search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Law"

    • பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்க முடியும்.
    • தற்போதய இந்த வயது தளர்வு, ஈராக்கில் அதிகப்படியான குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா அந்நாட்டின் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆண்குழந்தைகளுக்கு 15 வயதிலும் , பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்க முடியும்.

    தற்போதுவரை ஈரானில் பெண்களின் திருமணத்துக்கான சட்டப்பூர்வ வயது 18 ஆக உள்ளது. ஆனால் தற்போது முமொழியப்பட்டுள்ள மசோதவைன்படி, பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்தில், 9 வயதில் பெண்களை திருமணம் செய்து கொடுக்கலாம்.

    சட்டப்பூர்வ வயது 18 ஆக இருந்தாலும் ஏற்கனவே ஈராக்கில் 28 சதீவீத பெண்களுக்கு அந்த வயதை எட்டும் முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது என்று ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ள நிலையில், தற்போதய இந்த வயது தளர்வு, ஈராக்கில் அதிகப்படியான குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே இந்த மசோதவனுக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கல்யாணம் செய்து கொள்ள முன்வராமலேயே 6 வருட காலமாக தொடர்ந்து பாலியல் உறவு வைத்து அதன்பின் பிரிந்து சென்றுள்ளார்
    • விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொள்வது [பாலியல் வன்கொடுமை] சட்டப்பிரிவு 375 இந்த கீழ் வராது

    கடந்த 2012 இல் இருந்து பெண் ஒருவர் ஆண் ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார். அவர்களுக்கிடையில் உடல் ரீதியான உறவும் இருந்து வந்துள்ளது, இதற்கிடையில் அந்த ஆண் இவரிடமிருந்து விலகி முற்றிலுமாக தவிர்த்து விட்டு வேறொரு பெண்ணுடன் காதல் செய்து வந்துள்ளார்.

    கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அந்த ஆண் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக ஏமாற்றப்பட்ட அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஏமாற்றப்பட்ட பெண்ணின் வக்கீல், தனது கட்சிக்காரரை குற்றம்சாட்டப்பட்டவர் கல்யாணம் செய்து கொள்ள முன்வராமலேயே 6 வருட காலமாக தொடர்ந்து பாலியல் உறவு வைத்து அதன்பின் பிரிந்து சென்றுள்ளார் என்ற வாதத்தை முன்வைத்தார்.

    இந்நிலையில் வாதத்தை கேட்ட நீதிபதி, புகார் அளித்துள்ள பெண்ணே, தான் அந்த நபரை காதலித்து வந்ததாக தெரிவித்துள்ளார். இப்போது அவர்களுக்கிடையில் காதல் இல்லை எனபதற்காக இதற்குமுன்  விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டது பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவு 375 கீழ் வராது என்று வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

    பழைய சட்டத்தின்படி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாரதீய சட்டங்களின்படி திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனை பெண்கள் தவறாக பயன்படுத்தக்கூடும் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. 

    • 2 நிறுவனங்களின் தலைமையிடத்தை டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
    • டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் இந்த ராக்கெட் சோதனை தலமான ஸ்டார்பேஸ் Starbase பகுதிக்கு மாற்றம் செய்யப்படும்

    அமெரிக்காவைச் சேர்ந்த  உலக பணக்காரரும் முன்னணி தொழிலதிபருமான எலான் மஸ்க் தனது நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் [ட்விட்டர்] ஆகியவற்றின் தலைமையிடங்களை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்.

    விண்வெளி உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சமீபத்தில் அவர் சொந்தமாக்கிக்கொண்ட சமூக வலைதளமான எக்ஸ் [ட்விட்டர்] ஆகியவை தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் எக்ஸ் -இல் அவர் அளித்த பேட்டியில் தனது இந்த 2 நிறுவனங்களின் தலைமையிடத்தை மற்றொரு அமெரிக்க மாகாணமான டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

     

     

    கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு சட்டத்தின்படி, பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களின் பாலினம் மற்றும் பெயரை பள்ளித் தரவுகளில் மாற்றினால் அதை ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு தெரிவிக்கக்கூடாது. இது LGBTQ+ மாணவர்களுக்கான தனியுரிமையாக பார்க்கப்படுகிறது. இந்த சட்டத்தாலும், இதற்கு முன்பு சமீப காலங்களாக கொண்டுவரப்பட்ட வெவ்வேறு சட்டங்களாலும் குடும்பங்களும் நிறுவனங்களும்  பெறும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கருதுவதால் அங்கிருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாக மஸ்க் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    அதன்படி தற்போது கலிபோர்னியாவின் ஹாத்ரோன் [HAWTHRONE] பகுதியில் செயல்பட்டு வரும் இரு நிறுவனங்களும் டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் இந்த ராக்கெட் சோதனை  தலமான ஸ்டார்பேஸ் Starbase பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. அமெரிக்காவில் மாகாணங்கள் சுயாட்சி பெற்று இயங்கிவருவது  குறிப்பிடத்தக்கது.

