search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    எட்டயபுரத்தில் கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    எட்டயபுரத்தில் கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • தமிழக அரசுக்கு தபால் கார்டு அனுப்பும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் எட்டயபுரம் தபால் அலுவலகம் முன்பு நடந்தது
    • புதுச்சேரி மாநிலம் போல் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷ ங்கள் எழுப்பப்பட்டது

    எட்டயபுரம்:

    தமிழ்நாடு ஏ. ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தீபாவளி போனஸ் மற்றும் ஓய்வூதியம் முறையாக வழங்க வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழக அரசுக்கு தபால் கார்டு அனுப்பும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் எட்டயபுரம் தபால் அலுவலகம் முன்பு நடந்தது.ஆர்பாட்டத்திற்கு கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சேது தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.1,200 ஓய்வூதிய திட்டத்தை அதிகப்படுத்தி வாரிய முடிவுபடி ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும், புதுச்சேரி மாநிலம் போல் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷ ங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி சமூக ஆர்வலர் முத்தரசு , ஏ.ஐ.டி.யு.சி. பொறுப்பாளர் முனியராஜ் , கட்டிட சங்கத் தொழிலாளர் ராஜா, முத்துபாண்டி, சத்தியசெல்வி , ஆனந்தவல்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×