி குறித்த நோட்டிஃபிகேஷன்களை சரியான நேரத்தில் உங்களுக்கு நினைவூட்டும். அதாவது ஜிம் சார்ந்த செயலிகளை டிராக் செய்ய பயன்படுத்தும் பட்சத்தில், நீங்கள் அங்கு சென்றும் செயலியை இயக்க வேண்டும் என சிரி உங்களுக்கு நினைவூட்டும்.   

    ஐபேட்களுக்கான நியூஸ் செயலி ஐஓஎஸ் 12 தளத்தில் புதிய சைடுபார் கொண்டிருக்கிறது. இதன்மூலம் ஒரு சேவையில் இருந்து மற்றொரு சேவைக்கு மிக எளிமையாக மாற முடியும். இதே போன்று கிடைக்கும் புதிய பிரவுஸ் அம்சம் கொண்டு பல்வேறு புதிய சேனல்கள் மற்றும் தலைப்புகளை கண்டறிய முடியும். கூடுதலாக நியூஸ் ஆப் ஸ்டாக்ஸ் செயலியுடன் இணைக்கப்படுகிறது. இதனால் வணிகம் சார்ந்த செய்திகளை ஸ்டாக்ஸ் செயலியில் வாசிக்கும் போதே வணிகம் சார்ந்த இதர செய்திகளையும் படிக்க முடியும். 



    இத்துடன் ஐஓஎஸ் செயலியில் டு நாட் டிஸ்டர்ப் (DND) சேவையும் சேர்க்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் DND அம்சம் உங்களது நோட்டிஃபிகேஷன்களை மறைத்து, லாக் ஸ்கிரீனை சுத்தமாக காண்பிக்கும். இத்துடன் ஒவ்வொரு செயலியிலும் நீங்கள் பயன்படுத்தும் நேரத்தை மிக நுனுக்கமாக காண்பிக்கும். இதனால் ஒவ்வொரு செயலியில் நீங்கள் செலவழிக்கும் நேரத்தை சரியாக தெரிந்து கொள்ள முடியும். 

    மேலும் நீங்கள் ஒவ்வொரு செயலியை பயன்படுத்த குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து விட்டால், நீங்கள் செட் செய்த நேரத்தில் உங்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் எச்சரிக்கை செய்யப்படும். இதன் மூலம் செயலிகளில் அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்க முடியும்.

    ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் வரும் நோட்டிஃபிகேஷன்கள் ஒன்றிணைக்கப்படுகிறது. அந்த வகையில் ஒரே செயலியில் இருந்து உங்களுக்கு வரும் அனைத்து நோட்டிஃபிகேஷன்களும் பட்டியலிடப்படும், அவற்றை க்ளிக் செய்ததும் பட்டியலை முழுமையாக பார்க்க முடியும். இந்த பட்டியலை வலது புறம் ஸ்வைப் செய்தால் அனைத்தையும் க்ளியர் செய்ய முடியும்.



    டங் டிடெக்ஷன் அம்சம் ஐஓஎஸ் 12 தளத்தின் சுவாரஸ்ய அம்சமாக இருக்கிறது. இந்த அம்சம் அனிமோஜிக்களின் நாக்கை வெளியேற்றும். இத்துடன் அனிமோஜியின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக மீமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் உங்களது முகத்தை அனிமேஷன் வடிவில் உருவாக்கி ஐமெசேஜில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. மெசேஜஸ் கேமராவில் இதுபோன்ற பல்வேறு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

    ஃபேஸ்டைம் அம்சத்தில் இனி க்ரூப் கால்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் இனி ஒரே சமயத்தில் 32 பேருடன் க்ரூப் கால்களை பேச முடியும். இத்துடன் வீடியோவில் ஒருவர் பேசும் போது, அவரின் வீடியோ தானாக பெரியதாகும் படி நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. க்ரூப் ஃபேஸ்டைம் அம்சம் ஐபோன், ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் வாட்ச் கொண்டு ஆடியோ முறையிலும் பதில் அளிக்க முடியும்.
    Next Story
    ×