search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்பேஸ் எக்ஸ்"

    • இதற்கு முன்பு 4 முறை ஏவப்பட்ட நிலையில், இந்த முறை மிகப்பெரிய முயற்சியை ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்தியது.
    • 5 மைல் தொலைவில் இருந்து துல்லியமாக அந்த நிகழ்வு படம்பிடிக்கப்பட்டுள்ளது

    எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ஸ்டார்ஷிப் மற்றும் பொதுவான விண்வெளி ஃபிளைட்களுக்கான புதிய தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    அதன்படி, புதிய அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன் சிறந்த ஏவுதல் மற்றும் வெற்றிகரமாக திரும்புதலை நோக்கமாக கொண்ட ஸ்பேஸ்எக்ஸ் சமீபத்தில் தனது 5வது விமான சோதனையை நிகழ்த்தியது. இதில், ஸ்டார்ஷிப்பின் சூப்பர் ஹெவி என்று அழைக்கப்படும் மிகப்பெரிய முதல் நிலை பூஸ்டர் விண்ணில் ஏவப்பட்டது.

    இதற்கு முன்பு 4 முறை ஏவப்பட்ட நிலையில், இந்த முறை மிகப்பெரிய முயற்சியை ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்தியது. அதன்படி, 5000 மெட்ரிக் டன் எடை கொண்ட ராக்கெட், ஏவுகணை கோபுரத்தில் இருந்து புறப்பட்ட அதே இடத்தில் வந்து லேண்ட் ஆனது. ஸ்டார்ஷிப் ஆனது "சாப்ஸ்டிக்" என்ற அதன் கைகளால் பூஸ்டரை லாவகமாக பிடித்தது.  விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் மீண்டும் ஏவுதளத்தில் லேண்ட் ஆனது   சாதனையாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் 17 ஆயிரம் டாலர் [சுமார் 14.29 லட்சம் ருபாய்] மதிப்புள்ள லென்ஸ் மூலம் ஏவுதளத்திற்கு 5 மைல் தொலைவில் இருந்து துல்லியமாக அந்த நிகழ்வு படம்பிடிக்கப்பட்ட வீடியோவை எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார். அந்த மொத்த நிகழ்வதையும் கச்சிதமாக படம்பிடித்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • நேற்று இரவு 10.47 மணிக்கு புளோரிடாவின் விண்வெளி நிலையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது
    • தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்து இவர்கள் பூமி திரும்ப அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆகும்

    இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவர்கள் திட்டமிட்டபடி கடந்த மாதம் 22-ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்து இவர்கள் பூமி திரும்ப அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அவர்களை மீட்பதற்கான விண்கலம் நேற்று [செப்டம்பர் 28] இரவு விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 120 நாட்களுக்கும் மேலாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்க எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நாடியது. அதன்படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட டிராகன் கேப்சூல் எனப்படும் விண்கலம் க்ரூ-9 இல் இடம்பெற்ற 4 வீரர்களுடன் நேற்று இரவு 10.47 மணிக்கு புளோரிடாவின் விண்வெளி நிலையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த டிராகன் விண்கலன் அடுத்தாண்டு பிப்ரவரியில் தான் பூமிக்கு திரும்பும். 

    • ஜேரட் ஐசக்மேன் உள்ளிட்ட 4 பேர் புளோரிடா விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளி புறப்பட்டுச் சென்றனர்.
    • விண்வெளி பயணம் வரலாற்றில் இதுவரை யாரும் செல்லாத உயரத்திற்குச் சென்று புதிய சாதனை படைத்தனர்.

    வாஷிங்டன்:

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கும், பிரபல தொழிலதிபர் ஜேரட் ஐசக்மேனும் இணைந்து பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் போலரிஸ் டான் எனப்படும் தனியார் விண்வெளி பயண திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.

    இத்திட்டத்தின்படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் ஜேரட் ஐசக்மேன் உள்ளிட்ட 4 பேர் புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

    டிராகன் விண்கலம் புறப்பட்ட 15 மணி நேரத்தில் சுமார் 1,400 கி.மீ. உயரத்திற்குச் சென்று, 50 ஆண்டுகால விண்வெளி பயண வரலாற்றில் இதுவரை யாரும் செல்லாத உயரத்திற்குச் சென்று புதிய சாதனை படைத்தனர்.

