என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kotagiri"
- பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சா்வ சாதாரணமாக உலவிவருகின்றன.
- கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரவேணு:
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. அவை உணவு, தண்ணீா் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியேறி பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சா்வ சாதாரணமாக உலவிவருகின்றன.
இந்நிலையில் கோத்தகிரி அருகே கேசலாடா கிராமத்தில் ஒரு கரடி நேற்று புகுந்தது. அங்கு அங்கு உள்ள பகுதிகளில் சுற்றி திரிந்தது. இதனால் அங்கு வசிக்கும் கிராம மக்கள் அச்சம் அடைந்தனா். சேசலாடா குடியிருப்புப் பகுதியில் நீண்ட நேரமாக சுற்றித் திரிந்த கரடி, பின்னா் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்கு சென்று விட்டது.
எனவே அசம்பாவிதம் நடக்கும் முன்பாக இந்தக் கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனா்.
- சாலை, குடிநீர் உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.
- ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆகியவற்றை திரும்ப ஒப்படைப்போம்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கூக்கல்தொரை ஊராட்சியில் உள்ளது ஜீவா நகர். இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் சாலை, குடிநீர் உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இந்த பகுதியானது வனத்தையொட்டி இருப்பதால் வனவிலங்குகள் நடமாட்டமும் உள்ளது. இரவு நேரங்களில் தெரு விளக்குகள் இல்லாதால், வனவிலங்குகள் வருவது தெரியாது. இதனால் சில சமயங்களில் வனவிலங்குகள் தாக்கும் சம்பவமும் நிகழ்கிறது.
தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு, பொதுமக்கள் ஊர் தலைவர் அய்யப்பன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர். ஆனால் மனு அளித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி கேட்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆகியவற்றை திரும்ப ஒப்படைக்க போவதாகவும், இது தொடர்பாக முதல்-அமைச்சரிடம் முறையிட உள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரியை அடுத்த ஒன்னட்டி பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மரம் ஏற்றிய லாரி ஒன்று புறப்பட்டது. லாரி ஒன்னட்டியை அடுத்த எஸ்.கைகாட்டி 2-வது வளைவில் திரும்ப முயன்ற போது அதிக பாரத்தின் காரணமாக லாரியின் வலது பக்க பலகைகள் உடைந்தன. இதனால் லாரியில் இருந்த மரங்கள் அனைத்தும் சாலையில் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் வாகனங்கள் எதுவும் வராததால் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. சாலையில் மரங்கள் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- விவசாயிகள் அனைவரும் வங்கி கடன் பெற்று பயன்பெற வேண்டும்
- கிசான் கடன் அட்டை பெறாத விவசாயிகள் கிசான் அடையாள அட்டை பெற்று பயன் பெற வேண்டும்,
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகளுக்கான கடன் அட்டை முகாம் நடந்தது. முகாமில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். இம் முகாமினை முழுமையாக பயன்படுத்தி தகுதியுள்ள விவசாயிகள் அனைவரும் வங்கி கடன் பெற்று பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா கோத்தகிரி தோட்டக்கலை துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் ஆவின் மருத்துவர் மற்றும் கால்நடை மருத்துவர் கோத்தகிரி சார்ந்தோர் கலந்து கொண்டனர். தங்கள் துறையில் கிசான் கடன் அட்டை மூலம் கால்நடைகளுக்கான கடன் பெறுவது பற்றி எடுத்துரைத்தனர். இம்முகாமில் கோத்தகிரி வட்டாரத்தைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 175 விவசாயிகள் கடன் அட்டை பேருக்காக பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்து உள்ளனர். மேலும் கிசான் கடன் அட்டை பெறாத விவசாயிகள் கிசான் அடையாள அட்டை பெற்று பயன் பெற வேண்டும், அதற்கான விண்ணப்பங்களை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
அரவேணு,
ஆதி தமிழர் கட்சி சார்பில், கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி முன்பு ஆதி தமிழர் தூய்மை பணியாளர் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஐக்கையன் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார். இதில் இதில்100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் வெளிப்பகுதியில் தூய்மை பணியாளர்களும் பங்கு பெற்றனர்
இதில் ஆதி தமிழர் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி மாவட்ட செயலாளராக ரைஸ் முகமது, கோத்தகிரி கிளை தலைவராக கார்த்திக், துணை மாவட்ட செயலாளராக நந்தகுமார், கோத்தகிரி ஒன்றிய செயலாளராக சத்தியமூர்த்தி, கிருஷ்ணா புதூர் கிளை செயலாளராக ஆறுமுகம்,எச்எப்சி நகர் கிளை செயலாளராக மாணிக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- யானை, காட்டு மாடுகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகின்றன.
