search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rocket launch"

    • 'ஐ.ஐ.டி-மெட்ராஸ்- இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட்-அப்' அக்னிபான் ராக்கெட்டை தயாரித்தது.
    • செயற்கைகோள் எதுவும் இன்றி சோதனை முயற்சியாக ராக்கெட் ஏவப்பட இருந்தது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 ஏவுதளங்கள் மூலம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படுகிறது.

    இந்த சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய வளாகத்தில் சென்னையை சேர்ந்த விண்வெளி தொழில்முனைவோரால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மற்றொரு தனியார் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஏவுதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    அதில் இருந்து முதன் முறையாக சென்னையை தளமாக கொண்ட, 'ஐ.ஐ.டி-மெட்ராஸ்- இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட்-அப்' தயாரித்த 'அக்னிபான்' ராக்கெட் நாளை காலை 9 மணி அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், அக்னிபான் ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாளை விண்ணில் ஏவப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தொழில்நுட்ப கோளாறு சீரான பிறகு, விண்ணில் ஏவப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செயற்கைகோள் எதுவும் இன்றி சோதனை முயற்சியாக இந்த ராக்கெட் ஏவப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மிகப்பெரிய 2 திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருவதையொட்டி தூத்துக்குடியில் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • பாதுகாப்பு குழுவினர் பிரதமர் வரும் ஹெலிபேட் சோதனை நடத்த உள்ளனர்.

    தூத்துக்குடி:

    பாராளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தங்களை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

    பா.ஜ.க. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.

    அவர் செல்லும் இடங்களில் ரோடு-ஷோவும் நடத்தி வருகிறார். தமிழகத்திற்கு கடந்த மாதம் 2 முறை பிரதமர் மோடி வந்தார். இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    இந்நிலையில் 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி தமிழகம் வருகிறார். அன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் மிகப்பிர மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் அவர் அங்கிருந்து கேரளா புறப்பட்டு செல்கிறார்.

    28-ந் தேதி (புதன்கிழமை) காலை ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வருகிறார். அங்கு துறைமுகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவு தளத்தில் இருந்தே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து மற்றொரு ராக்கெட் ஏவு தளத்தை அமைப்பதற்காக மத்திய அரசு முடிவு செய்தது.


    பல்வேறு கட்ட ஆய்வுகளின் முடிவில் ராக்கெட் ஏவ சிறந்த இடம் மற்றும் எரி பொருள் என பல்வேறு வழிகளில் மிகச்சிறந்த இடமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது.

    குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளை வருகிற 28-ந் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

    இதேபோல் ரூ.550 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்ட புதிய ரெயில்வே தூக்கு மேம்பாலத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணிக்கிறார்.

    மிகப்பெரிய 2 திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருவதையொட்டி தூத்துக்குடியில் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இன்று முதல் பாதுகாப்பு குழுவினர் பிரதமர் வரும் ஹெலிபேட் சோதனை நடத்த உள்ளனர். கடலோர காவல்படை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடலில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டு உள்ளது.

    மேலும் அவர்கள் தண்ணீரில் செல்லும் சிறப்பு விமானம் மூலம் ராமேஸ்வரம் பாம்பன் முதல் கன்னியாகுமரி வரை தினமும் 3 முறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

    இதேபோல் துறைமுக நுழைவுவாயில் பகுதிகளில் கடலோர காவல்படையினர் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் துறைமுகத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு படகு மூலம் கடலோர காவல் படையினர் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழாவையொட்டி தூத்துக்குடி ஹெலிபேட் தளத்தில் இருந்து விழா நடைபெறும் தூத்துக்குடி துறைமுக நிர்வாக அலுவலகம் வரை பிரதமர் மோடி குண்டு துளைக்காத 'புல்லட் புரூப்' காரில் செல்கிறார். இந்த கார் வருகிற 26-ந் தேதி தூத்துக்குடி வர உள்ளது. மேலும் தமிழக போலீசார் சார்பிலும் ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

    • பொன்னாங்கண்ணிக்காடு அரசு பள்ளியில் அறிவியல் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.
    • ராக்கெட் ஏவுதல் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐன்ஸ்டீன் - ஹாக்கிங் அறிவியல் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பட்டதாரி ஆசிரியர் த.முருகையன் தலைமை வகித்தார். தா.கலைச்செல்வன் அறிவியல் மன்றத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் பாரத வங்கி மேலாளர் இராகவன் சூரியேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கணேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரண்யா, சமூக ஆர்வலர்கள் ஆறு.நீலகண்டன், பேராசிரியர் சண்முகபிரியா, திருவேங்கடம், நா.வெங்கடேசன், த.பழனிவேல், மு.அருண்சுதேஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ராக்கெட் ஏவுதல் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

    நவீன தொலைநோக்கி மூலம் மாணவர்களுக்கு விண்ணில் உள்ள சூரியன் சுற்றி வரும் பாதை குறித்து விளக்கி கூறப்பட்டது.

    இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். #Kanimozhi #Modi
    சென்னை:

    இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.  #Kanimozhi #Modi

    இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் 2-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க வேண்டும் என்ற தி.மு.க. மற்றும் தமிழக மக்களின் கோரிக்கையை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். இந்தியாவிலேயே தற்போது ஒரே ஒரு ராக்கெட் ஏவுதளம் தான் உள்ளது. அது ஸ்ரீஹரிகோட்டாவில் இயங்குகிறது என்பது உங்களுக்கு தெரியும்.



