search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "residence"

    • கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் 6,057 சதுரடி பரப்பில் 6 பணியாளர் குடியிருப்புகள் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
    • நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு தலைமை வகித்தார்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை பாதுகாத்திடும் வகையில் அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள், பொங்கல் கொடை, குடியிருப்புகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கொடை போன்ற பல்வேறு முனைப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அவர்களின் நலன் பேணப்பட்டு வருகிறது.

    2021–2022-ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கை அறிவிப்பில், "சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குச் சொந்தமான காலியிடத்தில் உபயதாரர் பங்களிப்போடு ரூபாய் 2 கோடி செலவில் பணியாளர் குடியிருப்புகளும், பக்தர்கள் தங்கும் விடுதியும் கட்டப்படும்" என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் 6,057 சதுரடி பரப்பில் 6 பணியாளர் குடியிருப்புகள் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இப்புதிய குடியிருப்பினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு தலைமை வகித்தார்.

    சென்னை, சிந்தாதிரி பேட்டையில் 3.73 ஏக்கர் பரப்பளவு கொண்ட மே தின பூங்கா விளையாட்டு மைதானத்தை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு உடற்பயிற்சி மற்றும் பொழுது போக்கிற்காக மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. சிந்தாதிரிபேட்டை மே தின பூங்கா அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் உள்ளூர் சமூகத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டு, பல்வேறு நவீன விளையாட்டு வசதிகளை வழங்குகிறது.

    இவ்விளையாட்டு மைதானத்தில் இரண்டு பூப்பந்து உள்விளையாட்டு அரங்கம், 100 பார்வையாளர்கள் அமர்வதற்கான இருக்கைகளுடன் கூடிய சறுக்கு வளையம், 50 முதல் 75 வரை பார்வையாளர்கள் அமர்வதற்கு ஏற்ற குத்துச்சண்டை வளையம், பொழுதுபோக்கு மற்றும் இருக்கைகளுடன் கூடிய பசுமை பகுதிகள், 6 வலை பந்தாட்ட மைதானம், அனைத்து வயதினருக்கான நடைபயிற்சி மற்றும் ஓடுதள பாதைகள், கிரிக்கெட் மற்றும் கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கான மைதானம் மற்றும் பயிற்சி நோக்கத்திற்காக 3 பயிற்சி வலைகள் ஆகியவை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர், கழிப்பறைகள் மற்றும் இதர அத்தியாவசிய வசதிகளை கொண்ட மைதானமாக அமையவுள்ளது.

    நிகழ்ச்சியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு , மத்திய சென்னை தயாநிதி மாறன் எம்.பி. மேயர் பிரியா, மாவட்ட செயலாளர் சிற்றரசு, பகுதி செயலாளர் மதன் மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • 384 குடியிருப்புகள் ரூ. 31.60 கோடி மதிப்பில் கட்டுமான பணிகள் முடிவு பெற்றுள்ளது.
    • அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை உரிய காலத்துக்குள் முடிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அய்யனார் கோவில் பகுதி வல்லத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டத்தின் கீழ் 384 குடியிருப்புகள் ரூ. 31.60 கோடி மதிப்பில் கட்டுமான பணிகள் முடிவு பெற்றுள்ளது.

    இதனை தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குனர் சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் இரண்டாவது திட்டம் பகுதியில் 969 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ. 149.32 கோடி மதிப்பில் வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகளை தரமானதாகவும் குறித்த காலத்திற்குள்ளும் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தி னார்.

    இந்த ஆய்வின்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் இளம்பரிதி, உதவி செயற்பொறியாளர்கள் யோகேஸ்வரன், உதவி பொறியாளர் கார்த்திக் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தாம்பரம் ரெயில்வே சுரங்கபாதையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது.
    • அதிக பட்சமாக நேற்று இரவு மேற்கு தாம்பரத்தில் 12 செ.மீ. மழை பதிவானது.

    தாம்பரம்:

    சென்னையில் கடந்த சில நாட்களாகவே இரவு மற்றும் காலை நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. சென்னையில் புரசைவாக்கம், வேப்பேரி, எழும்பூர், கோயம்பேடு, வடபழனி, பெரம்பூர், வியாசர்பாடி, மூலக்கடை உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு மழை பெய்தது.

