search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "birthday celebration"

    • வீடியோவில் வாலிபர் ஒருவர் தனது பிறந்த நாளன்று கேக்கிற்கு பதிலாக ராட்சத பப்பாளியை வெட்டி கொண்டாடிய காட்சிகள் உள்ளது.
    • வீடியோ இணையத்தில் வைரலாகி 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தங்களது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். பிறந்த நாளன்று கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கமாகி வருகிறது.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் வாலிபர் ஒருவர் தனது பிறந்த நாளன்று கேக்கிற்கு பதிலாக ராட்சத பப்பாளியை வெட்டி கொண்டாடிய காட்சிகள் உள்ளது.

    இன்ஸ்டாகிராமில் டாக்டர் கவிதா ரேனிகுன்ட்லா என்பவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் பேனர்கள், பலூன்கள் மற்றும் அலங்கார பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு இடத்தில் வாலிபர் மற்றும் அவருடன் சிலர் நிற்கிறார்கள். அப்போது வாலிபர் ஒருவர் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ராட்சத பப்பாளியை வெட்டி தன்னுடன் இருப்பவர்களுக்கு வழங்குகிறார்.

    அப்போது பின்னணியில் 'ஹேப்பி பெர்த்டே' என்ற டியூன் ஒலிக்கிறது. வழக்கத்திற்கு மாறான இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் அவரது வித்தியாசமான செயலை பாராட்டினர்.



    • டெடி பியர்சன் என்ற குழந்தையின் முதல் பிறந்தநாளை கொண்டாட குடும்பத்தினர் தயாராகும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.
    • குழந்தை டெடி பியர்சன் கேக் வெட்டுவதற்கு பதிலாக நாற்காலி முன்பு ஆர்வம் இல்லாமல் விழுந்து தூங்குவது போன்று காட்சிகள் உள்ளன.

    பிறந்தநாள் என்றாலே சிறுவர்களுக்கு குதூகலமாக இருக்கும். புத்தாடை உடுத்தி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடுவதை சிறுவர்- சிறுமிகள் மிகவும் மகிழ்ச்சியாக கருதுகிறார்கள்.

    இந்நிலையில் ஒரு குழந்தையின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு டெடி பியர்சன் என்ற குழந்தையின் முதல் பிறந்தநாளை கொண்டாட குடும்பத்தினர் தயாராகும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.

    புத்தாடை உடுத்திய அந்த குழந்தை ஒரு நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்த நிலையில் கொண்டாட்டம் நடைபெறும் இடம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் அங்கு குழந்தையை சுற்றி இருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து 'ஹேப்பி பர்த்டே' பாடலை பாடினர். அப்போது குழந்தை டெடி பியர்சன் கேக் வெட்டுவதற்கு பதிலாக நாற்காலி முன்பு ஆர்வம் இல்லாமல் விழுந்து தூங்குவது போன்று காட்சிகள் உள்ளன.

    குழந்தை தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆர்வம் இல்லாதது போல் இருந்தாலும், இந்த வீடியோ பயனர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

    • எருது விடும் விழாவில் பல பரிசுகளை வென்றுள்ளது
    • 3 மாடுகளையும் அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சாலப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் அழகுராஜா, அழகு ராணி, ஓம் சக்தி, என்ற பெயரில் 3 மாடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்த மாடுகள் வேலூர், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் எருது விடும் திருவிழாவில் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளது.

    இதில் பெருமாள் வளர்த்து வரும் அழகு ராணி என்ற மாட்டிற்கு 3-ம் ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடினர்.

    இதனையொட்டி பெருமாள் 3 மாடுகளையும் அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வந்து ஊர் நடுவே கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.

    பின்னர் மாடுகளுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாட்டின் உரிமையாளர்களுக்கும், மாடுகளுக்கும் சால்வை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    • காங்கிரஸ் - தி.மு.க. தலைவர்கள் வாழ்த்து
    • இளைஞர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் சால்வை அணிவித்து, பூங்கோத்து பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவரும் லாஸ்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான வைத்தியநாதன் தனது பிறந்தநாளை லாஸ்பேட்டை வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே கொண்டாடினார்.