    டிராகன் விண்கலத்தில் இருந்து ஜேரட் ஐசக்மேன் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் பொறியாளர் சாரா கில்லி ஆகியோர் வெளியேறி வந்து ஸ்பேஸ் வாக் எனப்படும் விண்வெளி நடையை மேற்கொண்டனர். அப்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்துள்ள கவச உடைகள் கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறதா என்பதை அவர்கள் பரிசோதனை செய்தனர்.

    இந்தப் பயணத்தின்போது 30 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

    இந்நிலையில், தனியார் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் பூமிக்கு திரும்பியது.

    புளோரிடா கடற்கரை அருகே அந்த விண்கலம் பாராசூட் மூலம் கடலில் விழுந்தது. அதில் இருந்த 4 தனியார் விண்வெளி வீரர்களும் படகு மூலம் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். இதுதொடர்பான காட்சிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    • ஜேரட் ஐசக்மேன் உள்ளிட்ட 4 பேர் புளோரிடா விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளி புறப்பட்டுச் சென்றனர்.
    • விண்வெளி பயண வரலாற்றில் இதுவரை யாரும் செல்லாத உயரத்திற்குச் சென்று புதிய சாதனை படைத்தனர்.

    வாஷிங்டன்:

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கும், பிரபல தொழிலதிபர் ஜேரட் ஐசக்மேனும் இணைந்து பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் போலரிஸ் டான் எனப்படும் தனியார் விண்வெளி பயண திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.

    இத்திட்டத்தின்படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் ஜேரட் ஐசக்மேன் உள்ளிட்ட 4 பேர் புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

    இந்நிலையில், டிராகன் விண்கலம் புறப்பட்ட 15 மணி நேரத்தில் சுமார் 1,400 கி.மீ. உயரத்திற்குச் சென்று, 50 ஆண்டுகால விண்வெளி பயண வரலாற்றில் இதுவரை யாரும் செல்லாத உயரத்திற்குச் சென்று புதிய சாதனை படைத்தனர்.

    தற்போது 700 கி.மீ. உயரத்தில் புவி சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வரும் டிராகன் விண்கலத்தில் இருந்து ஜேரட் ஐசக்மேன் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் பொறியாளர் சாரா கில்லி ஆகியோர் வெளியேறி வந்து ஸ்பேஸ் வாக் எனப்படும் விண்வெளி நடையை மேற்கொண்டனர்.

    அப்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்துள்ள கவச உடைகள் கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறதா என்பதை அவர்கள் பரிசோதனை செய்தனர்.

    மொத்தம் 5 நாட்கள் பயணத்தின் 3-வது நாளான இன்று ஸ்பேஸ் வாக் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், மீதம் உள்ள நாட்களில் 30 வகையான பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளோம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • 2 நிறுவனங்களின் தலைமையிடத்தை டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
    • டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் இந்த ராக்கெட் சோதனை தலமான ஸ்டார்பேஸ் Starbase பகுதிக்கு மாற்றம் செய்யப்படும்

    அமெரிக்காவைச் சேர்ந்த  உலக பணக்காரரும் முன்னணி தொழிலதிபருமான எலான் மஸ்க் தனது நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் [ட்விட்டர்] ஆகியவற்றின் தலைமையிடங்களை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்.

    விண்வெளி உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சமீபத்தில் அவர் சொந்தமாக்கிக்கொண்ட சமூக வலைதளமான எக்ஸ் [ட்விட்டர்] ஆகியவை தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் எக்ஸ் -இல் அவர் அளித்த பேட்டியில் தனது இந்த 2 நிறுவனங்களின் தலைமையிடத்தை மற்றொரு அமெரிக்க மாகாணமான டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

     

     

    கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு சட்டத்தின்படி, பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களின் பாலினம் மற்றும் பெயரை பள்ளித் தரவுகளில் மாற்றினால் அதை ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு தெரிவிக்கக்கூடாது. இது LGBTQ+ மாணவர்களுக்கான தனியுரிமையாக பார்க்கப்படுகிறது. இந்த சட்டத்தாலும், இதற்கு முன்பு சமீப காலங்களாக கொண்டுவரப்பட்ட வெவ்வேறு சட்டங்களாலும் குடும்பங்களும் நிறுவனங்களும்  பெறும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கருதுவதால் அங்கிருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாக மஸ்க் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    அதன்படி தற்போது கலிபோர்னியாவின் ஹாத்ரோன் [HAWTHRONE] பகுதியில் செயல்பட்டு வரும் இரு நிறுவனங்களும் டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் இந்த ராக்கெட் சோதனை  தலமான ஸ்டார்பேஸ் Starbase பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. அமெரிக்காவில் மாகாணங்கள் சுயாட்சி பெற்று இயங்கிவருவது  குறிப்பிடத்தக்கது.

