search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kalaignar karunanidhi"

    • 'முத்தமிழ்த்தேர்' பயணிக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 100 மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
    • நகராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முத்தூர்:

    கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் எழுத்தாளர்-கலைஞர் குழு சார்பில் 'முத்தமிழ்த்தேர்' அலங்கார ஊர்தி பயணம் கடந்த 4-ம்தேதி முதல் வருகிற டிசம்பர் 5-ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    'முத்தமிழ்த்தேர்' பயணிக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 100 மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில், இன்றைய இளம் தலைமுறையினருக்கு கருணாநிதி பன்முகத் தன்மையினை எடுத்துச் செல்லும் வகையில், "எழுத்தாளர் கலைஞர் குழுவின்" மூலம் தயார் செய்யப்பட்ட, அவரது புகழ்பாடும் "முத்தமிழ்த்தேர் - அலங்கார ஊர்தி", நேற்று காங்கயம் பஸ் நிலையத்திற்கு வருகை புரிந்தது.

    அப்போது காங்கயம் தி.மு.க. நகர செயலாளர் வசந்தம் சேமலையப்பன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் காங்கயம் தாசில்தார் மயில்சாமி, நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், காங்கயம் நகராட்சி ஆணையர் கனிராஜ், வெள்ளகோவில் நகர செயலாளர் சபரிமுருகானந்தன், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், காங்கயம் நகர துணைச் செயலாளர் சுப்பிரமணி, நகராட்சி துணைத் தலைவர் கமலவேணி ரத்தினகுமார், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி நேற்று இரவு காங்கயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று காலை ஈரோடு செல்கிறது.

    கலைஞரின் நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துக் கொண்ட வெற்றிமாறன், மக்களிடத்தில் கொள்கைகளையும் கருத்துகளையும் கொண்டு சென்ற பெரிய படைப்பாளி கலைஞர் என்று கூறியுள்ளார். #Vetrimaran
    தமிழ் சினிமா கலைஞர்கள் சார்பில் கலைஞருக்கு நினைவஞ்சலி கூட்டம் நேற்று நடந்தது. இதில் இயக்குனர் வெற்றிமாறன், கரு.பழனியப்பன், பா.ரஞ்சித், நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள். 

    இதில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது:-

    கலைஞரின் கடின உழைப்பு எப்போதுமே நாங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் வி‌ஷயம். கலைஞரின் தொடக்க காலத்தில் சில படங்களில் அவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. அந்த சூழலில் ஏற்கனவே 20 நிமிடம் எடுக்கப்பட்ட ஒரு படத்துக்கு வசனம் எழுத சொன்னார்கள்.

    எம்.ஜி.ஆர் நடித்த மருத நாட்டு இளவரசி படம் தான் அது. இந்தியாவின் முதல் சாகச வீரன் பற்றிய படம். அங்கு இருந்து தான் எம்ஜிஆர் தனது சினிமா வாழ்க்கையை தொடங்குகிறார். கலைஞருக்கு முன்பு சினிமா நேரடியாக மக்களிடம் பேச முடியாத சூழலில் இருந்தது.

    அந்த சூழலில் சினிமாவின் மூலம் மக்களிடத்தில் கொள்கைகளையும் கருத்துகளையும் கொண்டு சென்ற பெரிய படைப்பாளி அவர். சினிமாவை ஆயுதமாக பயன்படுத்தி மக்களை ஒடுக்கு முறையில் இருந்து மீட்டெடுத்தது கலைஞர். சினிமாவில் தற்போது மீண்டும் ஒடுக்கப்பட்டவர்கள் குரல் கேட்க தொடங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    நடிகர் சங்கம் சார்பில் நடக்கும் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துக் கொண்ட விஷால், நடிகர் சங்க கட்டிடத்தில் கருணாநிதியின் பேனாவை வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். #KalaignarKarunanidhi #Vishal
    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் நடந்து வருகிறது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நினைவேந்தல் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டுள்ளார்.

    இதில் விஷால் பேசும்போது, ‘புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டடத்தில் கருணாநிதி பயன்படுத்திய பேனாவை வைக்க வேண்டும். அது அடுத்த தலைமுறை கலைஞர்களுக்கு கருணாநிதியின் புகழை எடுத்துச் செல்லும்’ என்றார்.

    நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது, ‘பராசக்தி படம் மட்டும் வராமல் இருந்தால், தமிழ் சினிமா 20 ஆண்டுகள் பின்நோக்கி சென்றிருக்கும்’ என்றார். 
    திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை அடுத்து துணை ஜனாதிபதி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIPKalaignar
    திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று மாலை 6.10 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

    கருணாநிதி மறைவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தனர். அவர்களைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி வெங்கையா, டெல்லி முதல்வர் கெஜரிவால் இரங்கல் தெரிவித்தனர்.

    மேலும், பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, பாஜனதா தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர்.
    ×