     

    • பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 பல்கலைக்கழகங்களில் முதுநிலை சட்ட படிப்பிற்கான உதவி தொகை கிடைத்துள்ளது.
    • அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனில் சமையல்காரராக பணியாற்றுபவரின் மகள் பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 முன்னணி பல்கலைக்கழகங்களில் சட்ட மேற்படிப்புக்கான உதவித்தொகை கிடைத்ததற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மற்றும் கலிபோர்னியா ஆகிய 2 பல்கலைக்கழகங்களில் முதுநிலை சட்ட படிப்பிற்கான உதவி தொகை கிடைத்துள்ளது.

    பிரக்யாவின் குடும்பத்தை அழைத்து, அவர்களுக்கு சால்வை அணிவித்து தலைமை நீதிபதி சந்திரசூட் கௌரவித்தார்.  பிறகு அவர் கையெழுத்திட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான 3 புத்தங்களை அவருக்கு பரிசாக வழங்கினார்.

    பின்னர் பிரக்யாவிடம் அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    • ஏற்காட்டில் குற்றசெயல்களை தடுக்கும் விதமாக கலந்தாய்வு கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் தலைமையில் நடந்தது.
    • இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம ஊர் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்காட்டில் குற்றசெயல்களை தடுக்கும் விதமாக கலந்தாய்வு கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் தலைமையில் நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம ஊர் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் பேசியதாவது:- ஏற்காடு மலை கிராமங்களில் கள்ள துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. மேலும் கஞ்சா, கள்ள சாராயம், அரசு மது பாட்டில் விற்பனையாளர்கள் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதாக அவ்வப்போது தகவல் வருகிறது. எங்களது போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வழக்குகளும் செய்து வருகிறார்கள். கள்ளத்துப்பாக்கி வைத்துள்ள நபர்கள் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள். கள்ளத்துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைத்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது. நாங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கள்ளத்துப்பாக்கி வைத்துள்ளது கண்டுபிடித்தால் துப்பாக்கி வைத்திருந்த நபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    • அம்பர் கிரீஸ் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி விடுத்துள்ளது.
    • வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது

    மதுரை

    அம்பர் கிரீஸ் என அழைக்கப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீரை வைத்திருந்ததாக ஸ்ரீவில்லி புத்தூர் பகுதியை சேர்ந்த தர்மராஜ், வன துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.

    இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி கூறுகையில், இது போன்ற வழக்குகளில் கைதான வர்கள் ஏற்கனவே ஜாமீன் பெற்றுள்ளதால், மனுதா ரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி, அரிய உயிரினமான திமிங்கலத்தை வேட்டை யாடுவது தடை செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    மேலும் அதே நேரத்தில் திமிங்கலம் வாய் வழியாக உமிழும் அம்பர் கிரீஸ் என்ற பொருளை ஒருவர் வைத்திருப்பது சட்டபடி குற்றமாகுமா? என்று கேள்வி எழுப்பினர். இதுகுறித்துஅரசு தரப்பு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    • சேலம் அம்மாப்பேட்டை செங்கல் அணை சாலையை சேர்ந்தவர் செல்வம் இவரது தம்பி ராஜகணபதி இவர்கள் இடையே சொத்து தகராறு இருந்தது.
    • ஜூன் மாதம் 18-ந்தேதி அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் செல்வம் தனது தம்பி ராஜகணபதியை கட்டையால் தாக்கினார்.

    ேசலம்:

    சேலம் அம்மாப்பேட்டை செங்கல் அணை சாலையை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). இவரது தம்பி ராஜகணபதி (45). இவர்கள் இடையே சொத்து தகராறு இருந்தது. கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் செல்வம் தனது தம்பி ராஜகணபதியை கட்டையால் தாக்கினார். அதில் ராஜகணபதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்து சேலம் மத்திய ெஜயிலில் அடைத்தனர். தொடர்ந்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனால் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள செல்வம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    • ஈரோடு மரப்பாலம் ஆலமரத்து வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் . இவர் திருட்டு வழக்கில் சூரம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • தொடர்ந்து திருட்டு, அடிதடியில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் கலெக்டரிடம் பரிந்துரை செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மரப்பாலம் ஆலமரத்து வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவர் திருட்டு வழக்கில் சூரம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து திருட்டு, அடிதடியில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் கலெக்டரிடம் பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதனையடுத்து மணிகண்டன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

    • வருகிற மே 31-ந்தேதியுடன் விண்ணப்பப்பதிவு நிறைவடைய உள்ளது.
    • பிளஸ்-2 முடித்தவர்கள் 5 ஆண்டு சட்டப்படிப்பும், பட்டப்படிப்பு முடித்தவர்கள் மூன்று ஆண்டுகள் சட்டப்படிப்பும் படிக்க இயலும்.

    தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையுடன் இணைப்பு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலையுடன் இணைந்த சீர்மிகு சட்டப் பள்ளியிலும் ஐந்தாண்டு சட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.

    இதில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவு சட்டப்பல்கலைக் கழகத்தின் இணையப் பக்கத்தில் (www.tndalu.ac.in) தொடங்கியுள்ளது. வருகிற மே 31-ந்தேதியுடன் விண்ணப்பப்பதிவு நிறைவடைய உள்ளது. சட்டப் படிப்பு, 5 ஆண்டு, மூன்று ஆண்டு என இரு நிலைகளில் தமிழகத்தில் வழங்கப்படுகிறது. பிளஸ்-2 முடித்தவர்கள் 5 ஆண்டு சட்டப்படிப்பும், பட்டப்படிப்பு முடித்தவர்கள் மூன்று ஆண்டுகள் சட்டப்படிப்பும் படிக்க இயலும்.

    மூன்றாண்டு படிப்புக்கு எல்.எல்.பி., எல்.எல்.பி. ஹானர்ஸ் என்னும் பெயரிலும், ஐந்தாண்டு படிப்புக்கு பி.ஏ, எல்.எல்.பி. மற்றும் பி.ஏ, எல்.எல்.பி. ஹானர்ஸ் என்னும் இருநிலைகளிலும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. மூன்று ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 12 மணி நேரம் வேலை என்ற சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
    • ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் தி.மு.க அரசு கொண்டுவந்துள்ள 12 மணி நேரம் வேலை என்ற சட்டத்தை திரும்ப பெற கோரி தஞ்சையில் சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார்.

    அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் கோதண்டபாணி, ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணை ப்பாளர் குருசாமி, சி.ஐ.டி.யூ விரைவு போக்குவரத்து சங்க மாநில துணை செயலாளர் வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் வடிவேலன் உள்ளிட்டோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர்.

    இதில் சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர் அன்பு, முறைசாரா சங்க மாவட்ட செயலாளர் பேர்நீதி ஆழ்வார், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி, சுமை பணி சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் சாய்சித்ரா, அரசு போக்குவரத்து சிஐடியு சங்க பொருளாளர் ராமசாமி, டாஸ்மாக் சங்க மாவட்ட தலைவர் மதியழகன்,
    டி .ஆர். இ .யூ. சங்க தலைவர் ரஜினி, தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் உத்தரவு
    • அடிதடி, திருட்டு உள்பட 10 வழக்குகள் உள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை காரை அந்தோ ணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபாகர் (வயது 33). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டை காரை லேபர் பள்ளி தெருவைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நகர மன்ற உறுப்பினர் நரேஷ்குமாரை (36) தாக்கி, அவரி டம் நகை, பணம் பறித்த வழக்கு மற்றும் அடிதடி, திருட்டு உள்பட 10 வழக்குகள் உள்ளது.

    இது தொடர்பாக ராணிப்பேட்டை போலீசாரால் கைது செய் யப்பட்ட சுபாகர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சுபாகரின் குற்ற செயல்களை கட்டுப்படுத் தும் விதமாக அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் சுபாகரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.

    • தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, கஞ்சா குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை, ரேஷன் அரிசி கடத்துவோர், விபசார தொழிலில் ஈடுபடுபவர் மீதும் குண்டர் சட்டம் பாய்கிறது.
    • 175 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    சேலம்:

    சேலம் மாநகரில் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வழிப்பறியில் ஈடுபடு–வோர், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, கஞ்சா குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை, ரேஷன் அரிசி கடத்துவோர், விபசார தொழிலில் ஈடுபடுபவர் மீதும் குண்டர் சட்டம் பாய்கிறது.

    இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் ஓராண்டிற்கு சிறையில் இருந்து வெளியே வர முடியாது.

    தமிழக சிறைகளில் 1000-க்கும் மேற்பட்டோர் குண்டாசில் கைதாகி சிறையில் உள்ளனர்.

    சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவின் பேரில் இந்த ஆண்டு 175 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் 80 பேர் ரவுடிகள், 16 பேர் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்கள், 51 பேர் வழிப்பறி மற்றும் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள்.

    கடந்த ஆண்டில் 129 பேர் குண்டாசில் கைது செய்யப்பட்டு இருந்தனர். கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 46 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×