search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Artist"

    • அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்தால் பல லட்சக்கணக்கானவர்கள் நிவாரண உதவிகளை பெற்றுள்ளனர்.
    • கணவரை இழந்த திவ்யாவுக்கு மாநகராட்சியில் தற்காலிக பணி ஆணை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தொ.மு.ச.பேரவையின் உட்பிரிவுகளின் ஒன்றான , தமிழ்நாடு மோட்டார் வாகன முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர், ஓட்டுநர் விஜய் என்ற இளைஞர் அண்மையில் சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில், அவரது மனைவி திவ்யாவிடம் அரசின் உதவித்தொகை ரூ.2 லட்சத்தை தொ.மு.ச. பேர வையின் அகில இந்திய பொதுச்செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் வழங்கினார்.தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது கணவரை இழந்த திவ்யாவுக்கு மாநகராட்சியில் தற்காலிக பணி வழங்கும் வகையில், மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் பணி ஆணையையும் வழங்கினார்.

    இது குறித்து தொ.மு.ச. பேரவையின் அகில இந்திய பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி. அளித்த பேட்டியில்:-

    கருணாநிதியால் உருவாக்கப்பட்ட அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்தால் பல லட்சக்கணக்கானவர்கள் நிவாரண உதவிகளை பெற்றுள்ளனர். நல வாரியத்தை தொடக்கி தொழிலாளர்களின் குடும்பங்களை காத்தவர் கருணாநிதி என்றார்.

    இந்நிகழ்வில் கரந்தை பகுதி தி.மு.க செயலாளர் கார்த்திகேயன், தொ.மு.ச.மா வட்ட கவுன்சில் செயலாளர் சேவியர், உறுப்பினர் தியாகராஜன், மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் விஜயகுமார், நிர்வாகிகள் சாக்ரட்டீஸ், லாரன்ஸ், காதர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
    • கலை ஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் விவரங்களை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    குமாரபாளையம்:

    குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. மாவட்ட வாரியாக இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணியில் முழுமையாக ஈடு படுத்த அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்கான பயிற்சி முகாம் குமாரபாளை யம் தனியார் கல்லூரியில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பங்கேற்ற னர். இவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் இதற் கான பயிற்சி வழங்கினர். இதில் குமாரபாளையம், பள்ளிபாளையத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

    மாதம் ரூ.1000 வழங்கப்ப

    டும் கலைஞர் மகளிர் உரி

    மைத் திட்டம் செய லாக்கம் தொடர்பாக சில நாட்க ளுக்கு முன்பு முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கலை ஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் விவரங்களை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கிடும் திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
    • தங்கள் பகுதியில் உள்ள அனைத்து வட்ட அலுவலகங்களிலும் அப்பகுதியை சார்ந்த பொது மக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை நேரில் கேட்டறிந்தும் தெளிவு படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கிடும் திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

    அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும் இடங்கள், நாட்கள் மற்றும் மேல் விவரங்கள் ஏதேனும் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்திடும் பொருட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுப்பாட்டு அறை எண்.120 தொலைபேசி எண். 0427-2452202, வாட்ஸ் அப் எண் 88254 73639 ஆகும்.

    மேலும் வட்டாட்சியர் அலுவலகங்களை பொறுத்தவரை சேலம் - 0427-2452121, சேலம் மேற்கு- 0427-2335611, சேலம் தெற்கு -0427-2271600, ஏற்காடு- 04281-222267, வாழப்பாடி- 04292-223000, பெத்தநாயக்கன் பாளையம் - 04282-221704, ஆத்தூர் - 04282-240704, தலைவாசல் -04282-290907, கெங்கவல்லி - 04282-232300, ஓமலூர் - 04290-220224, காடையாம்பட்டி - 04290-243569, மேட்டூர் - 04298-244050, எடப்பாடி- 04283-222227 மற்றும் சங்ககிரி - 04283-240545 ஆகிய வட்டாட்சியர் அலுவ லகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகிறது.

