என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "technical glitch"

    • AMSS ஏற்பட்ட கோளாறு காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.
    • பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு தானியங்கி அமைப்பில் (AMSS) ஏற்பட்ட கோளாறு காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.

    நேற்று மாலை தொடங்கிய இந்தக் கோளாறு, ஆட்டோ டிராக் சிஸ்டம் (ATS) மற்றும் தானியங்கி செய்தி மாற்றும் அமைப்பு (AMSS) ஆகியவற்றைப் பாதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தொழில்நுட்பக் குழு கோளாறை சரிசெய்ய முயற்சித்து வருவதாகவும், விரைவில் அதைச் சரிசெய்வதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தீர்க்க தங்கள் ஊழியர்கள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ நிறுவனங்களும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

    டெல்லியில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (AMSS) தொழில்நுட்பக் கோளாறால் தங்கள் விமான நிலையத்திலும் விமான இயக்க செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பயணம் மேலதிக தகவல்களுக்கு பயணிகள் தங்கள் விமான நிறுவங்களுடன் தொடர்பு கொள்ளும்படியும் தடங்கலுக்கு வருந்துவதாகவும் மகாரஷ்டிராவின் மும்பை சத்திரபதி மகராஜ் விமான நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  

    • இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    • தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தினமும் 1,500-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருகிறது.

    இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    இது தொடர்பாக விமான நிலைய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதை விரைவில் தீர்க்க விமான நிலைய நிர்வாகம் உள்பட அனைத்து தரப்பினரும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. விமானப் பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    பயணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று தெரிவித்தது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்பட முடியவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் விமான நிலையத்தில் காத்து கிடந்தனர்.

    விமான நிறுவனங்கள் தங்கள் பயணிகளுக்கு உதவிகளை வழங்கின. மேலும் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் தங்கள் விமான நிலையைச் சரிபார்க்குமாறு பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தின.

    நேற்று மாலை டெல்லி விமான நிலையத்தில் சர்வர் செயலிழப்பு காரணமாக 20 விமானங்கள் தாமதமாக வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • AI 174 போயிங் 777 ரக விமானம் மதியம் 2.47 மணிக்கு சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்டது.
    • இரவு 9.59 மணிக்கு கொல்கத்தா வழியாக வந்து டெல்லியில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.

    அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லிக்குச் வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் மங்கோலியாவிற்கு திருப்பி விடப்பட்டது.

    AI 174 போயிங் 777 ரக விமானம் மதியம் 2.47 மணிக்கு சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்டது. இரவு 9.59 மணிக்கு கொல்கத்தா வழியாக வந்து டெல்லியில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.

    ஆனால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகமங்கோலியா தலைநகர் உலான்பாதரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்தது.

    விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.   

    • பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது
    • விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாகத் தரையிறக்கினர்.

    நேற்று, பஞ்சாபின் அமிர்தசரஸிலிருந்து இங்கிலாந்தின் பர்மிங்காமுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டது.

    பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் அவசரகால ரேம் ஏர் டர்பைன் (RAT) தானாகத் திறந்து கொண்டது. 

    இதை கவனித்த விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாகத் தரையிறக்கினர். அனைத்துப் பயணிகளும் ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.

    விமானம் தற்போது பர்மிங்காமில் ஆய்வில் வைக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து டெல்லிக்குச் செல்லும் அடுத்த விமான சேவை (AI114) ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    • டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.
    • விமானம் சென்னையில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

    நேற்று இரவு திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.

    விமானம் சென்னையில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

    விமானத்தில் பயணித்தவர்களில் கே.சி.வேணுகோபால், கே.ராதாகிருஷ்ணன், கொடிக்குன்னில் சுரேஷ் மற்றும் அடூர் பிரகாஷ் உள்ளிட்ட நான்கு கேரள எம்.பி.க்கள் அடங்குவர்.

    கடந்த ஜுன் மாதம் 12 ஆம் தேதி நடந்த அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு ஏர் இந்தியா விமானங்களில் தொடர்ச்சியாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. 

    • லண்டன் செல்லும் ஏர் இந்தியா போயிங் 787-9 விமானம் ரத்தானது.
    • பயணிகளை விரைவில் லண்டனுக்கு அழைத்துச் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

    டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா போயிங் 787-9 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்படுவதற்கு முன் ரத்து செய்யப்பட்டது.

    இன்று ஜூலை 31, டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கிச் செல்லவிருந்த ஏர் இந்தியா Boeing 787-9 ரக விமானம் ஒன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது ரத்து செய்யப்பட்டது என ஏர் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்தச் சம்பவத்தால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர். பயணிகளை விரைவில் லண்டனுக்கு அழைத்துச் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

    • ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது.
    • சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள இண்டன் விமான நிலையத்திலிருந்து மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவுக்குச் செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 1511, இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தாமதமானது.

    விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு ஓடுபாதையில் இருக்கும்போது எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    "எங்கள் இண்டன்-கொல்கத்தா விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாமதத்துடன் இயக்கப்பட்டது. பயணிகள் இலவச மறு பயணம் அல்லது முழு பணத்தைத் திரும்பப் பெறுதல் ஆகிய விருப்பங்கள் வழங்கப்பட்டன. சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    • இமாச்சலப் பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி உட்பட 44 பயணிகளும் விமானத்தில் இருந்தனர்.
    • அலையன்ஸ் ஏர் விமானம் தரையிறங்கும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

    டெல்லியிலிருந்து இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவுக்குச் இன்று காலை சென்ற அலையன்ஸ் ஏர் விமானம் தரையிறங்கும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இமாச்சலப் பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி உட்பட 44 பயணிகளும் விமானத்தில் இருந்தனர்.

