என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைஞர்"

    • முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படங்களுக்கு, மலர்தூவி வணக்கம் செலுத்துங்கள்.
    • 2026 சட்டமன்றத் தேர்தலில் 7-ஆவது முறையாகக் கழக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம்.

    முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவுநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், "நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் நினைவு போற்றும் மடல்.

    நெடுநாள் கழித்து, உங்களுடன் இந்த மடல் வாயிலாக உரையாடுகிறேன். காரணம், சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் – வீட்டில் ஓய்வெடுத்தும் வந்தேன். சிகிச்சை – ஓய்வு என்று சொன்னாலும், மருத்துவமனையில் இருந்தபடியே அரசு அலுவல்களையும் கழகப் பணிகளையும் செய்துகொண்டுதான் இருந்தேன். ஓய்வுக்குப் பிறகு, தலைமைச் செயலகத்தில் என்னுடைய வழக்கமான பணிகளைத் தொடங்கியும், நேற்று கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில், 'உடன்பிறப்பே வா' என உத்திரமேரூர் தொகுதி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தேன். அரசுப் பணிகளுக்கிடையில், நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதுவரையில் 39 தொகுதிகளின் கழக நிர்வாகிகளைச் சந்தித்திருக்கிறேன். இந்தச் சந்திப்பு அடுத்தடுத்து தொடர உள்ளது.

    தமிழே உயிராக - தமிழர் வாழ்வே மூச்சாக - தமிழ்நாட்டின் உயர்வே வாழ்வாகக் கொண்டு தமிழினத் தலைவராக மக்கள் மனங்களில் நிறைந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். இயற்கை அவரை நம்மிடமிருந்து பிரித்து 7 ஆண்டுகளானாலும் அவர்தான் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறார். வாரத்தின் 7 நாட்களும் தலைவர் கலைஞரின் நினைவுகளுடன்தான் கழக உடன்பிறப்புகளின் பொழுது விடிகிறது. எந்நாளும் நம்மை இயக்கும் ஆற்றலாகத் திகழ்பவரும் முத்தமிழறிஞர் கலைஞர்தான்.

    பேரறிஞர் பெருந்தகை அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அவர் கட்டமைத்த ஆட்சியையும் கட்டிக்காத்து, அரை நூற்றாண்டு காலம் இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கி, 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, 19 ஆண்டுகாலம் சிறப்பான நிர்வாகத்தை அளித்து, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டி எழுப்பிய சிற்பியான நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் வழியில்தான், உங்களில் ஒருவனான என் தலைமையில் 6-ஆவது முறையாகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைத்து, மக்கள் நலன் காக்கும் நல்லரசாகச் செயலாற்றி வருகிறது.

    முத்தமிழறிஞர் ஆட்சியில் இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்ந்த குடிசை மாற்று வாரியம், கை ரிக்சா ஒழிப்பு, பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் சம உரிமை, முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குக் கட்டணமில்லா உயர்கல்வி, உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், சமத்துவபுரங்கள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்ற எண்ணற்ற திட்டங்களின் வழியில், நமது திராவிட மாடல் அரசு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், விடியல் பயணம், நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை வழங்கி, இந்தியாவின் பிற மாநிலங்கள் வியந்து நோக்கிப் பின்பற்றக்கூடிய வகையில் செயல்படுத்தி வருகிறது.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனுநீதி நாளை அறிமுகப்படுத்தியவர் தலைவர் கலைஞர். அவர் வழியில், திராவிட மாடல் அரசின் திட்டங்களில் பயன்பெறும் வகையில் மக்களைத் தேடிச் சென்று மனுக்களைப் பெறும் முகாம்களை நடத்தி, உரிய தீர்வுகளை மேற்கொண்டு வருகிறோம். எளிய மக்களுக்கும் கண்ணொளித் திட்டம் மூலம் கண்புரை அறுவை சிகிச்சை, பெரியம்மை தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து எனப் பல மருத்துவ முகாம்கள் தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்டது போல, நமது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களின் உடல்நலன் காத்திட வட்டாரங்கள்தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உரிய சிகிச்சைக்கு வழியமைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சியின் சமூகநீதிக் கொள்கைகளால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளால், பொருளாதாரம் சார்ந்த திட்டங்களால் ஏதேனும் ஒரு வகையில் பயன்பெற்று உயர்ந்தது போலவே, நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு பயனையாவது பெற்று முன்னேற்றம் கண்டு வருவதை நாடறியும். கல்வியிலும் சமுதாய முன்னேற்றத்திலும் தனிநபர் வருமானத்திலும் பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகக் திகழ்வதை நாம் மட்டும் சொல்லவில்லை, ஒன்றிய பா.ஜ.க அரசின் பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் பல்வேறு துறைகளின் அறிக்கைகளே உறுதி செய்கின்றன. இவையனைத்தும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் கட்டமைத்த வழித்தடத்தில் தொடரும் நம்முடைய பயணத்தின் வெற்றிகள்.

