search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CENTENARY"

    • கடலூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
    • முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடைய வேண்டும்

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் 3-வது முறையாக வேலைவாய்ப்பு முகாம் வருகிற நவம்பர் 4-ந்தேதி சனிக்கிழமையன்று கடலூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

    இம்முகாமில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஊரக இளைஞர்கள் மற்றும் கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி, தொரப்பாடி, குறிஞ்சிப்பாடி, வடலூர் பகுதியை சேர்ந்த நகர்புற இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலம் இளைஞர் தொழில்திறன் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் இதர கல்வி தகுதிகளையுடைய இளைஞர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், சாதி சான்று, இருப்பிட சான்று, வருமானச் சான்று, குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை இத்துடன் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், சுய விலாசமிட்ட அஞ்சல் உறைகளுடன் மேற்படி முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • சேகரனாரின் ஈகமும், போராட்ட குணவும் மிகவும் போற்றத்தக்கவையாகும்.
    • இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான அறிவிப்பு இன்று தான் வெளியாகியுள்ளது.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தீண்டாமைக்கு எதிராகவும், தேவேந்திரர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் போராடிய விடுதலைப் போராட்ட வீரரும், ஈகியருமான இமானுவேல் சேகரனாரின் 66-ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அவர் நடத்திய போராட்டங்களையும், அவரது ஈகத்தையும் நான் நினைவு கூர்கிறேன். சேகரனாரின் ஈகமும், போராட்ட குணவும் மிகவும் போற்றத்தக்கவையாகும்.

    கடந்த ஐந்தாண்டுகளில் பல தலைவர்களுக்கு நினைவிடங்கள், மணி மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல தலைவர்களின் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்புகள் எதிலும் இமானுவேல் சேகரனாரின் பெயர் இடம்பெறவில்லை. இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான அறிவிப்பு இன்று தான் வெளியாகியுள்ளது.

    இன்னும் 28 நாட்களில் தொடங்கவிருக்கும் இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் நூற்றாண்டை ஓராண்டுக்கு அரசு விழாவாக கொண்டாடுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அவரது பிறந்தநாள் நூற்றாண்டில், அவரது வரலாறு, தியாகம் போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்லவும், அவை குறித்த பரப்புரைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 14 மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
    • போட்டியில் வெற்றிபெறும் ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு வருகிற 22-ந்தேதி அமைச்சர் பி.மூர்த்தி பரிசு மற்றும் கோப்பைகளை வழங்குகிறார்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமைந்துள்ளது தும்மக்குண்டு கிராமம். இங்கு மறைந்த பின்னணி இசை பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இசையில் புதிய பரிணாமங்கள் தலையெடுத்த போதிலும் பழமைக்கு என்றுமே மவுசு உண்டு என்பதை இந்த கிராம மக்கள் மெய்ப்பித்து உள்ளனர்.

    அந்த வகையில் தமிழ்நாடு ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் இசை போட்டி திருவிழா தும்மக்குண்டு கிராமத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

    அவர்கள் கூம்பு வடிவிலான ஒலிபெருக்கி மூலம் பாரம்பரிய முறைப்படி கிராமபோன் ரெக்கார்டு மூலம் பழைய டி.எம்.சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோரின் பாடல்களை ஒலிக்க வைத்து போட்டிகளை நடத்தினர்.

    இரு தரப்பினரிடையே யாருடைய பாடல் அதிக சத்தத்துடன் ஒலிக்கப்படுகிறதோ அவர் வெற்றியாளராக கருதப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. மூன்று சுற் றுக்களாக நடைபெறும் இந்த போட்டியில் வெற்றிபெறும் ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு வருகிற 22-ந்தேதி அமைச்சர் பி.மூர்த்தி பரிசு மற்றும் கோப்பைகளை வழங்குகிறார்.