    தொழில்நுட்ப சிக்கல் காரணமாக தரையிறங்கும் விமானத்தின் வேகத்தை குறைக்க முடியவில்லை. இதனால் விமானம் ஓடுபாதையில் வளைந்து வெகு தூரம் சென்றது. விமானி உடனடியாக அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தி விரைவாக செயல்பட்டதால் பெரிய அளவிலான விபத்து தவிர்கப்பட்டது.

    விமானத்தில் இருந்த துணை முதல்வர் உட்பட 44 பயணிகளும் பாத்திரமாக இருப்பதாக சிம்லா விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தர்மசாலாவுக்குச் செல்ல திட்டமிடப்பட்ட விமானம் ரத்து செய்யப்பட்டது

    • 7-ந்தேதி விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.
    • சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர்.

    சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், சக வீரர் புட்ச் வில்மோடன் ஆகியோர் கடந்த 5-ந்தேதி போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்லைனர் விண்கலத்தில் புறப்பட்டனர்.

    அவர்கள் இருவரும் 7-ந்தேதி விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர். அவர்கள் கடந்த 14-ந்தேதி பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டது. ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பயணம் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி கடந்த 26-ந் தேதி அவர்கள் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.

    ஆனால் ஸ்டார் லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர். இதனையடுத்து ஜூலை 2-ந்தேதி அனைத்து தொழில்நுட்ப கோளாறுகளும் சரி செய்யப்பட்டு இரண்டு வீரர்களும் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள் என போயிங் தெரிவித்தது. ஆனால் அதை நாசா உறுதி செய்யவில்லை.

    இந்த நிலையில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயு கசிவு , தொழில் நுட்ப கோளாறுகள் சரி செய்ய குறைந்தது 30 நாட்களுக்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப இன்னும் ஒரு மாதம் ஆகலாம்.

    இதற்கிடையே நாசாவின்அதிகாரியான ஸ்டீவ் ஸ்டிச் கூறும்போது, ஸ்டார்லைனரின் பயண காலத்தை 45 நாட்களில் இருந்து 90 நாட்களுக்கு நீட்டிக்க பரிசீலித்து வருகிறோம். சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை அழைத்து வருவதில் அவசரம் காட்டவில்லை என்றார். * * * இங்கிலாந்து பிரதர் ரிஷிசுனக், தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் லண்டனில் உள்ள சுவாமி நாராயண் கோவிலில் வழிபட்டார்.

    • திட்டமிட்டபடி 22-ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும்.
    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல்.

    வாஷிங்டன்:

    இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கானை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்

    அவர்கள் திட்டமிட்டபடி 22-ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. இதனால் நாசா விஞ்ஞானிகள் கவலை அடைந்தனர்.

    இந்த பிரச்சனையால் இருவரும் எப்போது பூமிக்கு திரும்புவார்கள் என்பதில் கேள்வி எழுந்தது. இந்த சூழ்நிலையில் அவர்களை பூமிக்கு அழைத்து வருவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் இம்மாத இறுதியில் அவர்கள் பூமிக்கு வருவார்கள் என்றும் நாசாவின் வணிககுழு திட்ட இயக்குனர் ஸ்டீவ் ஸ்டிக் தெரிவித்துள்ளார்.

    மேலும் நேற்று சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பேட்டி அளித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எங்களை எப்படியும் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தனர். இந்த புகைப்படத்தினை நாசா வெளியிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.
    • புறப்படும்போதே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 13 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.

    இதனையொட்டி பாஜகவுக்கு பிரசாரம் செய்ய பிரதமர் மோடி ஜார்கண்ட் பயணமாகியுள்ளார். பிரசாரம் முடிந்த  பின்னர் ஜார்கண்ட் மாநிலம் தியோகரில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டுள்ளார்.

    ஆனால் புறப்படும்போதே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. எனவே அவர் டெல்லி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    • பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வு அறைக்கு அழைத்துவரப்பட்டனர்.
    • விமானத்தை சரி செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய் , அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதே சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு 12.10 மணிக்கு திருச்சியில் இருந்து ஏர் ஏசியா விமானம் 150 பயணிகளுடன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தது.

    புறப்படுவதற்கு முன்பாக விமான பைலட் விமானத்தை ஆய்வு செய்த போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து விமானத்தில் அமர வைக்கப்பட்ட பயணிகள் அனைவரும் மீண்டும் விமான நிலைய ஓய்வு அறைக்கு அழைத்துவரப்பட்டனர்.

    இதனைத் தொடர்ந்து விமானத்தை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர். உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் விமானத்தை சரி செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

    இதனால் விமான நிலைய ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்ட பயணிகளை தனியார் விடுதியில் அரை ஒதுக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் விமானத்தை சரி செய்ய உதிரி பாகங்கள் விமான நிறுவனத்தின் சார்பில் இன்று கொண்டுவரப்பட்டு சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று புறப்பட வேண்டிய விமானம், இன்று இரவு திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதில் அவதியடைந்த சில பயணிகள் விமான டிக்கெட் ரத்து செய்து சென்றதாகவும் தெரிய வருகிறது. இதனால் நேற்று இரவு திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×