    இதேபோன்று கிழக்கு கடற்கரை சாலையை யொட்டிய பகுதிகளிலும் மழை கொட்டியது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.

    நீலாங்கரை, திருவான்மியூர், அடையாறு, செம்மஞ்சேரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. குறிப்பாக செம்மஞ்சேரி பகுதியில் பலத்த மழை பெய்தது.

    இதனால் அப்பகுதிகளில் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது. செம்மஞ்சேரி பகுதியில் மட்டும் 9.2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    அதே நேரத்தில் தாம்பரம் புறநகர் பகுதிகளிலும், செங்குன்றம், ஆவடி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை கொட்டியது. அதிக பட்சமாக நேற்று இரவு மேற்கு தாம்பரத்தில் 12 செ.மீ. மழை பதிவானது.

    இதன் காரணமாக தாம்பரம் ரெயில்வே சுரங்கபாதையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக வாகன போக்கு வரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. சுரங்கப் பாதை மூடப்பட்டு மாற்று வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதன் காரணமாக சுமார் 2 கி.மீ. தூரம் வாகனங்கள் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கிழக்கு தாம்பரம், இரும்புலியூர், அருண்நகர், புதுப்பெருங்களத்தூர், முடிச்சூர், வரதராஜபுரம், செம்பாக்கம், காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளிலும் வெள்ளம் தேங்கியது. இதனால் மேற்கு தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகதிகளில் 1000 வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வெளியிடங்களுக்கும் வேலைக்கும் சென்ற மக்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர்.

    பலத்த மழை பெய்த போதிலும் இன்று காலையில் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கின. இதனால் மாணவ-மாணவிகள் மழை வெள்ளத்தை கடந்து பள்ளிகளுக்கு சென்றதையும் காண முடிந்தது. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட இந்த பகுதிகளில் மழைக் காலங்களில் இதுபோன்று தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகி வருவதாகவும் இதனால் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    கிழக்கு தாம்பரம் சுற்று வட்டார பகுதியில் தேங்கும் மழைநீர் அப்பகுதியில் உள்ள அருண்நகர் வழியாகவே அங்குள்ள ஏரிக்கு செல்லும். ஆனால் ஆக்கிரமிப்பு காரணமாக நீர்வழிப்பாதைகள் சுருங்கி ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை இன்று காலையிலும் பல இடங்களில் நீடித்தது. சில இடங்களில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இப்படி சென்னையில் பெய்த மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    மழை காரணமாக சாலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகளும் சிரமத்தை சந்தித்தனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களிலும் இரவு முழுவதும் மழை பெய்தது. காஞ்சிபுரம் கட்டப்பாக்கம் பகுதியில் பலத்த மழை பெய்தது. திருவள்ளூர் ஜமீன் கொரட்டூர் பகுதிகளிலும் இரவில் பெய்த மழை காலை வரையில் நீடித்தது.

    பூந்தமல்லி நகராட்சி ஒன்றாவது வார்டு அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே சாலையில் மழை நீருடன் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் கால்வாய்கள் நிரம்பி இருக்கும் நிலையில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து குளம் போல் தேங்கிகிறது. இதில் பள்ளி சிறுவர் சிறுமியர்கள் நடந்து செல்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக பெற்றோர்கள் அச்சம் தெரிவித்தனர். சுமார் 300 மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளி வளாகம் எதிரே நிலவிவரும் சுகாதார சீர்கேட்டை கருத்தில் கொண்டு பூந்த மல்லி நகராட்சி சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேங்கியிருக்கும் கழிவு நீர் அருகே அடுக்கி வைக்கப்பட்டுள்ள செங்கற்கள் மீது சிறுவர்கள் கால் நனையாமல் இருக்க ஆபத்தான முறையே தாவி செல்வதால் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழலும் உள்ளது. ஒவ்வொரு மழைக்கும் இந்த பகுதியில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் குளம் போல் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    சென்னை மற்றும் புற நகர் பகுதிகளிலும், திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பெய்துள்ள மழை அளவு விவரம் வருமாறு:-

