என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம் (World)
8 நாட்களில் திரும்ப வேண்டியவர்கள், 8 மாதங்கள் கழித்து பூமி திரும்புவார் சுனிதா வில்லியம்ஸ் - நாசா
- அங்கு அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- தொழில்நுட்ப கோளாறால் இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5 ஆம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுனிதா மற்றும் புட்ச் ஆகியோர் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு எட்டு நாட்களில் பூமிக்க திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதன் காரணமாக கடந்த 80 நாட்களாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ளனர். இருவரையும் பூமிக்கு அழைத்த வர இருந்த ஸ்டார் லைனர் விண்கலம் தற்போது இவர்கள் இன்றி பூமிக்கு திரும்ப இருக்கிறது.
சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா, புட்ச் இருவரும் பூமிக்கு திரும்புவது பற்றி கேள்விக்குறி இருந்து வந்த நிலையில், தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. அதன்படி இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.
வெறும் எட்டு நாட்கள் ஆய்வு பணிக்காக விண்வெளி மையத்திற்கு சென்ற இருவரும் தற்போது எட்டு மாதங்கள் வரை விண்வெளியில் தங்கி இருக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா, புட்ச் இருவரும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்கிறார்கள்.