என் மலர்
நீங்கள் தேடியது "புத்தாண்டு 2026"
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
- புது வெற்றியை தேடித்தர உள்ள உடன்பிறப்புகளுடன் தொடங்கியது.
2026 பிறந்த நிலையில் நாடு முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், புத்தாண்டு நாளை ஒட்டி மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
அப்போது அவர், புது வெற்றியை தேடித்தர உள்ள உடன்பிறப்புகளுடன் தொடங்கியது புத்தாண்டு என புத்தாண்டை ஒட்டி தன்னை சந்திக்க வருகை தரும் தொண்டர்களின் வீடியோக்களை வெளியிட்டு முதலமைச்சர் பகிர்ந்தார்.
- உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- கவுதம் கம்பீர் லண்டனில் புத்தாண்டை கொண்டாடினார்.
உலகம் முழுவதும் 2026-ம் ஆண்டு புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.
அந்த வகையில் புத்தாண்டை மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் குழந்தைகளுடன் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கொண்டாடுகிறார். 'என் வாழ்வின் ஒளியுடன் 2026-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்' என்று குறிப்பிட்டு மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதேபோல இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, தாய்லாந்தில் தனது குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடினார்.

குல்தீப் யாதவ் தனது வருங்கால மனைவி வான்ஷிகாவுடன் புத்தாண்டை ஒன்றாகக் கொண்டாடினார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது குடும்பத்துடன் லண்டனில் புத்தாண்டை கொண்டாடினார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தனது குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடினார்.

- புதிய ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலையும், நேர்மறையான மாற்றத்தையும் குறிக்கிறது.
- இது சுய பிரதிபலிப்பு மற்றும் புதிய தீர்மானங்களுக்கான ஒரு வாய்ப்பாகும் என்றார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டன.
புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பானதாகவும், ஏற்றமிகு வாழ்க்கையை அளிப்பதாகவும் அமைய வேண்டும் என அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய குடிமக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:
புத்தாண்டின் மகிழ்ச்சியான தருணத்தில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலையும், நேர்மறையான மாற்றத்தையும் குறிக்கிறது.
இது சுய பிரதிபலிப்பு மற்றும் புதிய தீர்மானங்களுக்கான ஒரு வாய்ப்பாகும். இந்த சந்தர்ப்பத்தில், நாட்டின் வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நமது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துவோம்.
2026-ம் ஆண்டு நமது வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டு வந்து, வலுவான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க புதிய ஆற்றலை புகுத்தட்டும் என தெரிவித்துள்ளது.
- புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
- புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.
சென்னை:
நாடு முழுவதும் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.
தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் மக்கள் புதிய ஆண்டை வரவேற்றனர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டு நிறைவடைந்து 2026-ம் ஆண்டு பிறந்துள்ளது.
புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தலைநகர் டெல்லி முதல் சென்னை வரை கொண்டாட்டங்களில் மக்கள் மூழ்கினர்.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலையில் இருந்து வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
'மாலைமலர்' சார்பில் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
- இந்தியாவில் டிசம்பர் 31 மதியம் 3:30 மணியாக இருக்கும்போது, கிரிபாட்டியில் புத்தாண்டு பிறந்துவிடும்.
- கிரிபாட்டியின் மற்ற பகுதிகளும் அடுத்த சில மணிநேரங்களில் புத்தாண்டைக் கொண்டாட தொடங்கிவிடும்.
உலகில் முதல் நாடாக கிரிபாட்டி தீவு புத்தாண்டை கொண்டாட தொடங்கியது. இந்திய நேரப்படி, கிரிட்டிமாட்டியில் புத்தாண்டு சுமார் 8.5 மணிநேரம் முன்னதாகவே பிறக்கிறது. அதாவது இந்தியாவில் டிசம்பர் 31 மதியம் 3:30 மணியாக இருக்கும்போது, கிரிபாட்டியில் புத்தாண்டு பிறந்துவிடும்.
அந்தவகையில் தற்போது கிறிஸ்துமஸ் தீவு என்றும் அழைக்கப்படும் கிரிபாட்டி 2026-ஆம் ஆண்டை வரவேற்று, உலகின் முதல் நாடாக புத்தாண்டு கொண்டாட தொடங்கியது. கிரிபாட்டி தீவைத் தொடர்ந்து நியூசிலாந்தின் சத்தாம் தீவில் (GMT +13:45) வசிக்கும் 600-க்கும் மேற்பட்ட மக்கள் 2026 ஐ வரவேற்று கொண்டாட தொடங்கிவிட்டனர்.
உலக நாடுகள் ஒவ்வொன்றும் சூரிய உதயத்தை அடிப்படையாக கொண்டும் இயங்குவதால் நாட்டுக்கு நாடு கொண்டாட்ட நேரம் வேறுபடுகிறது. பசிபிக் நாடான கிரிபாட்டியின் மற்ற பகுதிகளும் அடுத்த சில மணிநேரங்களில் புத்தாண்டைக் கொண்டாட தொடங்கிவிடும்.






