search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pepole"

    • 70 ஜோடிகளுக்கு தி.மு.க. சார்பில் திருமணம் நடைபெற உள்ளது.
    • அரசின் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவி குழு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    கோவை,

    கோவை சின்னியம்பாளையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநா–ளையொட்டி 70 ஜோடிகளுக்கு தி.மு.க. சார்பில் திருமணம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

    இதனை–யொட்டி திருமண விழா நடைபெறும் இடத்தில், நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதோடு, ஒருங்கிணைந்த தி.மு.க. சார்பில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்து பரிசுகளை வழங்குகிறார். இதனைத் தொடர்ந்து வ .உ. சி. மைதானத்தில் அரசின் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவி குழு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    மாலையில் கொடிசியாவில் நடைபெறும் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் 2ஆயிரம் தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிளிகளை வழங்கி விழா பேருரையாற்ற உள்ளார்.

    கோவையில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகளில் மின் இணைப்பு துண்டிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டு சுட்டிகாட்டிய இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் செங்கல் உற்பத்தியை தொடங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது.

    வருவாய்த்துறை ஆவணங்கள் சரியாக இருந்தால் 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும். கோைட காலமான ஏப்ரல், மே, மாதங்களில் மின் தேவையை பூர்த்தி செய்ய 4,200 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டுள்ளது.

    இதற்காக டெண்டர் கோரப்பட்டு இது செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மின் விநியோகத்தில் எந்த வித பாதிப்பும் இருக்காது.

    6,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய சோலார் பூங்காவுக்காக டெண்டர் கோரபட்டுள்ளது. இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை 99.7 சதவீதம் இணைக்கப்பட்டு உள்ளது. இன்னும் 0.3 சதவீதம் தான் இணைக்க வேண்டியது உள்ளது. இன்னும் இரு தினங்களில் அந்த பணிகள் நிறைவடையும்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு தொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் பழ–னிசாமி விமர்சித்துள்ளார்.

    அ.தி.மு.க.வுக்கு அவர்கள் நினைத்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. அந்த விரக்தியில் இது போன்ற கருத்துக்களை கூறுகின்றனர்.

    ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வெற்றி பயணம் என்பது வரக்கூடிய 2024 மக்களவை தேர்தலுக்கான தொடக்கம்.

    40 பாராளுமன்ற தொகுதியிலும், முதல்-அமைச்சரின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள்.

    சட்டசபை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் இரட்ைட இலை சின்னத்தில் தான் அ.தி.மு.க போட்டியிட்டது. அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி அவ்வளவு தான். மக்களுக்கு நன்மை செய்ய கூடிய இயக்கமாக கட்சியை வழிநடத்த வேண்டும் என்ற சூழல் அ.தி.மு.கவிடம் இல்லை.

    கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக அ.தி.மு.க.வினர் கருத்து தெரிவிக்கவில்லை. அ.தி.மு.க.வை பொறுத்தவரை மக்களை பற்றிய கவலை இல்லை. அவர்களின் தேவை யார் டெல்லியில் போட்டி போட்டு அடிமையாக இருப்பது என்பது தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராம்சந்த் பகுதியில் இருந்து நூலகம் செல்லும் சாலை உள்ளது.
    • இந்த குழிக்குள் விழும் அபாயம் உள்ளது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் இருந்து நூலகம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை அதிகளவில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.

    இந்த சாலையின் ஒரு பகுதியில் குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான குழி ஒன்று உள்ளது. இந்த குழி பல மாதங்களாக மூடப்படாமலேயே உள்ளது. இரவு நேரங்களில் இந்த சாலையில் வரும் வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும் இது போன்ற குழி அந்த பகுதியில் இருப்பதே தெரியாமல் உள்ளது.

    இதனால் யாரேனும் இந்த குழிக்குள் விழும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வெண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×