    நலிவடைந்து வரும் இந்த தொழிலை மீட்டெடுக்கவும், ஒலிப்பெருக்கி உரிமையாளர்களுக்கு அரசு உதவி தொகை வழங்க நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தும் விதமாகவும் இது போன்ற போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருவதாகவும், இந்த ஆண்டு டி.எம்.சவுந்தரராஜனின் நூற் றாண்டு விழாவை முன்னிட்டு வெகுவிமரிசையாக இந்த போட்டி நடைபெற்று வருவதாகவும் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    • காரைக்குடி தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நடந்தது.
    • கூட்டுறவுத்துறை அமைச்சர், முன்னாள் அமைச்சர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பொதுக்கூட்டம் காரைக்குடி 5 விளக்கு அருகே நடைபெற்றது. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் தொண் டரணி அமைப்பா ளர் ஹேம லதா செந்தில் வரவேற்புரை நிகழ்த்தினார். காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்து துரை, நகர செயலாளர் குண சேகரன், மகளிரணி நிர்வாகிகள் குழந்தை தெர சாள், திவ்யா சக்தி, ராஜேஸ் வரி சேகர், சங்கீதா செல்லப் பன், மஞ்சரி லெட்சுமணன் முன்னிலை வகித்தனர்.

    கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன் சிறப்புரையாற்றினர். முனை வர் எழிலரசி, தலைமை பேச்சாளர் புவியரசி ஆகி யோர் பெண்கள் முன் னேற்றத்திற்கு கலைஞர் ஆற்றிய பணிகள் குறித்து பேசினர்.

    இதில் மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கை மாறன், ஜோன்ஸ் ரூசோ, மணிமுத்து, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், மானா மதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி உள்பட ஒன்றிய, நகர, பேரூர் கிளை செயலாளர்கள், மகளிரணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் மணி மேகலை நன்றி கூறினார்.

    • 1,731 மாணவ, மாணவிகளுக்கு பாக்கெட் பாக்கெட்டாக பேனாவை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • பச்சை மை பேனாவில் கையெழுத்து போடும் அளவிற்கு சிறந்த அரசு அதிகாரிகளாக திகழ வேண்டும் என்று பேசினார்.

    ராஜபாளையம்

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அவரின் பேனா ஆற்றிய பங்கை வலியுறுத்தும் நோக்கில் முகவூர் ஊராட்சி தி.மு.க. கிளை சார்பில் முகவூர் தெற்கு தெரு இந்துநாடார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவி கள், ஆசிரியர்கள் உள்பட 1,731 பேருக்கு பாக்கெட் பாக்கெட்டாக பேனாக் களை எம்.எல்.ஏ தங்கப் பாண்டியன் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கலைஞரின் வளர்ச்சிக்கும், முத்தமிழ் அறிஞர் என்ற பட்டத்திற்கும் சமூக நீதிக்கும் பெரிதும் உறுதுணையாக இருந்தது அவருடைய பேனா. அத்தகைய பேனாவை வைத்து தான் நமது முதல்-அமைச்சர் முதல் 5 திட்டத்திற்கு கையெழுத்திட்டார். மேலும் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய முதன்மையான மாவட்டம் நமது விருதுநகர் மாவட்டம்.வாள் முனையைவிட வலிமையானது பேனா முனை. அதனை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி மாணவ-மாணவிகள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்கி பச்சை மை பேனாவில் கையெழுத்து போடும் அளவிற்கு சிறந்த அரசு அதிகாரிகளாக திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலர் ஆதிநாராயணன், தலைவர் ராமசாமி, தலைமை ஆசிரியர் கண்ணன் ஊராட்சி மன்ற தலைவர் முத்துச்சாமி, கிளை செயலாளர் தொந்தி யப்பன், ஒன்றிய இளைஞரணி அமைப்பா ளர் சுரேஷ், துணை அமைப்பாளர் மாரிமுத்து, கருப்பசாமி சோலையப்பன் மலைக்கனி ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கி ணங்க கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை நாளை (3-ந் தேதி) ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு வைத்து கட்சித் தோழர்கள் அனைவரும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்திடவும், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஒன்றியம், நகர, பேரூர் கழகம், கிளைக் கழகம், வார்டு கழகம் தோறும் கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், ஏழை, எளியோர், மாற்றுத் திறனாளிகள், மாணவ- மாணவிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    "என்றென்றும் கலைஞர்" என்ற தலைப்பில், கருத்தரங்கம், பொதுக் கூட்டங்களும் வெகு நடத்தப்பட வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளைக் கழக, வார்டு கழக செயலா ளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட கட்சியினர் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதிேயார்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
    • முன்னதாக பனங்குடி ஜோசப் வரவேற்று பேசி னார்.

