என் மலர்
நீங்கள் தேடியது "தொழிலாளர்கள் மீட்பு"
- சுமார் 75 சதவீதத்திற்கு மேல் இந்த புதிய சுரங்கம் அமைக்கும் பணி முடிவு அடைந்தது.
- இந்த திட்டத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு-பகல் பாராமல் வேலை பார்த்து வருகிறார்கள்.
லாஸ் ஏஞ்சல்ஸ்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பூமிக்கு அடியில் 18 மீட்டர் அகலத்தில் கழிவுநீர் வெளியேற்றுவதற்காக ரூ.60 ஆயிரம் கோடியில் புதிதாக சுரங்கம் அமைத்து பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த திட்டத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு-பகல் பாராமல் வேலை பார்த்து வருகிறார்கள். சுமார் 75 சதவீதத்திற்கு மேல் இந்த புதிய சுரங்கம் அமைக்கும் பணி முடிவு அடைந்தது.
இந்தநிலையில் சுரங்கம் தோண்டுவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவு அடைந்ததால் கூடுதலாக தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு மும்முரமாக பணி நடந்து வந்தது. அப்போது அந்த சுரங்கம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 31 தொழிலாளர்கள் சிக்கியிருப்பது தெரிந்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சுரங்கத்தில் சிக்கிய 31 தொழிலாளர்களும் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
- செங்கல் சூளை மற்றும் மரம் அறுக்கும் ஆலையில் பணிபுரிந்த 5 குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனர்.
- தொடர்ந்து தொழிலக பாதுகாப்பு துணை இயக்குநர் மூலம் தொடர்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம், தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் சேலம் மாவட்ட ஆள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு காவல் துறை, சைல்டு லைன் கள அலுவலர்கள், காவல் ஆய்வாளர், வட்டாட்சியர், கிராமிய பெண்கள் மேம்பாட்டு சமூக ஆர்வலர் ஆகியோருடன் தொழிலாளர் துறை சார்ந்த தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டிணம் தைலானூர் வலசையூர், சின்ன வீராணம் மற்றும் குப்பனூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் கொத்தடிமை தொழிலாளர், குழந்தை தொழிலாளர், வளரிளம் பருவத் தொழிலாளர்கள் உள்ளனரா என்று அதிரடி ஆய்வு செய்தனர்.
மேலும் செங்கல் சூளை மற்றும் மரம் அறுக்கும் ஆலையில் பணிபுரிந்த 5 குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள்
கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனர். தொடர்ந்து தொழிலக பாதுகாப்பு துணை இயக்குநர் மூலம் தொடர்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆய்வின் போது அரிசி ஆலை உரிமையாளர்கள், செங்கல் சூலை மற்றும் மரம் அறுக்கும் ஆலை உரிமை யாளர்களிடம் கொத்தடிமை தொழிலாளர் மற்றும் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் எவரையும் தொழிற்கூடங்களில் பணியமர்த்த கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டது. நிர்வாகத்தினரிடம் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தி னர்களை பணிக்கு அமர்த்துவது குற்றமாகும். அவ்வாறு பணிக்கு அமர்த்தும் நிறுவன ங்களின் உரிமையாளர் மீது 6 மாத காலம் சிறை தண்டனை யும், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்ப டும் என்றும் எச்சரிக்கை செய்யப்ப ட்டது.
மேலும் குழந்தை களை பணி செய்ய அனுப்பி வைக்கும் பெற்றோர் மீதும் குற்ற நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என சேலம், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ண வேணி தெரி வித்துள்ளார்.
- கரும்பு தோட்டங்களில் பலர் ஆண்டுக்கணக்கில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்ததாக தாலுகா போலீசாருக்கு புகார் வந்தது.
- எங்களை போலவே இப்பகுதியில் கொத்தடிமைகளாக உள்ளவர்களை மீட்டு அவர்களது குடும்பத்துடன் சேர்க்கவேண்டும்.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள நெய்காரப்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு வெளிமாவட்டத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதேபோல் பெரியம்மாபட்டி, நெய்காரப்பட்டி, பெருமாள்புதூர் பகுதிகளில் உள்ள கரும்பு தோட்டங்களில் பலர் ஆண்டுகணக்கில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்ததாக தாலுகா போலீசாருக்கு புகார் வந்தது.
இதனைதொடர்ந்து அங்கு சென்ற போலீசார் விழுப்புரம் மாவட்டம் வனவனூரை சேர்ந்த சண்முகம் என்ற புரோக்கர் மூலம் ஆட்களை பிடித்துவந்து இங்கு வேலைக்கு வைத்தது தெரியவந்தது. சண்முகத்தின் கீழ் சங்கர், பிரசாந்த் ஆகியோர் ஏஜெண்டுகளாக இருந்துள்ளனர். அவர்கள் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களுக்கு சென்று வறுமையில் வாடும் ஏழை மக்களை குறிவைத்து அவர்களுக்கு 3 வேளை உணவு, நல்ல சம்பளம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி இதுபோன்று தோட்டங்கள் மற்றும் சூளைகளில் வேலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதில் பெண்களும் வேலையில் இடம்பெற்று வந்துள்ளனர். இதனையடுத்து கோட்டாட்சியர் அவர்களிடம் விசாரணை நடத்தி பெண்கள் உள்பட 30 பேரை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் இன்று சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பரதேசி பட பாணியில் கொத்தடிமைகளாக வேலை பார்த்தவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அங்கு பணியில் இருந்த செல்வி என்பவர் தெரிவிக்கையில்,
எனக்கு திருமணமாகி கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். 3 மகள்கள் உள்ளனர். அவர்களுக்காக நான் இங்கு வேலைக்கு வந்தேன். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இங்கு வந்த பிறகும் எனது ஊருக்கு செல்ல அனுமதி கிடைக்கவில்லை. எங்களைப்போல் ஏராளமானோர் இங்கு கொத்தடிமைகளாக வேலை பார்த்து வருகிறோம். குறைந்த உணவு, அதிக வேலை வாங்குவதால் பலருக்கு உடல்நிலை பாதிக்கப்படுகிறது.
இங்கிருந்து யாரேனும் தப்பித்து செல்ல நினைத்தால் அவர்களை கரும்பால் அடித்து தாக்குகின்றனர். இதனால் எங்களை போலவே இப்பகுதியில் கொத்தடிமைகளாக உள்ளவர்களை மீட்டு அவர்களது குடும்பத்துடன் சேர்க்கவேண்டும். எங்களுக்கு தொழில் தொடங்க அரசு ஏதேனும் உதவி செய்யவேண்டும் என்றார்.
மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களை காணலாம்.






