வேலை கிடைத்ததற்காக ஆண் நண்பர்களுக்கு ட்ரீட் வைத்த தோழி.. கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்

2 வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளியில் தன்னுடன் படித்த சிறு வயது நண்பன் அவன்வனஸ்தலிபுரத்தில் உள்ள பாருடன் கூடிய ரெஸ்ட்டாரெண்டில் பார்ட்டி நடந்தது
வேலை கிடைத்ததற்காக ஆண் நண்பர்களுக்கு ட்ரீட் வைத்த தோழி.. கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்
Published on

ஐதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை கிடைத்தததற்காக நண்பர்களுக்கு ட்ரீட் வைத்த 24 வயதுப் பெண் அவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் அளித்துள்ள புகாரில், தனக்கு புதிதாக சாப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைத்தற்காக தன்னுடன்  2 வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளியில் படித்த சிறு வயது நண்பனுக்கும் அவனின் உறவினனுக்கும் நேற்று முன்தினம் திங்கள்கிழமை இரவு வனஸ்தலிபுரத்தில் உள்ள பாருடன் கூடிய ரெஸ்ட்டாரெண்டில் பார்ட்டி வைத்தேன்.

அங்கு மூவரும் மதுவருந்திய நிலையில், தன்னை அருகில் உள்ள ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்று அவர்கள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டுத் தப்பியோடினர் என்று தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் அறையில் இருந்து தனது அண்ணனுக்கு அந்த பெண் நடந்தது குறித்து போன் மூலம் தெரிவிக்கவே, அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் தப்பியோடிய பெண்ணின் நண்பனைத் தேடிப்பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர் 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com