என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்துக்குளியில் சோனியாகாந்தி பிறந்தநாள் விழா
- அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வெற்றியை முன்னிட்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
- ஊத்துக்குளி நகரத் தலைவர் வேலன், இளைஞர் அணி சந்தோஷ், கொமதேக. தீபன், மற்றும் தொண்டர்கள் ,நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஊத்துக்குளி :
ஊத்துக்குளி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வெற்றியை முன்னிட்டு ஊத்துக்குளி பஸ் நிலையத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஊத்துக்குளி வட்டாரத் தலைவர் சர்வேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், மாவட்ட பொதுச் செயலாளர் பொன்னுச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோஜ் குமார், மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் காளிதாஸ், ஊத்துக்குளி நகரத் தலைவர் வேலன், இளைஞர் அணி சந்தோஷ், கொமதேக. தீபன், மற்றும் தொண்டர்கள் ,நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