    தமிழ்நாட்டின் நலன் காக்கும் திட்டங்களை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் வழியிலான திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் நிலையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதிலும் தலைவர் கலைஞர் முன்னெடுத்த மாநில சுயாட்சி முழக்கத்தின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் நலன்களையும் காக்கின்ற வகையில் சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது நமது திராவிட மாடல் அரசு. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆகஸ்ட் 15 விடுதலை நாளில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் மாநிலத் தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியை ஏற்றுகின்ற உரிமையைப் பெற்றுத் தந்தார். மாநிலத் திட்டக்குழுவை அமைத்தார். தி.மு.கழகத்தின் ஆதரவுடன் சமூகநீதிக் காவலர் திரு. வி.பி.சிங் அவர்கள் பிரதமரானபோது ஒன்றிய - மாநில உறவுகளை மேம்படுத்தும் 'இன்டர் ஸ்டேட் கவுன்சில்' அமைத்திட வழி செய்தார்.

    நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வு, உதய் மின்திட்டம் , சொத்து வரி உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சகத் திட்டங்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததால், தமிழ்நாடு அதன் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடுவதற்காக நாடாளுமன்றத்தில் போர்க்குரல் எழுப்புவதோடு, உச்சநீதிமன்றத்திலும் சட்டப்போராட்டத்தை நடத்துகிறது கழக அரசு. அதற்கான நெஞ்சுரத்தை நமக்குத் தந்திருப்பவர் 'மானமிகு சுயமரியாதைக்காரர்' எனத் தன்னை அடையாளப்படுத்திய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

    பா.ஜ.க. ஆட்சி செய்யாத - ஆட்சிக்கே வர முடியாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அதிகாரப் பறிப்பு செய்யும் ஜனநாயகப் படுகொலை தொடர்ந்து வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு முன்னெடுத்த சட்டப்போராட்டத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசே அதிகாரம் படைத்தது என்பது நிலைநாட்டப்பட்டு, தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமான ஜனநாயக நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்தப் போராட்டங்களை இன்னும் வலிமையாகத் தொடர வேண்டியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் நலன் மீது கொஞ்சமும் அக்கறையில்லாத அ.தி.மு.க, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு மிகப் பெரும் துரோகத்தை இழைத்து வருகிறது.

    உண்மையான அ.தி.மு.க தொண்டர்களே மனம் புழுங்குகிற வகையில், அடிப்படைக் கொள்கைகள் ஏதுமற்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி டெல்லி வரை சென்று மண்டியிட்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். சேராத இடந்தன்னில் சேர்ந்து தீராத பழி சுமந்தபடி ஊர் ஊராகப் பயணித்து, பொய்களைப் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.

    நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் 14 வயதில் பள்ளி மாணவனாகத் திருவாரூர் வீதிகளில் தமிழ்க்கொடி ஏந்தி, இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பியவர். கல்லக்குடி போராட்டத்தில் வடமொழி ஆதிக்கத்தை எதிர்த்து, தமிழ் காத்திடத் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தவர். 1965 மொழிப்போர்க்களத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து பாளையங்கோட்டையில் தனிமைச் சிறை கண்டவர். தனது 95 ஆண்டு வாழ்வில் 81 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான முத்தமிழறிஞர் கலைஞரின் இனம் - மொழி காக்கும் போராட்டங்கள் ஓய்வின்றித் தொடர்ந்தன. தமிழுக்குச் செம்மொழித் தகுதி தரப்படவேண்டும் என்கிற தமிழறிஞர்களின் நூற்றாண்டுக் கனவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிறைவேறிடச் செய்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்.