    மேற்கு தாம்பரம்-12 செ.மீ. கட்டப்பாக்கம்-9.6 செ.மீ. மீனம்பாக்கம்-5 செ.மீ. நுங்கம்பாக்கம்-4.5 செ.மீ. திருத்தணி-5 செ.மீ. சோழவரம்-4 செ.மீ. திருவள்ளூர் திரூர்-5.4 செ.மீ. கிண்டி, செங்குன்றம், தாமரைப் பாக்கம் பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் இன்று காலை வெப்பம் தணிந்து 'ஜில்' என்ற காற்றும் வீசியது. வருகிற 28-ந் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • 100-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் பயமின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஊட்டி,

    ஊட்டியின் மையப்பகுதியில் உள்ள ஜெயில்ஹில் குடியிருப்பில் அரசு ஊழியர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அங்கு நகராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களாக துப்புரவு பணியில் ஈடுபடவில்லை என தெரிகிறது.

    இதனால் அங்கு உள்ள பாதையின் இருபுறமும் செடிகள் அடர்ந்து வளர்ந்து, புதர் மண்டி காட்சி அளிக்கிறது. எனவே அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் போக வேண்டி உள்ளது. இரவு நேரங்களில் புதர்களுக்குள் ஒளிந்திருக்கும் வனவிலங்குகள் அச்சுறுத்துகின்றன.

    ஊட்டி நகரத்தின் மைய பகுதியில் உள்ள ஜெயில் ஹில் பகுதி, பராமரிப்பின்றி புதர்காடுகளாக மாறி கிடப்பது அங்கு வசிக்கும் பொதுமக்களை வேதனைப்படுத்தி உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, ஜெயில்ஹில் பகுதியில் உள்ள சாலைகளில் மண்டிக்கிடக்கும் புதர்களை உடனடியாக வெட்டி அகற்றி, பொதுமக்கள் பயமின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தனியாா் பள்ளிகளில் சோ்ப்பதற்காக 25 சதவீத இலவச கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
    • குழந்தைகளை ஆரம்ப வகுப்புகளில் சோ்ப்பதற்காக பெற்றோா்கள் விண்ணப்பி த்திருந்தனா்.

    திருப்பூர் :

    தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் குழந்தைகளைச் சோ்ப்பதில் 1 கி.மீ.க்குள் குடியிருப்பு இல்லாததால், இட வாய்ப்பிருந்தும் குழந்தைகளை சோ்க்க முடியாமல் பெற்றோா்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

    ஏழை எளிய பெற்றோா் தங்கள் குழந்தைகளை தனியாா் பள்ளிகளில் சோ்ப்பதற்காக 25 சதவீத இலவச கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. அவிநாசி வட்டாரத்தில் உள்ள பல்வேறு தனியாா் பள்ளிகளில் இச்சட்டத்தின் கீழ் தங்களது குழந்தைகளை ஆரம்ப வகுப்புகளில் சோ்ப்பதற்காக பெற்றோா்கள் விண்ணப்பி த்திருந்தனா். இதில் தகுதியான விண்ண ப்பங்கள் தோ்வாகி அவரவா் கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தியும் வந்தது.

    இதைத்தொடா்ந்து தனியாா் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க குறுஞ்செய்தி வந்திருந்த தகுதியான குழந்தைகள், பெற்றோா்கள் பங்கேற்றனா். ஆனால் கூட்டத்தில் பங்கேற்ற கல்வித் துறை அலுவலா் கூறுகையில், 1 கிலோ மீட்டா் தொலைவுக்கு உள்பட்ட குழந்தைகள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் சோ்க்கைக்குத் தகுதியான வா்கள் என்றாா். இதனால் தகுதியானவா் என குறுஞ்செய்தி வந்தும் பல பெற்றோா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

    இதுகுறித்து பெற்றோ ா்கள் கூறியதாவது:- கடந்த ஆண்டு 3 முதல் 4 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளகுழந்தைகள் சோ்க்க ப்பட்டனா். தற்போது, விண்ணப்ப தேதி முடிவடைந்து, இனி அடுத்த ஆண்டுதான் விண்ணப்பிக்க இயலும் என்ற நிலையில் இப்போது இவ்வாறு கூறுகின்றனா். விண்ணப்பம் தோ்வாகி உள்ளதாக குறுஞ்செய்தி வந்தும் குழந்தைகளை சோ்க்க இயலாதது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.