    இதில் லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அய்யனார் கோவிலில் சிறப்பு பூஜை செய்து முளைப்பாரி எடுத்து கமலா அறக்கட்டளை முதன்மை செயலர் கமலா வைத்தியநாதன் தலைமையில் ஊர்வலமாக வந்தனர். அவர்கள் முளைப்பாரியை வைத்தியநாதன்

    எம்.எல்.ஏ.விடம் வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    தொடந்து வைத்தியநாதன் எம்.எல்.ஏ. அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் துணை சபாநாயகர் எம்.என்.ஆர். பாலன் முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன்

    தி.மு.க. மாநில அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா எம்.எல்.ஏ., தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சம்பத், செந்தில்குமார் மற்றும் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள்

    எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், காவல்துறை, அரசு துறை அதிகாரிகள், கமலா அறக்கட்டளை நிர்வாகிகள், லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், இளைஞர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் சால்வை அணிவித்து, பூங்கோத்து பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து கடந்த கல்வி ஆண்டில் 10-வது மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்க தொகையும், கமலா அறக்கட்டளை சார்பில் தட்டச்சு பயிற்சி மற்றும் தையல் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்க தொகையும் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார். பின்னர், 5 ஆயிரம் பேருக்கு சமபந்தி விருந்து நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கமலா அறக்கட்டளை நிர்வாகிகள் லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் கட்சியை நிர்வாகிகள், ஆதரவாளர்கள் செய்திருந்தனர்.

    முன்னதாக காங்கிரஸ் கட்சி சார்பில் மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்புபூஜை நடந்தது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகிேயார் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கத்தேர் இழுத்தனர்.

    • ராஜபாளையத்தில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா நடந்தது.
    • எஸ்.சி துறை தலைவர் கோவிந்தன், அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் அய்யனார் தலைமையில் பொதுசெயலாளர் செல்வராஜ், ராஜபாளையம் நகர் காங்கிரஸ் துணைதலைவர் தனசேகரன் முன்னிலையில் ராஜீவ்காந்தி படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் பொதுகுழு உறுப்பினர் குமாரசாமிராஜா, முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் லட்சுமணன், அண்ணாதுரை, ஜ.என்.டி.யு.சி தலைவர் தங்கவேல், விவசாய பிரிவு மாநிலசெயலாளர் மணிகண்டன், செட்டியார் பட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராமர், நாக செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் கோவிந்தன், அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை நீதிமன்றம் எதிரே, நெல்லை சந்தி விநாயகர் கோவில் அருகே ச.ம.க. சார்பில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.
    • அத்திமேட்டில் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் 70-வது பிறந்த நாளையொட்டி நெல்லை மாநகர் மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பாக கட்சி அலுவலகத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டா டப்பட்டது.

    மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமை தாங்கினார். மாநில மாணவரணி துணை செயலாளர் நட்சத்திர வெற்றி முன்னிலை வகித்தார். இதே போல் பாளை செந்தில்நகரில் பாளை சட்டமன்ற தொகுதி செயலாளர் ராகவன் மற்றும் பாளை பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் ஏற்பாட்டில் கட்சி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து முதியவர் இல்லத்திற்கு காலை உணவு வழங்கப்பட்டது. நெல்லை நீதிமன்றம் எதிரே, நெல்லை சந்தி விநாயகர் கோவில் அருகே ச.ம.க. சார்பில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. பின்னர் டவுன் அத்திமேட்டில் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் மந்திர மூர்த்தி ஏற்பாட்டில் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணைசெயலாளர்கள் வெங்கடேஷ், சின்னத்துரை, மாவட்ட பொருளாளர் சரத்ஆனந்த், பாளை பகுதி துணை செயலாளர்கள் நாராயணன், பொன்ராஜ், மாவட்ட மாணவரணி ராஜ்கண்ணன், துணை செயலாளர் மூர்த்தி, இளைஞரணி செயலா ளர்கள் வினோத், அந்தோணி, தகவல் தொழில் நுட்ப அணி மகாராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மணி, பவுல் ஆதித்தன், மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இளஞ்செழியன், வடக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, வக்கீல் அணி இசக்கிமுத்து, மகளிர் அணி லட்சுமி, உமா, பிரியா, மாவட்ட செயலாளர் பூமணி, முத்துலட்சுமி, லட்சுமி, பேச்சிமுத்து, கல்யாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    காங்கயம் :

