என் மலர்
இந்தியா

ஜார்கண்ட் To டெல்லி : பிரதமர் மோடி பயணிக்க இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
- இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.
- புறப்படும்போதே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 13 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனையொட்டி பாஜகவுக்கு பிரசாரம் செய்ய பிரதமர் மோடி ஜார்கண்ட் பயணமாகியுள்ளார். பிரசாரம் முடிந்த பின்னர் ஜார்கண்ட் மாநிலம் தியோகரில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டுள்ளார்.
ஆனால் புறப்படும்போதே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. எனவே அவர் டெல்லி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Next Story






