search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AI Art"

    செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உருவாக்கிய போர்டிரெயிட் ஓவியம் ரூ.3.17 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. #ArtificialIntelligence



    கம்ப்யூட்டர் குறியீடுகளால் (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்) உருவான போர்டிரெயிட் ஓவியம் 4,32,500 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3.17 கோடி) விலைக்கு ஏலம் போனதாக பிரபல ஏல நிறுவனமான கிரிஸ்டி அறிவித்துள்ளது.

    ஏலத்தில் ரூ.3.17 கோடி விலையில் ஏலம் போகியிருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வரைந்த முதல் போர்டிரெயிட் ஓவியம் எட்மான்ட் டி பெலாமி (Edmond De Belamy) என அழைக்கப்படுகிறது. இது 18 அல்லது 19ம் நூற்றாண்டை சேர்ந்தவரின் போர்டிரெயிட் ஆகும். இந்த போர்டிரெயிட்டில் இருக்கும் நபர் கருப்பு வெள்ளை நிற சூட் அணிந்திருக்கும் படி, தங்க நிற ஃபிரேம் கொண்டுள்ளது.

    போர்டிரெயிட்டில் உள்ள முகம் தெளிவாக காட்சியளிக்காத நிலையில், இந்த படம் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. வழக்கமான ஓவியங்களில் ஓவியரின் கையெழுத்து இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வரைந்த ஓவியத்தில் கணித கோட்பாடு அச்சிடப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: Obvious

    ஆப்வியஸ் எனும் ஃபிரென்ச் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் வரைந்த ஓவியத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த ஓவியத்திற்கென பியரி ஃபாட்ரெல் மொத்தம் 15,000 போர்டிரெயிட்களை கம்ப்யூட்டர் மென்பொருளில் பயன்படுத்தி இருக்கிறார். 

    போர்டிரெயிட் வரைவதற்கான வழிமுறைகளை மென்பொருள் புரிந்து கொண்டால், அதுவாகவே போர்டிரெயிட் வரைய துவங்கிடும். இதற்கென கூகுள் ஆய்வாளரான குட்ஃபெல்லோ உருவாக்கிய புதிய அல்காரிதம் பயன்படுத்தப்பட்டது. இதனை பிரென்ச் குழுமம் பெலாமி ஃபேமிலி என அழைக்கிறது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கிய ஓவியம் ஏலத்தில் 7000 முதல் 10,000 டாலர்கள் வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெலாமி ஃபேமிலி உருவாக்கிய முதல் போர்டிரெயிட் ஓவியம் 4,32,500 டாலர்களுக்கு ஏலம் போயிருக்கிறது.
    ×