

ேசலம்:
சேலம் அம்மாப்பேட்டை செங்கல் அணை சாலையை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). இவரது தம்பி ராஜகணபதி (45). இவர்கள் இடையே சொத்து தகராறு இருந்தது. கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் செல்வம் தனது தம்பி ராஜகணபதியை கட்டையால் தாக்கினார். அதில் ராஜகணபதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்து சேலம் மத்திய ெஜயிலில் அடைத்தனர். தொடர்ந்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனால் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள செல்வம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.