    மேலும், தங்கள் பகுதியில் உள்ள அனைத்து வட்ட அலுவலகங்களிலும் அப்பகுதியை சார்ந்த பொது மக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை நேரில் கேட்டறிந்தும் தெளிவு படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • காரைக்குடி தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நடந்தது.
    • கூட்டுறவுத்துறை அமைச்சர், முன்னாள் அமைச்சர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பொதுக்கூட்டம் காரைக்குடி 5 விளக்கு அருகே நடைபெற்றது. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் தொண் டரணி அமைப்பா ளர் ஹேம லதா செந்தில் வரவேற்புரை நிகழ்த்தினார். காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்து துரை, நகர செயலாளர் குண சேகரன், மகளிரணி நிர்வாகிகள் குழந்தை தெர சாள், திவ்யா சக்தி, ராஜேஸ் வரி சேகர், சங்கீதா செல்லப் பன், மஞ்சரி லெட்சுமணன் முன்னிலை வகித்தனர்.

    கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன் சிறப்புரையாற்றினர். முனை வர் எழிலரசி, தலைமை பேச்சாளர் புவியரசி ஆகி யோர் பெண்கள் முன் னேற்றத்திற்கு கலைஞர் ஆற்றிய பணிகள் குறித்து பேசினர்.

    இதில் மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கை மாறன், ஜோன்ஸ் ரூசோ, மணிமுத்து, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், மானா மதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி உள்பட ஒன்றிய, நகர, பேரூர் கிளை செயலாளர்கள், மகளிரணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் மணி மேகலை நன்றி கூறினார்.

    • டிஜிட்டல் யுகத்தில் கலைஞர் நூலகம் அமைப்பது பயனற்ற செயல் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
    • எடப்பாடி பழனிசாமி, மதுரை மாவட்ட மக்களுக்கு பல்வேறு வரலாற்று திட்டங்களை செயல்படுத்தி கொடுத்துள்ளார்.

    மதுரை

    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரை மூன்றுமாவடியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசும்போது, கடந்த 10 ஆண்டுகளில் மதுரையில் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாக உள்ளது. அவர் சொன்னதை யாரும் நம்ப மாட்டார்கள்.

    முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதுரை மாவட்ட மக்களுக்கு பல்வேறு வரலாற்று திட்டங்களை செயல்படுத்தி கொடுத்துள்ளார். தென் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் உருவாக்கி கொடுத்தார். இதற்காக 223 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து அங்கு ரூ. 21 கோடி செலவில் சாலை மற்றும் பல்வேறு பணிகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து எய்ம்ஸ் கட்டிட பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் ரூ.1296 கோடி மதிப்பில் முல்லை பெரியார் லோயர் கேம் வழியாக கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதேபோல் ரூ. 30 கோடி மதிப்பில் மதுரை மாவட்ட கலெக்டர் கூடுதல் கட்டிடத்தை உருவாக்கி கொடுத்தார்.

    மக்கள் பிரதிநிதியாக உள்ளவர்கள் உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். அரசியல் உள்நோக்கத்தோடு இருக்கக்கூடாது என்பதை நிதி அமைச்சர் நன்கு அறிவார். அரசு பொறுப்பில் உள்ளவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கான திட்டங்கள் செய்ய வேண்டும். தற்போதுதான் மதுரை மாநகராட்சிக்கு மாஸ்டர் பிளான் என்று கூறி உள்ளீர்கள். இதுவரை கடந்த 18 மாதங்களாக தி.மு.க. ஆட்சியில் மதுரை மாவட்ட வளர்ச்சிக்கு எந்த திட்டங்கள் செய்யப்படுத்தப்பட்டது என்று பட்டியலிட்டு கூற முடியுமா?

    மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம்தான் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மூலம் நூலகத்தை தங்கள் இல்லம் தேடி வரவழைக்கும் வேளையில் மக்கள் நூலகங்களை நாடுவார்கள் என்ற மாய தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது.