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளைெயாட்டி காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கே.கே.சிவானந்தன் தலைமையில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவையொட்டி கணபதிபாளையம் கிராமம், சிவன்மலை அடிவாரம், பாப்பினி பிரிவு, சிவன்மலை சத்தியாநகர் ஆகிய பகுதிகளில் கருணாநிதியின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனையடுத்து ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச்செயலாளர் பாலசுப்பிரமணியம், ராஜேந்திரன், படியூர் சண்முகசுந்தரம், சிவன்மலை சிவகுமார், அருண்தீபக், சண்முகம், கந்தசாமி, மகேஷ்குமார், சிலம்பரசன், வடிவேல், பழனாத்தாள் மாரிமுத்து, முன்னாள் தலைவர் பெரியசாமி, முன்னாள் கவுன்சிலர் பெரியசாமி, முத்துக்குமார், விஸ்வநாதன், இளமதி பாலமுருகேசன், திருநாவுக்கரசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தனது 94 ஆண்டு ஆயுட்காலத்தில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர்.
    • கலைஞரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழே உயிராக, தமிழினமே உணர்வாக, தமிழர் நலனும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியுமே வாழ்நாள் செயல் திட்டமாக கொண்ட ஓய்வில்லா சூரியன், தனது 94 ஆண்டு ஆயுட்காலத்தில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர்.அரை நூற்றாண்டு காலம் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருந்து தமிழ்நாட்டு அரசியலின் அச்சாணியாக செயல்பட்டவர். இலக்கியம் , கவிதை , இதழியல் , நாடகம் ,திரைப்படம் எனத்தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்த பன்முகத்திறன் கொண்ட படைப்பாளர்.

    உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்த நம் 'தமிழினத் தலைவர்' கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளான நாளை 3-ந்தேதி அன்று திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகம், வட்டக்கழகம், வார்டு கழகம், ஊராட்சி கழகங்கள் என மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் கலைஞரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்தி புதிய கொடியேற்ற வேண்டும்.

    பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பல்வேறு முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், பார்வையற்றோர் இல்லங்கள், மாணவர் விடுதிகள், கருணை இல்லங்கள், பெண்கள் காப்பகங்கள், மனநலகாப்பகம், பார்வையற்றோர் இல்லம் போன்ற இடங்களில் வாழ்கின்றவர்களுக்கு காலை, மதியம், இரவு உணவுகள் வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு, உடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், இலவச கண் மருத்துவ முகாம், ரத்த தான முகாம்கள் நடத்த வேண்டும்.

    ஜூன் மாதம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு கபடிபோட்டி, கிரிக்கெட் போட்டி என பல்வேறு விளையாட்டு போட்டிகளையும் சிறப்பாக நடத்திட வேண்டும்.மேலும் நடைபெறுகின்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்களை திரளாக பங்கேற்க செய்து நிகழ்ச்சிகளை சிறப்பாக கொண்டாடிட வேண்டும். இவர் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • நடுரோட்டில் வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 4 பேர் திடீரென, அந்த மாணவியின் கன்னத்தில் கேக்கை தடவினார்கள்.

    கோவை:

    கொண்டாட்டம்....குத்தாட்டம்....குதூகலம் என்பது இருக்கட்டும்... ஆனால் அதில் எல்லை மீறும்போது தொல்லை தானே. என்னதான் நண்பர்கள், சேர்ந்து பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்தினாலும், கவனமாக இருக்க வேண்டும் அல்லவா...? உற்சாக மிகுதியால் உணர்ச்சி வசப்பட்டு விட்டால் பிரச்சினை தானே. அது பற்றி பார்க்கலாம்:-

    கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஆறுமுக கவுண்டர் வீதியில் உள்ளபழனி ஆண்டவர் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு நடுரோட்டில் வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 4 பேர் திடீரென, அந்த மாணவியின் கன்னத்தில் கேக்கை தடவினார்கள். இதனை மாணவி தடுத்தார். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டாள்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து மாணவியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாணவி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடுரோட்டில் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அதே பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (வயது 21), சஞ்சீவி (19). சந்தோஷ் (20), 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தார். இவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மானபங்க முயற்சி உட்பட 4 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • முதல்- அமைச்சர் ரங்கசாமி ராமநாதன் உருவ படத்திற்கு மரியாதை
    • அனைத்து கிராமத்திலும் படம் வைத்து மரியாதை செலுத்தி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி ராதாகிருஷ்ணன், செந்தில்குமார் எம்.எல்.ஏ ஆகியோரது தந்தையும், முன்னாள் எம்.எல்.ஏவுமான மறைந்த ராமநாதனின் 75-வது பிறந்தநாள் பவள விழா பாகூரில் கொண்டாடப்பட்டது.

