என் மலர்
உலகம்

அமெரிக்கா To டெல்லி: வழியில் கோளாறு.. ஏர் இந்தியா விமானம் மங்கோலியாவில் அவசர தரையிறக்கம்
- AI 174 போயிங் 777 ரக விமானம் மதியம் 2.47 மணிக்கு சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்டது.
- இரவு 9.59 மணிக்கு கொல்கத்தா வழியாக வந்து டெல்லியில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லிக்குச் வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் மங்கோலியாவிற்கு திருப்பி விடப்பட்டது.
AI 174 போயிங் 777 ரக விமானம் மதியம் 2.47 மணிக்கு சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்டது. இரவு 9.59 மணிக்கு கொல்கத்தா வழியாக வந்து டெல்லியில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.
ஆனால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகமங்கோலியா தலைநகர் உலான்பாதரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்தது.
விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
Next Story






