என் மலர்tooltip icon

    உலகம்

    VIDEO: ஈராக்கில் சர்வதேச விமான நிலையம் அருகே அமெரிக்க  படைத் தளம் மீது ஈரான் தாக்குதல்
    X

    VIDEO: ஈராக்கில் சர்வதேச விமான நிலையம் அருகே அமெரிக்க படைத் தளம் மீது ஈரான் தாக்குதல்

    • அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    • சர்வதேச கூட்டணிப் படைகள் தங்கியிருக்கும் முக்கிய மையமாகும்.

    நேற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் அலி காமேனி, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவ தளபதி ஆகியோர் கொல்லப்பட்டனர்.

    இதற்குப் பழிவாங்கும் விதமாக, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களைத் தொடர்ந்து தற்போது ஈராக்கிலும் ஈரான் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

    மத்திய கிழக்கில் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால், ஈரான், ஈராக், துபாய் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் வான்வெளிகள் வழியாகச் செல்லும் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதன் ஒரு பகுதியாக வடக்கு ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் தாக்கப்பட்டுள்ளன.

    வடக்கு ஈராக்கின் குர்திஷ் பகுதியில் உள்ள இர்பில் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஒரு டிரோன் விழுந்து வெடித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    தாக்குதலுக்குள்ளான இந்த இடம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராகப் போராடும் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டணிப் படைகள் தங்கியிருக்கும் முக்கிய மையமாகும்.

    இந்த தாக்குதலில் 2 பேர் வரை கொல்லப்பட்தாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×