search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "border security"

    சுவர் எழுப்புதல் உள்ளிட்ட எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக ஜனநாயக கட்சியினர் ஓட்டு போடாவிட்டால் அமெரிக்க அரசை முடக்கி விடுவேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrump #BoarderSecurity
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில், குடியேற்ற சட்டங்களில் திருத்தம் செய்ய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முயன்று வருகிறார். அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புதல் உள்ளிட்டவை அவரது திட்டங்களில் அடங்கும். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.க்கள், அவற்றுக்கு ஆதரவு அளிக்க மறுக்கிறார்கள்.

    இந்நிலையில், டிரம்ப் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “சுவர் எழுப்புதல் உள்ளிட்ட எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக ஜனநாயக கட்சியினர் ஓட்டு போடாவிட்டால், நான் அரசை முடக்கி விடுவேன்” என்று கூறியுள்ளார்.  #DonaldTrump #BoarderSecurity  #Tamilnews 
    நாட்டின் எல்லைகளில் நிலையான பாதுகாப்பை பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார். #Bordersecurity #RajnathSingh
    புதுடெல்லி :

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை செயலாளர் ராஜீவ் கௌபா, எல்லை நிர்வாக சிறப்பு செயலாளர் பி.ஆர். சர்மா, எல்லை நிர்வாக இணை செயலாளர்கள் மற்றும் மற்ற மூத்த அதிகாரிகளுடன் இன்று டெல்லியில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, நாட்டின் எல்லைகளில் நிலையான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

    அலோசனையின் போது, எல்லைகளில் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகள், எல்லையை ஒட்டி சாலைகள் மற்றும் கண்காணிப்பு சாவடிகள் அமைக்கும் பணிகள் எந்த அளவில் நடைபெற்று வருகிறது என்பது குறித்து அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் விவாதித்தார். அதில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் வேலி அமைக்கும் பணிகள் 97 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறிய பதிலில் அவர் திருப்தி அடைந்தார்.

    இந்திய கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ள 194 கடலோர காவல் நிலையங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏதுவாக படகுகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களை விரைவில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறினார்

    இந்தியா-நேபாளம், இந்தியா- பூடான், இந்தியா- வங்காளதேசம் எல்லைகளில் 6 ஒருங்கிணைந்த சோதனை சாவடிகள் அமைக்கப்படும் பணி நிறைவடைந்ததற்கு பாராட்டு தெரிவித்த ராஜ்நாத் சிங், அப்பகுதி எல்லைகளில் மேலும் 13 ஒருங்கிணைந்த சோதனை சாவடிகள் அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். #Bordersecurity #RajnathSingh
    ×