search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச விண்வெளி மையம்"

    • அங்கு அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தொழில்நுட்ப கோளாறால் இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5 ஆம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    சுனிதா மற்றும் புட்ச் ஆகியோர் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு எட்டு நாட்களில் பூமிக்க திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

     


    இதன் காரணமாக கடந்த 80 நாட்களாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ளனர். இருவரையும் பூமிக்கு அழைத்த வர இருந்த ஸ்டார் லைனர் விண்கலம் தற்போது இவர்கள் இன்றி பூமிக்கு திரும்ப இருக்கிறது.

    சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா, புட்ச் இருவரும் பூமிக்கு திரும்புவது பற்றி கேள்விக்குறி இருந்து வந்த நிலையில், தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. அதன்படி இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.

    வெறும் எட்டு நாட்கள் ஆய்வு பணிக்காக விண்வெளி மையத்திற்கு சென்ற இருவரும் தற்போது எட்டு மாதங்கள் வரை விண்வெளியில் தங்கி இருக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா, புட்ச் இருவரும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்கிறார்கள். 

    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
    • நிலவை பற்றிய ஆராய்ச்சியில் அங்கு நீர் இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டோம்.

    கோவை:

    கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் கீழ் வானவில் மன்றம் சார்பாக 'ஸ்டெம்' கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். இந்த பள்ளியில் தான் அவர் பள்ளிப்படிப்பை படித்தார். பின்னர் மயில்சாமி அண்ணாதுரை 'தினத்தந்தி'க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ''நிலவை பற்றிய ஆராய்ச்சியில் அங்கு நீர் இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டோம். நிலவில் மெதுவாக துருவ பகுதியில் இறங்கமுடியும் என சொல்லிவிட்டோம். தற்போது உலக நாடுகள் எல்லாம் நிலவில் சிறு குடியிருப்புகளை உருவாக்க முடியுமா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது. இதைத்தொடர்ந்து நிலவிலேயே சர்வதேச விண்வெளி மையம் அமைக்க முடியுமா? என்ற ஆராய்ச்சி நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 7-ந்தேதி விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.
    • சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர்.

    சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், சக வீரர் புட்ச் வில்மோடன் ஆகியோர் கடந்த 5-ந்தேதி போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்லைனர் விண்கலத்தில் புறப்பட்டனர்.

    அவர்கள் இருவரும் 7-ந்தேதி விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர். அவர்கள் கடந்த 14-ந்தேதி பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டது. ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பயணம் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி கடந்த 26-ந் தேதி அவர்கள் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.

    ஆனால் ஸ்டார் லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர். இதனையடுத்து ஜூலை 2-ந்தேதி அனைத்து தொழில்நுட்ப கோளாறுகளும் சரி செய்யப்பட்டு இரண்டு வீரர்களும் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள் என போயிங் தெரிவித்தது. ஆனால் அதை நாசா உறுதி செய்யவில்லை.

    இந்த நிலையில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயு கசிவு , தொழில் நுட்ப கோளாறுகள் சரி செய்ய குறைந்தது 30 நாட்களுக்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப இன்னும் ஒரு மாதம் ஆகலாம்.

    இதற்கிடையே நாசாவின்அதிகாரியான ஸ்டீவ் ஸ்டிச் கூறும்போது, ஸ்டார்லைனரின் பயண காலத்தை 45 நாட்களில் இருந்து 90 நாட்களுக்கு நீட்டிக்க பரிசீலித்து வருகிறோம். சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை அழைத்து வருவதில் அவசரம் காட்டவில்லை என்றார். * * * இங்கிலாந்து பிரதர் ரிஷிசுனக், தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் லண்டனில் உள்ள சுவாமி நாராயண் கோவிலில் வழிபட்டார்.

    • சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் விண்வெளி மையத்தை பார்க்கலாம்.
    • சென்னையில் இருந்தே இந்த நிகழ்வு தெரியும் என்பதால் மக்கள் காண ஆர்வம்.

    சர்வதேச விண்வெளி மையம் குறிப்பிட்ட பகுதியில் விண்ணில் தெரியும் நேரம் பற்றிய தகவல்களை நாசா வெளியிட்டு வருகிறது.

    பொதுவாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வான்வெளி தெளிவாக இருக்கும்போது மட்டும் சிறய ஒளி புள்ளியாக விண்வெளி ஆய்வு மையத்தை காண முடியும்.