    ஆகவே, தொலைவை 3 கிலோ மீட்டராக கல்வித் துறை தளா்த்த வேண்டும் .அல்லது 1 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள தனியாா் பள்ளிகளுக்கு தகுதியாகி தோ்வான விண்ணப்பதாரா்களை சோ்க்க பரிந்துரைக்க வேண்டும் என்றனா்.இதுகுறித்து பள்ளி நிா்வா கத்திடம் கேட்டபோது, 1 கிலோ மீட்டா் தொலைவுக்குள் உள்ளவா்களுக்கு மட்டுமே சோ்க்கை என கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், பள்ளியில் 25 சதவீதஇட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அதிகப்ப டியான குழந்தைகளை சோ்க்க இடம் உள்ளது. கல்வித் துறை அறிவுறுத்தலால் குழந்தைகளைச் சோ்க்க இயலவில்லை. கல்வித் துறை தளா்வு வழங்கினால் தோ்வு செய்யப்பட்ட குழந்தைகள் இச்சட்டத்தின்கீழ் சோ்க்கப்படுவா் என்றனா்.

    • திருப்பத்தூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்த ஐந்து அடி நீளபாம்பு பிடிபட்டது.
    • அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஆனந்த் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் வீட்டில் இருந்த சுமார் 5 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை உயிருடன் மீட்டு வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகத்தில்13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன.
    • பல கி.மீ., தூரத்துக்கு நடந்து வந்து உதவித்தொகை பெற்றுச்செல்கின்றனர்.

    உடுமலை :

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி, குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, ஆட்டுமலை உட்பட 13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன.அரசின் முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ், அங்கு வசிக்கும் மக்கள் பயனாளிகளாக பயன்பெற்று வருகின்றனர்.ஆனால் உதவித்தொகை பெறவும், ரேஷன் பொருட்களுக்காகவும், சமவெளிப்பகுதிக்கு வந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.உதாரணமாக தளிஞ்சி மலைவாழ் கிராம மக்கள், பல கி.மீ., தூரத்துக்கு நடந்து வந்து உதவித்தொகை பெற்றுச்செல்கின்றனர்.

    சின்னாறு செக்போஸ்ட் வரை நடை பயணமாக வந்து அங்கிருந்து, பஸ்சில் மானுப்பட்டி, உடுமலை உட்பட பகுதிகளுக்கு அப்பகுதி மக்கள் வந்து சென்று வந்தனர்.உதவித்தொகை உட்பட நலத்திட்டங்களை நேரடியாக தங்களது கிராமத்துக்கே கொண்டு வந்து வினியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க மலைவாழ் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • பேரவை கூட்டம் ஒன்றிய தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
    • நீர் நிலைகளில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்றிடமும், வீடும் வழங்க வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த எடையூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய 26-வது பேரவை கூட்டம் ஒன்றிய தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது.

    பேரவை கொடியை மாவட்ட குழு உறுப்பினர் குஞ்சம்மாள் ஏற்றினார். விவசாய தொழிலாளர்களின் தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான சீனிவாசராவ் படத்திற்கு விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் முருகையன் மாலை அணிவித்தார்.

    இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ., விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்த லைவர் தெட்சிணா மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.கூட்டத்தில் ஒன்றிய தலைவராக ராஜா, செயலாளராக சிவசந்திரன், பொருளாளராக வேலுக்கன்னு, துணை தலைவர்களாக குஞ்சம்மாள், பாலசுப்ரமணியன், ரவி, துணை செயலாளர்களாக தனிக்கொடி சரவணன், இந்திராணி ஆகியோரும் 35 பேர் கொண்ட ஒன்றிய குழுவும் தேர்வு செய்யப்பட்டனர்.

