search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Construction workers"

    • கூட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளா் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
    • வளா்மதி பேருந்து நிலையம் அருகில் ஏஐசிசிடியூ., முன்னணி ஊழியா்கள் கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூா் மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ஏஐசிசிடியூ., தொழிற்சங்கத்தின் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை) அரசியல் தலைமை குழு உறுப்பினா் சங்கா் அலுவலகத்தை திறந்து வைத்தாா்.

    இதைத்தொடா்ந்து வளா்மதி பேருந்து நிலையம் அருகில் ஏஐசிசிடியூ., முன்னணி ஊழியா்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளா் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

    இதில் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் டைம் ரேட், பீஸ் ரேட் அடிப்படையில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளா்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனசாக அரசு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

    தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் தற்காலிக சுமைத்தூக்கும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்வதுடன், தற்காலிகப் பணியாளா்களுக்கு போனஸ், கருணைத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தமிழக அரசுக்கு தபால் கார்டு அனுப்பும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் எட்டயபுரம் தபால் அலுவலகம் முன்பு நடந்தது
    • புதுச்சேரி மாநிலம் போல் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷ ங்கள் எழுப்பப்பட்டது

    எட்டயபுரம்:

    தமிழ்நாடு ஏ. ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தீபாவளி போனஸ் மற்றும் ஓய்வூதியம் முறையாக வழங்க வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழக அரசுக்கு தபால் கார்டு அனுப்பும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் எட்டயபுரம் தபால் அலுவலகம் முன்பு நடந்தது.ஆர்பாட்டத்திற்கு கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சேது தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.1,200 ஓய்வூதிய திட்டத்தை அதிகப்படுத்தி வாரிய முடிவுபடி ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும், புதுச்சேரி மாநிலம் போல் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷ ங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி சமூக ஆர்வலர் முத்தரசு , ஏ.ஐ.டி.யு.சி. பொறுப்பாளர் முனியராஜ் , கட்டிட சங்கத் தொழிலாளர் ராஜா, முத்துபாண்டி, சத்தியசெல்வி , ஆனந்தவல்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளர்களின் குறைகளுக்கு தீர்வு காண மாவட்டம் தோறும் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
    • கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைய வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக ஆய்வு கூட்டம் மற்றும் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் கலந்துகொண்டு 50 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஒரு பயனாளிக்கு ரூ.2.05 லட்சம் விபத்து மரண உதவி தொகை, 11 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சம் இயற்கை மரண உதவி தொகை உள்ளிட்டவை அடங்கும்.

    இக்கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு பெற்ற கட்டுமான

    தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் கால தாமதமின்றி சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார். தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்து அக்குறைகளுக்கு தீர்வு காண மாவட்டம் தோறும் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

    கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது பதிவுப்பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவி தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்கள் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் தென்காசி தொழிலாளர் உதவி ஆணையர் முருகப்பி ரசன்னா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், அரசு அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு விருந்தினராக தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்க மாநில தலைவர் மகாலிங்கம் கலந்து கொண்டு பேசினார்.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சிங்கை:

    தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கத்தின் நெல்லை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் வி.கே.புரத்தில் நடந்தது. அமைப்புசாரா மற்றும் கட்டிட தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வைரமணி தலைமை தாங்கினார், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் பால் மாணிக்கம், கணேசன், கிளை தலைவர் சிவக்குமார், செயலாளர் அந்தோணி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் பேச்சியப்பன் வரவேற்று பேசினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்க மாநில தலைவர் மகாலிங்கம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பென்ஷன்தாரர்களுக்கு அரசு வழங்கி வரும் ஓய்வூதிய தொகையை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதிய தொகையை ஆயிரம் ரூபாய் உயர்த்துவது, அரசு நலத்திட்டங்களை தெரிந்து கொள்ளும் வகையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தெருமுனை பிரசார கூட்டம் நடத்துவது, தொழிலாளர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்குவது, அமைப்பு சாரா தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு அரசு வழங்கி வரும் கல்வித் தொகையை ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை வழங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில சட்ட ஆலோசகர் சக்திவேல், மாநில கவுரவ ஆலோசகர் குமாரசாமி, மாநில அமைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தன், நிர்வாக குழு உறுப்பினர்கள் சொர்ணம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • மதுரை மாவட்டத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால இலவச திறன் பயிற்சி வழங்கப்படுகிறது.
    • இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) க.மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி–ருப்பதாவது:-

    மதுரை தமிழ்நாடு கட்டு–மான கழகமானது தொழிலா–ளர் உதவி ஆணையர் அலு–வலகத்தின் மூலம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலா–ளர்களுக்கு மூன்று மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒருவார கால திறன் மேம் பாட்டு பயிற்சிகள் வழங்கப் பட உள்ளது.

