என் மலர்
செய்திகள்

வடமாநிலங்களில் புயல் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு
வடமாநிலங்களில் பெய்து வரும் புயல் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #RainStrom
புதுடெல்லி:
வடமாநிலங்களில் தற்போது புயல் மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழையில் சிக்கி மக்கள் பலியாகி வருகின்றனர்.
ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நேற்று புயல் தாக்கியதுடன் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்தன.
ராஜஸ்தானில் அதிகபட்சமாக 25 பேரும், மத்தியப்பிரதேசத்தில் 15 பேரும், குஜராத்தில் 10 பேரும் பலியாகினர். மேலும் மகாராஷ்டிராவில் 3 பேர் மழைக்கு உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
புயல் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். அத்துடன் மழையால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. #RainStrom
Next Story