    இந்தியாவின் முதல் செம்மொழி என்ற தகுதிபெற்ற தமிழுக்கு மிகக் குறைந்த நிதியை ஒதுக்குகிற தமிழர் விரோத ஒன்றிய பா.ஜ.க. அரசு, சமஸ்கிருத மொழிக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொட்டிக் கொடுக்கிறது. இந்தி அல்லாத மொழிகளைச் சிதைக்கின்ற வகையில் 'தேசியக் கல்விக் கொள்கை 2020' மூலம் இந்தி மொழியைத் திணிக்க முயற்சிக்கிறது. ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்கின்ற கல்வியைப் பறிக்கின்ற வகையில் குலக்கல்வி முறையைக் கொண்டு வரத் துடிக்கிறது. அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்ட தமிழர் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழாய்வு முடிவுகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளியிட மறுக்கிறது. ஆரியப் பண்பாட்டை நம் மீது திணிக்கப் பார்க்கிறது.

    முத்தமிழறிஞர் கலைஞர் இன்று நம்முடன் இருந்திருந்தால் எத்தகைய உணர்வெழுச்சியுடன் ஒன்றிய அரசை எதிர்த்து நிற்பாரோ, அவரிடம் அரசியல் பாடம் கற்ற கழத்தினரான நாமும் அதே உணர்வுடன் ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழர் விரோத - மனிதகுல விரோத சூழ்ச்சிகளை எதிர்த்து நிற்கிறோம். எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வோ அடங்கி ஒடுங்கி பா.ஜ.க.வுக்கு அடிமைச் சேவகம் செய்து கொண்டிருக்கிறது.

    "வீரன் சாவதே இல்லை, கோழை வாழ்வதே இல்லை" என்றார் தலைவர் கலைஞர். கழகத்தினர் களத்தில் வீரர்களாக நிற்கிறார்கள். தமிழைக் காக்கவும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்கவும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் உறுதியுடனும் தெளிவுடனும் தன் போராட்டத்தை முன்னெடுக்கும். தமிழ் மக்களின் வளமான வாழ்வுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தும்.

    எப்போதும் மக்களுடன் நிற்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் தலைவர் கலைஞர் கட்டிக் காத்த இயக்கம். அவர் இல்லை என்று எண்ணாமல், என்றென்றும் அவர் நினைவுகளில் வாழ்கின்ற கோடிக்கணக்கான உடன்பிறப்புகளில் உங்களில் ஒருவனான நானும் இருக்கிறேன். ஆகஸ்ட் 7 அன்று நம் உயிர்நிகர் தலைவரின் நினைவு நாளில் தமிழர் வாழும் நிலமெங்கும் அவர் நினைவைப் போற்றுவோம்.

    வங்கக் கடற்கரையில் தன் அண்ணனுடன் நிரந்தர ஓய்வு கொண்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7 அன்று நடைபெறும் அமைதிப் பேரணியில் உடன்பிறப்புகள் கடலெனத் திரண்டு வணக்கத்தைச் செலுத்துவோம். மாவட்டங்கள்தோறும் அமைக்கப்பட்டுள்ள தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலைகளுக்கு அந்தந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் - உடன்பிறப்புகள் மாலையிட்டு மரியாதை செலுத்திட வேண்டும். கிளைகள்தோறும் தலைவர் கலைஞரின் நினைவு போற்றப்பட வேண்டும். இந்நிகழ்வுகளில் கழக நிர்வாகிகள் காலை 7 மணியளவில் பங்கேற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    வீடுகளிலும் வீதிகளிலும் தமிழ்காத்த போராளியாம் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படங்களுக்கு, மலர்தூவி வணக்கம் செலுத்துங்கள். தலைவர் கலைஞரின் நினைவுகளை நெஞ்சிலேந்தி, கொள்கைவழிப் பயணத்தைத் தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் 7-ஆவது முறையாகக் கழக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம். ஓரணியில் தமிழ்நாடு எனும் மகத்தான முன்னெடுப்பில் மக்களை ஒருங்கிணைத்துக் களத்தில் வெல்வோம்! தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக! திராவிட முன்னேற்றக் கழகம் வெல்க!" என்று தெரிவித்துள்ளார்.

    • தனது 94 ஆண்டு ஆயுட்காலத்தில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர்.
    • கலைஞரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழே உயிராக, தமிழினமே உணர்வாக, தமிழர் நலனும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியுமே வாழ்நாள் செயல் திட்டமாக கொண்ட ஓய்வில்லா சூரியன், தனது 94 ஆண்டு ஆயுட்காலத்தில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர்.அரை நூற்றாண்டு காலம் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருந்து தமிழ்நாட்டு அரசியலின் அச்சாணியாக செயல்பட்டவர். இலக்கியம் , கவிதை , இதழியல் , நாடகம் ,திரைப்படம் எனத்தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்த பன்முகத்திறன் கொண்ட படைப்பாளர்.

    உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்த நம் 'தமிழினத் தலைவர்' கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளான நாளை 3-ந்தேதி அன்று திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகம், வட்டக்கழகம், வார்டு கழகம், ஊராட்சி கழகங்கள் என மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் கலைஞரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்தி புதிய கொடியேற்ற வேண்டும்.

    பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பல்வேறு முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், பார்வையற்றோர் இல்லங்கள், மாணவர் விடுதிகள், கருணை இல்லங்கள், பெண்கள் காப்பகங்கள், மனநலகாப்பகம், பார்வையற்றோர் இல்லம் போன்ற இடங்களில் வாழ்கின்றவர்களுக்கு காலை, மதியம், இரவு உணவுகள் வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு, உடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், இலவச கண் மருத்துவ முகாம், ரத்த தான முகாம்கள் நடத்த வேண்டும்.

    ஜூன் மாதம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு கபடிபோட்டி, கிரிக்கெட் போட்டி என பல்வேறு விளையாட்டு போட்டிகளையும் சிறப்பாக நடத்திட வேண்டும்.மேலும் நடைபெறுகின்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்களை திரளாக பங்கேற்க செய்து நிகழ்ச்சிகளை சிறப்பாக கொண்டாடிட வேண்டும். இவர் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • எதிரிகளின் நெஞ்சாங்கூட்டை இன்றளவும் அதிரவைக்கும் பெயரும் கலைஞர்தான்.
    • ஜூன் 20 அன்று திருவாரூரில் திறக்கப்பட உள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் திரண்டிட அழைக்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரை நாம் நினைக்காத நாள் இல்லை, எண்ணாத பொழுதில்லை. நெஞ்சம் அவரை நினைக்கும்போதும், அவரது பெயரை அடி மனதிலிருந்து உச்சரிக்கும் போதும் உடன் பிறப்புகளான உங்களுக்கும் உங்களில் ஒருவனான எனக்கும் உற்சாகம் பிறக்கிறது. உத்வேகம் கிடைக்கிறது.

    தமிழர்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் பெயர், கலைஞர். எதிரிகளின் நெஞ்சாங்கூட்டை இன்றளவும் அதிரவைக்கும் பெயரும் கலைஞர்தான்.

    அவரை நாம் நினைக்க நினைக்க, எத்தகைய பகையும் வஞ்சகமும் சூழ்ச்சியும் எதிர்நிற்க முடியாமல் தெறித்து ஓடும். அத்தகைய மகத்தான தலைவரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடி மகிழ்கிறோம்.

    திராவிட மாடல் அர சாங்கத்தின் சார்பிலான முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு ஒருபுறம், அரை நூற்றாண்டு காலம் அவர் கட்டிக்காத்த ஜனநாயகப் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலான நூற்றாண்டு கொண்டாட்டங்கள் மறுபுறம், கலைஞர் மீது பற்று கொண்ட தோழமை இயக்கத்தினர் கொண்டாடும் நிகழ்வுகள் என முப்பெரும் விழாவாக கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில், கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்காக, அழைப்பதற்காக உங்களில் ஒருவனான நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

    14 வயதில் தமிழ்க்கொடி ஏந்தி, இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி, தனது சளைக்காத போராட்டத்தினால் இந்தியாவுக்கே வழி காட்டும் மூத்த தலைவராக உயர்ந்து நின்ற முத்தமிழறிஞர் கலைஞரை நமக்குத் தந்த திருவாரூரில், அஞ்சுகம் அம்மையார் நினைவிடம் அமைந்துள்ள காட்டூர் பகுதியில் 7 ஆயிரம் சதுர அடியில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்டு உள்ளது கலைஞர் கோட்டம்.

    வள்ளுவர் கோட்டத்தைப் போலவே, அவரது திருவாரூரில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. கோட்டத்தில் அவரது திருவுருவச் சிலை, அவரது போராட்டமிக்க பொது வாழ்வைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம், அவரது தந்தை - என் தாத்தா முத்து வேலரின் பெயரிலான நூலகம், 2 திருமண மண்டபங்கள் ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளன. ஜூன் 20 அன்று திருவாரூரில் திறக்கப்பட உள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் திரண்டிட அழைக்கிறேன்.

    பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைக்கிறார். பீகார் மாநில துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் முத்து வேலர் நூலகத்தைத் திறந்து வைக்கிறார். நம் உயிர்நிகர் தலைவர் அவர்களின் திருவுருவச் சிலையை உங்களில் ஒருவனான நான் திறந்து வைக்கிறேன்.

    பகை வெல்லும் பட்டாளமாய் - அறம் காக்கும் அணி வகுப்பாய் உடன்பிறப்புகளே திரண்டிடுவீர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காரைக்குடி தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நடந்தது.
    • கூட்டுறவுத்துறை அமைச்சர், முன்னாள் அமைச்சர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பொதுக்கூட்டம் காரைக்குடி 5 விளக்கு அருகே நடைபெற்றது. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் தொண் டரணி அமைப்பா ளர் ஹேம லதா செந்தில் வரவேற்புரை நிகழ்த்தினார். காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்து துரை, நகர செயலாளர் குண சேகரன், மகளிரணி நிர்வாகிகள் குழந்தை தெர சாள், திவ்யா சக்தி, ராஜேஸ் வரி சேகர், சங்கீதா செல்லப் பன், மஞ்சரி லெட்சுமணன் முன்னிலை வகித்தனர்.

    கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன் சிறப்புரையாற்றினர். முனை வர் எழிலரசி, தலைமை பேச்சாளர் புவியரசி ஆகி யோர் பெண்கள் முன் னேற்றத்திற்கு கலைஞர் ஆற்றிய பணிகள் குறித்து பேசினர்.

    இதில் மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கை மாறன், ஜோன்ஸ் ரூசோ, மணிமுத்து, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், மானா மதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி உள்பட ஒன்றிய, நகர, பேரூர் கிளை செயலாளர்கள், மகளிரணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் மணி மேகலை நன்றி கூறினார்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • லைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நடைபெறும். 2-ம் கட்ட முகாம் அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெறும். நியாய விலைக் கடை பணியாளர் ஒவ்வொரு நியாய விலைக் கடைப் பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கு ம் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்குவார்.

    டோக்கன் வழங்கும் பணி முகாம் நடைபெறும் நாளுக்கு 4 நாட்கள் முன்பாக தொடங்கும். பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களைப் பெறுவதற்காக நியாயவிலை கடைக்கு வரத் தேவையில்லை. குடும்ப அட்டை இருக்கும் நியாய விலை கடை பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

    முதல் கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை அகஸ்தீஸ்வரம் வருவாய் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், தோவாளை வருவாய் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், கல்குளம் வருவாய் வட்டத்தில் உள்ள 126 கிராமங்களின் நியாய விலை கடை பகுதியில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.

    நாகர்கோவில் மாநக ராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும், பத்மனாபபுரம் மற்றும் குளச்சல் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து நியாய விலைக்கடை பகுதியில் முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடை பெறும்.

    கல்லுகூட்டம், கோத நல்லூர் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள தலா 5, குமார புரம் பேரூராட்சி பகுதியில் 7, மணவாளகுறிச்சி, நெய்யூர் பேரூராட்சி பகுதிகளில் தலா 6, மண்டைக்காடு பேரூ ராட்சியில் 8, வெள்ளிமலை பேரூராட்சியில் 5 நியாய விலைக்கடைகளில் முதல் கட்டமாக விண்ணப் பதிவு முகாம்கள் நடைபெறும். மேலும் வில்லுக்குறி பேரூ ராட்சிக்குட்பட்ட 14, 4, 5, 11, 6, 4 ஆகிய வார்டுகளிலுள்ள நியாயவிலை கடைகளிலும் முகாம் நடைபெறும்.

    திருவிதாங்கோடு பேரூ ராட்சிக்குட்பட்ட வார்டு எண். 12, திங்கள் நகர் பேருராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1, 11, 12, 8, 15 ஆகியவற்றில் உள்ள நியாய விலைக் கடை பகுதிகளில் முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம் கள் நடைபெறும்.

    சடையமங்கலம், முத்தல குறிச்சி, தென்கரை, வெள்ளி சந்தை கக்கோட்டுதலை, நெட்டாங்கோடு ஆகிய ஊராட்சிகளில் உள்ள தலா 2 கட்டடிமாங்கோடு ஊராட்சி பகுதியிலுள்ள 5, குருந்தன்கோடு ஊராட்சி பகுதியிலுள்ள 7, சைமன் காலனி பகுதியில் 4, முட்டம் பகுதியில் 8 நியாய விலைக்கடைகளிலும், தலக்குளம் ஊராட்சி பகுதியிலுள்ள 1 நியாய விலைக்கடையிலும் முதற்கட்டமாக விண்ணபப்பதிவு முகாம்கள் நடைபெறும்.

    இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை திருவட்டார் வருவாய் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும், கிள்ளியூர் வருவாய் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும், விளவங்கோடு வருவாய் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் நியாய விலைக் கடைப் பகுதியில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும். கல்குளம் வட்டத்தில் மீத முள்ள 49 நியாய விலை கடைப் பகுதிகளில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும். கொல்லங் கோடு நகராட்சி பகுதியில் அனைத்து வார்டுகளிலும் உள்ள நியாய விலைக் கடை பகுதியில் 2-ம் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.கல்குளம் வட்டத்தில் இரணியல் பேரூராட்சிப் பகுதியிலுள்ள 3 நியாய விலைக்கடைகளிலும், கப்பியறை பேரூராட்சிப் பகுதியிலுள்ள 7 நியாய விலைக்கடைகளிலும், முளகுமூடு பேரூராட்சி பகுதியிலுள்ள 6 நியாய விலைக்கடைகளிலும், வாள்வச்சகோஷ்டம் பேரூ ராட்சி பகுதியிலுள்ள 8 நியாயவிலைக்கடைகளிலும் இரண்டாம் கட்ட விண்ணப் பபதிவு முகாம் நடைபெறும்.

    மேலும் வில்லுக்குறி பேரூராட்சி பகுதியில் வார்டு எண் 15, திருவி தாங்கோடு பேரூராட்சி பகுதியில் வார்டு எண். 6, 7, 12, திங்கள்நகர் பேரூராட்சி பகுதியில் வார்டு எண் 5 ஆகிய நியாய விலை கடைகளிலும், நுள்ளிவிளை ஊராட்சி பகுதியிலுள்ள 6 நியாய விலைக்கடை களிலும், திக்கணங்கோடு ஊராட்சி பகுதியிலுள்ள 7 நியாய விலைக்கடைகளிலும், மருதூர்குறிச்சி ஊராட்சியில் உள்ள 4 நியாய விலைக்கடைகளிலும், ஆத்திவிளை ஊராட்சியில் உள்ள 3 நியாய விலைக்கடைகளிலும், 2-ம் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடை பெறும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • 2-வது நாளாக இன்றும் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விநியோகம்
    • நேற்று மாவட்டம் முழுவதும் 400 ரேஷன் கடையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் நடக்கிறது.

    முதல் கட்ட முகாம் நடைபெற உள்ள பகுதியில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்களை ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று வீடு வீடாக சென்று வழங்கினார்கள். நேற்று மாவட்டம் முழுவதும் 400 ரேஷன் கடையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கனை வழங்கினார்கள். முதல் நாளில் குமரி மாவட்டத்தில் 65 ஆயிரம் குடும்பத்தலைவிகளுக்கு விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இன்று 2-வது நாளாகவும் அகஸ்தீஸ்வரம், கல்குளம், தோவாளை தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவங்களை வழங்கி வருகிறார்கள். இந்த விண்ணப்ப படிவங்கள் நாளையும், நாளை மறுநாளும் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து 24-ந்தேதி சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த சிறப்பு முகாமில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

    விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்யும் குடும்ப அட்டைதாரர்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மின் இணைப்பு கார்டு மற்றும் பேங்க் பாஸ்புக் ஆகியவற்றை இணைத்து வழங்க வேண்டும். இந்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 2-ம் கட்டமாக முகாம் நடைபெறும் பகுதியில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு அடுத்த கட்டமாக விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • குமரியில் இன்று 400 இடங்களில் தொடங்கியது
    • விண்ணப்ப படிவங்களை சரிபார்த்து அதிகாரிகள் வாங்கினார்கள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டமாக நடக்கிறது. இதையடுத்து முதல் கட்டமாக முகாம் நடைபெற உள்ள 400 ரேஷன் கடைகளுக்குட்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் ஊழியர்கள் மூலமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.

    400 ரேஷன் கடைகளுக்குட்பட்ட சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து இன்று 24-ந்தேதி முதல் விண்ணப்ப படிவங்கள் பொதுமக்களிடமிருந்து வாங்கப்பட்டது. அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் தாலுகாவுக்குட்பட்ட 400 இடங்களில் சிறப்பு முகாம் நடந்தது.