    காளையார்கோவில்

    சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பனைவெல்லம் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு கூட்டுறவு சங்க தலைவர் முத்துக்குமார் ஏற்பாட்டில் கல்லல் சாந்தி ராணி முதியோர் இல்லத்தில் கல்லல் கிழக்கு ஒன்றிய செயலாளர் நா. நெடுஞ்செழி யன் தலைமை யில் முதியோர்களுக்கு கேக் மற்றும் பிரியாணி, வழங்கப்பட்டது. கல்லல் ஊராட்சி மன்ற தலைவரும், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவருமான சுப. வடிவேலு முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராமச்சந்திரன் நீதிபதி, சந்திரசேகரன், மார்க்கண்டேயன், முகமது கனி, ஊராட்சி மன்ற தலைவர் உடையப்பா செல்வம், சேதுபதி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்ட பனைவெல்லம் கூட்டுறவு சங்க தலைவர் முத்துக்குமார், துணைத் தலைவர் மாரி, முன்னாள் தலைவர் குழந்தைவேலு உட்பட நிர்வாகிகள் செய்திருந்தார் கள். முன்னதாக பனங்குடி ஜோசப் வரவேற்று பேசி னார். காளையார்கோவில் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் சொக்கு ரமேஷ் நன்றி கூறினார்.

    • அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியிலிருந்து பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.
    • இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், கல்வித்துறை அதிகாரிகள், மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த பூண்டியாங்குப்பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் ராமகிருட்டிணன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கலையரசி வரவேற்றார். விழாவில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நூற்றாண்டு வளைவை திறந்து வைத்து, மலர் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியிலிருந்து பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.

    இதில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, முன்னாள் எம்.பி வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி குழு தலைவர் என்ஜினீயர் சிவகுமார், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, நாராயணசாமி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுகப்பிரியா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், கல்வித்துறை அதிகாரிகள், மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தானில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • சோழவந்தானில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இந்த கூட்டம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தானில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுகூட்டம் நடந்தது.

    அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில்,சோழவந்தான் ரெயில்வே மேம்பால பணிகள் முடிந்து 3 மாதங்களில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தலைமை கழக பேச்சாளர்கள் கம்பம் பாண்டியன், ஆற்காடு அகிலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வெங்கடேசன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் பசும்பொன்மாறன், பால.ராஜேந்திரன், தனராஜ், பேரூர் செயலாளர்கள் சத்தியபிரகாஷ், சேர்மன் பால்பாண்டி, ரகுபதி, பொதுகுழு ஸ்ரீதர், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், மாவட்ட அவை தலைவர் பாலசுப்பிரமணியன், நகரத் துணைச் செயலாளர் ஸ்டாலின், பேரூராட்சி துணை தலைவர்கள் லதாகண்ணன், கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணி, வசந்தகோகிலா சரவணன், கார்த்திகா ஞானசேகரன், ரேகா வீரபாண்டி, பேரூர் கவுன்சிலர்கள் ஈஸ்வரி ஸ்டாலின், முத்துசெல்வி சதீஷ், கொத்தாளம் செந்தில் குருசாமி, சிவா, ஊராட்சி தலைவர்கள் சிறுமணி, துணை தலைவர் கேபிள் ராஜா, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், வார்டு செயலாளர் நாகேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரையில் நடந்தது.
    • தி.மு.க. அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக திகழ்கிறது என விழாவில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.

    மதுரை

    மதுரை பாண்டி கோவில் அருகில் உள்ள கலைஞர் திடலில் மதுரை வடக்கு, தெற்கு, மாநகர் ஆகிய மாவட்டங்கள் சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    விழாவுக்கு மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு விருந்தின ராக தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 1,200 கிரிக்கெட் அணிையச் சேர்ந்த 13 ஆயிரத்து 200 வீரர்களுக்கு கிரிக்கெட் கிப்ட்டுகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசும்போது கூறியதா வது:-

    இளைஞர் அணி பொறுப்புக்கு வருவதற்கு முன்பு நான் மதுரையில் அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினேன்.

