தலைக்கு மேல் காத்திருந்த மரணம்.. இடிந்து விழுந்த கட்டடம்.. நொடியில் உயிர்தப்பிய சிறுவர்கள் - வீடியோ

சதார் பஜாரில் ஜைன சமூக அறக்கட்டளைக்குச் சொந்தமான அந்த கட்டடம் 150 வருட பழமையானது.கடந்து சென்ற அடுத்த நொடியே கட்டடம் இடிந்து விழுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
தலைக்கு மேல் காத்திருந்த மரணம்.. இடிந்து விழுந்த கட்டடம்.. நொடியில் உயிர்தப்பிய சிறுவர்கள் - வீடியோ
Published on

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் சதார் பஜார் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்று நேற்றைய தினம் இடிந்து பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது. கட்டடம் இடிந்தபோது அவ்வழியாக வந்த இரண்டு சிறுவர்கள் நொடியில் உயிர் தப்பிய பரபரப்பூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

சதார் பஜாரில் ஜைன சமூக அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் 100 முதல் 150 வருட பழமையான அந்த கட்டடம் ஏற்கனவே சிதிலமடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 6-7 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் அந்த கட்டடம் உள்ள நடைபாதை வழியாக நடந்து வந்தனர்.

அவர்கள் கடந்து சென்ற அடுத்த நொடியே கட்டடம் இடிந்து விழுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிரிதப்பும் இந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com