என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LVM-3 rocket"

    • ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று விண்ணில் ஏவப்பட்டது.
    • செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

    புதுடெல்லி:

    நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ சார்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. கடந்த 2013-ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது.

    அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்03 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோள் சந்திரயான்3 அனுப்பிய ஜிஎஸ்எல்வி மார்க்-03 (எல்விஎம்-3) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை விண்ணில் ஏவப்பட்டது. செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சி.எம்.எஸ்.-03 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நமது விண்வெளித்துறை தொடர்ந்து நம்மை பெருமைப்படுத்துகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். நமது விண்வெளி விஞ்ஞானிகளால் இயக்கப்படும் விண்வெளித்துறை எவ்வாறு சிறப்பிற்கும் புதுமைக்கும் ஒத்ததாக மாறியுள்ளது என்பது பாராட்டத்தக்கது என பதிவிட்டுள்ளார்.

    • பாதுகாப்பு பணி மற்றும் கடலோர எல்லைகளை கண்காணிக்க எல்.வி.எம்-3 ராக்கெட் இன்று ஏவப்பட்டது.
    • ரூ.1600 கோடியில் தயாரான நவீன செயற்கைக்கோளை நிலை நிறுத்துகிறது.

    நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ சார்பில் இதுவரை 48 செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

    அந்த வகையில் கடந்த 2013-ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-7 (ருக்மணி) செயற்கைக் கோளின் ஆயுள்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில் அதிநவீன சி.எம்.எஸ்.-03 (ஜிசாட்-7ஆர்) செயற்கைக் கோளை இஸ்ரோ தற்போது வடிவமைத்துள்ளது.

    இந்த செயற்கைக்கோள் எல்.வி.எம்.3 (ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவன் ஏவுதளத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.26 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

    இதற்கான கவுன்டவுன் நேற்று மாலை தொடங்கியது.

    சி.எம்.எஸ்.-03 செயற் கைக்கோள் 4,410 கிலோ எடை கொண்டது. இதுவரை புவிவட்டப் பாதைக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் இதுவே அதிக எடை கொண்டதாகும். இதில் விரிவுபடுத்தப்பட்ட மல்டி பேண்ட் தொழில்நுட்ப வசதிகள் உள்பட பல்வேறு நவீன அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்திய பாதுகாப்பு துறையின் கண்காணிப்புப் பணிகளுக்காக இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்திய கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதுடன், போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இடையே தொலைத் தொடர்பு சேவையை மேம்படுத்தவும் இது உதவும்.

    அதற்கு ஏற்ப இந்த செயற்கைகோள் விண்ணில் குறைந்தபட்சம் 170 கி.மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 29,970 கி.மீட்டர் தொலைவிலும் புவி வட்டப்பாதையில் குறிப்பிட்ட இடத்தில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்தியா இதுவரை புவி வட்ட சுற்றுப்பாதைக்கு அனுப்பியுள்ள செயற்கைகோள்களில் இந்த செயற்கைகோள்தான் அதிக எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் எல்.வி.எம்.-3 ராக்கெட்டின் 7-வது ஏவுதல் திட்டம் இது. இதற்கு முன்பு சந்திர யான்-3 விண்கலம் இந்த ராக்கெட் மூலமாக வெற்றி கரமாக விண்ணில் செலுத் தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    எல்.வி.எம்.-3 ராக்கெட் அதிநவீன கருவிகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதன்மூலம் பாதுகாப்பு துறைக்கு தேவையான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும். எல்.வி.எம்- ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி உள்ளனர்.

    • 36 செயற்கைகோள்களை சுமந்தபடி 'எல்.வி.எம்-3' ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.
    • எல்.வி.எம்-3 ராக்கெட் 8 டன் எடை வரை கொண்டு செல்லும் திறன் கொண்டது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் ஏவி வருகிறது.

    அந்தவகையில், அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் தயாரிக்கப்பட்ட மற்றொரு ராக்கெட்டான 'எல்.வி.எம்.எம்-3' ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. எல்.வி.எம்-3 இஸ்ரோவின் அதிக எடை கொண்ட ராக்கெட்டாகும். முன்பு இந்த ராக்கெட் ஜி.எல்.எஸ்.வி எம்.கே-3 என்று அழைக்கப்பட்டது.

    இந்த ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

    இதற்கான இறுதிகட்டப்பணியான 24 மணி நேரம் 30 நிமிடம் கவுண்ட்டவுன் நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கை கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்த ராக்கெட்டில் ஒன்வெப் இந்தியா-2-க்கான 36 செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன. வெள்ளி (வீனஸ்) கிரகத்தின் மேற்பரப்பில் எரிமலை செயல்பாடு குறித்து கண்டறிவதற்காக இந்த செயற்கைகோள்கள் பயன்படும். 36 செயற்கைகோள்களின் மொத்த எடை சுமார் 5.8 டன் ஆகும். எல்.வி.எம்-3 ராக்கெட் 8 டன் எடை வரை கொண்டு செல்லும் திறன் கொண்டது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    ×