    3 மாத கால திறன் பயிற் சிக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரி–யத்தில் உறுப்பினராக பதிவு செய்திருத்தல் வேண் டும். கல்வித்தகுதி 5-ம் வகுப்ப முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை இருத்தல் வேண்டும்.

    இந்த பயிற்சி 3 மாதம் நடைபெற உள்ளது. முதல் மாதம் தையூரில் அமைய–வுள்ள கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்திலும், 2 மாத காலம் நீவலூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் நடைபெற உள்ளது. கொத்தனார், பற்ற வைப்பர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மர–வேலை, கம்பி வளைப்பவர், தச்சுவேலை ஆகிய தொழில் புரிபவர்களுக்கு கட்டணம் ஏதுமில்லை.

    பயிற்சி கட்டணம், உணவு மற்றும் தங்குமிடம் இலவச–மாக வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்கள் அனைவருக் கும் எல் அண்டு டி கட்டு–மான திறன் பயிற்சி நிலை–யம் தனியார் நிறுவனத்தால் 100 சதவீத வேலை–வாய்ப்பு வழங்கப்படும்.

    ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தமிழ்நாடு கட்டுமான தொழி–லாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து மூன்று ஆண்டு உறுப்பி–னராக இருத்தல் வேண்டும். 18 வயதிற்கு மேல் இருப்ப–தோடு, தொழிலாளர்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந் திருக்க வேண்டும். இந்த பயிற்சி தையூரில் அமைய–வுள்ள கட்டுமான கழகத்தில் 7 நாட்கள் நடைபெறும்.

    கொத்தனார், பற்ற வைப் பர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மர வேலை, கம்பி வளைப்பவர், தச்சு–வேலை பயிற்சிகள் வழங்கப் படும். பயிற்சியாளர்களுக்கு தினந்தோறும் வேலையிழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய தினந்தோறும் ரூ.800 வழங் கப்படும். இந்த தொகையில் உணவிற்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும்.

    தமிழ்நாடு கட்டுமான கழகம் எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு கட்டுமான திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத் தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இந்த 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 15.8.2023 முதல் தொடங்கப்பட உள்ளது.

    இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்க மதுரை மாவட்டம் எல்லீஸ் நகர் வீட்டு வசதி வாரிய வளாகம், தொழிலாளர் உதவி ஆணை–யர் அலுவலகத்தை அணுகு–மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
    • ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சியையும் தமிழ்நாடு கட்டுமான கழகம் மற்றும் எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையமும் சேர்ந்து நடத்த உள்ளன.

    நெல்லை:

    கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) நா.முருகப்பிரசன்னா தெரிவித்துள்ளர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திறன் மேம்பாட்டு பயிற்சி

    தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

    தமிழ்நாடு கட்டுமான கழகமானது எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து மூன்று மாத கால திறன் பயிற்சியை நடத்த உள்ளது. பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வித்தகுதி 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்து இருக்கலாம். வயது 18-ல் இருந்து 40 ஆக இருத்தல் வேண்டும். கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சிக்கு கட்டணம் ஏதும் கிடையாது. உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். மேலும் பயிற்சி பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    மத்திய அரசு சான்றிதழ்

    இதேபோல் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சியையும் தமிழ்நாடு கட்டுமான கழகம் மற்றும் எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையமும் சேர்ந்து நடத்த உள்ளன. பயிற்சி காலம் 7 நாட்கள் ஆகும். தையூரில் அமையவுள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் பயிற்சி நடைபெறும். பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்கள் தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18-க்கு மேல் இருத்தல் வேண்டும். பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து 3 வருடம் உறுப்பினராக இருத்தல் வேண்டும். கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர் ஆகிய பயிற்சி வழங்கப்படும் தொழில்களாகும். பயிற்சியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய தினமும் ரூ.800 வழங்கப்படும்.

