என் மலர்
உள்ளூர் செய்திகள்

VIDEO: நீலகிரியில் குடியிருப்பு பகுதிக்குள் குட்டிகளுடன் சுற்றிய புலி - பொதுமக்கள் அச்சம்
- உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் உலா வருகின்றன.
- தேயிலை தோட்டத்திலிருந்து, சாலைக்கு எகிறி குதித்த தாய் புலியும், பின்னால் குட்டிகளும் சென்றன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் உலாவருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
இந்நிலையில் வனத்தில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய ஒரு புலி கோத்தகிரி அடுத்த டி.மணிஹட்டி கிராமத்துக்கு வந்தது. பின்னர் அவை அங்குள்ள சாலையில் சர்வ சாதாரணமாக நடந்து சென்றது. சாலையில் சிறிது நேரம் சுற்றி திரிந்த புலி பின்னர் குட்டிகளுடன் தேயிலை தோட்டத்திற்குள் சென்று விட்டது.
கிராமத்தில் குட்டிகளுடன் புலியின் நடமாட்டம் அங்கு பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து குட்டிகளுடன் உலாவரும் புலியை வனத்துறையினர் கண்காணித்து அடர்வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