    வாய் சொல் வீராக இருப்பது வளர்ச்சியைத் தந்துவிடாது. மதுரை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் தமிழகத்திற்கு நிதியை ஒதுக்கும் மந்திரியாக உள்ளீர்கள், மதுரை மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக கடந்த 18 மாதங்களில் என்னென்ன சிறப்பு நிதியை கொண்டு வந்தீர்கள்? என்று விளக்கம் சொன்னீர்கள் என்றால் மக்கள் மட்டுமல்லாது நானும் மகிழ்ச்சி அடைவேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சிவசேனா தலைவர் மறைந்த பால் தாக்கரேவின் பிறந்தநாளையொட்டி 33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் உருவாக்கப்பட்ட அவரது முகம் பலரையும் கவர்ந்துள்ளது. #Balasaheb #BalThackeray #ShivSena
    மும்பை:

    சிவசேனாவின் நிறுவனத் தலைவரான பால் தாக்கரே 23-1-1926 அன்று பிறந்து கடந்த 17-11-2012 அன்று காலமானார். இன்று அவரது பிறந்தநாளை அக்கட்சியினர் மிக எழுச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

    மும்பையில் உள்ள மேயர் ஹவுஸ் இல்லத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என பால் தாக்கரேவின் மகனான உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர அரசை நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தார்.

    அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில்  மேயர் ஹவுஸ் இல்லத்தின் சொத்து பத்திரங்களை மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று உத்தவ் தாக்கரேவிடம் ஒப்படைத்தார்.



    இதற்கிடையில், மும்பையில் உள்ள சிவசேனா கட்சி தலைமையகத்தில் பிரபல ஓவியர் ஒருவர் சுமார் 33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் உருவாக்கப்பட்ட அவரது முகம் பலரையும் கவர்ந்துள்ளது. #Balasaheb #BalThackeray #ShivSena 
    நைஜீரியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்த பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் 2 மணி நேரத்தில் தன்னை சித்திரமாக தீட்டிய 11 வயது சிறுவனை மனமுவந்து பாராட்டினார்.
    லாகோஸ்:

    நைஜீரியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்த பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் 2 மணி நேரத்தில் தன்னை சித்திரமாக தீட்டிய 11 வயது சிறுவனை மனமுவந்து பாராட்டினார்.

    பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல்மேக்ரான் இருநாள் அரசுமுறை பயணமாக நைஜீரியா நாட்டுக்கு வந்துள்ளார்.

    அபுஜா நகரில் நைஜீரிய அதிபர் முஹம்மது புஹாரியை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக மேக்ரான் ஆலோசனை நடத்தினார்.


    பிரான்ஸ் நாட்டில் வரும் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள நைஜீரியா கலாசார விழா தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்காக இங்குள்ள லாகோஸ் நகருக்கு கடந்த செவ்வாய்கிழமை எம்மானுவேல் வந்தார்.

    இங்குள்ள நியூ ஆப்பிரிக்கா ஷ்ரைன் என்னும் ஓவிய கலைக்கூடத்தை அவர் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    பிரான்ஸ் அதிபர் அங்கு வரும் தகவல் தெரிந்ததும் ஓவியக் கலையில் ஆர்வம்கொண்ட கரீம் வாரிஸ் ஒலமிலேக்கான் என்ற 11 வயது சிறுவன், பென்சில் மற்றும் கரி ஆகியவற்றை பயன்படுத்தி இரண்டு மணி நேரத்துக்குள் எம்மானுவேல் மேக்ரானை அழகிய சித்திரமாக தீட்டி முடித்தான்.


    மிகவும் தத்ரூபமாக அமைந்திருந்த அந்த சித்திரத்தை கண்டு ஆச்சரியம் அடைந்த பிரான்ஸ் அதிபர் அந்த சிறுவனை மகிழ்ச்சியுடன் பாராட்டி, ஆசி கூறியதுடன் இந்த சம்பவத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் படத்துடன் பதிவிட்டுள்ளார். #NigerianArtist #EmmanuelMacronportrait 
    ×