    தமிழ்நாடு கட்டுமான கழகம், எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

    இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பயிற்சிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி தொடங்குகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • 100 சதவீத வேலை வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோட்டீசுவரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 3 மாதம் மற்றும் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் கட்டுமானத் தொழிலாளர்கள் நலவா ரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து 3 ஆண்டு பதிவு மூப்பு பெற்ற தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தொழிலாளர்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்கள் 18 வயது மேற்பட்டவர்களாகவும், 40 வயது உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

    பயிற்சிக்கான கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும் பயிற்சி பெறும் அனை வருக்கும் எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிறுவனம் 100 சதவீத வேலை வாய்ப்பை உறுதி செய்துள்ளது. கொத்தனார், பற்றவைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துநர், மரவேலை, கம்பி வளைப்பவர், கார்பெண்டர், சாரம் கட்டுபவர் ஆகிய தொழிலா ளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

    3 மாத பயிற்சியானது முதல் ஒரு மாதம் தையூரில் உள்ள கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்திலும் அடுத்த 2 மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் நீவளுரில் அமைந்துள்ள எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் நடைபெறும். மேலும் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சி தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடைபெறும்.

    பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.800 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இந்த தொகையில் இருந்து உணவுக்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் நலவாரிய அட்டை, கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட நகல்களுடன் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து மைதானம் செல்லும் வழி, தோட்டக்கலை துறை அலுவலகம் அருகில், காஞ்சிரங்காலில் அமைந்துள்ள சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலக முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு மூன்று மாத காலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
    • மூன்று மாத காலம் பயிற்சி முதல் ஒரு மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் தையூரில் அமையவுள்ள கட்டுமானக் கழக பயிற்சி நிறுவனத்திலும் அடுத்த 2 மாதங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் நீவலூர் எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் நடக்கிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குலசேகரன் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு மூன்று மாத காலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மூன்று மாத காலம் பயிற்சி முதல் ஒரு மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் தையூரில் அமையவுள்ள கட்டுமானக் கழக பயிற்சி நிறுவனத்திலும் அடுத்த 2 மாதங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் நீவலூர் எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் நடக்கிறது.

    பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும். பயிற்சி பெறும் கட்டுமானத் தொழிலாளர்களின் கல்வித்தகுதி 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 மற்றும் ஐ.டி.ஐ. படிப்பு இருக்கலாம். வயது 18 லிருந்து 40-க்குள் இருக்க வேண்டும். கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துநர், மர வேலை, கம்பி வளைப்பவர், கார்பெண்டர், பார் பெண்டிங் மற்றும் ஸ்காபோல்டிங் ஆகிய தொழில்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கான கட்டணம், உணவு தங்குமிடம் ஆகியவை இலவசம். பயிற்சி பெறுபவர்கள் அனைவருக்கும் எல் அண்ட் டி கட்டுமானத் திறன் பயிற்சி நிலையத்தால் 100 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

    ஒரு வார திறன் மேம்பாட்டு பயிற்சி 7 நாட்கள் தமிழ்நாடு கட்டுமானக் கழகம் அமைய உள்ள தையூரில் நடைபெறும். பயிற்சி பெறும் கட்டுமானத் தொழிலாளர்கள் தமிழ் மொழியில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18க்கு மேல் இருக்க வேண்டும். பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து இருப்பதுடன் மூன்று ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துநர், மர வேலை, கம்பி வளைப்பவர், கார்பெண்டர், பார் பெண்டிங் மற்றும் ஸ்காபோல்டிங் ஆகிய பயிற்சியாளர்களுக்கு தினமும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய ரூ.800 வழங்கப்படும். இந்தத் தொகையில் உணவுக்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும்.

    தமிழ்நாடு கட்டுமானக் கழகம், எல் அண்ட் டி கட்டுமானத் திறன் பயிற்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து சான்றிதழ் வழங்கப்படும்.

    மேலும் மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். எனவே நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பதிவு பெற்ற விருப்பமுள்ள தொழிலாளர்கள் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் நெல்லை மாவட்டத்திற்கு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகம், எண்.39 ஆணையார்குளம் விரிவாக்கம், வசந்தம் அவென்யூ, திருமால்நகர், பெருமாள்புரம், திருநெல்வேலி-627007. தொலைபேசி எண்.0462 2555010 என்ற முகவரியிலும், தென்காசி மாவட்டத்திற்கு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்டம், எண்.275, பிரதான தெரு, கே.ஆர்.காலனி, தென்காசி என்ற முகவரியிலும் நேரில் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு உதவி ஆணையர் குலசேகரன் தெரிவித்துள்ளார்.

    • கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
    • மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது

    ஊட்டி,

    குன்னூரில் அகில இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது

    மாவட்ட செயலாளர் முருகன் மூன்னிலை வகித்தார் பொருளாளர் பிராகரன், துணை தலைவர் சிவச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு செயலாளர் ராயப்பன் கலந்து கொண்டார். குன்னூர் நகர தலைவர் சிவகுமார் வரவேற்றார். செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

    அனைத்து தொழிலா ளர்களுக்கும் தாமதம் இன்றி சங்கத்தில் பதிவு செய்யவும் அனைத்து தகுதியான உண்மையான தொழிலாளர்கள் மட்டும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும், அவர்கள் பாதிக்க ப்படும் போது உடனடியாக நிவாரணம் கிடைக்க அரசு நடவடிக்கை வேண்டும் என தீர்மானங்கள் நிறைவே ற்றபட்டது.

    மாவட்ட தலைவர் கார்த்திக், கட்டுமான தொழிலா ளர்கள் பணியின் போது பாதுகாப்பாகவும் , கவனமாகவும் விழிப்புணர்வுடனும் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    • மதுரையில் இன்று கட்டுமான, முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி நலவாரிய அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரை

    மதுரையில் இன்று கட்டுமான, முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தொழிலாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய சர்வர் செயல்பாட்டை தடையில்லாமல் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பணியிடத்தில் மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உதவி நிதி 2 ஆண்டுகளாக கிடைக்கப்பெறாத நிதி உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை மரணமடைந்த தொழிலாளர் குடும்பத்திற்கு 3 மாதத்திற்குள் உதவி நிதியை வழங்க வேண்டும்.

    முறைசார தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகைகள் ஒரு மாதத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆயுள் சான்று கொடுத்த தொழிலாளர்களுக்கு உடனடியாக பென்சன் தொகையை வழங்க வேண்டும். 60 வயது முடிந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும், 55 வயதில் பெண் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும்.

    தமிழக அரசு அறிவித்துள்ள வீட்டு வசதித் திட்டத்தை எளிமைப்படுத்தி தேவையில்லாத ஆவண ங்களை கேட்பதை கைவிட வேண்டும். திருமண உதவி பெறுவதற்கு தேவையில்லாத ஆவ ணங்கள் கோருவதை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமானம் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் மதுரை எல்லீஸ்நகரில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சுப்பையா தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. மாநகர் மாவட்டச் செயலாளர் தெய்வராஜ், தலைவர் கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் அரவிந்தன், தலைவர் கண்ணன், கட்டுமான தொழிலாளர் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், புறநகர் மாவட்டச் செயலாளர் மணிக்குமார், மாநில பொருளாளர் லூர்துரூபி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் பலர் கலந்து கொண்டு கோசமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்க திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆன்லைன் பதிவில் உள்ள குறைகளை சரிசெய்யவேண்டும். ரூ.3000 பென்சன் வழங்கவேண்டும். இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம், திருமணநிதி ரூ.50ஆயிரம் வழங்கவேண்டும். திண்டுக்கல் மாவட்ட நலவாரிய அலுவலகத்தில் காலிப்பணியிடங்களை பூர்த்திசெய்யவேண்டும்.

    மாவட்ட கண்காணிப்புகுழுவை உடனடியாக அமைத்து மாதம் ஒருமுறை கூட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் முருகேசன், தீத்தான், புஷ்பம், பாலசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கட்டுமான பொருட்களான தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • சட்டவிரோதமாக கொண்டு செல்லும் கனிமவளங்களை தடைசெய்ய கோரிக்கை

    வீ.கே.புதூர்:

    தென்காசியில் கட்டுமான பொருட்கள் தடையின்றி கிடைத்திட வழிவகை செய்யக் கோரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர் நல சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவர் மாதவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கட்டுமான பொருட்களான மணல், எம்.சாண்ட், ஜல்லி, குண்டு கற்கள் போன்ற பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வெளி மாநிலத்திற்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லும் கனிமவளங்களை தடைசெய்ய வேண்டும்,

    ஏற்கனவே செயல்பட்ட குவாரிகளை தொடர்ந்து இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×