search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Space X"

    • 2 நிறுவனங்களின் தலைமையிடத்தை டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
    • டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் இந்த ராக்கெட் சோதனை தலமான ஸ்டார்பேஸ் Starbase பகுதிக்கு மாற்றம் செய்யப்படும்

    அமெரிக்காவைச் சேர்ந்த  உலக பணக்காரரும் முன்னணி தொழிலதிபருமான எலான் மஸ்க் தனது நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் [ட்விட்டர்] ஆகியவற்றின் தலைமையிடங்களை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்.

    விண்வெளி உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சமீபத்தில் அவர் சொந்தமாக்கிக்கொண்ட சமூக வலைதளமான எக்ஸ் [ட்விட்டர்] ஆகியவை தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் எக்ஸ் -இல் அவர் அளித்த பேட்டியில் தனது இந்த 2 நிறுவனங்களின் தலைமையிடத்தை மற்றொரு அமெரிக்க மாகாணமான டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

     

     

    கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு சட்டத்தின்படி, பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களின் பாலினம் மற்றும் பெயரை பள்ளித் தரவுகளில் மாற்றினால் அதை ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு தெரிவிக்கக்கூடாது. இது LGBTQ+ மாணவர்களுக்கான தனியுரிமையாக பார்க்கப்படுகிறது. இந்த சட்டத்தாலும், இதற்கு முன்பு சமீப காலங்களாக கொண்டுவரப்பட்ட வெவ்வேறு சட்டங்களாலும் குடும்பங்களும் நிறுவனங்களும்  பெறும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கருதுவதால் அங்கிருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாக மஸ்க் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    அதன்படி தற்போது கலிபோர்னியாவின் ஹாத்ரோன் [HAWTHRONE] பகுதியில் செயல்பட்டு வரும் இரு நிறுவனங்களும் டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் இந்த ராக்கெட் சோதனை  தலமான ஸ்டார்பேஸ் Starbase பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. அமெரிக்காவில் மாகாணங்கள் சுயாட்சி பெற்று இயங்கிவருவது  குறிப்பிடத்தக்கது.

     

    • பீர் குவளையை பிடித்தவாரும் மார்க் கடலில் சர்ஃபிங் செய்து விடுமுறையை கொண்டாடும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
    • மார்க்கை கலாய்த்து எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    பேஸ்புக், வாட்சப், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட சமூக வலிதளங்களை நிர்வகிக்கும் மெட்டா சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் மற்றும் எக்ஸ் [ட்விட்டர்]  உரிமையாளரும் ஸ்பேஸ் எக்ஸ் டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க்கிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.

     

    இந்நிலையில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தினத்தின்போது, கோட் சூட் அணிந்தவாறு ஒரு கையில் அமெரிக்க கோடியை ஏந்தியவாறும், மறு கையில் பீர் குவளையை பிடித்தவாரும் மார்க் கடலில் யாட்ச்சில் சர்ஃபிங் செய்து விடுமுறையை கொண்டாடும் வீடியோவை இன்ஸ்ட்டாகிராமில் பகிரவே அது  இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

    இந்த வீடியோ வைரலாக நிலையில் மார்க்கை கலாய்த்து எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அவர் யாட்ச்களில் பொழுதைப்போக்கி கொண்டாட்டங்களில் ஈடுபடட்டும்.அதைவிட நான் வேலை செய்யவே விரும்புகிறேன். I prefer to work என்று தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க் அறிக்கைபடி  பணக்காரர் பட்டியலில் மார்க் ஜூகர்பெர்கைவிட எலான் மஸ்க் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.   

    • 25 முதல் 30 மாடி உயரம் கொண்ட இந்த விண்கலம், 120 டன் எடை கொண்டது.
    • ஸ்பேக் எக்ஸ் ராக்கெட் ஏவுதளத்தில் விண்கலம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் விண்கலம் தயாராக உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்துள்ளது.

    பிரபல கோடீஸ்வரர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் விண்கலத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஸ்டார் சிப் விண்கலம், மனிதர்களை நிலவு, செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்ல உருவாக்கப்பட்டதாகும்.

    25 முதல் 30 மாடி உயரம் கொண்ட இந்த விண்கலம், 120 டன் எடை கொண்டது.

    உலகின் மிக சக்தி வாய்ந்த டிராகன் பூஸ்டர்ஸ் ராக்கெட் மூலம், இந்த விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது.

    இந்த விண்கலம், புவிஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு, தானாக பயணித்து, தரையிறங்கும் வல்லமை கொண்டது.

    விண்கலத்தின் அனைத்து சோதனைகளும் நிறைவு செய்துள்ளது. ஸ்பேக் எக்ஸ் ராக்கெட் ஏவுதளத்தில் விண்கலம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மனிதர்களை ஏற்றி செல்வதற்காக, அமெரிக்க விண்வெளி துறையின் அனுமதிக்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் காத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

    ×