என் மலர்
நீங்கள் தேடியது "நவீன தொலைநோக்கி"
- கே12-18பி கிரகம் நமது பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது
- ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உதவியுடன் விஞ்ஞானிகள் இதை கண்டுபிடித்துள்ளனர்.
சூரிய மண்டலத்துக்கு அப்பால் உயிர்கள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்களை கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உதவியுடன் சூரிய மண்டலத்திற்கு அப்பால் உயிர்கள் இருப்பதற்கான ஆதாரம்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கே12-18பி எனப் பெயரிடப்பட்டுள்ள கிரகத்தில், பூமியில் வாழும் நுண்ணுயிர்களால் உருவாக்கப்படும் இரண்டு வாயுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கே12-18பி கிரகம் நமது பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது மற்றும் பூமியில் இருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில் இக்கிரகம் உள்ளது.
- பொன்னாங்கண்ணிக்காடு அரசு பள்ளியில் அறிவியல் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.
- ராக்கெட் ஏவுதல் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐன்ஸ்டீன் - ஹாக்கிங் அறிவியல் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு பட்டதாரி ஆசிரியர் த.முருகையன் தலைமை வகித்தார். தா.கலைச்செல்வன் அறிவியல் மன்றத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பாரத வங்கி மேலாளர் இராகவன் சூரியேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கணேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரண்யா, சமூக ஆர்வலர்கள் ஆறு.நீலகண்டன், பேராசிரியர் சண்முகபிரியா, திருவேங்கடம், நா.வெங்கடேசன், த.பழனிவேல், மு.அருண்சுதேஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ராக்கெட் ஏவுதல் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.
நவீன தொலைநோக்கி மூலம் மாணவர்களுக்கு விண்ணில் உள்ள சூரியன் சுற்றி வரும் பாதை குறித்து விளக்கி கூறப்பட்டது.