    கூட்டத்தில் நீர் நிலைகளில் குடியிருக்கும் மக்களை நீதிமன்றம் உத்தரவை காட்டி அப்புறப்படுத்தும் அரசின் எண்ணத்தை கைவிட வேண்டும். நீர் நிலைகளில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்றிடமும், வீடும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்தது.
    • வடிகாலில் புல்பூண்டுகள், குப்பைகளை அகற்றும் பணி.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி ஊராட்சி யின் முக்கிய வடிகால் வாய்க்காலில் பல இடங்களில் வாய்க்காலின் பெரும்ப குதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து தெருக்களை சுற்றி தேங்கி நிற்கும் நிலை இருந்து வருகிறது.

    தற்போது பலமாக காற்று வீசி வருவதாலும், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் சுத்தம் செய்யும் பணி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜ் மேற்பார்வையில் நடைபெற்றது.

    வடிகால் வாய்க்காலில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றவும், வடிகாலில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும் வடிகாலில் புல்பூண்டுகள் குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்றது. வடிகால் வாய்க்காலை சுத்தம் நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகத்திற்கு கிராம மக்கள் நன்றி பாராட்டினர்.

    • அதிக குளிர் காற்று வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • அலைகளின் சீற்றத்தால் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.

    சீர்காழி:

    மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றம் மற்றும் கனமழை பெய்து வருகிறது.

    அதிக குளிர் காற்று வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    கடல் சீற்றத்தின் காரணமாக கடலோர கிராமங்களான தொடுவாய், மடவாமேடு, உள்ளிட்ட கிராமங்களில்10 அடிக்கு மேல் கடல் அலைகளின் சீற்றத்தால் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.

    இதனால் அப்பகுதி மீனவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    கடல் நீர் புகுந்த தொடுவாய் கிராம மக்கள் அதே பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியிலும் புயல் பாதுகாப்பு மைய ங்களுக்கு தங்கியுள்ளனர்.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, முகாமில் தங்கி உள்ள மக்களை நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    300-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பால், பிரட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

    அவருடன் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக், இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியன் சார்பில் புதிதாக கட்டப்பட்டு உள்ள 4,644 குடியிருப்பு களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
    • 461 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும், சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு பணி ஆணைகளையும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

    நாமக்கல்:

    அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் அடிப்படையில் ரூ.405 கோடி செலவில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியன் சார்பில் புதிதாக கட்டப்பட்டு உள்ள 4,644 குடியிருப்பு களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

    இதை அடுத்து 4500 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும் சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 105 தொகுதிகளில் வசிக்கும் 11,300 பயனாளிகளுக்கு தனி வீடுகள் கட்டுவதற்கு தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.237.3 கோடி மதிப்பிலான பணி ஆணைகளும் வழங்கப்பட்டன.

    இதை ஒட்டி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 461 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும், சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு பணி ஆணைகளையும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். இதில், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, மாவட்ட வருவாய் அதிகாரி மணிமேகலை, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு அரசு குடிசைமாற்று வாரியத்தால் அமைக்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் 1200 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
    • 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசிக்கிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி துணைமேயர் பாலசுப்பிர மணியம், அரசு போக் குவர த்துக்கழக மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட வாவிபாளையம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுகுடிசைமாற்று வாரியத்தால் அமைக்கப்ப ட்ட குடியிருப்பு பகுதியில் 1200 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசிக்கிறார்கள். நான் இப்பகுதிக்கு ஆய்வுக்கு சென்றபோது, போதிய போக்குவரத்துவசதியின்றி மிகவும் சிரமப்படுவதாக, இக்குடியிருப்பில் வசிக்கின்ற மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் தெரிவித்தனர். எனவே, இங்கு வசிக்கும் பொது மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, குடிசைமாற்று வாரியம் குடியிருப்பு பகுதியில் அரசு பேருந்து நின்று செல்லும் வகையில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்தி தர வேண்டும்.

    மேலும், வாவிபாளையம் வரை வந்து செல்லும் அரசு பேருந்து எண் 11சி, 46,55, 11 மற்றும் கணக்கம்பாளையம் வரை வந்து செல்லும் பேருந்து எண் 43 ஆகியவற்றின் வழித்தடத்தை மேற்கண்ட குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்லும் வகையில் நீட்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளார்.

    ×