    அந்த வகையில், சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இன்று இரவு வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா அறிவித்தது.

    அதன்படி, சென்னையில் இன்றிரவு, 7.09 மணியில் இருந்து 7 நிமிடங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தென்படும் என நாசா அறிவித்தது.

    இந்நிலையில், சென்னையில் இருந்து விண்ணில் சர்வதேச விண்வெளி மையம் வெறும் கண்ணில் தென்பட்டது.

    நாசா அறிவித்தது போல், சென்னையில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தென்பட்டது.

    சென்னையில் இருந்தே இந்த நிகழ்வு தெரிந்ததால், மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    • சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் விண்வெளி மையத்தை பார்க்கலாம்.
    • சென்னையில் இருந்தே இந்த நிகழ்வு தெரியும் என்பதால் மக்கள் காண ஆர்வம்.

    சர்வதேச விண்வெளி மையம் குறிப்பிட்ட பகுதியில் வானிலை தெரியும் நேரம் பற்றிய தகவல்களை நாசா வெளியிட்டு வருகிறது.

    பொதுவாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வான்வெளி தெளிவாக இருக்கும்போது மட்டும் சிறிய ஒளி புள்ளியாக விண்வெளி ஆய்வு மையத்தை காண முடியும்.

    அந்த வகையில், சென்னையில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இன்று இரவு வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா அறிவித்துள்ளது.

    இதுபோல், சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் விண்வெளி மையத்தை பார்க்கலாம். சென்னையில் இன்றிரவு, 7.09 மணியில் இருந்து 7 நிமிடங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தென்படும் என நாசா அறிவித்துள்ளது.

    சென்னையில் இருந்தே இந்த நிகழ்வு தெரியும் என்பதால் மக்கள் காண ஆர்வத்துடன் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் குழு 6 மிஷன் என பெயரிடப்பட்டுள்ள இந்த பயணத்தில் 2 அமெரிக்கர்கள், ஒரு அரேபியர் மற்றும் ஒரு விண்வெளி வீரர் உள்ளனர்.
    • விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஹார்மெனி தொகுதியுடன் இணைக்கப்படும்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்கா-ரஷியா இடையே இறுக்கமான சூழல் நிலவும் நிலையில், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்கின்றனர்.

    ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் குழு 6 மிஷன் என பெயரிடப்பட்டுள்ள இந்த பயணத்தில் 2 அமெரிக்கர்கள், ஒரு அரேபியர் மற்றும் ஒரு விண்வெளி வீரர் உள்ளனர்.

    பால்கன்- 9 ராக்கெட், டிராகன் குழுவினருடன் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள தளத்தில் இருந்து விண்வெளிக்கு இன்று அனுப்பப்படுகிறது. நாளை அதிகாலை இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஹார்மெனி தொகுதியுடன் இணைக்கப்படும்.

    நாசாவின் கமாண்டர் ஸ்டீபன் போவன், பைலட் வாரன் போபர்க், ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த சுல்தான் அல்னியாடி மற்றும் ரோஸ் ரஷிய வீரர் ஆண்ட்ரே பெட்யாவ் ஆகியோர் இந்த பயணத்தில் புறப்பட்டு சென்றனர்.

    இந்த பயணத்திற்காக 4 வீரர்களும் முன்னதாக தங்களை தனிமைபடுத்தி கொண்டிருந்தனர்.

    • ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் புதிய தலைவராக யூரி போரிசோவ் பொறுப்பேற்றார்.
    • சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலகவுள்ளதாக ரஷியா திடீரென அறிவித்துள்ளது.

    மாஸ்கோ:

    அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை இயக்கி வருகின்றன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே, உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் சர்வதேச விண்வெளி மையத்தில் ரஷியாவின் ஒத்துழைப்பை சீர்க்குலைக்கும் என ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலக உள்ளதாக ரஷியா திடீரென அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர் யூரி போரிசோவ் கூறுகையில், 2024- க்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    2024 க்குப் பிறகு ரஷியா சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விலகி, அதன் சொந்த சுற்றுப்பாதையை அமைப்பதில் கவனம் செலுத்த உள்ளது என்றும் அவர் கூறினார்.

    உக்ரைனில் கிரெம்ளின் ராணுவ நடவடிக்கை தொடர்பாக ரஷியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×