    நாகர்கோவில் மாநகர பகுதிகளிலும் கலைஞர் உரிமை திட்டத்திற்கான சிறப்பு முகாம் இன்று நடந்தது. ஏற்கனவே விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் பெண்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொண்டு வந்திருந்தனர்.

    முகாமில் இருந்த அதிகாரிகள் விண்ணப்ப படிவங்களை பரிசோதித்து பெற்றுக்கொண்டனர். விண்ணப்பம் முகாமில் விண்ணப்பங்களை ஒப்படைக்க வந்த பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களு டன் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு இணைக்கப்பட்ட வங்கி புத்தகம் மற்றும் மின் கட்டண கார்டு ஆகியவற்றை இணைத்திருந்தனர்.

    விண்ணப்ப பதிவு முகாம்களில் காலை முதலே கூட்டம் அலைமோதியது. பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விண்ணப்ப முகாம்களை பூர்த்தி செய்து வந்திருந்த பொதுமக்கள் சிலர் வங்கி புத்தகத்துடன் ஆதார் கார்டு இணைக்காத வங்கி கணக்கை கொண்டு வந்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து அதை பரிசோதித்து அதிகாரிகள் அதை சரி செய்து கொண்டு வருமாறு அனுப்பி வைத்தனர். பின்னர் அதை சரி செய்து பொதுமக்கள் கொண்டு வந்தனர்.

    அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் தாலுகாவுக்குட்பட்ட பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒவ்வொரு முகாமிலும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொண்டு வந்திருந்தனர்.

    ஒரு சில இடங்களில் பெண்கள் அதிகமாக திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விண்ணப்ப படிவங்களை வழங்க வந்த பொதுமக்களிடம் ஊழியர்கள் விண்ணப்ப படிவங்களை சரிபார்த்து வாங்கினார்கள். இன்று தொடங்கிய முகாம் வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக 384 ரேஷன் கடையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு கலைஞர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விண்ணப்ப படிவுகளை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் 16-ந்தேதிக்குள் அந்த பகுதியில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முதற்கட்ட முகாம் நேற்று தொடங்கியது.
    • இதற்காக கடந்த 20 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

    சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முதற்கட்ட முகாம் நேற்று தொடங்கியது. இதற்காக கடந்த 20 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. அதில் விண்ணப்ப தாரர்கள் எத்தனை மணிக்கு முகாமிற்கு வர வேண்டும் தேவையான ஆவணங்கள் குறித்து தெரிவிக்கப்ப ட்டுள்ளது.அதன்படி முகாம் நடந்த இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே நேற்று மக்கள் திரண்டனர். இதையடுத்து அவர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர் பூர்த்தி செய்தனர். விரல் ரேகை பயோமெட்ரிக் மூலம் சரிபார்க்கப்பட்டது.விண்ணப்பங்களை அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட மொபைலில் உள்ள செயலியில் பதி வேற்றினர். சேலம் சிஎஸ்ஐ பாலி டெக்னிக் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதி வேற்றம் செய்யும் பணியை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். மாவட்டத்தில் 11 லட்சத்து 1861 ரேஷன் கார்டுகள் உள்ளன.இதில் முதல் கட்டமாக ஆறு லட்சத்து 138 காடுகளுக்கு டோக்கன், விண்ணப்பங்கள் வழங்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு ஆகஸ்ட் 4 வரை விண்ணப்ப பதிவு முகாம் நடக்க உள்ளது.முதல் நாளில் 846 முகாம்களில் 60 ஆயிரத்து 250 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இரண்டாவது நாளாக இன்றும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப் பட்டு வருகிறது. இதனை வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார்கள்.

    • பெண்கள் கூட்டம் அலைமோதியது
    • குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டமாக நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டமாக நடக்கிறது.

    இதையடுத்து முதல் கட்டமாக முகாம் நடந்த 400 ரேஷன் கடைகளுக்குட்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் ஊழியர்கள் மூலமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது. சுமார் 3 லட்சம் பேருக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்ட நிலையில் 2 லட்சம் 25 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து வழங்கி உள்ளனர். முதல் கட்ட முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

    இதைத்தொடர்ந்து 2-ம் கட்ட கலைஞர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் 384 ரேசன் கடை மூலமாக ஏற்கனவே விநி யோகம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று (5-ந்தேதி) முதல் விண்ணப்ப படிவங்கள் பெறப்படுகிறது.

    மேல்புறம், கிள்ளியூர், திருவட்டார் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பபடிவங்கள் பெறப்பட்டு வருகிறது.