- தீப்பந்தங்களை காட்டி கிராம மக்கள் கரடியை வனத்திற்குள் விரட்டினர்
அரவேணு
கோத்தகிரி பகுதியில் தற்போது வனவி லங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.குறிப்பாக கரடிகள், சிறுத்தை, யானை, காட்டு மாடுகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகின்றன.
நேற்று விவசாயி ஒருவரை கரடி தாக்கி படுகாயப்படுத்தியது. கோத்தகிரி அருகே உள்ள அரக்கோடு மல்லி க்கொப்பை என்ற இடத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 34). விவசாயி. இவர் கிராமத்துக்கு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதர்மறைவில் மறைந்திருந்த ஒரு கரடி, பிரபு மீது ஆக்ரோஷமாக பாய்ந்தது. பிரபுவை கரடி கடித்து குதறியது.
இதில் பிரபு படுகாயம் அடைந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்க த்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் கரடி அங்கிருந்து ஓடியது. பிரபுவை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரபுவை தாக்கிய கரடி அந்த பகுதியில் சுற்றித்திரிந்தது.பொதுமக்கள் தீப்பந்த ங்களை காட்டி விரட்டினர் இதையடுத்து கரடி அங்கிருந்து ஓடி மறைந்தது. கிராமத்துக்குள் திரியும் அந்த கரடியை கூண்டு வைத்து பிடித்து காட்டு ப்பகுதியில் விட வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர். காயம் அடைந்த விவசாயி பிரபுவுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ௩ குழந்தைகள் உ ள்ளனர்.
- பெரிய சோலை வனப்பகுதியை இங்கிலாந்து அரசு பசுமை மாறா காடென அங்கீகரித்துள்ளது.
- சதுப்பு நிலப் பகுதி ஆண்டுதோறும் பெய்யும் மழை நீரை சேமித்து வெளியேற்றும் தன்மை கொண்டதாகும்.
ஊட்டி:
உலக அளவில் பசுமை மாறா காடுகள் வரிசையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய சோலை வனப்பகுதியை இங்கிலாந்து அரசு பசுமை மாறா காடென அங்கீகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் தமிழகத்தில் வனப்பகுதி நிறைந்த சுற்றுச்சூழல் பசுமை கொண்ட மாவட்ட மாகும். கோத்தகிரி நகர் பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதியில் பாதுகாக்க ப்பட்ட வனப் பகுதியாக அறிவித்து வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு அரியவகை தாவரங்கள், பறவைகள், கருஞ்சிறுத்தைகள், வரிப்புலி, கேழையாடு, மலபார் அணில்கள், காட்டு மாடுகள், மற்றும் ஊர்வன உயிரினங்கள் வண்ண த்துப்பூச்சி இனங்கள் என வாழ்கின்ற வன உயிரின உய்விடமாகும். இங்குள்ள சதுப்பு நிலப் பகுதி ஆண்டுதோறும் பெய்யும் மழை நீரை சேமித்து வெளியேற்றும் தன்மை கொண்டதாகும்.
இதனால் கோத்தகிரி சுற்றுப்பகுதிகள் தொடங்கி கோவை, ஈரோடு போன்ற சமவெளி பகுதிகளுக்கு தண்ணீரை வழங்கும் நீராதாரமாக விளங்குகிறது.
பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த வனப்பகுதி இந்திய அளவில் பார்வையை பெற்றுள்ளது. மேலும் இந்த வனப் பகுதியில் கல்லூரி மாணவ -மாணவிகள் சூழல் சுற்றுலா படிப்புகள் ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் இயற்கை ஆர்வலர்களுக்கும், சூழலியலாளர்களுக்கும் பயனுள்ள பகுதியாக இந்த வனப்பகுதி அமைந்துள்ளது. தமிழக அரசு கடந்த நிதியாண்டில் சூழல் சுற்றுலா திட்டம் என்னும் பெயரில் இதனை மேம்படுத்த தமிழக அரசு ரூ. 4.6 கோடி நிதி ஒதுக்கி அதற்கான கட்டமைப்பு பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது இங்குள்ள வன உயிரினங்களுக்கும், இயற்கை நீரோடைகளுக்கும் எவ்வித பாதிப்பும் வராத வண்ணம் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் கவுதம், கோட்டாட்சியர் பூசணக்குமார், மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி வெங்கடேஷ், கோத்தகிரி பேரூராட்சி செயலாளர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித், வருவாய் வட்டாட்சியர் காயத்திரி, கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சி சுந்தரம் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் வனத்துறை ஊழியர்களும் பங்கேற்றனர். நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்களில் கோத்தகிரி பகுதியில் உள்ள லாங்வுட் என்ற பெரிய சோலை தமிழக அளவில் தனி கவனம் பெற்றுள்ளது.
- கல்லூரி சுற்றிலும் வனப்பகுதிகள் சூழ்ந்துள்ளது.
- கல்லூரி மாணவர்கள் தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சக்தி மலை உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோவிலும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியும் அமைந்துள்ளது. இதை சுற்றிலும் வனப்பகுதிகள் சூழ்ந்துள்ளது. இங்கு திடீரென நேற்று காட்டுத் தீ பரவியது. இதனையடுத்து கல்லூரியில் அமர்ந்திருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் புகை வருவதை கண்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது காட்டுக்குள் தீ பரவிக் கொண்டிருந்தது. உடனடியாக கல்லூரி மாணவர்கள் அனைவரும் தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கோத்தகிரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து மாணவர்களுடன் சேர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து காட்டுத் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு வந்தது
- வேகத்தடை பணிகள் 3 மாதங்களுக்கு மேல் நிறைவு செய்யப்படாமல் இருந்து வந்தது
கோத்தகிரி,
கோத்தகிரி மேல்தட்டப்பள்ளம் பகுதியில் அமைக்கப்பட்ட வேகத்தடை பணிகள் 3 மாதங்களுக்கு மேல் நிறைவு செய்யப்படாமல் இருந்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்த செய்தி கடந்த 30-ந் தேதி அன்று மாலை மலரில் வெளியானது. இதனையடுத்து தட்டப்பள்ளம் பகுதியில் போடப்பட்ட வேகத்தடைக்கான பணி முழுவதுமாக முடிக்கபட்டு வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் வாகன ஓட்டிகள் மாலை மலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
- ராம்சந்த் பகுதியில் இருந்து நூலகம் செல்லும் சாலை உள்ளது.
- இந்த குழிக்குள் விழும் அபாயம் உள்ளது.
கோத்தகிரி,
கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் இருந்து நூலகம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை அதிகளவில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.
இந்த சாலையின் ஒரு பகுதியில் குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான குழி ஒன்று உள்ளது. இந்த குழி பல மாதங்களாக மூடப்படாமலேயே உள்ளது. இரவு நேரங்களில் இந்த சாலையில் வரும் வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும் இது போன்ற குழி அந்த பகுதியில் இருப்பதே தெரியாமல் உள்ளது.
இதனால் யாரேனும் இந்த குழிக்குள் விழும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வெண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.