     

    • 2016 ஆம் ஆண்டு எலான் மஸ்க் நியூரோலிங்க் என்னும் நியூரோ டெக்னாலஜி நிறுவனத்தை தொடங்கினார்.
    • பார்கின்சன் மற்றும் ALS போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியும்.

    பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் ஸ்பேஸ் எகஸ் மற்றும் டெஸ்லா போன்ற நிறுவனங்களை தொடங்கி அதில் பல ஆராய்ச்சிகளும் புது விதமான எதிர்கால சிந்தனையுடன் செயல்படும் வாகனங்கள் மற்றும் ராக்கெட்டுகளையும் உற்பத்தி செய்து வருகிறார்.

    2016 ஆம் ஆண்டு எலான் மஸ்க் நியூரோலிங்க் என்னும் நியூரோ டெக்னாலஜி நிறுவனத்தை தொடங்கினார். எலான் மஸ்க் உடன் 7 விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் நிபுணர்கள் இணைந்து உருவாக்கப்பட்ட நிறுவனம் இது.

    இந்நிறுவனத்தின் பிரதான குறிக்கோள் என்னவென்றால் சாதாரண மனித ஆற்றலை கணினி மற்றும் ஏ.ஐ தொழில்நுட்ப உதவியுடன் பன்மடங்கு உயர்த்துவது தான். இந்த நிறுவனம் மனிதர்களின் மூளையில் சிப் பொருத்தி அவர்களை எண்ணங்களால் கணினி, லேப்டாப் போன்ற சாதனங்களை பயன்படுத்த வைக்கும் குறிக்கோளுடன் துவங்கப்பட்டது.

    இதன் மூலம் நரம்பு சம்பந்தப்பட்ட நோயான பார்கின்சன் மற்றும் ALS போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியும். இது தொடர்பான ஆராய்ச்சிகளில் நியூராங்க் ஆய்வாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.

    அராய்ச்சியை தொடர்ந்து நியூராலிங்க் உருவாக்கிய சிப் முதற்கட்டமாக விலங்குகளில் பொருத்தி சோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு, இதனை மனிதர்களிடமும் பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. அதன்படி முதற்கட்டமாக கடந்த ஜனவரி மாதம் நோலண்ட் அர்பாக் மூளையில் பயொனிக் சிப்பை பொறுத்தினர்.

    நோலண்ட் அர்பாக் பக்க வாத பாதிப்பு கொண்ட நபர். அவர் 8 ஆண்டுகளாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நியூரோ லிங்க் அறுவை சிகிச்சையின் மூலம் அவரால் தற்பொழுது கணினியில் சதுரங்கம் மற்றும் இதர கேம்களை விளையாட முடிகிறது. அவரின் மூளையில் உள்ள சிப்பை எண்ணங்களால் கட்டுப்படுத்தி கம்ப்யூட்டரை உபயோகிக்கவும் முடிகிறது.

    இந்த வெற்றியை கணக்கில் கொண்டு அதே சிப்பை மூளையில் இன்னும் ஆழமாகவும், வெவ்வேறு அடுக்குகளிலும் வைத்து நியூராலிங்க் ஆய்வாளர்கள் சோதனை செய்து வருகின்றனர். இதன் மூலம் மனிதனுக்கு கம்ப்யூட்டருக்கும் ஒரு தொடர்பு உருவாகும்.

    இதன் மூலம் கண்பார்வை இல்லாதவர்களுக்கு கூட கண்பார்வை வர வைக்க முடியும் எனவும், மற்ற சிப் பொறுத்திய மக்களிடம் டெலிபதி மூலம் தான் நினைத்ததை பறிமாற முடியும் என கூறுகிறார்.

    இந்த சிப் நமது செல்போன் போல் தானாக அப்டேட் ஆகும் வசதியுடன் உருவாக்கப் போவதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்த திட்டத்தின் அடுத்த இலக்கு கை, கால்கள் செயலிழந்த நபர்களிடமும் இந்த ஆராய்ச்சியை நடத்தவுள்ளனர்.