    விண்வெளி திட்டங்களை மேம்படுத்தியுள்ள மற்ற நாடுகள் அனைத்தும் பல்வேறு ராக்கெட் ஏவுதளங்களை வைத்துள்ளன. எனவே ஸ்ரீஹரிகோட்டாவில் இயங்கும் ராக்கெட் ஏவுதளத்துக்கு உதவியாக மற்றொரு புதிய ஏவுதளத்தை உருவாக்குவது அவசியமாக உள்ளது.

    2013-ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந் தேதியன்று நான் கேட்ட கேள்விக்கு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), நாடாளுமன்றத்தில் தன் பதிலை முன்வைத்தது. அதில், ஸ்ரீஹரிகோட்டாவில் தற்போதுள்ள ராக்கெட் ஏவுதளத்தின் திறன்களை பரிசீலித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான ராக்கெட் ஏவும் தேவைகளை அறிந்தும், புதிய ஏவுதளத்தின் தேவை குறித்தும் மதிப்பிடுவதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.

    குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளத்தை அமைப்பது குறித்து 2013-ம் ஆண்டு பிரதமருக்கு, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதி யிருந்தார். மகேந்திரகிரியில் உள்ள திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தில் (எல்.பி.எஸ்.சி.) உள்ள விஞ்ஞானிகளின் விரிவான சாத்தியக்கூறு ஆய்வின் அடிப்படையில் தான் நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.

    எல்.பி.எஸ்.சி.யின் முன்னாள் தலைமை பொதுமேலாளரின் கருத்துப்படி, குலசேகரன்பட்டினத்தில் இருந்து மங்கள்யான் செயற்கைக்கோள் ஏவப்பட்டு இருந்தால், 1,350 கிலோ எடையுள்ள உபகரணங்களுக்கு பதிலாக 1,800 கிலோ எடையுள்ள உபகரணங்களை அனுப்பியிருக்க முடியும்.

    பூமத்தியரேகைக்கும், எல்.பி.எஸ்.சி.க்கும் அருகில் இருப்பதால் இந்தியாவின் அடுத்த ராக்கெட் ஏவுதளம் உருவாக்க குலசேகரன்பட்டினம் தான் சிறந்த இடமாக இருப்பதற்கு உகந்த சூழ்நிலை உள்ளது. எனவே, இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை குலசேகரன்பட்டினத்தில் உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    பூமி கண்காணிப்பு செயற்கைகோளை, பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டில் பொறுத்தி, வரும் ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தற்போது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் ஒருங்கிணைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த ராக்கெட்டில் செலுத்துவதற்காக 800 முதல் 1,000 கிலோ எடைகொண்ட பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து வருகிறது.

    மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்த 250 கிலோ எடைகொண்ட 20 முதல் 30 செயற்கைகோள்களையும் இணைத்து வரும் ஆகஸ்டு மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இதில் வெளிநாடுகளைச் சேர்ந்த புதிய வாடிக்கையாளர்களும் தங்கள் செயற்கைகோள்களை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோவிடம் அளித்து உள்ளனர். இவற்றை செலுத்துவதற்கான ஆயத்தபணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த ஆண்டு ஏவப்படும் 4-வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி. சி-42 ஆகும். அதில் பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 3-வதாக உள்ளது.

    வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் உள்ள செயற்கைகோள்களை வாங்கி இஸ்ரோவுக்கு அளித்து வரும் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் தற்போது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் மூலம் விண்ணுக்கு ஏவுவதற்காக 20 முதல் 30 செயற்கைகோள்களை வாங்கி இஸ்ரோவுக்கு அளித்து உள்ளது.

    தகவல் தொடர்புக்காக 5 ஆயிரத்து 400 கிலோ எடையில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட ‘ஜி.சாட்- 11’ செயற்கைகோளை பிரெஞ்சு கயானாவில் இருந்து ஐரோப்பிய நாட்டு ராக்கெட்டில் விண்ணில் செலுத்தவும் இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இதற்கான இறுதிகட்ட சோதனை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் நடந்து வருகிறது. விரைவில் இதை விண்ணில் செலுத்தும் தேதி அறிவிக்கப்படும்.

    இஸ்ரோ இதுவரை 237 வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது.

    அதேபோன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் ராக்கெட்டுகள் ஆய்வு செய்யும் ஆய்வகம் ரூ.630 கோடியிலும், ராக்கெட் ஒருங்கிணைப்பு வசதி கொண்ட மையம் ரூ.475 கோடி மதிப்பிலும் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப்பணிகள் அனைத்தும் நடப்பாண்டு இறுதியில் முடிவடைந்து செயல்பாட்டுக்கு வர உள்ளது.

    அதற்கு பிறகு முதல் ஏவுதளத்தில் இருந்து 15 ராக்கெட்டுகளையும், 2-வது ஏவுதளத்தில் இருந்து 11 ராக்கெட்டுகளையும் ஏவும் திறனை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையம் பெறும்.

    இந்த தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள். 
    ×