     விழாவையொட்டி குருவிநத்தம் பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் மறைந்த ராமநாதனின் படத்துக்கு மரியாதை செலுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி ராமநாதன் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பெண்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் முதல் -அமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அனைத்து கட்சி அமைச்சர்கள், எம்.பி., என்.ஆர்காங்கிரஸ், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் என அனைத்து கட்சி முக்கிய நிர்வாகிகளும், ஆர்.ஆர். பேரவை நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து பாகூர் தொகுதி முழுக்க நடத்தப்பட்ட மகளிருக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ராமநாதன் பிறந்தநாள் விழாவை பவள விழாவாக கொண்டாடி வரும் அவரது ஆதரவாளர்கள் அனைத்து கிராமத்திலும் படம் வைத்து மரியாதை செலுத்தி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    மேலும் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் பாகூர், கொரவள்ளிமேடு, கன்னியகோயில், வார்க்கால் ஓடை உள்ளிட்ட 6 இடங்களில் விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழாவும் நடந்தது. 

    • நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
    • மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் சீனியர் துணைத்தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான தேவதாசுக்கு இன்று 65-வது பிறந்தநாளாகும். காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் தனது பிறந்த நாளை தட்டாஞ்சாவடி நவசக்தி நகரில் உள்ள அவரின் இல்லத்தில்  கொண்டாடினார். புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அளித்த 65 கிலோ கேக்கை வெட்டினார்.

    அவர்கள் தேவதாசுக்கு சால்வை, பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து தேவதாஸ் ஏழைகளுக்கு நலத்திட்டங்களை உதவிகளை வழங்கினார். விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்.பி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர்கள் பெத்தபெருமாள், கமல கண்ணன், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், காங்கிரஸ் பொதுச்செயலா ளர்கள் திருமுருகன், வேல்முருகன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, வக்கீல் அணி தலைவர் மருதுபாண்டியன், நிர்வாகிகள் ராஜா, குமார், திருமலை, கோபு, தியாகராஜன், ராஜேந்திரன், கிருஷ்ணராஜூ, யுனிவர்சல் சிவா, செல்வநாதன், மகளிரணி துணைத்தலைவி ஜெயலட்சுமி, காரைக்கால் மாவட்ட தலைவர் சந்திரமோகன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஞ்சித் உள்பட பலர் பங்கேற்றனர்.

    முன்னதாக 8.30 மணியளவில் மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்தனர். 9.30 மணிக்கு மிஷன் வீதி மாதாகோவிலில் சிறப்பு வழிபாடு, 10 மணிக்கு முல்லா வீதி மசூதியில் சிறப்பு தொழுகை நடந்தது. மதியம் 12.30 மணியளவில் ராஜீவ்காந்தி குழந்தைகள் நல ஆஸ்பத்திரி அருகே அன்னதானம் வழங்கப்பட்டது. 4.30 மணிக்கு ஒஸ்பிஸ் கான்வென்டில் முதியோர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

    • திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு பெருமாளின் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பாக வழிபட்டு வருகின்றனர்.
    • திருமங்கை ஆழ்வார் திருச்சபை மற்றும் கோவில் அறங்காவலர் குழு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன் கிருமாம்பாக்கத்தில் எழுந்தருள் உள்ள ஸ்ரீபத்மாவதி தாயார் சமேதி சீனிவாசன் பெருமாள் சன்னதியில் அமைந்துள்ள மதத்தை மாற்றிய மகான் பாஷைக்காரர் உடையவர் எத்திராஜ் என்று பல பெயர்களால் போற்றப்படும் எம்பெருமான் ஸ்ரீ ராமானுஜர் சுவாமி 1006-ம் ஆண்டு பிறந்த நாளை சித்திரை மாதமான திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு பெருமாளின் அனைத்து சன்னதி களிலும் சிறப்பாக வழிபட்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக கிருமா ம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீரா மானுஜர் சுவாமிக்கு பால், தயிர்,தேன் பன்னீர், சந்தான அபிஷே கத்தூள் போன்ற வாசனை திரவியங்கள் மூலம் திருமஞ்சனம் நடை பெற்றது.

    அதனைத் தொடர்ந்து எம்பெ ருமான் ஸ்ரீ ராமா னுஜர் அவர்க ளுக்கு பூக்களால் அலங்கரி க்கப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராமானுஜர் சுவாமியை வணங்கினர்.

    அதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்க ப்பட்டது இந்த ஏற்பாட்டினை திருமங்கை ஆழ்வார் திருச்சபை மற்றும் கோவில் அறங்காவலர் குழு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×