    எலான் மஸ்க் செய்வது ஒரு பக்கம் அறிவியல், விஞ்ஞானம் என மேலோங்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தாலும், மற்றொரு பக்கம் இது இயற்கைக்கு புறம்பானது. இதன் எதிர்வினை நாளை மனித இயல்பையும் , மனிதத்தையும் கேள்விக்குறியாக்கும் என்ற அச்சம் பரவலாக எழுகிறது.

    • பீர் குவளையை பிடித்தவாரும் மார்க் கடலில் சர்ஃபிங் செய்து விடுமுறையை கொண்டாடும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
    • மார்க்கை கலாய்த்து எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    பேஸ்புக், வாட்சப், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட சமூக வலிதளங்களை நிர்வகிக்கும் மெட்டா சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் மற்றும் எக்ஸ் [ட்விட்டர்]  உரிமையாளரும் ஸ்பேஸ் எக்ஸ் டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க்கிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.

     

    இந்நிலையில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தினத்தின்போது, கோட் சூட் அணிந்தவாறு ஒரு கையில் அமெரிக்க கோடியை ஏந்தியவாறும், மறு கையில் பீர் குவளையை பிடித்தவாரும் மார்க் கடலில் யாட்ச்சில் சர்ஃபிங் செய்து விடுமுறையை கொண்டாடும் வீடியோவை இன்ஸ்ட்டாகிராமில் பகிரவே அது  இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

    இந்த வீடியோ வைரலாக நிலையில் மார்க்கை கலாய்த்து எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அவர் யாட்ச்களில் பொழுதைப்போக்கி கொண்டாட்டங்களில் ஈடுபடட்டும்.அதைவிட நான் வேலை செய்யவே விரும்புகிறேன். I prefer to work என்று தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க் அறிக்கைபடி  பணக்காரர் பட்டியலில் மார்க் ஜூகர்பெர்கைவிட எலான் மஸ்க் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.   

    • எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் சுமார் 400 அடி மெகா ராக்கெட்டை தயாரித்துள்ளது.
    • மூன்று முறை வானில் வெடித்து சோதனை தோல்வியில் முடிந்தது.

    ஸ்பேஸ் எக்ஸ் 400 அடி (121 மீட்டர்) நீளம் கொண்ட உலகின் மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட் இதற்கு முன் மூன்று முறை வானில் செலுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    மூன்று முறையில் ராக்கெட் செலுத்தப்பட்டதும் வெடித்து சிதறி சோதனை தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து ஏவிய நிலையில் வெற்றிகரமான வானில் சீறிப்பாய்ந்து மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது.

    இன்று காலை மெக்சிகோ வளைகுடாவில் இருந்து இந்திய பெருங்கடல் நோக்கி ஏவப்பட்டது. ராக்கெட் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் விண்கலத்தின் இருந்து முதல்-நிலை பூஸ்டர் தனியாக பிரிந்து திட்டமிட்டபடி வளைகுடாவில் விழுந்தது. ஸ்டார்ஷிப் விண்கலம் ஆறு ராப்டர் என்ஜின்களுடன் தொடர்ந்து அதன் பயணத்தை தொடர்ந்தது.

    எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செவ்வாய் மற்றும் நிலவிற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

    • டிராகன் விண்கலம் சுற்றுப்பாதையில் நுழைந்தது.
    • சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள்.

    அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து உள்ளன.

    பூமியில் இருந்து 410 கிலோ மீட்டர் உயரத்தில் இயங்கி வரும் இந்த விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா, ரஷியா மற்றும் பிற உறுப்பு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் அங்கு தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்காக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உடன் இணைந்து, விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வருகிறது.

    கடைசியாக கடந்த மார்ச் மாதம் 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் 6 மாத பணிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.

    இதையடுத்து அவர்களுக்கு மாற்றாக புதிய விண்வெளி வீரர்கள் குழுவை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து நாசா மேற்கொண்டது.

    அதன்படி, நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 4 விண்வெளி வீரர்களுடன் பால்கன்-9 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

    அதனை தொடர்ந்து, டிராகன் விண்கலம் சுற்றுப்பாதையில் நுழைந்தது.

    இந்நிலையில், பூமியில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் 4 வீரர்களுடன் அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்ததாக நாசா தெரிவித்துள்ளது.

    இந்த 4 விண்வெளி வீரர்களும் 6 மாத காலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×