    முகாமில் விண்ணப்பங்களை ஒப்படைக்க வந்த பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களுடன் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு இணைக்கப்பட்ட வங்கி புத்தகம் மற்றும் மின் கட்டண கார்டு ஆகியவற்றை இணைத்திருந்தனர். ஒரு சில பொதுமக்கள் ஆதார் கார்டை இடைக்கால வங்கி புத்தகத்தை கொண்டு வந்தனர்.

    அப்போது அதிகாரிகள் அதை பரிசோதனை செய்துவிட்டு வங்கி கணக்கில் உடனடியாக ஆதார் கார்டை இணைக்குமாறு கூறினார்கள். ஒரு சில பெண்கள் சில ஆவணங்களை கொண்டு வரவில்லை. அவற்றை எடுத்து வருமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இரண்டாம் கட்ட முகாமில் விண்ணப்ப படிவங்கள் பெறுவதற்கு முதல் நாள் என்பதால் இன்று அனைத்து மையங்களிலும் கூட்டம் அலைமோதியது. பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பெண்கள் விண்ணப்ப படிவங்களை வழங்கினார்கள்.

    வருகிற 16-ந்தேதி வரை விண்ணப்ப படிவங்கள் பெறப்படும். எனவே பொது மக்கள் தங்களுக்கு ஒதுக்கப் பட்ட தினத்தில் அந்தந்த பகுதியில் உள்ள முகாம்களுக்கு சென்று விண்ணப்ப படிவங்களை வழங்க வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

    • கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
    • மாவட்ட வாரியாக இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    குமாரபாளையம்:

    குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. மாவட்ட வாரியாக இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணியில் முழுமையாக ஈடு படுத்த அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்கான பயிற்சி முகாம் குமாரபாளை யம் தனியார் கல்லூரியில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பங்கேற்ற னர். இவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் இதற் கான பயிற்சி வழங்கினர். இதில் குமாரபாளையம், பள்ளிபாளையத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

    மாதம் ரூ.1000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செய லாக்கம் தொடர்பாக சில நாட்க ளுக்கு முன்பு முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கலை ஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் விவரங்களை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    • குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
    • கலை ஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் விவரங்களை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    குமாரபாளையம்:

    குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. மாவட்ட வாரியாக இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணியில் முழுமையாக ஈடு படுத்த அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்கான பயிற்சி முகாம் குமாரபாளை யம் தனியார் கல்லூரியில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பங்கேற்ற னர். இவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் இதற் கான பயிற்சி வழங்கினர். இதில் குமாரபாளையம், பள்ளிபாளையத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

    மாதம் ரூ.1000 வழங்கப்ப

    டும் கலைஞர் மகளிர் உரி

    மைத் திட்டம் செய லாக்கம் தொடர்பாக சில நாட்க ளுக்கு முன்பு முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கலை ஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் விவரங்களை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    • அனைத்து துறை ஊழியர்களும் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற் கொண்டு வருகிறார்கள்.
    • விண்ணப்பபடிவங்கள் உள்ள குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்து வழங்க பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கலைஞர் உரிமை திட்டத்திற் கான விண்ணப்ப படி வங்கள் பொதுமக்க ளுக்கு வழங்கப்பட்டு அந்த விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட் டுள்ளது. மாவட்டம் முழுவதும் 4 லட்சத்து 19 ஆயிரம் பேர் விண்ணப் பங்களை பூர்த்தி செய்து வழங்கியுள்ளார்கள். இந்த விண்ணப்ப படிவங்களில் ஒரு சில விண்ணப்ப படிவங்களில் குறைபாடுகள் இருந்ததையடுத்து அந்த விண்ணப்ப படிவங்களை கள ஆய்வு செய்ய நடவ டிக்கை எடுக்கப்பட்டுள் ளது.

    ரேஷன் கடை ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், பொதுப்பணித் துறை, சுகாதாரத்துறை உட்பட அனைத்து துறை ஊழியர்களும் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற் கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கலெக்டர் ஸ்ரீதர் கலைஞர் உரிமை திட்ட விண்ணப்ப படி வங்கள் ஆய்வு தொடர்பாக நேரில் ஆய்வு மேற் கொண்டார். நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வயல் தெரு, இருளப்பபுரம் வட்டவிளை, வேதநகர், தாமஸ் நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார்.

    பூர்த்தி செய்து வழங்கப்பட்ட விண்ணப்பபடிவங்கள் உள்ள குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்து வழங்க பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.

    ×