கட்டுமான தொழிலாளா்களுக்கு தீபாவளி போனசாக அரசு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்

கூட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளா் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.வளா்மதி பேருந்து நிலையம் அருகில் ஏஐசிசிடியூ., முன்னணி ஊழியா்கள் கூட்டம் நடைபெற்றது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

திருப்பூா் மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ஏஐசிசிடியூ., தொழிற்சங்கத்தின் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை) அரசியல் தலைமை குழு உறுப்பினா் சங்கா் அலுவலகத்தை திறந்து வைத்தாா்.

இதைத்தொடா்ந்து வளா்மதி பேருந்து நிலையம் அருகில் ஏஐசிசிடியூ., முன்னணி ஊழியா்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளா் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

இதில் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் டைம் ரேட், பீஸ் ரேட் அடிப்படையில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளா்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனசாக அரசு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் தற்காலிக சுமைத்தூக்கும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்வதுடன், தற்காலிகப் பணியாளா்களுக்கு போனஸ், கருணைத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com