search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா
    X

    பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா

    • பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது
    • தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோரை பாராட்டி நற்சான்றிதழ்கள்

    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் கடந்த 1922-ம் ஆண்டு பொது சுகாதாரத்துறை தொடங்கப்பட்டு 2022-ம் ஆண்டோடு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. துறை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்ததையடுத்து அதனைக் கொண்டாடும் விதமாக அந்தந்த சுகாதார மாவட்டங்களில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அறந்தாங்கி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

    அப்போது கொரொனா காலத்தில் சிறப்பாக முன்கள பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோரை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு நினைவுக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    முன்னதாக நூற்றாண்டு விழாவையொட்டி கடந்த மாதம் 10-ந்தேதி சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற விழாவில் தொடங்கப்பட்ட தொடர் ஜோதியானது பூந்தமல்லி, காஞ்சிபுரம், வேலூர், புதுக்கோட்டை வழியாக அறந்தாங்கியை அடைந்த தொடர் ஜோதியை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி பெற்றுக்கொண்டு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கலைவாணியிடம் ஒப்படைத்தார்.

    இந்த தொடர் ஜோதியானது தமிழகத்தில் மொத்தம் உள்ள 46 சுகாதார மாவட்டங்களில் நடைபெறுகின்ற நூற்றாண்டு விழாக்களை கடந்து, சென்னையில் நடைபெறவுள்ள நிறைவு விழாவை அடையவுள்ளது. நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர்கள் முகமது இத்திரிஸ், பஜ்ருல் அகமது, மணிமாறன், ராம்சந்தர், இம்ரான், ராமச்சந்திரபிரபு, நிர்வாக அலுவலர் நிம்மி, நேர்முக உதவியாளர் முத்துநாராயணன், நலக்கல்வியாளர் ஜெய்சங்கர், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு மருத்துவ அலுவலர்கள் ஜெயபிரகாஷ், நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×