கடலூர் மாவட்ட இளைஞர்களுக்கு 3-வது முறையாக வேலை வாய்ப்பு முகாம்: நவம்பர் 4-ந் தேதி நடக்கிறது

கடலூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது.முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடைய வேண்டும்
கடலூர் மாவட்ட இளைஞர்களுக்கு 3-வது முறையாக வேலை வாய்ப்பு முகாம்: நவம்பர் 4-ந் தேதி நடக்கிறது
Published on

கடலூர்:

கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் 3-வது முறையாக வேலைவாய்ப்பு முகாம் வருகிற நவம்பர் 4-ந்தேதி சனிக்கிழமையன்று கடலூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஊரக இளைஞர்கள் மற்றும் கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி, தொரப்பாடி, குறிஞ்சிப்பாடி, வடலூர் பகுதியை சேர்ந்த நகர்புற இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலம் இளைஞர் தொழில்திறன் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் இதர கல்வி தகுதிகளையுடைய இளைஞர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், சாதி சான்று, இருப்பிட சான்று, வருமானச் சான்று, குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை இத்துடன் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், சுய விலாசமிட்ட அஞ்சல் உறைகளுடன் மேற்படி முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com