    அதனை ஒரு மாநாடு போல் அவர் நடத்தினார். தற்போது பேராசிரியருக்கு நூற்றாண்டு விழா நடத்த வேண்டும் என்று சொன்னேன். இந்த குறுகிய காலகட்டத்திற்குள் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை திரட்டி ஒரு மாபெரும் மாநாடு போல் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்.

    தி.மு.க. அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக திகழ்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டு வீரர்களுக்கு பார்த்து பார்த்து பல திட்டங்களை செய்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் மூர்த்தி பேசுகையில், தமிழக அரசியலில் இளைஞர்களின் தவிர்க்க முடியாத சக்தியாக உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்து உள்ளார். மதுரையில் தி.மு.க. இளைஞரணி மாநாட்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், வேலுச்சாமி, குழந்தை வேல், எஸ்ஸார் கோபி, மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட பிரதிநிதி அழகு பாண்டி,சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. லதா அதியமான், சிறை செல்வன், மேயர் இந்திராணி, இளைஞரணி மாநில துணைச்செயலாளர் ஜி.பி.ராஜா, மாணவரணி அமைப்பாளர் மருது பாண்டி, மூவேந்திரன், மதன்குமார், விமல், கார்த்திக், திருப்பாலை பகுதி செயலாளர் சசிகுமார், மன்றத்தலைவர் வாசுகி சசிகுமார், மேற்கு ஊராட்சி ஒன்றிய சேர்மன் வீரராகவன், தி.மு.க. தீர்மானக்குழு செயலாளர் அக்ரி.கணேசன், அவனியாபுரம் கிழக்குப்பகுதி இளைஞரணி அமைப்பாளர் கவுன்சிலர் காளிதாஸ், திருமங்கலம் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், திருமங்கலம் நகர்மன்ற துணைத்தலைவர் ஆதவன் அதியமான், நகர செயலாளர் மு.சி.சோ. பா.ஸ்ரீதர், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் கோபி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வைகை மருதுராஜா, சிங்கை சே.ம.பிரதீப்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது
    • தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோரை பாராட்டி நற்சான்றிதழ்கள்

    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் கடந்த 1922-ம் ஆண்டு பொது சுகாதாரத்துறை தொடங்கப்பட்டு 2022-ம் ஆண்டோடு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. துறை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்ததையடுத்து அதனைக் கொண்டாடும் விதமாக அந்தந்த சுகாதார மாவட்டங்களில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அறந்தாங்கி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

    அப்போது கொரொனா காலத்தில் சிறப்பாக முன்கள பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோரை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு நினைவுக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    முன்னதாக நூற்றாண்டு விழாவையொட்டி கடந்த மாதம் 10-ந்தேதி சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற விழாவில் தொடங்கப்பட்ட தொடர் ஜோதியானது பூந்தமல்லி, காஞ்சிபுரம், வேலூர், புதுக்கோட்டை வழியாக அறந்தாங்கியை அடைந்த தொடர் ஜோதியை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி பெற்றுக்கொண்டு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கலைவாணியிடம் ஒப்படைத்தார்.

    இந்த தொடர் ஜோதியானது தமிழகத்தில் மொத்தம் உள்ள 46 சுகாதார மாவட்டங்களில் நடைபெறுகின்ற நூற்றாண்டு விழாக்களை கடந்து, சென்னையில் நடைபெறவுள்ள நிறைவு விழாவை அடையவுள்ளது. நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர்கள் முகமது இத்திரிஸ், பஜ்ருல் அகமது, மணிமாறன், ராம்சந்தர், இம்ரான், ராமச்சந்திரபிரபு, நிர்வாக அலுவலர் நிம்மி, நேர்முக உதவியாளர் முத்துநாராயணன், நலக்கல்வியாளர் ஜெய்சங்கர், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு மருத்துவ அலுவலர்கள் ஜெயபிரகாஷ், நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×